ஏன் டிஜிட்டல் இந்தியா?
பால் மேசன் என்பவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு இடதுசாரி பத்திரிக்கையாளர்.
2015 ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘Post-Capitalism’, அதாவது முதலாளித்துவத்திற்கு அடுத்து என்று பொருள்படும் தனது புத்தகத்தில் அவர் பின்வருமாறு முடிக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு இதை விட இன்னும் பெரிய மானக்கேடு தேவையா?
"அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
தினம் அச்சப்பட்டக் கோழைக்கு இல்லம் எதற்கு?"
உங்க கட்சித் தலைவர் வாயசைத்தப் பாட்டுதான் இது.
2015 ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘Post-Capitalism’, அதாவது முதலாளித்துவத்திற்கு அடுத்து என்று பொருள்படும் தனது புத்தகத்தில் அவர் பின்வருமாறு முடிக்கிறார்.
“நாம் உருவாக்கி வந்தடைந்துள்ள தொழில்நுட்பங்கள், முதலாளித்துவத்திற்கு ஏற்றதாக இல்லை. என்ன தான் முதலாளித்துவம் தன் தன்மையை சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ளூம் ஒரு சிக்கலான அமைப்பாக இருந்தாலும், அது தற்போது, அதனுடைய உச்சகட்ட வரம்புகளை எட்டியுள்ளது. இந்த வரம்புகளே அதனின் முடிவை தீர்மானிக்கும் இறுதியானது. இனிவரும் காலங்கள் முதலாளித்துவத்திற்க்கு பிறகான காலங்கள்”என்று 2008-ல் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடி பற்றியும் அவர் கூறியுள்ளார்.
மேசன் கூறுவதைப் போல டிஜிட்டல்மயமாக்கல் என்பது முதலாளித்துவத்தின் வரம்புகளை சோதிக்கதான் செய்கிறது. சொத்துரிமை என்பதே முதலாளித்துவத்தின் முக்கியமான ஒரு கருவியாக இருந்து வந்துள்ளது. ஆனால் டிஜிட்டல் தளத்தில், அறிவுசார் சொத்துரிமை மூலம் முதலாளித்துவம் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றாலும், அதே முதலாளித்துவம் ஊக்குவிக்கும் Internet, Torrent போன்றவைகளால் அறிவுசார் சொத்துரிமையை அதனால் பாதுகாக்க முடியவில்லை.
Copy, Share என்னும் அம்சங்களைக் கொண்ட சாதனங்களை அனைவரிடமும் சேர்த்துவிட்டு, அதன் மூலம் முடிவில்லா அளவில் தகவல்களையும், கோப்புகளையும் மறுஉற்பத்தி செய்யக் கூடிய அதே சமயம், அதை செய்யவிடாமல் தடுப்பது முரண்பாட்டின் உச்சகட்டம்.
இப்படி ஒரு அமைப்பு நிச்சயம் முதலாளித்துவத்திற்கு நிலையான பொருளாதார அமைப்பாக முடியாது. (Tamilrockers-க்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்குமான பிரச்சனையே இது தான்.)
சொத்துரிமையை அரிக்கும்; சந்தையை உடைக்கும்; வேலை-உழைப்பு-இலாபம் ஆகியவற்றின் உறவுகளை மாற்றியமைக்கும் இந்த டிஜிட்டல் யுகமானது நிச்சயம் முதலாளித்துவத்தின் எதிர்கால நிலைக்கு ஏற்ற சூழ்நிலையாக இல்லை என்று அவர் கருதுகிறார்.
பால் மேசனைப் போன்றே அமெரிக்க எழுத்தாளர் ஜெரிமி ரிஃப்கினும் முதலாளித்துவத்தின் முடிவு கண்ணுக்கெட்டிய தொலைவில் இருப்பதாக கருதுகிறார். Internet of Things, Sharing Economy மற்றும் எங்கும் ஏராளமாக கொட்டிக்கிடக்கும் டிஜிட்டல் தரவுகள் முதலாளித்துவத்தை வேறு வழியில்லாமல் Zero Marginal Cost சமூகத்தை நோக்கி நகரச் செய்கிறது என்று இவர் கூறுகிறார்.
சந்தையில் இலாபம் ஈட்டும் போட்டியானது, புதுப்புது முயற்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்துமாறு மூலதனத்தை நிர்பந்திக்கிறது.
அதோடுமட்டுமில்லாமல் உயிருள்ள வேலையாட்களுக்கு பதிலாக இயந்திரங்களையும், ரோபாட்டுகளையும், Algorithms-ஐயும் (கணினி மூலம் நிகழ்த்தும் செயல்களுக்கான வழிமுறை) மாற்றியமைக்கிறது. தனது மூலதனம் நூலில், கணினியின் தந்தை என்று பலராலும் பரவலாக அறியப்படும் சார்லஸ் பாபேஜ்-ன் கண்டுபிடிப்பைப் பற்றி ஓர் அடிக்குறிப்பை மார்க்ஸ் எழுதியுள்ளார்.
அதாவது, ‘இந்த உலகின் அனைத்து ஞானங்களும், அறிவுத் திரட்டல்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் தற்போது வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களுளின் உழைப்பில் பாதியும், அதற்கு முன் வாழ்ந்த அனைவரின் உழைப்பில் பாதியும் சேர்ந்ததே.
இது அனைத்து மனிதர்களுக்கும் சொந்தமானது’, எனவும், ‘ஆனால் செல்வம் படைத்த முதலாளிகள் மட்டுமே சமூகத்தின் இக்கூட்டு உற்பத்தியின் ஒட்டுமொத்த பலனை இலாபமாக அனுபவிக்கிறார்கள்’ என்றும் கூறினார்.
முதலாளித்துவ வளர்ச்சியின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், உற்பத்தி மற்றும் சேவைக்காக சமூகத்தின் ஒட்டுமொத்த அறிவை பெருக்குவதும், அதன் மூலம் தனியார் இலாபத்தை பெருக்குவதுமே தொடர்ந்து காணமுடிகிறது. மார்க்ஸ் இதனை விளக்க, General Intellect என்னும் வார்த்தையை பயன்படுத்துகிறார்.
General Intellect என்பதற்கு பொருள் வெகுமக்களின் அறிவை குறிக்கிறது. உதாரணத்திற்கு, தொடுதிரை கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தும் அளவிற்கு மக்களின் அறிவை வளர்த்தெடுக்காமல் அதனை சந்தையில் விற்க முடியாது, அதுபோல அந்த சாதனங்களில் செயலிகளை உருவாக்க ஒரு கூட்டத்தினை தயார்படுத்தாமல், அதற்கு தேவையான மென்பொருள் உற்பத்தி நடைபெறாது. இந்த சமூக அறிவு மேம்படும் பொழுது அது உடனடியாக உறபத்தி கருவிகளின் மீது தாக்கத்தை செலுத்தி அதையும் மேம்படச் செய்கிறது.
ஓட்டுநர் இல்லா கார்கள் போல, வங்கி அதிகாரி இல்லா ATM மெஷின்களைப் போல. இந்த மேம்பட்ட அறிவியல் அறிவையும் அதன் விளைவான தொழில்நுட்பங்களையும் மூலதனத்தின் போக்கில் இப்படியே அமல்படுத்திக் கொண்டு வந்தால், அது உற்பத்தியில் மனிதர்களின் உள்ளீட்டையும், உழைப்பையும் அகற்றிவிடுமா?
அனைத்தும் Automate ஆகிவிடுமா?
அப்படியானால் சுரண்டுவதற்கு உழைப்பாளர்களே இருக்க மாட்டார்களா?
சுரண்டலின் மூலம் விளைவாக கிடைப்பது தான் உபரி மதிப்பு என்றால் சுரண்ட ஆளில்லாமல் போகும் போது உபரி மதிப்பு எங்கிருந்து வரும்?
உபரி மதிப்பு இல்லாமல் போனால் மூலதனத்திற்கு இலாபம் எங்கிருந்து வரும்?
மூலதனம் வீழ்ந்தால் முதலாளித்துவம் காலாவதியாகிவிடுமே! இதைக் கூடவா புரிந்திருக்க மாட்டார்கள் மூலதனவாதிகள்?
நீங்கள் நினைப்பது சரிதான். உதாரணத்திற்கு ‘கூகுள்’-ஐ எடுத்துக்கொள்வோம். உலகம் முழுவதிலுமிருந்து ஒரு நாளுக்கும் மட்டும் கோடிக்கணக்கான தேடல்கள் வருகின்றன.
ஆனால் இந்த தேடல்களுக்கான விடைகளை வழங்குவதற்கு கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் எந்த ஒர் பணியாளரும் தேவைப்படுவதில்லை. ஒரு முறை நிரல் (code) எழுதிவிட்டால் அதே மென்பொருள் மீண்டும் மீண்டும் இதுபோல் வரும் கோடிக் கணக்கான தேடல்களூக்கான பதிலை தானாக வழங்குகிறது. கூகுள் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்கள், சேவை நிறுவனங்கள் என இவை அனைத்தும் இது போலவே இயங்குகின்றன.
ஆனால் ஒரு டிஜிட்டல் மேடையில் இப்படி தானியங்கியாக மாற்றப்பட்டவைகளுக்கு தொடர்ந்து பயனர்களான நம் தரவுகள் உள்ளீடாக நாமே கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
உதாரணத்திற்கு, கூகுளில் உங்கள் பெயரை டைப் செய்து தேடினால், உங்கள் Facebook தகவல்களும், அல்லது உங்கள் பெயர் கொண்ட மற்றவர்களின் செய்திகளும் வருகிறதே, இவற்றையெல்லாம் உருவாக்கியது யார்?
இவை இல்லாமல் கூகுள் எதைத் தேடும்?
எதை பதிலாகக் கொடுக்கும்? Facebook-ல் ஒரு புகைப்படத்தை பதிவேற்றினால், அதில் எத்தனை மனிதர்கள் உள்ளனர், அவர்களின் பெயர் என்ன, புகைப்பட்த்தின் பின்னணியில் இருப்பது என்ன போன்ற விவரங்கள் எப்படி Facebook-ன் தானியங்கி மென்பொருட்களுக்கு தெரியும்?
நாம் தான் இதுநாள் வரை புகைப்படத்தில் நம் நண்பர்களை Tag செய்துவந்திருக்கிறோம்.
இந்த உள்ளீடை வைத்து இப்போது அந்த மென்பொருட்கள் கற்றுக் கொண்டன.
இப்படி கூகுளின் அல்லது facebook-ன் செயலிகளை பயன்படுத்தி, அவைகளின் சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் நாம் அனைவரும் கூலியோ, சம்பளமோ, ஊதியமோ வாங்காமல் தொடர்ந்து அவர்களின் தானியங்கிகளை மேம்படுத்த வேலை செய்து வருகிறோம்.
நாம் ஏற்கனவே பார்த்தது போல் வெகுமக்களின் அறிவுத்திறன் (General Intellect) மேம்பட்டதன் விளைவாக பொதுவில் அனைவரும் இணைந்து இணையத்தில் நொடிக்கு நொடி ஸ்டேட்டஸ்களையும், செல்ஃபிகளையும், காணொளிகளையும் உருவாக்கி வருகிறோம், ஆனால் இவையெல்லாம் ஏதோ ஒரு தனியாரின் கட்டுப்பாடில் இருந்துக் கொண்டே.
அவர்கள் தீர்மானிக்கிறார்கள் எதை காண்பிக்க வேண்டும், காணிபிக்கக் கூடாது, எந்த கருத்து நீக்கப்பட வேண்டும், யாருடைய கணக்கை முடக்க வேண்டும் என்பன போன்று.
General Intellect-ன் விளைவாக இப்போது உற்பத்தியிலும், உற்பத்தி திறனிலும் ஒரு மாற்றம் நிகழ்ந்துவிட்டது. நாம் எதை உற்பத்தி செய்கிறோம் என்றால், நொடிக்கு நொடி தரவுகளை. மீண்டும் ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டு உழைப்பினால் விளையும் தரவுகளை அபகரிப்பதன் மூலம், அந்த தரவுகளிலிருந்து புதிய மதிப்புகளை கண்டறிவதன் மூலம் விற்பனைக்கு பதிலாக, வாடகை முறைக்கு நம்மை மீண்டும் தள்ளியுள்ளது மூலதனம்.
இங்கே இந்த சேவைகளைப் பயன்படுத்த ஒன்று நீங்கள் பணம் செலுத்த வேண்டும், இல்லையேல் பணத்திற்கு ஈடாக உங்கள் அகவுரிமை தகவல்கள் மூலம் மதிப்பு உரிஞ்சப் படும். அந்தத் தகவல்களை பிற சேவை நிறுவனங்களுக்கு விற்று மூலதன பெருக்கல் நடைபெறும். இதோ பிறந்துவிட்டது டிஜிட்டல் மூலதனம். முதலாளித்துவத்தின் அழிவு கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது என்று பால் மேசன் போன்றோர் ஒரு புறம் கருதினாலும், உண்மையில் இங்கே மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையிலான முரண்பாடுகள் முன்பை விட மேலும் தீவிரமடைந்து வருகிறது.
அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பார்கள், அதுபோல் தான் முரண்பாடுகள் தீவிரமடைவதும்.
இப்போது புரிகிறதா ஏன் பிறக்கிறது டிஜிட்டல் இந்தியா, ஏன் பிறந்தது ரிலையன்ஸ் ஜியோ என்று?
சற்றே சிந்தியுங்கள் எப்படி ஜியோ சேவைகளை இலவசமாக வழங்க முடிந்தது?
பணம் கட்டவில்லை என்றால் நாம் எதைக் கட்டினோம்?
ஏன் அனைத்தோதும் ஆதாரை இணைக்க வேண்டும்?
Demonetization நடந்த போது பெரிதும் இலாபம் அடைந்த நிறுவனம் எது தெரியுமா?
PayTM கரோ
பின் குறிப்பு:-
இந்த பதிவை எழுத காரணமாக இருந்தது ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையே.
https://marx200.org/en/debate/capitalism-service-capital-going-digital இது இக்கட்டுரையின் முழு மொழிபெயர்ப்பு இல்லை, எனவே அதையும் படித்துவிட்டால் இன்னும் சில விஷயங்கள் உங்களுக்கு விளங்கும் என்று நான் கருதுகிறேன்.
நன்றி :-பிரசன்னா (மாற்று இதழில்)
======================================================================================
இன்று,
மார்ச்-16.- திரவ எரிபொருளால் இயங்கும் முதல் ஏவுகணை மசாசுசெட்சில் செலுத்தப்பட்டது(1926)
- முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது(1942)
- இஸ்ரேல், ஜெரிகோ நகரை அதிகாரப்பூர்வமாக பாலஸ்தீனத்திடம் ஒப்படைத்தது(2005)
- மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்க ஐநா பொதுச்சபை ஆதரவு அளித்தது(2006)
தமிழ்நாட்டுக்கு இதை விட இன்னும் பெரிய மானக்கேடு தேவையா?
"அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
தினம் அச்சப்பட்டக் கோழைக்கு இல்லம் எதற்கு?"
உங்க கட்சித் தலைவர் வாயசைத்தப் பாட்டுதான் இது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++