விவசாய நிலத்தை விட மணல்திட்டு உயர்வா?

சேது சமுத்திர திட்டத்தின் போது ராமர் பாலம் என்று சிலரால் கூறப்படும் மணல் திட்டை அகற்ற மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது அறிவுப்பூர்வமானது அல்ல .
இந்தியா-இலங்கை இடையிலான கடற்பகுதியை சரக்கு கப்பல் போக்குவரத்திற்காக ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை 150 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது. 

ஆனால், இந்தத் திட்டம் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தது. அந்த மணல்திட்டு இராமாயணக் கதையில் வரும் குரங்குகளும்,ராமரும் சேர்ந்து கட்டிய  பாலம்தான்  என்று எந்த விதமான அறிவியல் ஆய்வும் இன்றி சிலர் கூறத்துவங்கினர். இந்த புராணக் கற்பனை கொஞ்சம் கொஞ்சமாக ஊதிப்பெரிதாக்கப்பட்டது. 
ஆனால் தற்போது ஒரு பொறுப்பு மிக்க  மத்திய அரசே அந்த மணல் திட்டை ராமர் கட்டிய பாலம் என்று கூறுவது வேடிக்கையாக  உள்ளது. 
மத்திய அரசே இந்த நிலையை எடுத்திருப்பதால், தான் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவை திரும்பப் பெறுவதாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.
 அதாவது, சுப்ரமணிய சாமி போன்றோர் முன்வைத்த அடாவடி வாதத்தை மோடி அரசேமுன்வைத்துள்ளது.
300 மீட்டர் அகலமும் 167 கிலோ மீட்டர் நீளமும் 12 மீட்டர் ஆழமும் கொண்டது சேது சமுத்திரதிட்டம். 1860 ஆம் ஆண்டு இந்திய கப்பற்படையைச் சேர்ந்த ஏ.டி.டெய்லர் என்பவர் இந்த ஆலோசனையை முன்வைத்தார்.
 பின்னர் நேரு காலத்திலும், இந்திரா காந்தி காலத்திலும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டாலும், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் அமைந்திருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது 2005 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி மதுரையில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. 
2427 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்தத்திட்டத்தை நிறைவேற்றினால் ராமர் கட்டிய பாலம் இடிந்துவிடும் என்று சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்றம் இந்த பாலத்தால் என்ன நன்மை என்று கேட்காமல்,எத்தனையோ பழைய உபயோகமில்லாப் பழங்களை இடிக்கவில்லையா என்று கேட்காமல் மதம் சார்ந்து புராண,கட்டுக்கதைகளை கேட்டு நீதிமன்ற விசாரணை நீடித்துக் கொண்டே செல்வது இத்திட்டத்துக்கு இன்னும் செலவை அதிகப்படுத்த்தான் செய்யும்.
மேலும் இந்த புராணக்கதை பாலம் வழியே போக்குவரத்தும் நடக்கவில்லை.பூஜை புனஸ்கரங்களும் இல்லை.பின் எதற்கு இந்த மணல் திட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.?
இந்த மணல்திட்டை சுற்றிக்கொண்டு செல்லும்படி திட்டம் செயல்படுத்தப்படுமாம்.அப்படி செல்வதென்றால் இந்த திட்டமே பயனில்லையே.பழைய வழியில்தான் செல்லவேண்டும்.?
மீத்தேன்,பெட்ரோல் எடுக்க விவசாய வயல்களைக் கைப்பற்றி ,மக்களின் உணவு ஆதாரத்தையே நாசம் செய்யும் திட்டங்களுக்கெல்லாம்   அனுமதி வழங்கும் நீதிமன்றமும்,மத்திய அரசும் ஒன்றுக்கும் உதவா மணல்திட்டை வைத்து கதை விடுவது வேடிக்கை.
மாடுகளுக்காக மனித உயிர்களை பலி வாங்கும் கூட்டம் சொல்லும் கதையை நீதிமன்றம் ஏற்க்க கூடாது.

சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தூத்துக்குடி, இராமநாதபுரம் உட்பட கடலோர மாவட்டங்கள் பலன் பெறும். 
சிறு துறைமுகங்கள் அமையும். வேலைவாய்ப்பு உருவாகும். ஆனால், புராணக் கற்பனையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டத்தில் மண் அள்ளிப் போடும் வேலை கனஜோராக நடந்து கொண்டிருக்கிறது.
இராமாயணக் கதைக்கும் இந்தப் பாலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இராமாயணத்தில் கூறப்படும் இலங்கை, இப்போதுள்ள இலங்கை அல்ல என்றெல்லாம் வரலாற்று ஆய்வாளர்கள் முன்வைத்த வாதம் எதையும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் ஏற்க தயாராக இல்லை. 
உச்சநீதிமன்றத்தின் விசாரணை செல்லும் போக்கும் கூட திட்டம் நிறைவேறுமா என்ற ஐயப்பாட்டையே எழுப்புகிறது. ஏற்கெனவே திட்டமிட்ட வழித்தடத்தில் சேது சமுத்திரதிட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்தத் திட்டத்தை முடக்குவது வழக்கமாக தமிழகத்திற்கு பாஜக அரசு செய்யும் மற்றோரு  துரோகம் கணக்கில்தான் சேரும்.ஊருக்கு சோறு போடும் விவசாய நிலங்களை அழித்து மீத்தேன் எடுக்கும் அரசு ,எதற்கும் உ தவா மணல்திட்டை காப்பாற்ற முயற்சிப்பதன் பெயர்தான் ஆன்மிக அரசியல்..
சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு.

====================================================================================
ன்று,
மார்ச்-20.
  • உலக  மகிழ்ச்சி தினம்

  • சிட்டுக்குருவி தினம்

  • டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி அமைக்கப்பட்டது(1602)

  • சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது(1948)

சிட்டுக்குருவி- (House Sparrow) என்பது தனி இனம், House Sparrow - என்பதின் பொருள், வீட்டுக்குருவி என்பதே ஆகும். 

நமது வீட்டுப் பெரியவர்களிடம் கேளுங்கள் சொல்வார்கள்,  அது நம் வீடுகளில் கூடுகட்டி வாழ்ந்ததை, நாம் உணவு உண்ணும்போது சோற்றுப் பருக்கைகளை எடுத்துச் செல்லும் அழகை, காலையில் நம்மை சத்தமிட்டு எழுப்பும் அழகை. 
அவை இன்று இல்லை.
சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு செல்போன் அலைவீச்சு காரணமா என்றால்,  இல்லை. நான் அதிகமான அளவில் சிட்டுக்குருவிகளைப் பார்த்தது, பெங்களூரு விமான நிலையத்தில். விமான நிலையத்தில் இல்லாத கதிர்வீச்சா? 
கார்டன் சிட்டி (Garden City ) பெங்களூரில் உள்ள மரங்கள், குருவிகள் கூடுகட்டி வாழ ஏற்றதாக உள்ளன. 
ஆனால், இன்று நமது நகரங்களில் மரங்கள் இல்லை, கான்கிரீட் வீடுகளில் ஜன்னல்கள் திறப்பதில்லை, எனவே கூடுகட்ட முடியவில்லை. உணவுப் பொருள்கள் பிளாஸ்டிக் பைகளில் வருவதால் சிதறுவதில்லை. தானியங்களை வெயிலில் காயவைப்பதில்லை. எனவே, சிட்டுக்குருவிகளுக்கு உணவும் கிடைப்பதில்லை.
 நகரங்களில் எழும் அதிக சத்தம், இந்த சின்ன உயிரினத்திற்கு ஏற்றதாய் இல்லை. 
எனவே, கிராமங்களை நோக்கி, காடுகளை நோக்கி இவை இடம் பெயர்ந்து வாழ்கின்றன. 
இதன் இடப்பெயர்வு, நகரங்கள், மனிதன் வாழ தகுதியற்ற இடங்களாக மாறிவருகின்றன என மனித குலத்திற்கு ஓர் எச்சரிக்கைதான் . 
======================================================================================

புதிய பார்வை,தமிழ் அரசி இதழ்களின் ஆசிரியர் ம.நடராசன் இன்று (20.03.2018)இயற்கை எய்தினார்.
===================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?