தேசபக்தி வாட்சும்,பில்லும்.

 பாஜக தலைவரோ இல்ல வேற யாரோ 5 , 10 லட்சத்துக்கோ அதுக்கு மேலயோ வாட்ச் வாங்குவதில் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை.

ஆனா ரெண்டு ஆடு வச்சிருக்க ஏழை விவசாயி என்று வேஷம் போட்டு 4 லட்சம் ரூவாய்க்கு வாட்ச் வாங்கி அதுக்கு கணக்கு காட்ட முடியாம கதை சொல்லிகிட்டு இருப்பது தான் வெட்ககேடு.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அண்ணாமலை தேசப்பற்றுடன் (!?) கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் அவரோட சொந்த பணத்தில் வாங்கிய வாட்சே இல்லை. 

அது போலீஸில் வேலை பார்த்த காலத்தில் லஞ்சமாக பெற்றுக்கொண்ட திருட்டு வாட்ச்.

அந்த வாட்ச் உண்மையிலேயே SARVALOKA SERVICES-ON-CALL PRIVATE LIMITED அப்படின்ற பெங்களூர் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது! 

இந்த நிறுவனம் 2014ல் துவங்கப்பட்ட வீட்டு கட்டுமானம் மற்றும் ரிப்பேர் பணிகள் செய்யும் ஆன்லைன் நிறுவனம்.

இந்த நிறுவனம் பின்னாளில் விரிவாக்கம் மற்றும் நிர்வாக மாறுதல்கள் செய்யப்பட்டு  HOUSEJOY என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தது. 

ரூ.136 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டக்கூடிய இந்த நிறுவனத்தின் COOவாக அப்போது நியமிக்கப்பட்டவர் தான் 420 ஆசாமியான சஞ்சித் கவுரவ் (Sanchit Gaurav).

இந்த சஞ்சித் கவுரவின் உள்ளடி வேலைகளால் இந்த நிறுவனத்தை துவக்கிய அர்ஜுன் குமார் மற்றும் சுனில் கோயல் ஆகியோர் அந்த நிறுவனத்தை விட்டே நிர்வாக குழுவால் வெளியேற்றப்பட்டனர் என்பது உள்ளிருந்து வரும் செய்தி!

உள்ளடி அரசியல், நிறுவனத்தின் தரமற்ற சர்வீஸ்களால் கடுப்பானவர்கள் நிறுவனத்தின் மீது புகாரளித்து வந்தனர். இந்தச் சூழலில் தான் COO சஞ்சித் கவுரவ் பொருளாதார குற்றவாளியாக பெங்களூர் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டு 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார் ( indiankanoon.org/doc/9163051/ ).

இந்த நிலையில் தான் அப்போதைய கர்நாடக (அ)சிங்கம், அண்ணாமலை அக்டோபர் 2018 பெங்களூர் தெற்கு DCP- ஆக நியமிக்கப்பட்டார். 

இதே காலகட்டத்தில் HOUSEJOY நிறுவனத்தின் பெயரில் பல மோசடி புகார்கள் வரத்தொடங்கின. பாதிக்கப்பட்டவர்கள் அந்த நிறுவனத்தின் முன் போராட்டங்களும் நடஅணுகுகிறார்.

DCP அண்ணாமலையின் காவல் எல்லைக்குள் தான் இது எல்லாமே நடக்குது. மீடியாக்களில் வெளியாகும் செய்திகளையும், பாதிக்கப்பட்டவர்கள் தரும் புகார்களையும் மழுங்கடிக்க நம்ம கிரிமினல் CEO அப்போதைய கர்நாடக ABVP பொறுப்பாளர், தற்போதைய அதே பெங்களூர் MPயான ‘தேஜஸ்வி சூர்யா’வை அணுகுகிறார்.

இவ்வாறு நெருங்கிய நண்பர்களான தேஜஸ்வியும் சஞ்சித்தும் சஞ்சித்தின் HOUSEJOY நிறுவனத்திற்கு எதிராக கொடுக்கப்படும் புகார்களை கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காகவே தேஜஸ்வி சூர்யா மூலம் அப்போதைய DCP அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட வாட்ச் தான் இந்த ‘ரபேல் வாட்ச் BR03-94’!

இதுல இன்னொரு விசயம் என்னன்னா தேஜஸ்வி சூர்யாவும் இதே வாட்சை கட்டிக் கொண்டிருந்தவர் தான்! மோசடி பேர்வழியிடம் லஞ்சமாக பெற்ற வாட்ச்சை கையில் கட்டிக்கொண்டுதான் அண்ணாமலை எல்லோருக்கும் தேசபக்தி பாடம் எடுக்கிறார்.

சாவர்கர் வழி விடுதலை போராளிகள்

இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் தொடுப்பது 
பாகிஸ்தான் காரர்கள் அல்ல; பாஜகவினர்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில்
ஆளும்கட்சிக்கு எதிராக பாஜகவினர் நடத்திய பேரணியில் வன்முறை!

இது காஷ்மீர் அல்ல..!

இந்திய ராணுவ வீரர்கள் மீது கல் எறிபவர்கள் முஸ்லிம்கள் அல்ல..!!

இவர்கள் கையில் இருப்பவை பாகிஸ்தான் கொடி அல்ல..!!!

இவர்களின் உடைகள் மூலம் நரேந்திரவால் இவர்களை அடையாளம் காணமுடியாது. 
மற்ற எவராலும் முடியும்.
இவர்கள்தான்... 
நரேந்திராவின் 'புதிய இந்தியா' கழிந்துத்தள்ளிய 
காவிதேச பக்தர்கள்.
இவர்கள்தான்...
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் எல்லாம்... எப்படியாவது ஏதோ ஒன்றின் பெயரில்... கலவர வன்முறை வெறியாட்டம் போடுவதை ஒரே தொழிலாக கொண்ட சுயசேவகர்கள்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில்... 

இந்திய ராணுவ வீர்ர்கள் மீது கல்லெறியும் பாசிச பாசக பயங்கரவாதிகள் கும்பலில்... 
பாஜகவின் முன்னாள் முதலமைச்சர், 5 எம்பிகள் 3 எம்எல்ஏக்கள் எல்லாம் உள்ளதாக பத்திரிகை செய்தி கூறுகிறது.
---------------------------_-------------------------------
ராணுவ வீரர்கள் படுகொலை.


இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ நிலையத்தில் புதன்கிழமை அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நான்கு வீரர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள், சாகர் பன்னே, ஆர். கமலேஷ், ஜே. யோகேஷ் குமார், சந்தோஷ் எம். நாகரால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்ததாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
எனினும், அந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து அவர்கள் விரிவாக எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

பதிண்டா ராணுவ நிலையம் இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய வெடிமருந்து கிடங்குகளில் ஒன்றாகும்.
இந்த ராணுவ நிலையம் குடியிருப்பு பகுதியில் இருந்து விலகி உள்ளது.
இங்கு புதன்கிழமை அதிகாலையில் துப்பாக்கி சூடு நடந்தது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 4 வீரர்கள் உயிரிழந்தனர்.

பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, இது ஒரு பயங்கரவாத சம்பவம் அல்ல.
இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவ நிலையத்தில் இருந்து ஒரு இன்சாஸ் துப்பாக்கி காணாமல் போனது. 
நீண்ட தேடுதலுக்கு பிறகு அது புதன்கிழமை மாலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் 'பயங்கரவாத தாக்குதல்' அல்ல என்று பஞ்சாப் காவல்துறை  கூறியுள்ளது.

 இதேவேளை நடந்த தாக்குதல் தொடர்பாக அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் என குறிப்பிட்டு அவர்களுக்கு எதிராக காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளன.


கொலையானவர்களில் இருவர் தமிழ்நாட்டைச்சேர்ந்த யோகேஷ்,சந்தோஷ் குமார் என்ற புதிதாக ராணுவத்தில் சேர்ந்த இளம் வீர்ர்கள்.
-----------------------------_---------------------------_------+++

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?