உண்மைதானோ?

 உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை ஜெய் ஸ்ரீராம்னு கூவிக்கிட்டே சுட்டுகொலை செய்த மூவருள் ஒருவரான அருன் மவுரியாவின் வீடு இது. 

மாட்டுதொழுவத்தைவிட மோசமான நிலையில் கதவுகள் எதுவும் இல்லாமல் ஒருபுறம் அடுக்கிவைக்கப்பட்ட கற்களைக் கொண்டு அதன் மேல் ஓட்டுக்கூரையும்ம றுபுரம் தார்ப்பாய் கொண்டு அமைக்கப்பட்டதுதான் ஹிந்துத்துவ அமைப்பினரால் வன்முறையைத்தூண்டி வளர்க்கப்படும் நபர்களின் வீடு இப்படித்தான் இருக்கும்.

 வீட்டில் மின்சாரம் இல்லை. பொருட்கள் வைக்க அலமாரியோ உட்கார இருக்கை என்று எதுவுமே கிடையாது, இறந்தவர்களை வைத்து எடுத்துச்செல்லப்பயன்பட்டு

இடுகாட்டில் விடப்படும் கட்டில்களை கொண்டுவந்து பயன்படுதுவார்கள். இங்கும் அப்படிப்பட்ட ஒரு கட்டில்தான் உள்ளது

உத்தரப்பிரதேசத்தில் *தாழ்த்தப்பட்டவர்கள் காரைவீடுகள் கட்டக்கூடாது* என்பது இன்றும் பல ஊர்களில் எழுதப்படாத சட்டமாக உள்ளது குறிப்பிடத்தது.

அதிக் அகமதுவைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட Semi automatic Zigana பிஸ்டல். இந்த கைத்துப்பாக்கியின் விலை ₹7,00,000 மற்றும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த கொலையாளிக்கு  விலையுயர்ந்த மற்றும் தடை செய்யப்பட்ட துப்பாக்கி எப்படி கிடைத்தது?

இந்த கொலையை ஸ்போன்சர் செய்தவர்கள் யார் ? 

இதன் பின்னே  அரசியல்வாதிகள் உள்ளனரா ?

இந்த பிராச்சியின் எச்சரிக்கை ட்வீட் போட்ட அடுத்த நாளே சுடப்படுகிறார்கள், அதுவும் 10:30 மணி இரவு.

நேரில் கண்ட சாட்சிகளைக் கேளுங்கள்! திட்டமிட்டது என்கிறார்கள். 

கொலையாளிகள் ஏன் போலீஸ் வண்டியில் வந்தார்கள் ?

எல்லாமே திட்டமிட்டு  நடத்தப்பட்ட கொலைகள என்கிறார்கள்.அது உண்மையாக இருக்கலாம்.

ஒரு குடும்பத்தைச்சேர்ந்த மூவர் குறுகிய நாட்களுக்குள் வரிசையாக என்கவுன்டர்,சுட்டுக்கொலை.

உண்மைதானோ?

------------------------

பாஜகவின் A to Z ஊழல்.

மோடி அரசு  தனது  ஆட்சியில் செய்த ஊழல்களை  இந்த இணையதளத்தில் காணலாம்.

 corruptmodi.com என்ற இந்த வெப்சைட்டுக்கு சென்றால், பாஜகவின் ஒட்டு மொத்த ஊழல் குற்றச்சாட்டுக்களும் ஆங்கில அகர வரிசைப்படி சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆங்கிலத்தின் இருப்பத்தாறு எழுத்துக்களுக்கும் 'இந்தி'யர்கள் குறை வைக்கவில்லை.

இது பாஜகவினரின் சொத்துப் பட்டியல் இல்லை

இது பாஜகவினர் நடத்தும் பள்ளி கல்லூரி கல்வி நிலையங்கள் பட்டியல் இல்லை

இது பாஜகவினரின் தொலைக்காட்சி சானல்களின் பட்டியல் இல்லை.

இது பாஜகவினரின் ஊழல் பட்டியல்.

-------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?