கெட்ட [இறைச்சி ] வியாபாரிகள்




சென்னையில் உள்ள ஓட்டல்கள்,துரித உணவு கடைகளில் சென்னை மாநகர மக்களுக்கு உணவாகின்றன.http://img.dinamalar.com/business/admin/news/large_1378062240.jpg




 சென்னையில் அடிக்கடி ரெயில் நிலையத்தில் தன் கணக்கில் கெட்டுப்போன மாட்டு இறைச்சிகள் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.
மற்ற நாள்களில் இந்த இறைச்சிகள் என்னவாகின்றன?



இவை தற்போது சென்னையின் புற நகர்களுக்கும் உணவாக செல்கின்றன.
சென்னையில் இவை கண்டு பிடிக்கப் பட்டது தெரிந்தாலும் தமிழக மற்ற நகரங்களிலும் கெட்டுப்போன இறைச்சி விற்பனை பரவி வருகிறது.அதாவது இந்த கெட்ட [இறைச்சி]வியாபாரிகள் தங்கள் தொழிலை பரவலாக்கி வருகிறார்கள்.
இதை தடுக்க வேண்டிய தமிழக சுகாதார துறையினரோ கெட்ட இறைச்சி தொழிலதிபர்கள் தரும் பணத்தில் நல்ல இறைச்சி வாங்கி தின்று கொழுத்துக்கொண்டிருக்கின்றனர்.
எங்கிருந்து இந்த கெட்ட இறைச்சி வருகிறது?


ஆந்திர மாநிலம் நெல்லூர், விஜயவாடா ஆகிய பகுதிகளில் இருந்துதான் தமிழகத்துக்கு டன் கணக்கில் மாட்டு இறைச்சி சப்ளை செய்யப்படுகிறது. இதற்கென ஆந்திராவில் சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் மிகப்பெரிய கும்பல் உள்ளது. 
நோய்வாய்ப்பட்டு இறந்த மாடுகள், விபத்தில் அடிபட்ட மாடு களை இந்த கும்பலைச் சேர்ந்தவர் கள் சேகரித்து ஒரே இடத்துக்கு கொண்டுவருவார்கள். பல விவசாயி களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு நோய்வாய்ப்படும் மாடு களை குறைந்த விலைக்கு வாங்கி யும் வெட்டுவார்கள். 
மாடுகளை வெட்டி பெரிய பெரிய துண்டுகளாக, தெர்மாக்கோல் ஐஸ் பெட்டியில் அடைத்து, ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் ரயில்களில் அனுப்பிவிடுவார்கள்.

சென்னையைச் சேர்ந்த சகோதரர் கள் 2 பேர், 
அவர்களின் தொழில் கூட்டாளிகள் 2 பேர் ஆகியோர்தான் சென்னையில் விற்பனை செய் கின்றனர். 
இவர்கள் 4 பேரிடம் 30-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். வாரத்துக்கு 2 அல்லது 3 முறை இறைச்சி லோடு வரும். 
ஆயிரம்விளக்கு மற்றும் சிந்தா திரிப்பேட்டை கூவம் ஆற்றின் அருகே இந்த இறைச்சி பெட்டிகளை கொண்டுவந்து பிரித்து, டன் கணக்கில் குவித்து வைத்திருப்பார்கள். 
அவற்றை பல வியாபாரிகள் வந்து கிலோ கணக்கில் வாங்கிச் செல்வார்கள்.
இறைச்சியை 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் எடுத்துச் சென்று இறைச்சிக் கடைக்காரர்கள் மற்றும் ஓட்டல்களுக்கு சப்ளை செய்கின்றனர். பின்னர் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி, 400-க் கும் மேற்பட்ட பாஸ்ட் ஃபுட் கடைகளுக்கும் சப்ளை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடைகளில் ஒரு கிலோ மாட்டு இறைச்சி ரூ.180 முதல் 200 வரையும், ஆடு ரூ.400 முதல் ரூ.450 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இவர்கள் ஆந்திராவில் இருந்து ரூ.30-க்கு மாட்டு இறைச்சியையும், வேறு மாநிலங்களில் இருந்து ரூ.50-க்கு ஆட்டிறைச்சியையும் வாங்குகின் றனர். 
பின்னர் மாட்டிறைச்சியை ரூ.90-க்கும், ஆட்டிறைச்சியை ரூ.150-க்கும் விற்கின்றனர் என்றார். சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையினரால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டிறைச்சி பார்சல்கள். (கோப்புப் படம்)

விதிப்படி மாட்டு இறைச்சிக் கடை நடத்தி வரும் வியாபாரிகள்;
'அரசு விதிமுறைப்படி வியாசர் பாடி அருகே ஆட்டுத்தொட்டியில் டாக்டர்களின் மேற்பார்வையில் மாடுகளை வெட்டி, சீல் வைத்து கொண்டு வந்து வியாபாரம் செய்கிறோம். 
ஆனால், சிலர் அதிக லாபம் சம்பாதிக்க இதுபோன்று செய்கின்றனர். அவர்களால் நேர்மையாக தொழில் நடத்தும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மக்களை நேரடியாக பாதிக்கும் இதுபோன்ற செயல்களை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.'என்று கூ றினர்.

கெட்டுப்போன இறைச்சியை யார் வாங்குகிறார்கள் என்பதை அரசு சுகாதார துறை அதிகாரிகள் கண்டுபிடித்து அவர் கள் மீது நடவடிக்கை எடுப்ப தில்லை. இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கெட்டுப்போன பொருட்கள் விற்பனை செய்யப் படாமல் தடுப்பது மட்டும்தான் எங்கள் பொறுப்பு. கெட்டுப்போன இறைச்சியை அனுப்பிய மற்றும் சென்னையில் வாங்கும் நபர்கள் யார்? 
என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது உணவு பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்தான்” என்றனர். 
 
உணவு பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, “கெட்டுப்போன பொருட்கள் அனுப்புவதை தடுப்பதற் காக ரயில்வே துறையிலேயே தனிப்பிரிவு உள்ளது. இதை அவர்கள்தான் கவனிக்க வேண்டும்” என்றனர்.
இது குறித்து ரயில்வே சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பப்படும் பொருட்கள் கெட்டுப் போனது தெரிந்தால் அவற்றை கைப்பற்றி அழிப்பது மட்டும்தான் எங்கள் பணி” என்று கூறி முடித்துக் கொண்டனர். http://ekuruvi.com/wp-content/uploads/2013/12/beef.jpg

இவர்கள் இப்படியான  பேச்சுக்கு காரணம் அழுகிப்போன இறைச்சி வியாபாரிகள் கொடுக்கும் கையுட்டுதான் காரணம் என்பதை சின்ன குழந்தை கூட சொல்லி விடும்.
பொதுமக்களின் உடல் நலனை பாதிக்கும் இந்த கொடூர சுகாதார கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்தான் .
தவறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார் என்பது மட்டும் கடைசி வரை தெரியவில்லை. 

இந்த அரசு அதிகாரிகளால்தான் அரசு விதியின்படி தொழில் செய்யும் நல்ல வியாபாரிகள் தங்கள் தொழிலை பாதுகாக்க இந்த கெட்ட [இறைச்சி ]வியாபாரிகள் வலையில் விழுந்து விடக் கூடாது.
எல்லாம் அந்த லஞ்சப் ப [ண ]ன க் கு[த்தான்]  வெளிச்சம். 
------------------------------------------------------------------------------------------------------------- 
ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் விற்பனையில் கடந்த காலாண்டில் அதிகளவு  லாபத்தை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கடந்த காலாண்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு லாபம்  ஈட்டியுள்ளது அந்த நிறுவனம். இது உலகளவில் பெரிய சாதனை.
ஆனால் கொள்ளை லாபத்தில் குளிக்கும் இது போன்ற நிறுவனங்கள் தங்கள் வெற்றிக்கு காரணமான தொழிலாளர்களை இன்னமும் அதிக லாபத்தை குவிக்க வெளியே அனுப்பி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளுவதுதான் சரியல்ல.வெளி தள்ளப்பட்ட தொழிலாளர் களால்தான் இந்த பணக்குவியல் சாத்தியமானது என்பதை மறந்து அவர்கள் வாழ்க்கையை இருளாக்குவது என்ன வணிக முறையோ?இதை கண்டு கொள்ளாத அரசை என்ன செய்யலாம்.?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?