அறிவியல் உலகில்சிறந்த அறி{வா}விலிகள் ?





ள்மலேசிய நாட்டிற்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டது. 
இன்றுவரை அது என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அறிவியல் மிக வேகமாக முன்னேறியுள்ள நிலையிலும் கூட இது மிகப் பெரிய சவாலாகவே உள்ளது.
ஆனால் மும்பையில் நடைபெற்றுவரும் இந்திய அரசியல் மாநாட்டில் கட்டுரை வாசித்த கேப்டன் ஆனந்த் ஜே போடோஸ் என்பவர், 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் விமானப்போக்குவரத்து இருந்தது என்றும், அந்த விமானங்கள் கண்டம்விட்டு கண்டம் தாண்டிக் கூட அல்ல, கிரகம் விட்டு கிரகம் தாண்டிச் செல்லும் அளவிற்கு வல்லமை பெற்றதாக இருந்தது என்றெல்லாம் அள்ளிவிட்டுள்ளார். 
அவருடைய கற்பனைத் திறன் அத்துடன் நிற்கவில்லை.
===================================================================
கேப்டன் ஆன்ந்த் ஜே.போடாஸ் என்பவர்(இவர் அறிவியலாளர் இல்லை) சமஸ்கிருதம்மூலமாக பழமையானஅறிவியல் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை அறிவியல் மாநாட்டில் வாசித்தார். 
இந்த ஆய்வுக்கட்டுரையில் கூறியுள்ளதாவது:
மாநாட்டில் இந்தியாவில் 7000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் மூலம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும் ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கும் ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்கும் சென்று வந்துள்ளனர். 
ஆனால் நமது நவீன வரலாறோ 1904ல்தான் ரைட் சகோதரர்களால் விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகிறது.
பரத்வாஜர் என்பவர் விமான சம்ஹிதா என்ற நூலை எழுதி உள்ளார். அதில் விமானங்களைத் தயாரிக்க பல விமான உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன என்று கூறியுள்ளார்.
ஆனால் தற்போது விமானங்கள் தயாரிக்க உலோகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. விமான சம்ஹிதாவில் என்ன உலோகங்கள் பயனபடுத்தப்பபட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ள நமது இளைய தலைமுறையின்ர் அந்த நூலை படிக்க வேண்டும் 
அந்த உலோகங்களை நமது நாட்டில் தயாரிக்க வேண்டும். 
இந்தியாவில் 60 அடியிலான ஜம்போ ரக விமானங்கள் அக்காலத்தில் இருந்துள்ளன. பண்டைய கால விமானங்களில் 40 இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.பண்டைக்கால இந்தியாவில் ரூபகன் ரகஸ்யா என்ற பெயரில் ரேடார் முறையும் இருந்துள்ளது. 
அந்த ரேடார் முறையில்விமானத்தின் ஒட்டுமொத்த உருவத்தையும் அதைக்கண்காணிப்பவர் பார்க்க முடிந்துள்ளது.
 தற்போதைய நவீன ரேடார் கருவியில்விமானம் குறித்த ஒரு சிறிய புள்ளியை மட்டுமே பார்க்க முடிகிறது . 
மேலும் பரத்வாஜரின் நூலில் அந்த கால விமான ஓட்டிக்ளுக்கு எருமை ,பசு மற்றம் ஆட்டின் பால் போன்றவை உணவுகளாக குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்பட்டன.
தண்ணீருக்கு அடியில் வளரும் தாவரங்கள் மூலம் விமானிகளுக்கு உடைகள் தயாரிக்கப்பட்டன. இவ்வாறு அந்த `ஆய்வுக்கட்டுரையில்’ கூறியிருந்தார். இதேபோல மாநாட்டில் வாசிக்கப்பட்ட மற்றொரு ஆய்வுக்கட்டுரையில் பண்டைக்காலத்தில் அறுவைச் சிகிச்சைக்காக இந்தியர்கள் 20 வகை கூர்மையானகருவிகள் மற்றம் 101 வகையான உணர்வை மழுங்கச் செய்யும் கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.
 இந்த அமர்வில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், பண்டைக்கால இந்தியாவில்தான் பிதாகரஸ் தேற்றம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை கீரிஸ் நாடு அல்ஜீப்ராவாக மாற்றி அதற்கு சொந்தம் கொண்டாடியதை நாம் பெருந்தன்மையுடன் அனுமதித்தோம் என்று கூறினார்.
இதே மாநாட்டில் பேசிய சுற்றுச்சூழல்,வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் சமஸ்கிருதத்தில்ஏராளமான அறிவியல் விஷயங்கள் உள்ளன. 
இதில் அறிவியல் காங்கிரஸ் கவனம் செலுத்திமனித குலத்தின் நன்மைக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.
=====================================================================
ஜம்போ ரக விமானங்கள் கூட அக்காலத்தில் இருந்ததாகவும், 40 இன்ஜின்கள் அந்த விமானங்களில் பயன்படுத்தப்பட்டது என்றும் அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற அறிவியலாளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனியும் அளவில் ஆய்வுக் கட்டுரை வாசித்துள்ளார் அவர்.ரேடார் முறையும் இருந்தது என்றெல்லாம் அவர் பேசியுள்ளார். இந்த கட்டுரையை வாசித்த ஆனந்த் ஜே போடோஸ் ஒரு அறிவியலாளர் அல்ல. ஆனால் ஆர்எஸ்எஸ் சிந்தனை உடையவர். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர். அதனால்தான் அவர் அந்த மாநாட்டில் பங்கேற்று கட்டுரை வாசிக்கும் வாய்ப்பை பெற முடிந்துள்ளது.இந்த மாநாட்டை துவக்கிவைத்தவர் பிரதமர் நரேந்திரமோடி. இத்தகைய அபத்தமான கருத்துக்களை அவரும் ஏற்கெனவே பேசியுள்ளார். பிள்ளையார் உருவத்தை பார்க்கும் போது அந்த காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறை இருந்ததை அறிய முடிகிறது.

குளோனிங் முறையில்தான் கௌரவர்கள் பிறந்துள்ளனர் என்றும் அறிவியல் மாநாடு ஒன்றில் உளறிக் கொட்டினார் மோடி.அப்போது அவரை பின்பற்றி பலரும் புறப்பட்டுள்ளனர்.சீவக சிந்தாமணியில் “வளவன் ஏவா வானூர்தி என்று ஒரு வரி வருகிறது. இதை வைத்துக்கொண்டு ஆளில்லா விமானம் அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது என்று கூறினால், கேட்பவர்கள் எள்ளி நகையாடுவார்கள். திருத்தக்கத் தேவரின் கற்பனை என்கிற அளவில் சொன்னால் பிழையில்லை.
ஆனால் எல்லாமே அந்த காலத்தில் இருந்தது என்று புராணங்களை மேற்கோள் காட்டத்துவங்கினால் அதற்கு ஒரு எல்லையே இருக்காது.மோடி தலைமையில் ஒரு வலதுசாரி, பிற்போக்கு ஆட்சி அமைந்த பிறகுதான் அறிவியல் மாநாட்டையே அசிங்கப்படுத்தக் கூடிய அளவுக்கு சிலருக்கு தைரியம் வந்துள்ளது. அந்த மாநாட்டில் பேசிய சில மத்திய அமைச்சர்களும், சமஸ்கிருதத்தில் உள்ள அறிவியல் கருத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசியுள்ளனர்.
இத்தகைய பேர்வழிகள்தான் ராமர் கட்டிய பாலம் கடலுக்கு அடியில் உள்ளது என்று கூறிதமிழக மக்களுக்கு பலன் அளிக்கக் கூடிய சேதுகால்வாய்த் திட்டத்தையே முடக்கி வைத்துள்ளனர்.
அயோத்தியில் இந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று கூறி பாபர் மசூதியை இடித்து கலக விதைகளை தூவியதும் இதே காவிக் கும்பல்தான். மத்தியில் அதிகாரம் கைக்குவந்துவிட்டது என்ற மமதையில் அறிவியல் துறையையே அழிக்க இந்தக் கும்பல் துணிந்துவிட்டது. இது அறிவியலாளர்கள் தொடர்புடைய பிரச்சனை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தேசத்தின் பிரச்சனை. 
"இன்று மட்டும்தான் விமான சேவைகளை இந்திரன் ரத்து செய்துள்ளார்.
நாளை அப்பா வீட்டுக்கு விமானத்தில் சென்றுவிடலாம்.கவலை கொள்ளாதெ பாரு.'

அறி வியலாளர் டாக்டர் ராம்பிரசாத் காந்தி ராமன், போடாஸ் சமர்பித்தஆய்வுக்கட்டுரை நீக்கப்படவேண்டும் என்றும்மாநாட்டின் அந்த ஆய்வு அமர்வே ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இணையதளத்தில் மனு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:நாங்கள் அறிவியலாளர் சமூகம் என்றமுறையில் அறிவியல் கல்வியில் இது போன்றபோலியான அறிவியல் உள்ளேநுழைப்பதுகுறித்து மிகுந்த அளவில் கவலை கொள்கிறோம். 
இதன் பின்புலத்தில் அரசியல் கட்சிகளும் உள்ளன.
 போலியான அறிவியல் பேச்சுக்களுக்கு அறிவியல் மேடையை கொடுப்பது என்பதுபோலியான அறிவியல்பிரச்சாரர்கள் கடந்த காலத்தில் மேற்கொண்டதைப்போல கடுமையான தாக்குதல் தொடுப்பதை விட மோசமானதாகும்.
இதைப் பார்த்துக் கொண்டு அறிவியலாளர்கள் அமைதியாக இருந்தால் நாம் அறிவியலுக்கு மட்டுன்றி நமது குழந்தைகளுக்கும் துரோகம் இழைத்தவ்ர்களாவோம். 
இநத ஆய்வுத் தாளானது ரத்து செய்யப்பட வேண்டும், அந்த அமர்வும் நீக்கப்பட வேண்டும். 
இவ்வாறுஅந்த மனுவில் கூறியுள்ளார்.இது குறித்து வரலாற்றுப் பேராசிரியர் இப்ரான் ஹபீப் இந்தியர்கள்தான் அனைத்தையும் கண்டுபிடித்தவர்கள் என்று கூறுவதே நமது வரலாற்றை மறைத்து அதன் உண்மையான பெருமைகளை சிதைத்து அதை அவமதிப்பதாகும் என்று கன்டனம் தெரிவித்துள்ளார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?