தீவிரவாதியை கொல்ல

 தாக்குதலின் போது 
இன்று சில வில்லங்க செய்திகள்தான் கண்ணில் பட்டுள்ளன.
2001    ஆண்டில் நாடாளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதி[என்று  சொல்லலாமா?] அப்சல் குரு     தாக்கல் செய்த கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.  அப்சல்குரு தூக்கு குறித்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல்   முதலில் வெளியானது.
சிறிது நேரத்திலேயே கசாப் போன்று தூக்கிலிடப்பட்டு விட்டார் என்றும் செய்தி வெளியாகி விட்டது.
   இது போ ன்ற மறைமுகங்கள் அரசுக்கு தேவையா ? எதற்காக ?
-யாருக்காக அரசு பயப்படுகின்றது.ஒரு தீவிரவாதியை கொல்ல பயம் ஏன்?துபாயில் சமீபத்தில் கொலை குற்றம்சாட்டப்பட்ட இலங்கை சிறுமி தலையை வெட்டி கொலை செய்யப்பட்டாரே.அந்த நாட்டு அரசு பலர் வேண்டுகோள் விடுத்தும் தண்டனையை நிறைவேற்றியது.இந்தியா போல் ஒளித்து செய்யவில்லை.   பகிரங்க மாகவே தலை யை வாங்கியது.
ஆனால் இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடத்தையே வெடிகுண்டால் தகர்க்கப் பார்த்த 9
பேர்களை கொன்ற அப்சல் குருவுக்கு தூக்கை எதிர்த்த சிலருக்கு பயந்துதான் அரசு ஒளித்து தூக்குப்பொட வேண்டிய கட்டாயம்.
இவனை மட்டுமல்ல கசாப் என்ற பாகிஸ்தான் தீவிரவாதியையும் சில நாட்களுக்கு முன்னர் ஒளிவு-மறைவாகவே தூக்கிலிடவெண்டிய துர்பாக்கிய நிலை.
அப்சலை எதிர்த்து நிற்கும் வீரர் .இவரும் தாக்குதலில் பலியாகி விட்டார்.

காரணம் அவர்களின் தீவிர வாதத்தை மறந்து விட்டு மத ரீதியில் அவர்களுக்கு சில இசுலாமிய அமைப்புகள் வக்காலத்து வாங்கியதே காரணம்.இந்திய மண்ணில் இது போன்று தேவையே இல்லாமல் தீவிரவாதம் செய்யும் சில் பாகிஸ்தான் அமைப்புகளுக்கு இந்திய இசுலாமிய தலைவர்கள் ஆதரவு தருவது பொன்ற செய்திகள்தான் ஒட்டு மொத்த இசுலாமிய சமுகத்தையும் மற்றவர்கள் சந்தேகக் கண்ணொடு பார்க்க வைக்கிறது.இதை சில மத தலைவர் கள் உணர வேண்டும் .ஆப்கன் தாலிபன் தீவிரவாதிகளுக்கு ஆதரவான போக்குத்தானே "விஸ்வரூபம்"படத்தை எதிர்க்கும் காரணமாக இருப்பதாகத்தானே  இங்குள்ளவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.அது இசுலாமியர்களுக்கு இழுக்குதானே.இதெல்லாம் ஏன் சில மதவாத தலைகளுக்கு புரிய மாட்டேன் என்கிறது?
அரபு நாட்டில் ஒரு சின்ன குழந்தையை கொன்றதாக பெண் தலையை வெட்டி கொல்லும் செயலை அந்நாட்டின் சட்டதிட்டத்தில் அது சரியானதுதான் என்று இங்கு வாதிட்ட பேராசிரியர்கள் 11 பேர்களை அப்பாவிகளை கொன்று குவித்ததை எதன்  அடிப்படையில் சரி என்கிறார்கள்?தூக்கை தவறு என்று கொதிக்கிறார்கள்?
 அப்சல் குரு தீவிரவாத நாட்குறிப்பு.
---------------------------------------------------
    • டிச.15, 2001 - இத்தாக்குதல் தொடர்பாக, காஷ்மீரில் இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகம்மது (ஜெ.இ.எம்) என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அப்சல் குருவை டில்லி போலீசார் கைது செய்தனர். இதே வழக்கு தொடர்பாக டில்லி ஜாகீர் உசேன் கல்லூரியை சேர்ந்த கிலானி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
    டிச.21, 2001 - இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பாகிஸ்தானில் இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய அமைப்புகள் என்பதால், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அந்நாட்டை இந்திய அரசு கேட்டது. பாகிஸ்தான் மறுத்ததால், அந்நாட்டுக்கான இந்திய தூதரை இந்தியா திரும்ப அழைத்துக்கொண்டது.
    டிச.25, 2001 - சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலால், ஜெஇஎம் தலைவர் மவுலானா மசூத் அசாரை பாகிஸ்தான் கைது செய்தது.
    டிச.29, 2001 - விசாரணைக்காக அப்சல் குரு, 10 நாள் போலீஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்டார்.
    ஜூன் 4, 2002 - பார்லி., தாக்குதல் தொடர்பாக அப்சல் குரு, கிலானி, சவுகத் உசைன் குரு, அப்சன் குரு ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
    டிச.18, 2002 - கிலானி, சவுகத் உசைன், அப்சல் குரு ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்சல் குருவின் மனைவி அப்சன் குரு விடுவிக்கப்பட்டார்.
    ஆக.30, 2003 - பத்து மணி நேரம் நடந்த சண்டையில், ஜெஇஎம் தலைவர் காஷி பாபாவை ஸ்ரீநகரில் எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
    அக்.29, 2003 - நீதிமன்றத்தால் கிலானி விடுதலை செய்யப்பட்டார்.
    ஆக.4, 2005 - அப்சல் குரு மீதான தூக்குத் தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட், சவுகத் உசைனின் தூக்குத் தண்டனையை, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.
    செப்.26, 2006 - அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை, டில்லி கோர்ட் உறுதி செய்தது.
    அக்.3, 2006 - அப்சல் குருவுக்கு கருணை காட்டுமாறு, அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, அப்சல் மனைவி மனு செய்தார்.
    ஜன.12, 2007 - மேல்முறையீட்டு மனுவில், அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் மீண்டும் உறுதி செய்தது.
    டிச.10, 2012 - அப்சல் குரு வழக்கை ஆய்வு செய்வதாக, மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே அறிவித்தார்.
    டிச.12, 2012 - அப்சல் குருவை தூக்கிலிடுவதில் ஏற்படும் தாமதம் குறித்து, பார்லிமென்டில் பா.ஜ., கேள்வி எழுப்பியது.
    பிப் 3, 2013 : அப்சலின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்
    பிப்.9, 2013 - டில்லி திகார் சிறையில் காலை 8 மணிக்கு அப்சல் குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டார். 
அப்சல் குரு பற்றி  
==============
ஜெய்ஷி இ முகம்மது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன்  அப்சல்குரு எனப்படும் முகம்மது அப்சல்குரு. 
அப்சல்குரு, காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவன் . முதல் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்த இவர் ஐஏஎஸ் தேர்விற்காக தன்னை தயார் செய்து வந்தான் . பின்னர் ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்கம் கட்சியில் சேர்ந்த இவர் பயங்கரவாத பயிற்சிகள் சிலவற்றை பெற்றாரன் . சுயதொழில் செய்து வந்த இவர் பயங்கரவாத தலைவருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக அந்த இயக்கத்தில் இணைந்தான் . 
இது அப்சல் அல்ல .
2001ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் டில்லி கோர்ட் அப்சல்குருவிற்கு 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரண தண்டனை விதித்தது. பின் 2003ல் டில்லி ஐகோர்ட்டும் இதனை உறுதி செய்தது. இறுதியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த அப்சல்குருவின் மனுவை 2005ம் தள்ளுபடி செய்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் 2006ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டது. இந்நிலையில் அப்சல்குருவின் மனைவி தனது கணவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தார்.அதை ஏற்றுக்கொள்ளாத குடியரசுத்தலைவர் கருணை மனுவை 2013  குடியரசு தினத்தன்று  நிராகரித்தார்.
தீவிரவாதியை விடுவிக்ககோரி  மற்றொரு தீவிரவாதம். 
--------------------------------------------------------------------
2001ம் ஆண்டு பார்லிமென்ட் தாக்குதல் மட்டுமின்றி அதற்கு முன் டில்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்கு அப்சல்குருவே காரணம் என உறுதி செய்யப்பட்டது.
 இவ்வழக்கில் 8 கண்ணால் கண்ட சாட்சிகளும், பிற சாட்சிகளும் விசாரிக்கப்பட்டன. இவர்களில் 10 பேர் அப்சல்குருவிற்கு எதிராக சாட்சியம் அளித்தனர். 
சட்டப்பிரிவு 121, 121 ஏ, 122, 120 பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கீழ் அப்சல்குரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அப்சல்குருவிற்கு ஆயுள் தண்டனை விதிக்க 8 கோர்ட்டுகள் தீர்ப்பளித்தன.
 இருப்பினும் டில்லி ஐகோர்ட்டில் இவ்வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. அப்சல்குருவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் 11 பேர் பலியாகினர். மேலும் 76 பேர் படுகாயம் அடைந்தனர். 
அப்சல் குரு கொடுரமான மக்கள் விரோத தீவிரவாதி என்பதற்கு இது மேலும் ஒரு அத்தாட்சியாகி விட்டது. 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?