கனிமங்கள் காணாமல் போனது எப்படி?

தமிழகத்தில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும்போது கடன் இரண்டு லட்சம் கோடிகளுக்கு மேல். டாஸ்மாக் மூலம் ஆண்டுதோறும் வருமானம் ரூ.28 ஆயிரம் கோடிகளைத் தாண்டுகின்றது. மின்வாரியமும் ரூ.ஒரு லட்சம் கோடிக்கும் மேல் கடனுக்கு ஆளாகி உள்ளது. அரசுக்கு வருமானம் வருகின்றது என்று எதுவும் இல்லை. அரசு மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிகளை வைத்து தான் மக்களுக்கான நலத்திட் டங்களை நடத்தமுடியும். ஆனால் அரசே மதுபானத்தை விற்கின்றது. குடிநீர் விற்கின்றது. மேலும் தமிழகத்தில் வருமானம் வரவேண்டிய பல துறைகள் உள்ளன. அதில் ஒன்று பூமியில் கிடைக்கும் கனிமவளம். இந்தியாவில் கிடைக்கும் கனிமங் களில் பல தமிழகத்திலும் கிடைக்கின்றது. மாக்கினிசைட், கார்னெட், இலுமனைட், மோனோசைட், சுண்ணாம்பு, லிக்னைட், கிராபைட் உட்பட என பல சொல்ல முடி யும். அதற்கும் மேல் ஆறுகளில் மணல் வருவதற்கு காரணமான மலைகள் உள்ளது. இன்று ஆறுகளில் உள்ள மணல் ஒரு வியாபாரப் பொருளாக மாறிவிட்டது. மணல் என்று சொல்லும்போது ஆறுகளில் கிடைக்கும் மணல் மட்டுமல்ல, கடலில் உள்ள மணலும் விலை மதிப்பில் லாத அளவில் உள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி கடற்கரையோரங்களில் உள்ள மணலில் கார்னெட், மோனோ சைட், இலுமனைட் தாது கிடைக்கின்றது.அதேபோன்று மலைகளில் வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்கள் வண்ண வண்ணமாக பெருமளவில் அரசுக்கு ஒரு வருமானத்தை ஈட்டித்தரும் ஒன்றாகும். தமிழகத்தில் கிடைக்கும் குன்னம் கருப்புக்கல் உலகத்திலேயே வேறு எங்கும் கிடைப்பதில்லை. இதுபோன்ற கருப்புக்கல் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் தான் கிடைக்கின்றது. பூமியில் கிடைக்கும் அனைத்து கனிமங்களும் அரசுக்குச் சொந்தம் என வருவாய்த்துறை அதிகாரிகள் சொல்வது சாதாரண மக்களுக்கு மட்டுமே.ரிலையன்ஸ் போன்ற நிறுவனங் களுக்கு கிடையாது. அதைத்தான் கோதா வரி படுகை எண்ணெய் எடுப்பதில் மத்தியஅரசானது குத்தகையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்தது மட்டுமல்ல, அந்த நிறுவனம், எரிவாயுவிற்கு அது கேட்ட அளவில் நிர்ணயம் செய்தால்தான் ஏற்கமுடியும் என பிடிவாதம் பிடித்து வெற்றியும் பெற்றது.நடவடிக்கை அப்படித்தான் இருந்தது. அதேநிலைதான் தமிழகத்திலும். கிரானைட் கற்கள் வெளிநாடுகளில் நல்ல சந்தை என்று தெரிந்தவுடன் தமிழகத்தில் உள்ள மலைகளையெல்லாம் கிரானைட் உள்ளதா என தேட ஆரம்பித்தனர். அதற்காக அரசின்சார்பில் ஆரம்பிக்கப்பட்டது கனிம நிறுவனம். ஆனால் அதை லேபிள் ஆக கிரானைட் எடுப்போர் வைத்துக் கொண்டார்கள். அரசு புறம்போக்கு மற்றும் வனங்களில் உள்ள நிலத்தில் உள்ள கனிமங்களை அரசின் நிறுவனங் களே எடுத்திட வேண்டும்.பட்டா இடத்தில் உள்ள கனிமங் களை அரசின் அனுமதியுடன் எடுக்கலாம். எங்கு கற்கள் வெட்டி எடுத்தா லும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநர் சுரங்கம் அவர்களின் உத்தரவு பெற்று அதற்கான புவிஇயல் கட்டணம் செலுத்தியபின் எடுத்துச் செல்லலாம். மலைகளில் பட்டாஇருப்பது அபூர்வமே, ஆட்சியில் உள்ளவர்கள் தனியாரை உள்ளே நுழைப் பது எப்படி என்று ஆலோசித்தார்கள். அதிமுக ஆட்சியில் தான் அதற்கான கேட் திறக்கப்பட்டது.தமிழ்நாடு தொழிற்துறை புதிய திட் டத்தை தயாரித்தது.
அதன்படி அரசின் நிறுவனமான டாமின் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மலைகளை உடைத்து கிரானைட் எடுக்க முடியவில்லை என்றால் அதை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு விடலாம், திட்டம் தயாராகிவிட்டது.டாமின் நிறுவனத்தில் உள்ள குவாரி களில் கிரானைட் கல் எடுத்து கொடுத்து அதற்கான கூலியை பெற்றுக்கொள்ளும் ஒரு முறை,மற்றொரு முறை மலை களில் கிரானைட் கல்வெட்டி எடுத்து குத்தகைக்கு எடுத்தவரே விற்றுவிட்டு அதன் விலையை டாமின் நிறுவனத்திற்கே அளித்து விடவேண்டும்.இந்த இரண்டு முறையும் 2000 ஆண்டுக்குப்பின் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. 1979ஆம் வருடத்தில் தமிழக முதல்வர் மறைந்த எம்ஜிஆர் அவர்கள் டாமின் நிறுவனம் ஆரம்பித்த தின் நோக்கமே வேறு, கிராமத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடனும் தனியார் கனிமங்களை வரைமுறையின்றி கொள்ளை அடிப்பதை தடுத்திடவும் டாமின் ஆரம்பிக்கப்பட்டது.கிராமத் தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டுகளில் மற்றும் 84ஆம் ஆண்டு களில் வேலைக்கு ஆள் எடுத்ததோடு சரி, அதற்குப்பின் ஆள் எடுக்கவே இல்லை. அதனால் டாமின் நிறுவனம் ஆட்சியில் உள்ளவர்களின் கொள்ளைகளுக்கு கிரியா ஊக்கி போன்று இருந்ததே தவிர வளரவேயில்லை.மதுரை மேலூர் பகுதியில் உள்ள மலைகளில் தனியாருக்கு 175க்கும் மேற்பட்ட குத்தகை வழங்கப்பட்டதில் டாமின் நிறுவனத்திற்கு 5 குத்தகையும் வழங்கப்பட்டது. அப்படி குத்தகை உரிமம் வழங்கப்பட்டதை யாரும் மதிக்கவில்லை. குத்தகை எல்லைகளை எல்லாம் உடைத் தெறிந்து கண்மாய், வழிபாட்டுத் தலங்கள், பாதைகள், தொல்லியல் பகுதி கள் என அனைத்தையும் தங்களுக்கு வேண்டிய கிரானைட் கற்களை வெட்டி எடுத்தார்கள்.
அன்றைய அதிமுக அரசு அனுமதிக்கப் பட்ட அடிப்படையில் அனைவருக்கும் அரசு நிலத்தில் குத்தகை விடப்பட்டது. மூன்று ஆண்டு குத்தகை முடிந்தாலும் நீதிமன்றத்தில் சென்று தடைபெற்று குவாரி நடத்தினார்கள். நீதிமன்றங்களும் இதில் உதவி செய்தன.சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்ட அதிகாரியான உ.சகாயம் ஐஏஎஸ் அவர்களின் கண்டுபிடிப்புப்படி ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடிரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.இப்படி ஒரு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே பலர் மேலூரில் மட்டும் விசாரணை செய்தால் போதாது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விசாரித்து குற்றவாளிகளை கைது செய்திடவேண்டும் என்று குரல்வலுவாக ஒலிக்கின்றது.மேலூர் என்ற ஒரு பகுதியில் மட்டுமே இந்த அளவிற்கு அரசின் கனிமவளம் கிரானைட் சொத்துக்கள் சூறை யாடப்பட்டுள்ளது. தவறுதலாக வெளி யில் தெரிந்துவிட்டது. கடந்த பதினைந்து ஆண்டுகளாக மேலூரில் நடக்கும் கிரானைட் வெட்டி எடுத்தல் விவகாரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முதல் கிராம ஊழியர் வரை புவிஇயல் மற்றும் சுரங்கம் ஆணையாளர் ஆசியுடன் நடைபெற்றது.  ஆட்சியைச் சேர்ந்தவர் களுக்கும் தெரியாத ஒன்றல்ல. லட்சக் கணக்கான லாரிகள் மூலம் கற்கள் வெளியில் கொண்டு செல்லப்பட்டது என்பதெல்லாம் அம்பலத்திற்கு வந்து விட்டது. கடப்பாரையை முழுங்கிய கதை யாக மாட்டிக்கொண்டார்கள்.இதர மாவட்டங்கள் குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் சொல்லவே வேண்டாம், திரும்பிய இடங்கள் எல்லாம் கிரானைட் தான் உள்ளது. இன்று இதன் நிலைமை சோகமானது, விவசாயம் பாழாகி அந்த மாவட்டத்திற்கு எந்தவித வளர்ச்சியும் இல்லா மல் சேலம் மாவட்டத்தின் எல்லையிலும், ஈரோடு மாவட்டத்தின் எல்லையிலும் உள்ள வன விலங்குகள் வாழும் பர்கூர்காடுகளில் கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டது. இந்தக் குவாரிகளில் பயன் படுத்தப்படும் வெடி மருந்துகள் காட்டுக்குள் இருந்த வீரப்பனால் பயன்படுத்தப் பட்டது உட்பட பின்னர் நடிகர் ராஜ்குமார் அவர்கள் வீரப்பனால் கடத்தப்பட்டபோது வெளிவந்த விபரங்கள், சுற்றுப்புறச்சூழல் கெடும் அளவிற்கு தனியாரால் அரசின் கவனத்திற்கு வராமல் கொள்ளை அடிக்கப்பட்டது.
அதேபோன்று வேலூர்மாவட்டத்தில் மகிமண்டலம் சோளிங் கர் பகுதிகளில் ரெண்டாடி போன்ற இடங் களில் மலை மொட்டை அடிக்கப்பட்டது.  இதை சோளிங்கரின் பகுதிகளில் கற்களில் பதிவு செய்தது போன்று உள்ளது.கரூர் மாவட்டம் தோகை மலையில் மலைகள் இருந்த இடம் 200 அடி ஆழமாகஉள்ள நீர்த்தேக்கம் போல் உள்ளது. சேலம்மாவட்டம் எடப்பாடி தேவன்னகவுண்ட னூரில் உள்ள மலைகள் பலதும் காணா மல் போயிற்று. மலைகளுக்கு பதிலாக 200 அடி ஆழமுள்ள பள்ளங்களும் கிரானைட் எடுத்த கழிவுகள் சிலிகா தூசுகள், அந்த நகரம் முழுவதும் மலை போல் குவிக்கப்பட்டும் கிடக்கின்றது.விழுப்புரம் மாவட்டம் சிறுவாலை பகுதிகளில் வெட்டி எடுக்கப்பட்ட கற்கள் சைஸ் செய்து விற்கப்பட்டது போக தள்ளுபடி செய்யப்பட்ட கற்களும் கழிவுக் கற்களும் அருங்காட்சியத்தில் உள்ளது போன்று இருக்கின்றது.திருவண்ணாமலை வீராணம் திருநெல்வேலி களக்காடு பகுதிகளிலும் விட்டுவைக்கப்படவில்லை.இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புமிக்க கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு தனியாரால் விற்கப்பட்டது. தமிழகத்தின் இயற்கைத்தோற்றம் சிதைக்கப்பட்டது. ஏராளமான வெடிமருந்துகள் பயன்படுத்திய காரணத்தினால் பறவைகளின் இனம் பல காணாமல் போயிற்று. இவையெல்லாம் இந்த இருபது ஆண்டுகளில் தமிழகத்தை ஆண்ட அதிமுக,  ஆட்சியாளர்களுக்கு தெரியாத ஒன்றல்ல,  மாவட்டங் களில் கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பது அதிமுக கட்சியி ன் பிடியில் அல்லவா இருந்தது. இந்தக் கனிமங்கள் இருப்பதைக் கண்டுபிடித்து அதை வெட்டி எடுப்பதற்கு அனுமதி அளிக்கும் துறை புவிஇயல்துறை மற்றும் சுரங்கத்துறை, இதன் மூலம் அரசிற்கு வரவேண்டிய வருமானம் உத்தரவாதப்படுத்தும் துறையான புவி இயல் மற்றும் சுரங்கத்துறை.இந்த துறை மூலம் தமிழகத்தில் உள்ள கனிமங்களை வெட்டி எடுப் பதற்கு அனுமதி அளிப்பதன் மூலம் அரசிற்கு வரவேண்டிய வருமானம் மட்டுமல்ல சுற்றுப்புறச்சூழல் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய துறையின் தலைமை தாங்கக் கூடியவர் பதவி 2011 முதல் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது.
பின் எப்படி வேலைகள் நடக்கும் என்று கேட்கலாம்.எல்காட் தலைவராக இருக்கும் அதுல் ஆனந்த் என்பவர் இதற்கு பொறுப்பு அதிகாரி ஆக செயல்படுகின்றார். இதற்கு பொருத்தமான வேறு ஒரு ஐஏஎஸ் அதிகாரி கூட அதிமுக அரசிற்கு கிடைக்கவில்லையா? கிடைப்பார்கள், எதற்காக பொறுப்பு அதிகாரியிடம் மட்டும் அத்துறையை ஒப்படைத்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.வருமானம் வரவேண்டும் அரசுக்கு என்பதனால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் மூலம் அரசிற்கு ஆண்டுதோறும் 28 ஆயிரம் கோடி அளவு வரும் போது அதன்மூலம் குடும்பங்கள் சீரழிந்தாலும் கவலையில்லை. மதுவினால் வரும் கொடுமை களை விளக்கி பேசினால் கூட தேசியப் பாதுகாப்புச்சட்டம் பாய்கின்றது. என்னநியாயம்? கிரானைட் பிரச்சனை வெளியில்தெரிந்த பின்னர் தாது மணல் விசயம் வெளிச்சத்திற்கு வந்தது. அதிமுக அரசு தாது மணல் எடுக்கும் விவகாரத்தை மறைக்க முடியாமல் வருவாய்த்துறை தலைவர் ககன்தீப் சிங் பேடி அவர்களைக் கொண்டு குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரையோரங்களில் தாது மணல் திருட்டு சம்பந்தமாக ஆய்வை நடத்த அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப் பித்துவிட்டதா என்று கூட மக்களுக்கு தெரியாது. ஆனால் இன்று வரை அதன் நிலைமை என்ன என்று அதிமுக அரசு தெரிவிக்கவில்லை. தாது மணல் எடுப்பவர்கள் மத்தியில் ஆளும் அரசின் சுரங்க கட்டுப்பாட்டையும் மாநில அரசின் வருவாய்த்துறையையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்கள்.
அதிமுக அரசு உண்மையில் மக்கள் நலன் காக்கும் அரசாக செயல்பட்டு இருந்தால் தாது மணல் மற்றும் கிரானைட் மூலமாக வருமானத்தை பெருக்கி தமிழகத்தின் இரண்டரை லட்சம் கோடி என்ன அதற்கும் மேலும் வருமானத்தை ஈட்டியிருக்கலாமே? பேருந்து கட் டணத்தை, மின்சாரக் கட்டணத்தை, பால் கட்டணத்தை உயர்த்தாமல் இருந்திருக்க லாம், மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கும். ஆனால் அதிமுக மத்திய அரசின் தாராளமயக் கொள்கையை அமல் படுத்தி முதலாளிகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தினார்கள் என்பதுதான் இந்த கனிமக்கொள்ளை வெளிப் படுத்தும் உண்மையாகும்.


கே.விஜயன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?