ஆண் குழந்தையைத் தரும் லேகியம்!




சாமியார் பாபா ராம்தேவ் செய்வது எல்லாம் சட்டவிரோதம்,வில்லங்கம்தான்.

யோகா சொ ல்லிக்கொடுப்பதன் மூலம் கோடிகளை சம்பாதித்தவர் அடுத்து தொலைக்காட்சி ஒன்றையும் துவக்கி உலகம் முழுக்க யோகா வித்தைகளை செய்து காட்டி அடியார்களை அதிகப் படுத்தி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவித்து வைத்துள்ளார்.
சாமானியர்களைத்தான் ஆசை விடாது என்றால் இந்த முற்றும் துறந்த முனிவர் பாபா ராம் தேவையும் பணத்தாசை விடவில்லை.

இடையில் அன்னா கசாறேயைப்பார்த்து கொஞ்சம் அரசியல் சபலம் உண்டாக இவரின் உண்ணாவிரதப் போராட்டத்தில் காவல்துறை புகுந்து இவரை தேட முற்றும் துறந்த பாபா பெண்களின் சுடிதாரை அணிந்து முக்காடு போட்டுக்கொண்டு தப்பித்து ஓடிய அவலமும் நடந்தது.

"பதஞ்சலி"என்ற பெயரில் பொருட்களை ,மருந்துகளை தயாரித்து விற்று அதிலும் பணம் பார்க்க ஆரம்பித்தார்.தனது மருந்து பொருட்களில் சர்வரோக நிவாரிணியும்,பூலொக கலியுக அமிர்தமுமான  பசு மாட்டு மூத்திரத்தை சேர்த்திருப்பதால் எல்லாவியாதிகளும் உடனே கைமேல் பலனாக குணமாகும் என்றார்.

அரசு உணவுக்கட்டுப்பாட்டு துறை அனுமதி பெறாமலேயே நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருட்களை தயாரித்து விற்றார்.

மற்ற புகழ் பெற்ற ஆயுர்வேத மருந்துகளை விட "பதஞ்சலி"பொருட்கள் விலை அதிகமாகவே உள்ளது.அதற்கு அதன் நோய் தீர்க்கும் சக்தி அதிகம் என்பதை காரணம் காட்டுகிறது பதஞ்சலி .
கிட்டத்தட்ட "ஆம்வே'பொருட்களைப்போல் விளம்பரம் செய்யப்படுகிறது.
ஆனால் சுத்தமான "பதஞ்சலி"பசும் நெய் என்று விற்க்கப்பட்ட நெய்யில்  ஆய்வு செய்யப்பட்டதில்   ரசாயன அமிலங்கள் கலந்திருப்பதும்,எருமைப் பாலில் தயாரிக்கப்பட்ட நெய் அதிகள அளவு சேர்க்கப்பட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு அவருக்கு ஆதரவான போக்கைக் கடை பிடித்து வருகிறது.மேகி மீது எடுத்த நடவடிக்கை போன்று  ஒப்புக்கூட சிறிது காலம் தடை என்று அரசு அறிவிக்க வில்லை.

தற்போது  நூடுல்சுக்கான சுவை கூட்டி கலவையில்  அனுமதிக்கப்பட்ட அளவினை விட மூன்று மடங்கு சாம்பல் கலப்பு பாபா ராம்தேவ் "பதஞ்சலி"நூடுல்சில் உள்ளதாக பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.

மேகி,சன்பீஸ்ட் ஆகிய நூடுல்சுகளிலும் இச்சாம்பல் கலவை அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

நெய்,நூடுல்ஸ் போன்ற பதஞ்சலி தயாரிப்புகளில் கலப்படம் அமிலங்கள் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இவர் மருந்து கம்பனிகளில் இறந்து போன மனித உறுப்புகள் சேர்க்கப்படுகின்றன என்ற புகார்
எழுந்து வந்த வேகத்திலேயே அமுக்கப்பட்டது.பத்திரிகைகளில்,மின் ஊடகங்களில் அச்செய்தி வராமல் தடுக்கப்பட்டது.

 அதுமட்டுமல்ல பாபா ராம்தேவ் அருமையான கண்டுபிடிப்பு ஆயுர்வேத மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட புத்ரஜீவக் பீஜ் . அதாவது  ஆண் குழந்தையை பெற்றுத் தரும் லேகியம்.
இந்த லேகியம் தின்று விட்டு குழந்தை தயாரிப்பில் ஈடுபட்டால் ஆண்குழந்தை நிச்சயம் என்கிறார் இந்த லோக ஆசைகளை துறந்த சாமியார்.
 அறிவியல் ரீதியாகவும் இது மக்களை ஏமாற்றும் புரட்டு வேலை. இதை உடனே கண்டித்து தடை செய்ய வேண்டிய மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.அப்படி ஒன்றும் இல்லை என்று மக்களவையில் சமாளித்தது.ஆனால் மக்களவையில்  ஜனதா தள் மூத்த தலைவர் தியாகி பதஞ்சலி  மருந்து கடையில் இந்த புத்ரஜீவக் பீஜ் லேகியம் வாங்கியதாக பாட்டிலை அனைவருக்கும் காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். 

ஆனால் பதஞ்சலி நிறுவன தயாரிப்புகள் அதிக அளவில் உள்ளது.அவை அனைத்தையும் உணவுக்கட்டுப்பாடு,சுகாதார,மருத்துவத் துறைகள் ஆய்வு செய்ய வேண்டும் .

ஆனால் அவைகள் அந்நிய நிறுவனங்கள்,பன்னாட்டு நிறுவனங்கள்,அதானி-அம்பானி கல் நிறுவனங்கள் என்றாலே இந்திய அரசு சட்டத்திட்டங்கள் செயல்படாது.மக்கள் உயிர் சம்பந்தமான விசயம் என்றாலும்  கண்டு கொள்ளாது.
ஆந்திர அரசு விட்ட செம்மரம் ஏலத்தில் மிக அதிக அளவில் ஏலம் எடுத்தவர் பாபா ராம்தேவ் தான் அவரின் பதஞ்சலி மருந்து தயாரிக்க என்று காரணம் சொல்லப்பட்டது.


அதிலும் மோடிக்கு வேண்டிய ஆன்மிக கேடி பாபா ராம்தேவ் என்பதால் விட்டு விடக் கூடாது.

இல்லையென்றால் நம் பிரதமர் மோடி,அவரை  இயக்கும் ஆர்.எஸ்.எஸ்.போன்றவை தெய்வமாகக் கொண்டாடும் பசு மூத்திரம் கலந்ததாக கூறப்படும் "பதஞ்சலி"பொருடகள் ஆபத்தானவை என்றாகி விட்டால் சிறுமை நம் கோமாதாவுக்கும் , புனித கோமியத்துக்கும்தான் என்பதை மட்டும் மறந்து விடக் கூடாது.

















இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?