இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

மோதல் ஆரம்பம்.தமிழ் நாட்டில் மாறி,மாறி ஆட்சியமைக்கும் திமுக, அதிமுக இந்த 2016 தேர்தலில் நேரடியாக 169 தொகுதிகளில் மோதுகின்றன. 
இதனால்ஏற்கனவே கோடையில் தகித்துக் கொண்டிருக்கும் தமிழகத்  தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 16ம் தேதி நடக்கிறது. தேர்தலில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. 
திமுக, அதிமுக கூட்டணிகள் தவிர, தேமுதிக-தமாகா-ம.ந.கூட்டணி, பாமக, பாஜ ஆகிய அணிகளுடன், நாம் தமிழர் கட்சியும் தனித்து களம் காண்கிறது.
திமுக அணியில் காங்கிரஸ் 41, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 5, புதிய தமிழகம் 4, மக்கள் தேமுதிக 3 மற்றும் சமூக சமத்துவப் படை, பெருந்தலைவர் மக்கள் கட்சி, விவசாயத் தொழிலாளர் கட்சிகள் தலா ஒன்று என 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
மீதியுள்ள 173 தொகுதிகளில் திமுகவே போட்டியிடுகிறது. 
திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியும், கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும் போட்டியிடுகின்றனர். 
மற்ற தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதில் திமுக போட்டியிடும் 173 தொகுதிகளில் 169ல் நேரடியாக அதிமுகவுடன் மோதுகிறது. 
மற்ற 4 தொகுதிகளில் அதிமுகவின் கூட்டணி கட்சிகளை திமுக எதிர்கொள்கிறது. 
ஆனால் இந்த கூட்டணிக்கட்சிகளும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுகின்றன.
அதிமுக அணியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், கறிவேப்பிலையுமான  சரத்குமார், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 
இவரை எதிர்த்து திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். 
மதுராந்தகம் தொகுதியில் அதிமுக அணியில் போட்டியிடும் குடியரசு கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்ட  செ.கு.தமிழரசனை எதிர்த்து, திமுகவில் நெல்லிக்குப்பம் புகழேந்தி நிறுத்தப்பட்டிருக்கிறார். 
ஒட்டன்சத்திரத்தில் அதிமுக அணியில் களம் காணும் ம.ஜ.க.வை எதிர்த்து திமுகவின் சக்கரபாணி நிறுத்தப்பட்டிருக்கிறார். 
திருவாடனை தொகுதியில் அதிமுக அணியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் போட்டியிடுகிறார். 
இவரை எதிர்த்து திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மகன் சுப.த.திவாகரன் களம் காண்கிறார்.
இது தவிர, நாகை தொகுதியில் அதிமுக அணியில் தமிமுன் அன்சாரியின் ம.ஜ.க.வை எதிர்த்து திமுக அணியில் ம.ம.க.வும், காங்கேயம் அதிமுக அணியில் கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசுவை எதிர்த்து திமுக அணியில் காங்கிரசும், கடையநல்லூர் தொகுதியில் அதிமுக அணியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் ஷேக் தாவூத்தை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் மோதுகின்றன. 
இந்நிலையில், அதிமுகவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டார். 
அவர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் பறந்து சென்று பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி வருகிறார். 
அவருக்காக 4 ஸ்பிளிட் ,2 டன் ஏசி 8 என்று குளுகுளு வசதியுடன் பிரத்யேக மேடைகள் அமைக்கப்படுகின்றன.
ஆனால் நன்றாக வெயில்  கொளுத்தும் நண்பகல் 2அல்லது மூன்று மணியளவில் தனது பிரச்சாரக் கூட்டத்தை ஜெயலலிதா நடத்துவதால் மேடை முன்னாள் 11 மணியளவிலேயே கூட்டி  வந்த மக்களை உட்காரவைத்து விடுகின்றனர்.

வெயிலில் தவிக்கும் மக்களுக்கு உணவும்,குடிக்க நீரும் கிடைக்காததால் மயக்க நிலைக்கு சென்று விடுகின்றனர்.
அவர்களையும் வெளியே சென்று உணவு உண்டுவர,குடிநீர் குடித்துவர,நிழலில் ஓய்வெடுக்க கூலி கொடுத்து கூட்டி வந்தவர்களும்,காவல் துறையினரும் அனுமதிக்காததால் விருத்தாச்சலம் கூட்டத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்துள்ளனர்.

ஜெயலலிதா பேசுகிறார் என்ற காரணத்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் ஜெயலலிதா பேசி முடித்துச் செல்லும் வரை காவல் துறை காத்திருந்து சிகிச்சை அளித்ததால் மூவர் மரணமடைந்துள்ளனர்.
அதுவும் பலி எண்ணிக்கை சரிவர தெரியவில்லை.

காரணம் மயக்கமடைந்தவர்களை பல்வேறு மருத்துவமனைகளில் சேர்த்துள்ள காவல் துறை அவர்களை உள் நோயாளிகளாக சேர்க்காமல் முதலுதவி மட்டும் அளித்து உடனே வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மேலிட உத்திரவை சொல்லியுள்ளதால் சரியான,பலி,மயக்க கணக்கு விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

இத்தனை அலங்கோலங்கள் நடந்த பின்னரும் ஜெயலலிதா தனது பரப்புரை நேரத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை.

ஒரு நாளுக்கு ஒரு இடம் மட்டும் ஹெலிகாப்டரில் சென்று நாற்காலியில் உட்கார்ந்தவாரே  1/2 மணிநேரம் மட்டும் பேசும் ஜெயலலிதா தனது தேர்தல் பரப்புரையை மாலை 4 மணியளவில் வைத்துக்கொண்டால் என்ன கெட்டு விடும்?
திமுக தலைவர் கருணாநிதி வரும் 23ம் தேதி தனது பிரசாரத்தை தொடங்குகிறார். 
15 நாட்களில் 16 மாவட்டங்களில் அவர் பிரசாரம் செய்கிறார். இவர் தனது இதற்கென்று உருவாக்கப்பட்ட வேனில் இருந்தே பரப்புரை செய்கிறார்.
16 மாவட்டங்களை மட்டுமே இவரது சுற்றுப்பயணம் தொட்டு செல்லுகிறது.தூத்துக்குடி உட்பட்ட 15 மாவட்டங்கள் பரப்புரை நிரலில் இல்லை.
ஸ்டாலின் நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதுமே தனது கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கி விட்டார். 
15ம் தேதியில் ஸ்டாலின்  மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். 
இதற்கிடையே, தேமுதிக-தமாகா- ம.ந.கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அந்தந்த தலைவர்களால் நேற்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, தேமுதிக 104 தொகுதிகள், மதிமுக 29 தொகுதிகள், தமாகா 26 தொகுதிகள், சிபிஎம் 25 தொகுதிகள், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகள், சிபிஐ 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 
விஜயகாந்த்,பிரேமலதா ,வைகோ உட்பட்ட  கே.ந. கூட்டணித்  தலைவர்கள் ஏற்கனவே பிரச்சாரத்தில்தான் உள்ளார்கள்.
பாமகவும் இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தங்கள் முதல்வர் வேட்பாளர் அன்புமணி,ராமதாஸ் தலைமையில்  பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 

பாஜவும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. மற்ற கூட்டணிகளில் எல்லாம்  கட்சிகள் தங்களுக்கு அதிகமாக தொகுதிகளைக் கேட்டு பிரச்னை செய்து கொண்டிருக்கையில் பாஜகவோ  தங்கள் கூட்டணி கட்சியினருக்கு அளவுக்கு அதிகமாக வேண்டாம் ,வேண்டாம் என்கிற அளவுக்கு தொகுதிகளை அள்ளிக் கொடுத்துள்ளது.
இதனால் போட்டியிட ஆட்களைத் தேடும் நிலையில் பாஜக கூட்டணிக்கட்சிகள் உள்ளன.
அதனாலேயே அவர்கள் இன்னமும் தங்கள் கூட்டணி தேர்தல் பிரசாரத்துக்கு கிளம்பவில்லை.
====================================================================================
இன்று,
ஏப்ரல்-15.
  • தமிழகத்தில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது(1976)
  • உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியானர்டோ டா வின்சி பிறந்த தினம்(1452)
  • அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்த தினம்(1865)
  • ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது(1892)
  • சாமுவேல் ஜான்சன், தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார்(1755)


====================================================================================