சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தேர்தல் ஆணையம்

"தமிழகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக அரசியல் கட்சிகள் புகார் கூறியுள்ளனர். 
அவர்கள் சொல்வதை வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது. அந்த புகாரின் உண்மை தன்மை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் விதிமுறை மீறப்படுவதாக அரசியல் கட்சிகள் அளிக்கும் புகார் மீது அதிகாரிகள் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஒருதலைபட்சமாக செயல்படும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும்" என்று தமிழ் நாடு தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட வந்த தலைமைத்தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கூறியுள்ளார்.
தமிழக மாவட்ட ஆட்சியாளர்கள்,காவல்துறை அதிகாரிகளின் ஜெயலலிதா விசுவாசம் உலகறிந்தது.எத்தனையோ செய்திகள்,படங்கள்,காணொளிகள் வெளியாகியுள்ளன.
அவர்களை மாற்றாமல் இன்னும் எத்தனை காலம் உண்மைத்தன்மையை ஆராய்வார்கள்.?
மே 19 வரையா?
ராஜேஷ் லக்கானி தமிழ் நாட்டில்தானே இருக்கிறார்.அவருக்கு இங்குள்ள அதிகாரிகளின் ஜெ விசுவாசம் தெரியாதா?
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?
அல்லது அந்த கூட்டத்தில் இவரும் இருக்கிறாரா?
அம்மாவின் ஆணைக்கிணங்க அதிக மழை பெய்துள்ளது என்று சொல்லுமளவு கரை வெட்டி கட்டாத மாவட்ட செயலாலளர்களாக செயல்படும் மாவட்ட ஆட்சியர்களைக் கொண்டது தமிழ்நாடு .
ஜெயலலிதா படத்தை மாட்டும் காலம் வரை காத்திருந்தே  அரசு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார்கள் தர கொண்டு வந்த  நிவாரணப் பொருட்களை பிடுங்கி அதிமுகவினர்களிடம் கொடுத்து ஜெயலலிதா படங்களை ஒட்டிய பின்னர் வழங்கியவர்கள்தான் திருப்பூர்,கடலூர் மாவட்ட ஆட்சியர்கள்.
ஜெயலலிதா புகழ் பாடும் தொலைக்காடசிகள் மட்டுமே ஒளிபரப்பப்படுகின்றன.கலைஞர் ,சண் செய்திகள் ஒளிபரப்பபடுவதில்லை.காரணம் அரசு கேபிள் தலைவர் அதிமுக கட்சிக்காரர்.அவரை மாற்ற கூட தேர்தல் ஆணையத்துக்கு ஆதாரம் தேவையா?
சிறுதாவூரில் கண்டெய்னர்கள் நிற்பதாக செய்த வந்த வுடனே யார் புகார் தரவும் காத்திருக்காமல் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா?அதற்கு அந்த அதிகாரம் இல்லையா என்ன?
ஆனால் எதிர்கட்சியினர் புகார் சொல்லி உடனே நடவடிக்கையில் இறங்காமல் மூன்று நாட்களுக்கு பின்னர் போய் பார்வையிட்டு அப்படி ஒன்றும் இல்லை என்பதற்கு எதற்கு தேர்தல் ஆணையம் ./
திர்ட்டுத்தனம் செய்பவர்கள் தங்கள் குட்டு வெளிப்பட்டப் பின்னரும் அங்கேயே தங்களைப் பிடித்துக்கொள்ள ஆள் வரும் வரை காத்திருப்பார்களா என்ன?
அந்த கன்டெய்னருக்கு பாதுகாப்பு தந்ததே தமிழகக் காவல்துறை தான்.
இந்த காவல்துறையும்,மாவட்டச் செயலாளர்களான மாவட்ட ஆட்சியர்களையும் வைத்துதான் தமிழ் நாடு தேர்தலை சந்திக்கப் போகிறதா?
அப்படி என்றால் வெற்றிப்பெறுவது யார் என்பது தெரியாதா மக்களுக்கு?
234 தொகுதிகளிலும் இரட்டை இலைதான் என்று ஜெயலலிதா  சும்மா சொல்லவில்லை .சம்பத் போன்ற மாவட்ட  ஆட்சியர்கள்,எந்த புகார் என்றாலும் நிர்வான்சதனுக்கு கொரியரில் அனுப்பிவிடும் தமிழக இந்திய தேர்தல் ஆணையம் போன்ற வலுவான கூட்டணி இருக்கையில் அதிமுக தமிழ் நாடு மட்டுமா?புதுச்சேரி,கேரளா போன்ற மாநிலங்களிலும் வெற்றிக்கொடி கட்டத்தான் செய்யும்.
100 சதவிகிதம் வாக்குப்பதிவுக்கு தினசரி பேரணி,கூட்டங்கள், கணொளிகள் என்று முனைப்பு காட்டும் தேர்தல் ஆணையம் நியாயமான வாக்குப்பதிவு நடக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தாலே போதுமே?
100 சதவிகித வாக்குப் பதிவை விட முறைகேடில்லா வாக்குப்பதிவுதான் அவசியம் .தேர்தல் ஆணையம் அதற்குத்தான் உத்திரவாதம் தர வேண்டும் .
அது தொடர்பாக வரும் குற்றச்சாட்டுகளை உடனே நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதே ஆணையத்தை மக்கள் சந்தேகத்துடன் பார்க்கும் நிலையைக் கொண்டுவந்து விடும்.நசீம் ஜைதி யை விட ராஜேஷ் லக்காணிதான் பொறுப்பு அதிகம்.அதை அவர் தட்டிக்கழித்தால் அவர் பெயரை  முதல்வராக ஜெயலலிதா இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் ஆணையராக நியமிக்க  பரிந்துரை செய்த காரணம்  முற்றுப்பெற்று விட்டதாகத்தான் உணர முடியும்.சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும் ?


அதற்கு மாநில தேர்தல் ஆணையராக நியமிக்க அந்தந்த மாநில முதல்வரிடமிருந்து மூன்று இ.ஆ.ப.அதிகாரிகளை பரிந்துரைக்க செய்வதை முதலில் கை விட வேண்டும் .இ.ஆ.ப.அதிகாரிகள் நன்னடத்தை விபரங்கள் மத்திய அரசிடம் கிடையாதா?அதில் இருந்து கண்டிப்பான அதிகாரிகளை இந்திய ஆணையம் தேர்வு செய்து நியமிக்க முடியாதாஎன்ன.
மாநில  முதல்வர்  தனக்கு ஆதரவானவர்கள் [பிரவீன் குமார்,சுதி ஜெயின் போன்று]பெயரை சிபாரிசு செய்வாரா?கண்டிப்பான அதிகாரிகளை[டி.என்.சேசன்,நரெஷ் குப்தா போன்று]சிபாரிசு செய்வாரா?
=====================================================================================
இன்று,
ஏப்ரல்-09.

  • அமெரிக்க அணுசக்தி கழகம் அமைக்கப்பட்டது(1945)
  • வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் 3டி திரைப்படத்தை வெளியிட்டது(1953)
======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?