இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 27 ஏப்ரல், 2016

ஒரு போராளி அரசியல் சீக்காளியான கதை.

போராளி, புரட்சிக்காரர் என்றெல்லாம் தன்னைத்தானே வர்ணித்துக்கொள்ளும்  வைகோ;
  ஏழு பேர் அடங்கிய ஒரு கும்பல் எழுப்பிய கூச்சலுக்கு அஞ்சி, தேர்தல் போட்டியில் இருந்தே விலகி விட்டார் என்பதை, தமிழகத்தில் யாராலும் நம்ப முடியவில்லை.
இதனால், பற்பல வடிவங்களில் கேள்விகள் எழத் தொடங்கி உள்ளன. அவற்றை பார்க்கும் முன், வைகோவுக்கு உச்சகட்ட கிலி ஏற்படுத்திய அந்த சம்பவத்தை பற்றி...துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே, வடக்கு திட்டங்குளம் கிராமத்தில், தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வைகோ வந்தார். 
அப்போது, இண்டு பேர் வைகோவை வசைபாடியும், அவர் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதை எதிர்த்தும் கூச்சலிட்டனர். அங்கிருந்த போலீசார் அவர்களை விரட்டினர். அந்த இளைஞர்கள், மேலும் ஐந்து பேரோடு சேர்ந்து மீண்டும் கூச்சலிடவே, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இது ஒரு சின்ன உரசல் தான். 
அதையும், தேவர் சமூகத்தை சேர்ந்த, தி.மு.க., வேட்பாளர் தனது சமூகத்தின் எண்ணிக்கையை பற்றி பேசியதையும், இணைத்து வைகோ, விஷயத்தை ரணகளமாக்கி விட்டார். எந்த அடிப்படையில் இரண்டு சம்பவங்களையும் வைகோ பிணைத்தார்? 
தி.மு.க., வேட்பாளர் பேசியதை அந்த கட்சியின் தலைமை கண்டிக்கவில்லை. 
அதனால், தி.மு.க., சாதிக் கலவரத்தை துாண்ட முனைகிறது என்று வைகோ கூறியிருப்பது, மிகவும்  கஷ்டப்பட் டு ஜோடிப்பது போல் இல்லையா?
இதுவரை, கோவில்பட்டி பகுதியில், தேவர்களுக்கும், நாயுடுகளுக்கும் எந்த கலவரமும் ஏற்பட்டதில்லை என்பது, இங்கு குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்க, ஒரு சிலை சம்பவத்தை வைத்து கலவரத்தை ஏற்படுத்திவிட முடியுமா? 
ஒவ்வொரு ஊரிலும், பொருளாதார ரீதியாக ஒவ்வொரு சாதியும், ஒன்றை ஒன்று சார்ந்து தான் வாழ்கின்றன. கலவரத்தை ஏற்படுத்துவதெ ல்லாம், நெடுங்காலமாக கசப்பை ஏற்படுத்தி, சில சம்பவங்கள் மூலம் வெடிக்கச் செய்வது தான்.அப்படிப்பட்ட ஒரு கசப்பான சம்பவத்தை வைகோதான் இரு சாதியினர் மத்தியில் உண்டாக்கி இருக்கிறார்.சாதி கலவரத்தை திமுக தூண்டவில்லை.வைகோதான் அப்படி உண்டாக்கி குளிர்காய எண்ணுகிறார்.தான் போட்டியில் இருந்து தப்பிக்க இவ்வளவு கீழ்த்தரமான வேளையில் இறங்கியது வைகோவின் தரத்தை தமழக மக்களிடம் அதலபாதாளத்தில் கொண்டுபோய் விட்டு விட்டது.வைகோவின் இந்த பேச்சை அவரது கட்சியினரும்,கூட்டணி கட்சியினரும் கூட நம்பவில்லை என்பதுதான் பகிரங்கமான உண்மை.

சரி, இந்த சம்பவம் முடிந்த பின், வைகோ, இமானுவேல் சேகரனின் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற போது, அங்கு இருந்த தலித் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனரே, அதைபற்றி வைகோ குறிப்பிடாதது ஏன்? 

அதேபோல், 'வி.சி., கட்சி கொடிகளை எங்கள் பகுதியில் கட்டக்கூடாது' என்று, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் சார்ந்த தலித் மக்கள், எதிர்ப்பு தெரிவித்ததை பற்றி வைகோ குறிப்பிடாதது ஏன்?

அதாவது, நடந்த எதிர்ப்பு சம்பவம், ஒன்று மட்டும் அல்ல; பல எதிர்ப்பு சம்பவங்களில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து வைகோ காரணம் கண்டுபிடித்திருக்கிறார்.வைகோவின் முடிவு பற்றி, கூட்டணியினருக்கு முன்பே தெரியாது என்பது, வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், ''வைகோ போட்டியிடாதது அதிர்ச்சி அளிக்கிறது,'' என்று அளித்த பேட்டியில் இருந்து அப்பட்டம். வைகோவின் காரணங்கள் ஜீரணிக்க முடியாதவையாக இருப்பதாகவும், அவருடைய முடிவு கூட்டணியில் கீறலை ஏற்படுத்தி உள்ளதாகவும், கூட்டணி கட்சியினர் சொல்கின்றனர். அவர்கள் மனதில் ஓராயிரம் கேள்விகள்.

சந்தேகம் கலந்த கேள்விகள். அவற்றில் சில...
*கோவில்பட்டி தொகுதியில், நாயுடு இனத்தவர் அதிகம் உள்ளனர். 
அதனால், அந்த தொகுதி எனக்கு பாதுகாப்பான தொகுதியாக இருக்கும்' என சொல்லித் தானே,கம்யூனிஸ்டுகள் அதிகம் உள்ள அந்த தொகுதியை, வைகோ போராடிப் பெற்றார். இப்போது, அந்த தொகுதியில் இருந்து பின்வாங்கியது ஏன்?*ஒருவேளை ஜாதிய பிரச்னைகள், அவர் சொல்கிறபடியே அதிகமாக இருந்திருந்தால், அதையும் மீறி களத்தை எதிர் கொள்வதுதானே, கூட்டணியையே ஒருங்கிணைத்து செல்லும், ஒரு தலைவனுடைய பாங்கு?*
கம்யூனிஸ்டுகளிடம் போராடிப் பெற்ற தொகுதியில், தனக்கு பிரச்னை என்று சொல்லி ஒதுங்கும் பட்சத்தில், கம்யூனிஸ்டுகளுக்கு வலுவான அந்த தொகுதியை மீண்டும் கம்யூனிஸ்டுகளுக்கே திருப்பி அளித்திருக்கலாமே!*
 தொகுதியில் நாயுடு சமூகத்தவருக்கும், தேவர் இனத்தவருக்கும் பிரச்னை ஏற்படும் என்ற நல்லெண்ணத்தால், போட்டியில் இருந்து விலகும் பட்சத்தில், அந்த தொகுதியில் தன் இனத்தையே சார்ந்த விநாயகா ரமேஷ் என்பவரையே வேட்பாளர் ஆக்கியது ஏன்? 
விநாயகா ரமேஷ் போட்டியிட்டால் மட்டும், வைகோ எதிர்பார்க்கும் சமூக பிரச்னைகள் ஏற்படாமல் போய்விடுமா?*
விநாயகா ரமேஷ் தான், வைகோவின் மாற்று வேட்பாளர் என்கிற பட்சத்தில், அவர் மாற்று வேட்பாளராக, கடைசி நிமிடத்தில் முடிவெடுக்கப்பட்டு, சட்டென வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியாது. இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பே, போட்டியிலிருந்து விலகும் முடிவை வைகோ எடுத்திருக்க வேண்டும். அப்படியென்றால், அந்த முடிவு பற்றி முன்கூட்டியே, கூட்டணி கட்சி தலைவர்களிடம் விவாதிக்காதது ஏன்?*
 தி.மு.க.,தான் சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் பிரச்னையில் ஈடுபடுகிறது என வைகோ சொல்வதோடு, தேவர்களை எனக்கு எதிராக துாண்டி விடுகிறார் என சொன்னால், தேவர் இனத்தவர் ஒட்டுமொத்தமாக தி.மு.க., பின்னால் திரளுவர் என்ற சாதாரண கணக்கு கூடவா, நெடுங்காலஅரசியல்வாதிக்குத் தெரியவில்லை?
 அதிமுகவைச்சேர்ந்த கரூர் அன்புநாதன், மணிமாறன், சென்னை, எழும்பூர் விஜய் கிருஷ்ணசாமி ஆகியோர் வீடு மற்றும் குடோனில் பிடிபட்ட கோடிக்கணக்கான பணத்தின் பின்னணியில் அ.தி.மு.க., உள்ளது என்ற குற்றச்சாட்டு குறித்து, மொத்த தமிழகமும் பேசிக் கொண்டிருக்க, 
*போட்டியிலிருந்து விலகல் அறிவிப்பை வெளியிட்டு, அந்த பிரச்னையை திசை திருப்புவது போல செயல்பட்டு இருக்கலாமா?*
 ஏற்கனவே, அ.தி.மு.க.,வின், 'பி டீம்' தான் மக்கள் நலக் கூட்டணி என, விமர்சிக்கப்படும் சூழலில், ஜாதிய பிரச்னைகளை சொல்லி, தி.மு.க.,வை சிக்கலில் ஆழ்த்துவதன் மூலம்,'பி டீம்' குற்றச்சாட்டு வலுப்பெறாதா?*
ஒரு வேளை, சாதிய பிரச்னை தான் காரணம் என்றால், மற்ற தலைவர்கள் போட்டியிடுவது போல, சென்னையிலேயே ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாக வைகோ அறிவித்திருக்கலாமே. 
அதை ஏன் செய்யவில்லை? 
சொந்த தொகுதியில், தனது சாதி மக்கள் நிறைந்துள்ள தொகுதியில் போட்டியிட்டால் தான் வெற்றி வாய்ப்பு என்றால், சாதி பிரச்னைகளை கண்டு ஏன் அஞ்ச வேண்டும்?*
தமிழகம் முழுவதும் கூட்டணி சார்பில் போட்டி யிடும் வேட்பாளர்களுக்கு, செலவுத் தொகை தருவதாக சொல்லப்பட்டு, தராததால் ஏற்பட்ட நெருக்கடியை தவிர்க்க, தனக்கே ஒரு நெருக்கடி ஏற்பட்டிருப்பது போல காட்டவே, இப்படியொரு விலகல் சம்பவமா?
இப்படி கூட்டணியினர் கேட்டுப் புலம்பிக் கொண்டு இருக்க, அரசியல் வட்டாரங்களில், மேலும் சில சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன... 
*வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், நடிகர் கருணாசின் புலிப்படை அமைப்பு மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் என, போலீஸ் வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. கருணாஸ், அ.தி.மு.க., சார்பில் திருவாடானை தொகுதியில் போட்டியிடுகிறார். 
அப்போது, இந்த எதிர்ப்பெல்லாம், 'ஏற்பாடு தானா' என, சம்பவ பகுதியை சார்ந்த சிலர், வைகோவால் தங்கள் ஊருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதை நினைத்து, எரிச்சலோடு கேட்கின்றனர்.
* சமீபகாலமாக, தன் தலையில் கட்டியிருக்கும் பச்சைத் துண்டை, துாங்கும் போதுகூட, வைகோ அகற்றுவதில்லை என்று கூறப் படுகிறது. நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே வசிக்கும் தன் சகோதரியின் ஜோதிடர் அறிவுரைப்படி தான், இந்த பச்சைத் துண்டாம். 
அதே ஜோதிடர் மூலம் போட்டியில் இருந்து விலகுவதற்கு அறிவுரை வந்ததா என வைகோவின் ம.தி.மு.க. கட்சினரே வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர். 
நன்றி:தினமலர் ,
==========================================================================================
இன்று,
ஏப்ரல்-27.
  • டோகோ விடுதலை நாள்(1960)
  • தென்ஆப்ரிக்கா விடுதலை தினம்
  •  முதன் முறையாக கணிணி மவுஸை அறிமுகம் (1981)
                திமுக வேட்பாளர் கீதா ஜீவனை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம்.
                            ஆத்தா விசுவாசத்தில் எங்கேயோ பொய் விட்டது பாலிமர்.
==========================================================================================
மோடியின் மெகா  ஊழல்..
ஊடகங்களில் மறக்கப்பட்ட மிகப்பெரும் ஊழல்.... "இல்லாத" எரிவாயுவை பூமியில் இருந்து எடுக்க மோடி வழங்கிய சுமார் 20,000 கோடி ..
கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதியில் நடந்த இயற்கை நிலவாயுக் கண்டுபிடிப்பு மோசடி. இல்லாத வாயுவைக் கண்டுபிடித்து, வெளியில் எடுப்பதாக ‘பாவனை செய்ய’ அசாதாரணத் திறமையும், சூழ்ச்சி செய்யும் மனமும் தேவை. நடந்ததையெல்லாம் எவர் கண்ணிலும் படாமல் மறைக்க மிகுந்த திறமைசாலியாக இருக்க வேண்டும். இதுதான் கிருஷ்ணா-கோதாவரி வடிநில எரிவாயு மோசடியின் சுருக்கம்.
கிருஷ்ணா-கோதாவரி வடிநில ஊழல் என்பது, நிலவாயு கிடைத்துவிட்டது என்ற மோடியின் போலியான அறிவிப்பு மூலம், குஜராத் மாநில அரசுத் துறை நிறுவனத்தைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கான ரூபாயை அரசு வங்கிகளிடமிருந்து சுருட்டியது..
தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் 5 அறிக்கைகளில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.19,700 கோடி மதிப்புள்ள இந்த ஊழலை, நாடே அறியாதபடி பார்த்துக்கொண்ட திறமைக்காகப் பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டலாம்.
அரசுத் துறை நிறுவனமான குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஜி.எஸ்.பி.சி.) கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதியில் ஆழ்கடலில் நிலவாயு இருப்பதைக் கண்டுபிடித்திருப்பதாக குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது நரேந்திர மோடி 2005 ஜூன் 26-ல் அறிவித்தார். 
அந்த வாயுவின் அளவு ரூ.2,20,000 கோடி மதிப்புள்ள 20 லட்சம் கோடி கன அடி என்றார். நாடே அச்செய்தி கேட்டு வியப்பில் ஆழ்ந்தது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரிகள் பேச முடியாமல் வாயடைத்து நின்றனர். 2007 டிசம்பரில் உற்பத்தி தொடங்கும் என்றும் நிலவாயு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற்றுவிடும் என்றும்கூட மோடி அறிவித்தார். 
இப்போது ஆண்டு 2016. மோடி அறிவித்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகின்றன. அந்த வடிநிலத்திலிருந்து இன்னமும் ஒரு கன அடி நிலவாயுகூட எடுக்கப்படவில்லை.
ஏன்? 
ஏனென்றால், அங்கு நிலவாயுவே கிடையாது! 
ஜி.எஸ்.பி.சி. என்ற நிறுவனம் இத்தனை ஆண்டுகளில் நிலவாயுவைத் தேட ரூ.19,700 கோடியைச் செலவிட்டுள்ளது.

மிகுந்த முக்கியத்துவமும் மிக நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டியதுமான இந்த ஆய்வுப் பணிக்கு தொழில்நுட்பப் பங்குதாரராக ‘ஜியோகுளோபல் ரிசோர்சஸ்’ என்ற நிறுவனத்தைத்தான் ஜி.எஸ்.பி.சி. சேர்த்துக்கொண்டது. இந்நிறுவனம் 2 தனி நபர்களுக்குச் சொந்தமானது. 
கேரி சோபர்ஸ், கார்லோஸ் பிராத்வெயிட் என்ற 2 கிரிக்கெட் பிரபலங்களின் நாடான பார்படாஸ் தீவைச் சேர்ந்தது. ஜியோகுளோபல் நிறுவனம் மொரீஷியஸ் நாட்டில் உள்ள ராய் குழுமம் என்ற நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது. 
மொரீஷியஸ் நாடு எண்ணெய்த் துரப்பணப் பணிக்காக அல்ல, வரி ஏய்ப்பு செய்வோருக்கு சொர்க்கபுரி என்று அறியப்பட்ட நாடு. 
கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதியில் நிலவாயுவை அகழ்ந்தெடுக்கும் சோதனை முயற்சி ஆரம்பத்திலிருந்தே ஏதோ துர்வாடையுடன்தான் தொடங்கியது.

நிலவாயு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு 2007 முதல் தயாரிப்பு தொடங்கிவிடும் என்று நரேந்திர மோடி 2005-லேயே அறிவித்ததை நினைவுகூர வேண்டும். 
அறிவித்தபடி 2007-ல் அல்ல 2009-ல்தான் கிருஷ்ணா-கோதாவரி வடிநிலத்தில் நிலவாயுவை அகழ்ந்தெடுப்பது தொடர்பாகக் ‘கள வளர்ச்சித் திட்டம்’ தயாரித்து அளிக்கப்பட்டது. வடிநிலத்திலிருந்த இயற்கை நிலவாயு எப்படி அகழ்ந்தெடுக்கப்படும் என்று சில நூறு பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கை விவரித்தது. 
நிலவாயு அகழப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு, எப்படி அகழப்படும் என்ற விளக்கமான அறிக்கை தயாரிக்கப்பட்ட காலம்வரையில் ஜி.எஸ்.பி.சி. நிறுவனமானது அரசுத் துறை வங்கிகளிடமிருந்து ரூ.4,800 கோடி கடன் வாங்கியிருந்தது. வெறும் அறிக்கை தயாரிக்க ரூ.4,800 கோடி செலவு பிடித்திருக்க முடியாது! 
வடிநிலத்தின் ஆழத்திலிருக்கும் எரிவாயுவைக் கண்டுபிடித்து எடுப்பதற்கு முன்னதாகவே இத்தனை கோடி ரூபாய் கடன் ஏன் வாங்கப்பட்டது என்ற கேள்வி பிறக்கிறது.
அப்போது குஜராத்தில் ஆட்சியில் இருந்த மோடி அரசு, ஜி.எஸ்.பி.சி.யின் இறக்கைகளின் கீழ் அடைக்கலம் புகுந்த, சந்தேகத்துக்கிடமான பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க விரிவான திட்டத்தை வகுத்தது.

கிருஷ்ணா-கோதாவரி வடிநிலத்தில் இல்லாத வாயுவுக்காக எண்ணெய்த் துரப்பண மேடைகளில் பொருத்துவதற்காகத் துரப்பணக் கருவிகளை வாங்க கூட்டுச் செயல்பாட்டு நிறுவனம் முடிவெடுத்தது. துரப்பணக் கருவிகளை அளித்தே பழக்கப்பட்டிராத ‘டஃப் டிரில்லிங்’ என்ற நிறுவனத்துக்குத் துரப்பண மேடைக் கருவிகளுக்கான ஒப்பந்தத்தை அளித்தது. 
இந்தியாவிலேயே மிகப் பெரிய நிலவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக மோடி அறிவித்ததற்கு வெகு நாட்களுக்குப் பிறகு, அதாவது 2007-ல்தான் ‘டஃப் டிரில்லிங்’ நிறுவனம் நிறுவப்பட்டது.
2015 மார்ச் வரையில் மட்டும் டஃப் டிரில்லிங் மற்றும் அதே போன்ற பிற நிறுவனங்களுக்கு ரூ. 5,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டிருக்கிறது. 
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதி நிலவாயு உற்பத்திப் பணிக்காக ரூ.19,700 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டிருக்கிறது.
ஜி.எஸ்.பி.சி.க்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது? 
உள்நோக்கம் என்ன?
1979-ல் குஜராத் மாநில அரசால் உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.பி.சி. நிறுவனத்துக்கு 2007 மார்ச் 31 வரையில் கடன் என்பதே ஏற்படவில்லை. 
2008 தொடங்கி 2015 வரையில் மொத்தம் ரூ.19,720 கோடியை 13 அரசுத் துறை வங்கிகளிடமிருந்து கடனாகப் பெற்றிருக்கிறது. இந்தப் பணம் முழுவதும் சந்தேகத்துக்கிடமான நிறுவனங்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. 
இந்த நிறுவனங்களின் உள்நோக்கம் என்னவென்பது தெரியவில்லை.
பிரதமரான பிறகு வாராக் கடன்கள் குறித்து வருத்தப்படவும் அரசு வங்கிகளிடம் கடன் வாங்கிய தொழிலதிபர்கள் குறித்துப் பேசவும் அவரால் முடிகிறது. 
உண்மையான வர்த்தகத்துக்கு அல்லாமல் வேறு எதற்காகவோ கோடிக்கணக்கில் கடன் வாங்கியுள்ள ஜி.எஸ்.பி.சி. போன்ற நிறுவனங்களால்தான் அரசு வங்கிகளே வாராக் கடன் சுமையில் ஆழ்ந்து கிடக்கின்றன.

கிருஷ்ணா-கோதாவரி வடிநில ஊழல் என்பது, நிலவாயு கிடைத்துவிட்டது என்ற போலியான அறிவிப்பு மூலம், மாநில அரசுத் துறை நிறுவனத்தைப் பயன்படுத்தி நிலவாயுவை அகழ்வதற்காக அல்ல, கோடிக்கணக்கான ரூபாயை அரசு வங்கிகளிடமிருந்து கறப்பதற்காக என்று புரிகிறது. 2
015-ல் தனது தணிக்கை அறிக்கையில் கோடிக்கணக்கான ரூபாயைக் கடனாக வாங்கிக்கொண்டு தேவையற்ற, பயனற்ற நிலவாயு அகழ்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதை தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பக்கம் பக்கமாகத் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். 
ஆனால், செய்தி ஊடகத்திலோ மின்னணு ஊடகத்திலோ இதுகுறித்து ஒரு செய்திகூடக் கண்ணில் படவில்லை. 
இது அரசியல் நோக்கில் கூறப்படும் குற்றச்சாட்டு அல்ல. 
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் அனைத்துமே ஆதாரபூர்வமான பல ஆவணங்களிலிருந்து திரட்டப்பட்டவை.
செபி நிறுவனத்திடம் ஜி.எஸ்.பி.சி. நிறுவனம் அனுமதி கோரி அளித்த ஆரம்பகால பங்கு விற்பனை உட்படப் பல சான்றுகள், ஜியோ குளோபல் நிறுவனம் செபியிடம் அமெரிக்காவில் தாக்கல் செய்த தகவல்கள், கம்பெனிகள் நடவடிக்கைக்கான துறை அமைச்சகப் பதிவேடுகள் உள்ளிட்ட பல ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இந்த ஊழல் பற்றி - ஊழல் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையாலும் இதை அழைக்க முடியாது -உச்ச நீதிமன்றத்தில் இப்போது பணிபுரியும் நீதிபதியைத் தலைவராகக்கொண்டு உடனடியாக விசாரிக்க வேண்டும்.
                                                                                                                                 -- ஜெய்ராம் ரமேஷ், 
© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி