சத்திய சோதனை?
கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் அதிமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் கிடங்கிலிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல கோடி பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், வெறும் ரூ.10.33 லட்சம் மட்டுமே பணம் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர்&சேலம் நெடுஞ்சாலையில் அய்யம்பாளையம் என்ற இடத்தில் உள்ள அ.தி.மு.க. தொழிலதிபர் அன்புநாதன் என்பவருக்கு சொந்தமான கிடங்கிலிருந்து வாக்காளர்களுக்கு தருவதற்காக ஆம்புலன்ஸ் மூலம் பணம் கடத்தப்படுவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சோதனை நடத்தும்படி கரூர் மாவட்ட அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட்டார்.
அதனடிப்படையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பணம் எண்ணும் எந்திரங்கள் 12, காலி பெட்டிகள், பணம் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஆம்புலன்ஸ், 4 மகிழுந்துகள் ஆகியவற்றுடன் ரூ.10.33 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து அன்புநாதன் இல்லத்தில் வருமானவரித்துறை நடத்திய ஆய்வில் ரூ. 4.70 கோடி பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஆனால், ரூ.10.33 லட்சம் மட்டுமே பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அன்புநாதனுக்கு சொந்தமான கிடங்கிலிருந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆம்புலன்ஸ் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு பணம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இதை தொடர்ந்து கண்காணித்து வந்த சிலர் அளித்த தகவலின் பேரில் தான் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 12 பணம் எண்ணும் எந்திரங்களைக் கொண்டு கட்டுக்கட்டாக பணம் எண்ணப்பட்டுள்ளன, பணத்தைக் கொண்டு வருவதற்காக 4 மகிழுந்துகளும், பணத்தைக் கொண்டு செல்ல ஆம்புலன்சும் பயன்படுத்தப் பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் இதற்காகவே திட்டமிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்சின் பதிவு எண் போலியானது என்றும், அந்த எண் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கு சொந்தமானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பணத்தை பெருமளவில் கடத்திச் செல்வதற்காகவே பல லட்சம் செலவு செய்து போலி ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அங்கிருந்து பணம் கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என்றும், இதற்காக அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தின் மதிப்பு பல கோடி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்த பணமும் ஓட்டுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டதாகத் தான் இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால், ரூ.4.70 கோடியை நோட்டுக்களாக வீட்டில் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை.
தலைமைத் தேர்தல் அதிகாரி இராஜேஷ் லக்கானி ஆணைப்படித் தான் அன்புநாதனின் கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது.
பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தின் உரிமையாளரான அன்புநாதன் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமி ஆவார். எனவே அவரையும், அமைச்சரையும், அமைச்சருக்கு மேல் உள்ள சக்திகளையும் காப்பாற்றுவதற்காகவே அனைத்து உண்மைகளும் திட்டமிட்டு மறைக்கப்படுவதாகத் தோன்றுகிறது.

கரூர் மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ் இதுவரை பணியாற்றிய அனைத்து இடங்களிலும் அதிமுகவின் ஆதரவாளராகவே செயல்பட்டுள்ளார்.
கடந்த 18 ஆம் தேதி இரவு கிருஷ்ணராயபுரத்தில் அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரி அன்பு செல்வம் நடத்திய வாகன ஆய்வில் கரூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் வந்த வாகனத்தில் ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையறிந்த கரூர் ஆட்சியர் ராஜேஷ் அந்த தேர்தல் அதிகாரியை தொடர்பு கொண்டு மிரட்டி, அதிமுக வேட்பாளரை விடுவிக்கும்படி ஆணையிட்டிருக்கிறார்.
கொஞ்சம் இருக்கும் சில மனசாட்சியுள்ள அதிகாரிகள்தான் உள்ளே நடந்த விசயங்களை பயந்து,பயந்து கசிய விடுகிறார்கள்.ஆனால் அதிகாரம் படைத்தவர்களோ இந்த 500 கோடிகளுக்கும் மேலான பண குவியலை ,ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில்தான் உள்ளனர்.15 நாளில் ரூ.500 கோடி வரை பணம் பறிமாற்றம் நடந்துள்ளதாக தெரிகிறது.
பணம் பறிமுதல் செய்யப்பட்டதைவிடவும், அதை மறைப்பதற்கு மாவட்ட அளவிலான அதிகாரிகள் சிலர் செய்யும் தில்லுமுல்லுகளால் அதிர்ந்து போய் இருக்கிறார்கள் அரவக்குறிச்சி மக்கள். ரெய்டு நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை அழித்துவிட்டதாகவும் பேசப்படுகிறது.
ரெய்டு நடந்த அன்று கலெக்டர் ராஜேஷ் சென்னையில் இருந்தார். மிகத் தாமதமாகத்தான் ரெய்டு குறித்த தகவலே அவருக்குத் தெரிய வந்துள்ளது.

சோதனையில் கலந்து கொண்ட சில மனசாட்சி அதிகாரிகள் கசிய விட்ட தகவல்கள் :
இந்த சோதனை தொடர்பாக ராஜேஷ் லக்கானி கூறியது:"இந்தியாவிலேயே அதிக அளவாக கரூர் மாவட்டத்தில்தான் வாக்காளர்களுக்கு தர வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூரை சேர்ந்த அன்புநாதன் என்பவர் வீட்டில் இருந்து ரூ.5 கோடி பறிமுதல் செய்துள்ளோம். இதுபோல பல ஆவணங்களும் இம்மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்ற அத்துமீறல்கள் காரணமாக கரூர் மாவட்டத்தை தேர்தல் ஆணையம் தனது நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளது. "
பணம் பறிமுதல் செய்யப்பட்டதைவிடவும், அதை மறைப்பதற்கு மாவட்ட அளவிலான அதிகாரிகள் சிலர் செய்யும் தில்லுமுல்லுகளால் அதிர்ந்து போய் இருக்கிறார்கள் அரவக்குறிச்சி மக்கள். ரெய்டு நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை அழித்துவிட்டதாகவும் பேசப்படுகிறது.
அ.தி.மு.க.வின் ஐவரணி அமைச்சர்களில் சிலரோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்தான் இந்த அன்புநாதன். அவர்களின் பணத்தை இவர்தான் பதுக்கி வைத்திருந்தாராம். திருச்சியில் இருந்து மதுரை செல்வதாக இருந்தால் கூட விமானத்தில்தான் பறப்பார்.
சமீபத்தில் ஜெயலலிதா கட்சியின் சீனியர்கள் சிலர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தபோது, அன்புநாதன் சம்பந்தப்பட்ட வீடு, தோப்புகளில் ரெய்டு நடந்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில்,10 சட்டமன்ற மன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவு செய்யும் பொறுப்பு ஒரு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பணத்தைத்தான் அன்புநாதன் பதுக்கி வைத்திருந்தாக சொல்லப்படுகிறது.
கரூர், அய்யம்பாளையத்தில் அன்புநாதன் என்பருக்குச் சொந்தமான குடோனில் இருந்து சுற்றுவட்டார ஊர்களுக்கு பணம் கடத்தப்பட்டு அங்கங்கே பதுக்கி வைப்பதுதான் திட்டம்.
அதற்காக, அன்புநாதன் குடோன் உள்ள ஏரியாக்களில் தினமும் சில மணிநேரம் கரண்ட் கட் ஆகியிருக்கிறது.
அந்த நேரத்தில், ’இது மத்திய அரசுக்கு சொந்தமானது’ என்கிற ஸ்டிக்கருடன் ஆம்புலன்ஸ் வேன்கள் அங்குமிங்கும் சென்றிருக்கின்றன.
இதை திகைப்புடன் அந்த ஏரியா மக்கள் கவனித்திருக்கிறார்கள். இந்த நூதனமான முறையில் பணம் எடுத்துச் கடத்தப்படும் தகவல் வருவாய்த் துறை அதிகாரிகளுக்குக் கிடைக்கவே, நேற்று முன்தினம் மாலையில் கரூர் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே தலைமையிலான அதிகாரிகள் ரெய்டுக்குக் கிளம்பினர். தொடர்ந்து இரண்டு நாட்களாக தீவிர ரெய்டு நடந்து வருகிறது.
தேர்தல் செலவு கணக்குப் பார்வையாளர் ஆசிஷ், வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன், டி.ஆர்.ஓ அருணா ஆகியோரும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
சோதனையில், 12 பணம் எண்ணும் இயந்திரங்கள், பணத்தைக் கட்டும் ரப்பர் பேண்டுகள், சரக்கு அடைக்கப்படும் காலி பெட்டிகள், நான்கு கார்கள், ஒரு ட்ராக்டர், ஒரு ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆனால், பிடிபட்டது வெறும் 10.3 லட்ச ரூபாய்தான் என தேர்தல் அதிகாரிகள் சொல்கின்றனர். "பத்து லட்ச ரூபாய்க்காக மூன்று நாட்கள் ஏன் விசாரணை நடத்த வேண்டும்?" எனவும் கேள்வி எழுப்புகிறார்கள் அரவக்குறிச்சி மக்கள். அங்கிருந்து பணம் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில்தான், ரெய்டு நடந்திருக்கிறது.
பணம் எங்கே கொண்டுசெல்லப்பட்டது என்பதை விசாரிக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இன்னொரு சாரர், 'அங்கே 100 கோடி ரூபாய் வரை பதுக்கிவைக்கப்பட்டிருந்தது.
பணம் எங்கே கொண்டுசெல்லப்பட்டது என்பதை விசாரிக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இன்னொரு சாரர், 'அங்கே 100 கோடி ரூபாய் வரை பதுக்கிவைக்கப்பட்டிருந்தது.
அதை அதிகாரிகள் கணக்கில் காட்டாமல், குறைந்த அளவு பணத்தை மட்டும் கணக்கில் காட்டினார்கள்' என்று சொல்கிறார்கள்.
ரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அய்யம்பாளையத்தில் அன்புநாதனின் தோப்பு இருக்கும் தெருவுக்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. குடோனுக்குள் நடக்கும் விஷயங்கள் மர்மமாகவே இருக்கின்றன. குடோனின் இரும்புக் கதவில் இருந்த இரண்டு ஓட்டைகள் வழியாக படம் எடுத்த போட்டோகிராபர்களும் விரட்டப்பட்டனர்.
இப்போது அந்த இரண்டு ஓட்டைகளையும் அடைத்துவிட்டனர். அன்புநாதனின் வக்கீல்கள் தொடர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, 'தேர்தல் கமிஷன் உத்தரவின்பேரில்தான் சோதனை நடத்துகிறோம்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது வருமான வரித்துறையினரும் ரகசிய விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இதுபற்றி நம்மிடம் பேசிய கரூர் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், " அன்புநாதனின் குடோன் அமைந்துள்ள தோப்பில் அண்டர்கிரவுண்ட் அறை ஒன்று உள்ளது.
இதுபற்றி நம்மிடம் பேசிய கரூர் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், " அன்புநாதனின் குடோன் அமைந்துள்ள தோப்பில் அண்டர்கிரவுண்ட் அறை ஒன்று உள்ளது.
பல இடங்களில் கிணறுகள் உள்ளன. அதற்குள் கட்டுக்கட்டாகப் பணக் குவியலை பாலித்தீன் கவர்களில் போட்டு மூழ்க வைத்துள்ளதாக கேள்விப்படுகிறோம். அதையெல்லாம் அதிகாரிகள் கைப்பற்றவில்லை. இந்த வகையில், 100 கோடி ரூபாய் வரையில் அடையாளம் காணப்பட்டும், வெறும் பத்து லட்ச ரூபாய் பிடிபட்டதாக அதிகாரிகள் ஏன் பொய் சொல்ல வேண்டும்?
பத்து லட்சத்தை எண்ணுவதற்கு மூன்று நாட்கள் தேவைப்படுமா?
அத்தனையும் பொய்யான தகவல்கள்.
அன்புநாதனின் அப்பா கரூரில் பாலிடெக்னிக் கல்லூரியை நடத்த வந்தவர்.
அன்புவின் தங்கை கணவர் மூலம்தான் அ.தி.மு.கவின் நெருங்கிய வட்டத்திற்குள் வந்தவர்.
இந்த ஆட்சியில் அன்புவின் திடீர் வளர்ச்சி அனைவரையும் அசர வைத்தது. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியின் உறவினர்தான் அன்புநாதன்.
இந்த ஆட்சியில் அன்புவின் திடீர் வளர்ச்சி அனைவரையும் அசர வைத்தது. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியின் உறவினர்தான் அன்புநாதன்.
ஆனால், பிற அமைச்சர்களின் தொடர்பு கிடைத்தபிறகு, செந்தில்பாலாஜியை அன்புநாதன் ஓரங்கட்ட ஆரம்பித்தார். எனவே, அரசியல்ரீதியாக தற்போது இருவருக்கும் ஏழாம் பொருத்தம். செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிபோனதற்கே அன்புநாதன்தான் காரணம் என்று உள்ளூரில் பேச்சு உண்டு.
கடந்த 15 நாட்களாகவே குடோனுக்குள் ஆம்புலன்ஸ் வந்து போய்க் கொண்டிருந்தது. யாரோ ஒருவர் சீரியஸாக இருப்பது போலக் காட்டிக் கொண்டு, ஆம்புலன்ஸ் சைரனை ஒலிக்கவிட்டு பணத்தைக் கடத்தியுள்ளனர்.
குடோனில் ரெய்டு நடந்த அன்றே, கரூர் பைபாஸ் சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த ஆம்புலன்ஸ் பற்றி எந்தத் தகவலையும் அதிகாரிகள் வெளியில் சொல்லவில்லை.
கடந்த தேர்தலின்போதும் ஆம்புலன்ஸில் மூலம்தான் பணத்தைப் பட்டுவாடா செய்தனர். இந்தத் தேர்தலிலும் இதேமுறையைக் கையாள்கின்றனர். இதுவரையில், குடோனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகையின் மதிப்பு 100 கோடியைத் தாண்டும்.
இதுதவிர, ஏராளமான சொத்துப் பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிகப் பணம் புழங்கும் இடமாக அரவக்குறிச்சி உள்ளது. செந்தில்பாலாஜி இங்குதான் போட்டியிடுகிறார். ஆம்புலன்ஸ் மூலமே தொகுதியின் முக்கிய இடங்களுக்குப் பணத்தை பட்டுவாடா செய்து வந்தனர். இதைப் பற்றி நன்றாகத் தகவல் தெரிந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர்தான் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்கிறார்.
கடந்த தேர்தலின்போதும் ஆம்புலன்ஸில் மூலம்தான் பணத்தைப் பட்டுவாடா செய்தனர். இந்தத் தேர்தலிலும் இதேமுறையைக் கையாள்கின்றனர். இதுவரையில், குடோனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகையின் மதிப்பு 100 கோடியைத் தாண்டும்.
இதுதவிர, ஏராளமான சொத்துப் பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிகப் பணம் புழங்கும் இடமாக அரவக்குறிச்சி உள்ளது. செந்தில்பாலாஜி இங்குதான் போட்டியிடுகிறார். ஆம்புலன்ஸ் மூலமே தொகுதியின் முக்கிய இடங்களுக்குப் பணத்தை பட்டுவாடா செய்து வந்தனர். இதைப் பற்றி நன்றாகத் தகவல் தெரிந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர்தான் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்கிறார்.
ரெய்டு நடந்த அன்று கலெக்டர் ராஜேஷ் சென்னையில் இருந்தார். மிகத் தாமதமாகத்தான் ரெய்டு குறித்த தகவலே அவருக்குத் தெரிய வந்துள்ளது.
அதற்குள் முக்கிய அமைச்சர் ஒருவர், கார்டன் பெயரைச் சொல்லிக் கொண்டு சத்தம் போட்டிருக்கிறார். மூத்த அதிகாரிகள் சிலர் ரெய்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு சில குறிப்புகளைத் தந்துள்ளனர். ’சில அமைச்சர்களின் பினாமியான அன்புநாதனை தப்பிக்கவிட்டால்தான் தேர்தல் செலவு செய்யமுடியும்’ என்று ரகசிய உத்தரவுகள் பறந்தது.
அதன்பிறகே, கரூர் ரெய்டு பின்னணியில் திருத்தங்கள் நடந்தது" என்றார் விரிவாக.
அய்யப்பாளையத்தில் என்ன நடக்கிறது?
என்ற ரகசியத்தை அவிழ்க்க ஆணையம் தயாராக இல்லை.
அன்புநாதனை கையில் வைத்துக் கொண்டே அமைச்சர்கள் சிலரை நெருக்கும் முயற்சியில் கார்டன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் தேர்தல் ஆணையம், 100 சதவீத உண்மையை அரவக்குறிச்சி மக்களுக்கு விளக்குமா?
எனவே, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் மாவட்ட ஆட்சியர்கள் முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஆலோசகர் வரை அனைத்து அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி, அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற முயலும் அ.தி.மு.க இந்த தேர்தலில் போட்டியிட ஆணையம் தடை விதிக்க கூட முடியும்.ஜெயலலிதா கூட்டங்களில் தலா இருவர் சாவு.
அதுமட்டுமின்றி, அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற முயலும் அ.தி.மு.க இந்த தேர்தலில் போட்டியிட ஆணையம் தடை விதிக்க கூட முடியும்.ஜெயலலிதா கூட்டங்களில் தலா இருவர் சாவு.
தேர்தல் ஆணையம் தடை செய்துள்ள லாரிகளில் பகிரங்கமாக ஆண்கள்,பெண்கள் அழைத்து வரப்படுவது ,கூட்ட மைதானத்தில் வைத்தே பிரியாணி,பணம் பட்டுவாட செய்யப்படுவது,பெண் காவலர்களே ஜெயலலிதா,இரட்டை இல்லை படம் போட்ட தொப்பி ,விசிறிகளை கூட்டதினருக்கு கொடுப்பது என கடுமையான அலட்சியமான விதிமீறல்கள் ஆகியவற்றின் மீது ஆணையர்
ராஜேஷ் லக்கானி இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்காதது 100% நியாயமான தேர்தல் நடக்காது என்பதுடன் 100% ஜெயலலிதா ஆதரவு தேர்தல் ஆணையம் என்ற என்னத்தைதான் தருகிறது.
நடக்கப் போவது ஆர்.கே.நகர் போல் 120% வாக்குப்பதிவை அதிமுகவினர் மூலம் பெறலாம்.ஆனால் தேர்தல் ஆணையம் மூலம் 100% நேர்மையான தேர்தல் என்பது தமிழகத்தில் கனவாகவே போய் விடும் .அதிமுகவினர் வாக்களர்களுக்கு பணம் கொடுக்கவே 144 அவசர சட்டம் போட்ட பிரவின் குமார்,சந்தீப் சக்சேனா போன்றோர் வரிசையில் லக்கானி இணைவாரா?அல்லது சேசன் ,நரேஷ் குப்தா வரிசையில் பெருமைபடைப்பாரா?
தன் நேர்மையை நிருபிக்க வேண்டிய முக்கியமான காலக்கட்டத்தில் தமிழ் நாடு தேர்தல் ஆணையம் இடுக்கிறது.
சொல்லப் போனால் ராஜேஷ் லக்கானிக்கு இது சத்திய சோதனை தான்?

======================================================================================
இன்று,
ஏப்ரல்-24.
- காம்பியா குடியரசு தினம்(1970)
- தமிழுக்கு சேவை செய்த அமெரிக்கரான ஜி.யு.போப் பிறந்த தினம்(1820)
- இந்தியாவில் பஞ்சாயத்து அரசுத் திட்டம் அமைக்கப்பட்டது(1993)
- அமெரிக்காவின் முதல் செய்தித்தாளான தி போஸ்டன் நாளிதழ் வெளியிடப்பட்டது(1704)
======================================================================================
சிசிடிவி கேமராவை கேட்ட உயர் போலீஸ் அதிகாரிகள்
தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி திரிபாதி, ரயில்வே ஐஜியும் முன்னாள் திருச்சி மண்டல ஐஜியுமான ராமசுப்பிரமணி ஆகியோர் சிசிடிவி கேமராவை தரும்படி உள்ளூர் இன்ஸ்பெக்டரை மிரட்டியுள்ளனர். வருமான வரித்துறையின் காவலையும் மீறி அதை எடுத்து தரும்படி மிரட்டியுள்ளனர்.

ஆனால் அவரோ தனக்கு வேலை போவது மட்டுமல்லாமல் வழக்கிலும் சிக்க வேண்டியதாகிவிடும். எப்படியும் அரசு மாறிவிடும்.
அப்போது தான் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.
அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் விடுவிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து உள்ளூர் போலீசாரை மிரட்டி வருகின்றனர்.
இந்த கேமராவை வருமான வரித்துறை அதிகாரிகள் பார்த்து விட்டால் நாடே அதிர்ச்சி அடையும் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது அதிமுக அமைச்சர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
========================================================================