100% வாக்குப்பதிவு சரி.100% நேர்மை ?
தமிழ் நாட்டில் 100% வாக்குப்பதிவுக்கு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும் தேர்தல் ஆணையம்,ராஜேஷ் லக்கானி தேர்தலை 100% நேர்மையாக நடத்துவதை மட்டும் கண்டு கொள்வதில்லை.
மால்களில் தேர்தல் ஆட்டம் போடுவதை குறைத்து ஆளுங்கட்சியினர் நடத்தும் தேர்தல் விதிமுறைகள் மீறல் அலங்கோல ஆட்டத்தை நிறுத்தி நடத்த தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சியான திரினாமுல் காங்கிரசு வெற்றிப்பெறுவது கடினம் என்று தெரிகிறது.தமிழ் நாட்டைப் போல் இல்லாமல் அங்குள்ள தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின்
அத்து மீறல்களை அவ்வப்போது கிள்ளி எறிந்து விடுகிறதாம்.
கிட்டத்தட்ட எல்லா மாவட்ட ஆட்சியர்கள்,காவல்துறை அதிகாரிகள் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியவர்களை விட்டதாம்.இதற்கெல்லாம் டெல்லியில் அனுமதி கேட்டு காத்திருக்க வில்லையாம் மே.வங்க தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை வைத்தே இதை அது செய்துள்ளது.
மே .வங்கத்தில் யார் வென்றாலும் அது 90% நேர்மையான வெற்றி என்பதாக தேர்தல் ஆணையம் செயல்பாடு உள்ளதாம்.
தமிழ் நாட்டில் 100% வாக்கு பதிவுக்கு மட்டுமே உத்திரவாதத்தை தமிழக தேர்தல் ஆணையம் தனது நடனங்கள் மூலம் தந்து வருகிறது.
இன்று,
ஏப்ரல்-19.
வியத்தகு தூதராக தகுதிகள்.
வியத்தகு (Incredible India) இந்தியா தூதராக நடிகர் அமீர்கான் இருந்து வந்தார்.
இவரது கான்ட்ராக்ட் காலம் முடிந்ததும் மீண்டும் இந்த பொறுப்பில் யாரும் அமர்த்தப்படாமல் உள்ளனர். சகிப்புத்தன்மை தொடர்பான அமீர்கான் கூறியதாலும் தற்போது பாஜக அரசு இருப்பதாலும்
அவர் மீண்டும் அந்த பதவியில் அமர்த்தப்படும் வாய்ப்பு குறைந்தது.
தற்போது வியத்தகு பொறுப்புக்கு அமிதாப் மற்றும் பிரியங்கா சோப்ரா பெயர்கள் பட்டியலில் மத்திய அரசு ஆய்வில் உள்ளது.
இதில் நடிகர் அமிதாப்பச்சன் நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக டில்லி சுற்றுலா துறை அமைச்சகம் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் அம்பிதாப் பச்சனின் சில வரி ஏய்ப்பு ,கருப்புப்பணம்,அரசு சலுகைகளை முறைகேடாக அனுபவித்து மாட்டிக்கொண்ட தாக வெளியான செய்தியால் இந்த உத்தரவு நடைமுறைக்கு வராமல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் பனாமா நாட்டு பத்திரிகையில் வரி ஏய்ப்பு நிறுவனங்கள் மற்றும் கறுப்பு பணம் தொடர்பாக ஒரு பட்டியல் வெளியானது .
இதில் அமிதாப்பச்சன் ,அவரது மருமகள் &நடிகை ஐஸ்வர்யா ராய், வினோத் அதானி ஆகியோர் பெயர் இடம் பெற்றிருந்தது.
இதன் காரணமாக மத்திய அரசு அமிதாப் பெயரை அறிவிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதனால் இந்த நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வறுமையில் வாட்டும் முதியோர் உதவித்தொகை,நலிவுற்ற விவசாயிக்கான 5 ஏக்கர் இலவச நிலம் ,நலிந்த கலைஞர்கான 5000 உதவித்தொகை பெற்ற பனாமாவில் மருமகள் தனியாகவும்,தான் தனியாக கப்பல் நிறுவனமும் நடத்தி இந்திய அரசை வரி ஏய்ப்பு செய்த ஏழை நடிகர் அம்பிதாப் பச்சனை இந்தியாவின் வியத்தகு தூதராக்குவதுதான் சரி.
இதன் வருமானம் மூலம் அவருக்கு கால்வயிற்று கஞ்சியாவது கிடைக்கும்.
இந்திய தலைவர்களின் லட்சணம் இன்னமும் வெளிநாடுகளில் பரவவும் வாய்ப்பிருக்கிறது.
அமிதாப்பை விட்டால் இன்று இந்தியாவில் வேறு வாழ்விலும் நடிக்கும் பெரிய நடிகர் யாரிருக்கிறார்கள்?
அமிதாப்பை வியத்தகு தூதராக்கி உலக நாடுகள் இந்தியாவை பார்த்து வியக்க வைக்க இதை விட்டால் வேறு சரியான தருணம் இராது.
பனாமா பேப்பர்சில் தனது பெயர் வந்தவுடனே பதவியை விட்டு விலகிய ஐஸ்லாண்ட் பிரதமர் தனது அவசரத்தை எண்ணி வெட்கித்தலை குனிய வைக்கவும்,பொதுவாழ்வில் வந்து விட்ட பின்னர் முடிந்த அளவு சம்பாதிக்கவும் ,மாட்டிக்கொண்டால் சமாளிக்கவும்,வாய்தாக்களாக வாங்கி குமாரசாமி போல் ஒரு நீதியரசர் வாய்த்தவுடன் புடம் போட்ட தங்கமாக வெளியெ வரவும் முடியாதவர்கள் படம் கற்கவும் அமிதாப் பச்சனை நாம் வியத்தகு தூதர் ஆக்குவதே சாலச் சிறந்தது.அல்லது மே 19 வரை காத்திருந்து ஜெயலலிதாவை வியத்தகுவாக்கலாம்.
======================================================================================
ஈகுவடார் நிலநடுக்கத்தில் சரிந்த அடுக்குமாடி குடியிருப்புகள்.
==========================================================================================

அரசு இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்துவதிலும் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை. கடந்த 5 ஆண்டுகளாக அமைச்சர்களை மிஞ்சும் அடிமைகளாகிவிட்டார்கள் அதிகாரிகள்.
ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டிருந்த காலத்தில் அ.தி.மு.கவினர் நடத்திய ‘நேர்த்திக் கடன்’களில் கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரடியாகவே பங்கேற்றனர்.
‘அம்மாவின் உத்தரவுப்படி’ என்ற வார்த்தை இல்லாமல் எந்த அதிகாரியும் எதையும் பேசிவிடமுடியாது என்பதே எழுதப்படாத சட்டம். அதனால்தான் ஒரு கலெக்டர் பேட்டியளிக்கும்போது தன்னியல்பாக, “அம்மாவின் உத்தரவுப்படி மழை பெய்தது” என்றார்.
அந்த அதிகாரி உள்பட அத்தனை பேரும் இன்னும் சக்திமிக்க பதவிகளில்தான் உள்ளனர். எவரையும் இடமாற்றம் செய்யவில்லை. மேற்குவங்கத்திலும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், தமிழகத்தில் தி.மு.க, பா.ம.க என வரிசையாக பல எதிர்க்கட்சிகள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஒரே நபருக்கு ஒன்பது பெயர்களில் தனித் தனி வாக்காளர் அட்டை என அதிமுகவினரின் பரிந்துரையை ஏற்று செயல்படுவதில் தொடங்கி
ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார ஏற்பாடுகள் அனைத்திலும் ஆளுந்தரப்பின் விதிமீறல்கள் 200% உள்ள நிலையில், ஓட்டுப்பதிவு 100% என விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்துவதும் அதற்காக அதிகாரிகள் டான்ஸ் ஆடுவதும், கடமை தவறும் தங்களின் செயல்பாடுகளை திசை திருப்பும் நடவடிக்கைகளே ஆகும்.
2011 தேர்தல் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது பணப்பட்டுவாடா புகார்கள் எழுந்த நிலையில், ‘அதிரடி’ அதிகாரிகள் திடீர் குபீர் என வெளிப்பட்டு நடவடிக்கை எடுத்தனர்.
‘மாற்றத்துக்கு வாக்களியுங்கள்’ என்று புதுவகை விழிப்புணர்வு ஊட்டிய அதிகாரிகளும் அப்போது உண்டு.
ஆனால், அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடைபெறும் 2016 தேர்தலில் எதிர்க்கட்சிகள் பல புகார்களை அளித்தும் தேர்தல் ஆணையர் அமைதி காக்கிறார்.
200% விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் 100% வாக்குப்பதிவு என அதிகாரிகள் டான்ஸ் ஆடுகிறார்கள்.
100% வாக்குப்பதிவுக்காக நீங்கள் இப்படியெல்லாம் சிரமப்படவேண்டியதில்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது ஒரு பூத்தில் 120% வாக்குப்பதிவு என்கிற சாதனையை உங்களின் கண் முன்னாலேயே நிகழ்த்திக் காட்டியது ஜெயலலிதாவின் உத்தரவுப்படி நடக்கும் அ.தி.மு.க. எனவே, 100% வாக்குப்பதிவு நடக்கவேண்டும் என்றால், நீங்கள் வழக்கம்போல விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் மீடியாக்களில் முகம் காட்டி பேட்டி கொடுங்கள்.
வாக்குப்பதிவு 100 சதவீதத்தைத் தாண்டும் சாதனையை ஆளுந்தரப்பு கச்சிதமாக செய்துமுடித்துவிடும்.
========================================================================================================
இன்று,
ஏப்ரல்-19.
- இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது(1975)
ஜெர்மனி பார்லிமென்ட் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது(1999)