இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

கூட்டணி பலம் யாருக்கு ?தேர்தல் மேடையில் இன்றைய நேர முதல்வர் ஜெயலலிதா தான் முதல்வராக இருந்து செய்த சாதனைகளை பட்டியலிட்டு வருகிறார்.

ஆனால் அப்பட்டியல் கேட்க வரவழைத்தவர்கள் முழுதாகக் கேட்டார்களா என்பது தெரியவில்லை.
ஜெயலலிதா கூட்டத்துக்கு வந்தவர்கள் "தங்களுக்கு தண்ணீர் பாக்கெட் வரவில்லை,பிரியாணி பொட்டலம் வரவில்லை "என்பதைத்தான் கணக்கிட்டுக்கொண்டிருந்தார்களே தவிர ஜெயலலிதாவின் சாதனைகளை கணக்கிட்டதாகத் தெரியவில்லை.

ஆனால் எந்திரம் போல் ஒரு கைத்தட்டல் சத்தம் கேட்டவுடன் தங்கள் கைகளையும் தட்ட ஆரம்பித்து தட்டி முடித்தார்கள்.

வாழ்க்கையே எந்திர மயமானபின்னர் சாதனைகளும் குமாரசாமி கணக்காகித்தானே போனது?
ஜெயலலிதா ஆட்சிக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பலை இருப்பதாக சொல்கிறார்கள்.இராமநாதபுரம் மீனவர்கள், 37 எம்பிக்களை கொண்ட அதிமுக கட்சி எங்களுக்காக என்ன செய்தது என்று கூறி எம்பி அன்வர்ராஜாவை சட்டையை பிடித்து வெளியே தள்ளி விட்டு அவரது காரையும் சேதப்படுத்தி உள்ளனர் மேலும் வேட்பாளர் மணிகண்டனுடன் சலசலப்பு ஏற்ப்பட்டது.
அமைச்சர் செல்லூர் ராஜு விரட்டல் வரை அதை பல இடங்களில் கண்டு கொள்ளவும் முடிகிறது.ஆனால் அதிமுகவினரும்,குறிப்பாக ஜெயலலிதாவும் எதிர்ப்புகளைக் கண்டு கொஞ்சமும் அஞ்சுவதாக தெரியவில்லை.

அரசு அதிகாரிகளும் ஆளுங்கட்சிக்கு அடிபணிவதை நிருத்தியதாகவே தெரியவில்லை.
1,திமுக-காங்கிரசு கூட்டணி,2,கேப்டன் நலக் கூட்டணி ,3,பாஜக கூட்டணி,4,கார்த்திக் நாடாளும் விடியல் கூட்டணி,5,பாமக ,6,சீமான் ,7,அப்துல்கலாம் உதவியாளர் கட்சி,8,ஆம் ஆத்மி என்று 7.5கட்சி கள் எதிர்ப்பை ஆளும் அதிமுக தலைவி கண்டு அசந்து போனதாக தெரியவில்லை.

காரணம் ஜெயலலிதா அமைத்துள்ள கூட்டணி.அதிகாரிகள்,காவல்துறை,போன்ற வற்றுடன் தேர்தலையே பொறுப்பேற்று நடத்தும் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ் நாடு கிளையுடன் அவர் வைத்துள்ள கூட்டணி.

இவைதான் ஜெயலலிதாவி அலட்சியத்துக்கும் வாக்குப்பதிவு நாள் வரைக்குமான அதிமுக வேட்பாளர் பட்டியல் திருத்தும்  பணிக்கு  மூலம்.

ராஜேஷ் லக்கானி தலைமையிலான தேர்தல் ஆணையம் தமிழ் நாட்டில் 100% வாக்குப்பதிவு என்ற நிலையைத்தான் தனது முக்கிய பணியாகக் கொண்டு செயல்பட்டுக்கொண்டு வருகிறது.
100% நேர்மையான வாக்குப்பதிவு என்பதை அது கண்டு கொள்ளவே இல்லை.
விருத்தாச்சலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு கொண்டுவரப்பட்டவர்கள் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் பலி.இந்த செய்தி தமிழ் நாட்டையே குலுக்கியது.ஆனால் தேர்தல் ஆணையம் இருக்கும் பகுதி குலுங்கவே இல்லை.அதை  மட்டில் அப்படி ஒன்றே நடக்காதது போல் தேர்தல் அலுவலர்களை வைத்து கார்பரேட் டான்ஸ் நடத்தி ரசித்துக் கொண்டிருக்கிறது.

மனசாட்சி உள்ள தேர்தல் ஆணையம் என்றால் அதுபற்றி மேலோட்டமாவது விசாரித்திருக்க வேண்டாமா?
அதன் பின்னரும் அம்மையார் நண்பகலில்தான் பிரச்சாரம் செய்கிறார்.தற்போது 200 ரூபாய்,பிரியாணிக்காக அந்த வேளையில் வந்து தங்கள் உயிரைத்தர கூலிகள் மறுப்பதால் ஆட்களை கூட்ட முடியாததால் காஞ்சிபுரத்தில் நேரம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

சிறுதாவூர் பங்களாவில் 10 கண்டெய்னர்கள் காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்படிருந்த தகவல் வெளியாகிபுகார் கொடுத்து  மூன்று நாட்களுக்குப்பின் கண்டெய்னர்கள் போகவேண்டிய இடங்களுக்குப் போன பின்னர் விசாரிப்பதாக சொல்லி விட்டு அங்குள்ள தேர்தல் அலுவலர் இல்லை என்பதாக பதிலை பொறுப்புடன் சொல்லுகிறார் ராஜேஷ் லக்கானி.சரி அப்படி வாகனங்கள் வந்ததா?ஏன் வந்தது?எங்கே போனது?என்ன இருந்தது?என்ற சாதாரணமாக மக்களுக்கு தோன்றும்  கேள்விகள்  தேர்தல் ஆணையத்துக்கு வந்து விசாரிக்கவில்லையே ஏன் ?

இதுவரை நான்கு அமைச்சர்கள் வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில் ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கும் புகைப்படம்,காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக வந்து புகாரும் கொடுக்கப்பட்டதே வழக்கு பதிவு யார் மீதாவது உண்டா?

என்ன ஒரு சந்தோசம் "அதிமுகவினர் பணம் கொடுக்க அதை பற்றி புகார் சொன்ன ,பிடித்துக் கொடுத்த திமுக,மற்ற கட்சியினர்தான் அதை கொடுத்ததாக வழக்கை பதிவு செய்த பிரவின் குமார் பணிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.
அதையும் வேட்பு மனு தாக்கல் முடிவுக்குப் பின்னர் எதிர் பார்க்கலாமோ?

அதிமுக கட்சியினரை விட வெறியான அம்மா ஆதரவாளர்களான சம்பத்,சுரேஷ் குமார்,தட்சினாமூர்த்தி போன்றோர் தான் அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் என்பதை பார்க்கையில் திகிலடிக்கிறது.எல்லா கட்சியினர்களுமே "அம்மாவின் ஆணைக்கிணங்க மதிக்க மழை பெய்தது "மாவட்ட ஆட்சியாளர்களை இத்தனை புகார்கள்,ஆதாரங்கள் வைத்துக்கொண்டும் மாற்றாதது ஏனோ?

மே.வங்கத்தில் 37 ஐ.எ.எஸ் ,40 ஐபிஎஸ் அதிகாரிகள் புகார்களின் பேரில் அங்குள்ள தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

ஆனால் தமிழத்தில் உள்ள புகார்களை டெல்லி நிர்வான் சதனுக்கு அனுப்பி விட்டு "காத்திருக்கிறோம்"என்று நாஞ்சில் சம்பத் போல் சொல்லி பொறுப்பை தட்டிக் கழிப்பது தமிழ் நாட்டில் 100% வாக்குப்பதிவு அல்ல 120% ஆர்.கே.நகர் போல் வாக்குப்பதிவை இந்த லக்கானி ஆணையம் தரும் ஆனால் 100%  நேர்மையான தேர்தல் ?

இன்றைய நிலையைப் பார்த்தால் நேர்மையான தேர்தல்  50% இருந்தால் கூட தமிழ் நாட்டுக்கு நல்லதாக இருக்கும் என்ற ஏக்கம்தான்  வருகிறது.
அதிமுக கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் திமுகவின்தேர்தல் பிரச்சார  'சொன்னீங்களே !செய்தீர்களா?"விளம்பரத்தை தடை செய்யக்கோரி மனு கொடுத்துள்ளார்களாம்.
ஒரு கட்சியின் தேர்தல் விளம்பரம் தனி நபர் தாக்குதல்,சாதி,மத விரோதம் இருந்தால் தடை செய்யலாம் .சொன்னதை செய்தீர்களா என்று கேட்பதை எப்படி தடை செய்ய முடியும்?
தாங்கள் செய்யாமல் போனால்தானே பயம்கொள்ள வேண்டும் .செய்திருந்தால் பதில் தாக்குதல் செய்யலாமே?
ஆனாலும் இந்த விளம்பரத்தில் ஜெயலலிதா வந்து வாக்குறுதி தருவதால் தேர்தல் ஆணையம் தடை விதிக்கலாம்.வாய்ப்புகள் உள்ளது.

தங்கள் தலைவியை தாக்குவதை நியாயமாக இருந்தாலும் கூட எந்த தொண்டனால் தாங்கிக்கொள்ள முடியும்.பெரும் பட்டியலில் தனது சாதனைகளை சொல்லியதும் போக கற்பனை செய்யாத எல்லாவற்றையும் செய்த ஜெயலலிதாவை தாக்கினால் யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும்?

கற்பனைக்கு எட்டிய கலைஞர் செய்த சிலவற்றை பட்டியலிட்டு உடன் பிறப்பு ஒருவர் அனுப்பியுள்ளார்.
அத்துடன் ஜெயலலிதா பட்டியளிட்டதையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு கற்பனை செய்யுங்கள்.

1) இந்தியாவிலேயே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்.
2) குடியிருப்பு சட்டம் அதாவது வாடகை நிர்ணயம் சட்டம்
போன்றவைகளை அமைத்து தந்தது தலைவர் கலைஞர்.
3) இலவச கான்கிரீட் வீடுகளை ஒதுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தவர் கலைஞர்.
4) கையில் இழுக்கும் ரிக் ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக் ஷா தந்தவர் கலைஞர்.
5) பிச்சைகாரர்களுக்கு மறு வாழ்வுமையம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்
6) முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
7) குடிநீர் வடிகால் வாரியம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
8) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
அமைத்து தந்தவர் கலைஞர்.
9) 1500பேர் கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.
10) மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல
வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.
11.போக்குவரத்தை தேசியமயமாக்கிவர் கலைஞர்.
12.போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியவர் கலைஞர்.
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்து தந்தவர் கலைஞர்.
14.அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பை தந்தவர் கலைஞர்.
15.அரசியலமைப்பில் BC-31% , SC-18% ஆக உயர்த்தி தந்தவர் கலைஞர்.
16. P.U.C வரை இலவச கல்வி உருவாக்கி தந்தவர் கலைஞர்.
17. மே 1 சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தவர் கலைஞர்.
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த

நாளை விடுமுறை தினமாக அறிவித்தவர் கலைஞர்.
19.முதல் விவசாயக் கல்லூரியை உருவாக்கி தந்தவர் கலைஞர்.(கோவை)
20. அரசு ஊழியர்கள் குடும்ப நலதிட்டம் தந்தவர் கலைஞர்.
21. அரசு ஊழியர்களுக்கு மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தவர் கலைஞர்.
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தவர் கலைஞர்.
23. கோயில்களில் குழந்தைகளுக்கான கருணை இல்லம் தந்தவர் கலைஞர்.
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.
25. நில விற்பனை வரையரை சட்டத்தை அமைத்தவர் கலைஞர்.
26.இரண்டாம் அலகு நிலக்கரி மின் உற்பத்தி நெய்வேலிக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.
27.பெட்ரோல்  தொழிற்சாலையை தூத்துகுடிக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.
28. SIDCO உருவாக்கியது கலைஞர்.
29. SIPCOT உருவாக்கியது கலைஞர்.
30.உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோரில்
தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தவர் கலைஞர்.
31.பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டு வந்தவர் கலைஞர்.
32. மனு நீதி திட்டம் தந்தவர் கலைஞர்.
33. பூம்புகார் கப்பல் நிறுவனத்தை தந்தவர் கலைஞர்.
34. பசுமை புரட்சி திட்டத்தை தந்தவர் கலைஞர்.
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில்
இணைத்தவர் கலைஞர்.
36. மிக பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர் சீர் மரபினரை சேர்த்தவர் கலைஞர்.
37. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
40. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச
கல்வி தந்தவர் கலைஞர்.
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தவர்
கலைஞர்.
42. தாழ்த்தப்பட்டோர்களுக்கு இலவச கல்வி தந்தவர் கலைஞர்.
43. இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தவர் கலைஞர்.
44. சொத்தில் பெண்ணுக்கும் சம உரிமை உள்ளது என
சட்டமாக்கியது கலைஞர்.
45. அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தவர்
கலைஞர்.
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.
49. நேரடி நெல் கொள்முதல் மையம் அமைத்து தந்தவர் கலைஞர்.
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம்
செய்தவர் கலைஞர்.
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகத்தை அமைத்தவர்
கலைஞர்.
52.கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
53. பெண்கள் சுய உதவி குழுக்களை அமைத்து தந்தவர்
கலைஞர்.
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.
56. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.
57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர்.
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டு வந்தவர் கலைஞர்.
59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தவர் கலைஞர்.
61. மெட்ராஸ்/சென்னை :கலைஞர் (Arignar Anna CM )
62. முதல் முறையாக விதவை பெண்களுக்கும் பொறியியல்
மற்றும் மருத்துவ கல்லூரியில் இடமளிக்க வழிவகை செய்தது கலைஞர்.
63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்து தந்தவர் கலைஞர்.
64. முதல் முறையாக விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்.
65. கிராமங்களில் கான்கீரிட் சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.
66. 24 மணி நேரமும் மருத்துவ சேவை தந்தவர் கலைஞர்.
67. தொழில்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
68. சமத்துவபுரம் தந்தவர் கலைஞர்.
69. கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டு வந்தவர் கலைஞர்.
70. இந்தியாவிலேயே முதன் முறையாக டாக்டர் அம்பேத்கார் பெயரில் சட்ட கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.
71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியவர் கலைஞர்.
72. உலக தமிழர்களுக்கு உதவ தமிழ் மெய்நிகர் பல்கலைகழகத்தை தந்தவர் கலைஞர்.
73. உருது அக்காடமி தந்தவர் கலைஞர்.
74. சிறுபான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தியவர்கலைஞர்.
75. உழவர்சந்தை திட்டத்தை தந்தவர் கலைஞர்.
76. வருமுன் காப்போம் திட்டத்தை தந்தவர் கலைஞர்.
77.கால்நடை பாதுகாப்பு திட்டத்தை தந்தவர் கலைஞர்.
78. 133 அடி திருவள்ளுவர் சிலை கன்னியாகுமாரியில் வைத்தவர்
கலைஞர்.
79. டைடல் பார்க் சென்னையில் அமைத்தவர் கலைஞர்.
80. வீட்டுமனை வழங்கும் திட்டத்தை தந்தவர் கலைஞர்.
81. மாவட்ட,மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தவர் கலைஞர்.
82. ஆசியாவிலேயே மிக பெரிய பேருந்து நிலையம்
சென்னை கோயம்பேடு நிலையம் அமைத்து தந்தவர் கலைஞர்.
83. விவசாய கூலி வேலை செய்வோர்களுக்கு
நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.
84. பொது கூலிவேலை செய்வோர்
நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.
85. அறிஞர்களுக்கும்,தியாகிகளுக்கும்
மணிமண்டபம் கட்டிதந்தவர் கலைஞர்.
86. 20 அணைகள் கட்டி தந்தவர் கலைஞர்.
87. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்.
88. மதுரை நீதிமன்றம் கட்டி தந்தவர் கலைஞர்.
89. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்.
90.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தந்தவர் கலைஞர்.
91. நமக்கு நாமே திட்டத்தை தந்தவர் கலைஞர்.
92. நலிவுற்ற குடும்பநல திட்டத்தை தந்தவர் கலைஞர்.
93. 9 மாவட்டங்களில் புதிய மாவட்டாச்சியர் அலுவலகங்களை கட்டி தந்தவர் கலைஞர்.
94. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய
கட்டிடம் தந்தவர் கலைஞர்.
95. 13000 மக்கள் நலப்பணியாளர்கள் நியமனம் செய்தவர் கலைஞர்.
96. முதல் முறையாக 10000 சாலை பணியாளர்களை நியமனம்
செய்தவர் கலைஞர்.
97. சென்னையில்போக்குவறத்து நெரிசலை தவிர்க்க 9
மேம்பாலங்களை கட்டி தந்தவர் கலைஞர்.
98. ரூ.1500 கோடியில் 350 துணை மின்நிலையங்களை உருவாக்கியவர் கலைஞர்.
99. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கலைஞர்.
100.போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய
திட்டத்தை தந்தவர் கலைஞர்.
101. வேலூர்,தூத்துகுடி,கன்னியாகுமரியில் புதிய மருத்துவ
கல்லூரிகளை அமைத்து தந்தவர் கலைஞர்.
102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய். திட்டத்தை தந்தவர் கலைஞர்.
103. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்ணை மற்றும் பல வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில்
தந்தவர் கலைஞர்.
104. நியாயவிலைக்டையில் 10 சமையல்
பொருட்க்களை ரூ.50 க்கு தந்தவர் கலைஞர்.
105. விவசாய கடன் 7000 கோடியை தள்ளுபடி செய்யவைத்தவர்
கலைஞர்.
106. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும்
விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றவர் கலைஞர்.
107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ.1050 ஆக உயர்த்தியவர் கலைஞர்.
108. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ.1100 ஆக உயர்த்தியவர் கலைஞர்.
109. 172 உழவர் சந்தைகளாக உயர்த்தியவர் கலைஞர்.
110. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ.2000 ஆக உயர்த்தியவர் கலைஞர்.
111. மாவட்டத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
112. ரூ.189 கோடி செலவில் காவிரி- குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
113. ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி-கருமேனியாரு-நம்பியாரு நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
114. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக
அறிவித்தவர் கலைஞர்.
115. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் கலைஞர்.
116. 10 ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயபாடமாக்கியது கலைஞர்.
117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் பணி செய்தவர் கலைஞர்.
118. அர்ச்சகர்கள்,பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியவர்
.
119. ரூ.2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தவர் கலைஞர்.
120. இதயநோய்,சர்க்கரை நோய்,புற்று நோய்க்கான நலமான
தமிழகம் திட்டம் தந்தவர் கலைஞர்.
121. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை தந்தவர் கலைஞர்.
122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புதிய
நிறுவனங்களை வர செய்து 41,090 கோடி முதலீடை கொண்டுவந்தவர் கலைஞர்.
123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தந்தவர் கலைஞர்.
124. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தவர்
கலைஞர்.
125. புதிய டைடல் பார்க் திருச்சி,கோவை,மதுரை,திருநெல்வே
லியில் உருவாக்கியவர் 
126. அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.
127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000 புதிய பேருந்துகளை தந்தவர் கலைஞர்.
128. அருந்ததியினர் இனத்திற்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
129.அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096
கிராம பஞ்சாயத்தை உருவாக்கியவர் கலைஞர்.
130. 420 பேரூராட்சிகள் உருவாக்கி அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.
131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர்.
132. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நிறுவியவர் கலைஞர்.
133.ஆசியாவையே திரும்பி பார்க்கவைத்த
புதிய சட்டமன்றம் நிறுவியவர் கலைஞர்.
134. அடையார் சூழியல் ஆராய்ச்சி பூங்கா அமைத்தவர் கலைஞர்.
135.சென்னை செம்மொழி பூங்கா அமைத்து தந்தவர்
கலைஞர்.
136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தவர் கலைஞர்.
137. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில்
திட்டம் தந்தவர் கலைஞர்.
138. ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர்.
139. ராமநாதபுரம்-பரமக்குடி கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர்
கலைஞர்.
140. கலைஞர் வீடு திட்டம் தந்தவர் கலைஞர்.
141. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியவர் கலைஞர்.
142.தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர்.
143. 119 புதிய நீதிமன்றங்களை உருவாக்கியவர்
கலைஞர்.
144. மாலை நேரம் மற்றும் விடுமுறை தின
நீதிமன்றங்களை உருவாக்கி தந்தவர் கலைஞர்.
145. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி,கோவை,ம
துரை,திருநெல்வேலியில் உருவாக்கி தந்தவர் கலைஞர்.
146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய
ஆணையம் அமைத்து தந்தவர் கலைஞர்.
147. சமச்சீர் கல்வி தந்தவர் கலைஞர்.
148. இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம்
தந்தவர் கலைஞர்.
149. முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.
150. இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர்
.
151. இலவச எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.
152. பேருந்து,பால்,மின்சார கட்டணங்களை உயர்த்தாதவர் கலைஞர். # ஏன் என்றால் அது ஏழை,நடுத்தரவர்க்கங்களின் அவசிய பயன்பாடு.
153. மாவட்ட தலைநகரங்களில் மருத்துவ
கல்லூரி,பொறியியல் கல்லூரி துவக்கியவர் கலைஞர்.
பட்டியலிட்டவர் கொங்கேஷ்வரன் நாகன்.(Kongeswaran Nagan)அவருக்கு நன்றிகள்.அதிமுக ரத்தத்தின் ரத்தங்களும் தங்கள் பட்டியலை [இருந்தால்]அனுப்பி வைக்கலாம்.அதையும் வெளியிட காத்திருக்கிறோம்.

======================================================================================
சாதி ஒழிப்பு சமூகப் போராளிகள் கவனத்துக்கு!
"கலைஞரை பற்றி நான் பேசும்போது திருமா , ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் எல்லாரும் என் கூடவேதான் இருந்தாங்க யாரும் எதுவுமே சொல்லவில்லை....

வாட்ஸப்பில் நான் பேசியதை பற்றி சமூக வலைதளங்களில் வந்த கருத்துக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்... உடம்பெல்லாம் நடுங்கியது... ஆகவேதான் மன்னிப்பு கேட்டேன்...
திருமாவும், ஜி.ராமகிரிஷ்ணனும் என்னை மன்னிப்பு கேட்காதீர்கள் என்று சொன்னார்கள்... தவறு செய்தவன் நான் அகவே நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றேன்...
இது தெரியாமல் அவர்கள் சொல்லி நான் மன்னிப்பு கேட்டதாக ஜூனியர் விகடனில் பெட்டி செய்தி போட்டிருக்கான்.அது தவறு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டாம் என்றுதான் சொன்னார்கள்."
                                                                                                                                               - வைகோ,
சமூகப் போராளிகள் ஜி.ராமகிருஷ்ணன்,திருமாவளவன்,என்ன சொல்லுகிறார்கள் இந்த வைகோ பேச்சுக்கு?
சாதி ஒழிப்பு தியாகிகள் எஸ்.கனகராஜ்,அருணன்,முத்தரசன்  போன்ற ஒத்துகள் இதற்கு என்ன பக்கப்பாட்டு பாடப்போகிறார்கள்.??
=====================================================================================