கருத்துத் திணிப்பு.
தமிழ் நாட்டில் உள்ள நியுஸ் செவன்,தந்தி,புதிய தலைமுறை போன்ற தொலைக்கட்சிகளில் எல்லாம் வாசகர்கள் கருத்துக்கணிப்பில் திமுக முதலிடம்,அதிமுக இரண்டாம் இடம் என்று வந்து கொண்டிருக்கிறது.
இவற்றில் தந்தி,புதிய தலை முறை தொலைக்காட்சிகள் பக்கா ஜெயலலிதா ஆதரவுகள் என்பது உலகமறிந்த உண்மை .ஆனாலும் இணையத்தில் நடத்திய கருத்துக்கணிப்பை மாற்ற இயலாதே என்பதால் அப்படியே வெளியிட்டு ஜெயலலிதாவிடம் வாங்க்கிக்கட்டிகொண்டன.
ஆனால் திடீரென வட இந்திய மூன்று தொலைக்காடசிகள்உடப்பட்டவைகள் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டன.
இதில் அதிமுக முன்னிலை என்று இரண்டிலும் ஒன்றில் திமுகதான் முன்னிலை என்றும் வந்ததன.
இதை எதிர்பார்த்து காத்திருந்த அதிமுக் ஆதரவு ஊடகங்கள் தமிழ் இந்து போன்றவை அதை தலைப்புச்செய்தியாக வெளியிட்டு அம்மாவிடம் தனது விசுவாசத்தை காட்டியுள்ளன.மூன்றாவது கணிப்பை கண்டு கொள்ளவே இல்லை.
ஆனால் சில நாட்களுக்கு முன்னர் வடக்கில் உள்ள என்.டி .டி .வி. கருத்துக்கணிப்பை வெளியிட்டது. அதில் திமுக வெற்றி என்றுதான் வந்தது.இந்த தொலைக்காட்சியும் ஜெயா ஆதரவாய் செயல்படுவதுதான்.
எப்படி கருத்துக்கணிப்பு திடீரென அதிமுக ஆதரவாக வந்தன .உள்ளெ நுழைந்தால் கருத்துக்கணிப்புகளை நாம் நமக்கு ஆதரவாக கருத்துத் திணிப்பாக்கி விடலாம் என்ற உண்மை செய்தி தெரிய வருகிறது.
தனக்கு எதிராக வரும் கருத்துக் கணிப்பை தமக்கு ஆதரவாக அதிமுக செய்த முயற்சிகளும் வெளிவருகின்றன.
அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்ட சிவோட்டர் நிறுவனத்தின் மோசடி கடந்த ஆண்டே அம்பலமாகிவிட்டது.
இதனால் தற்போது அந்நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவு நம்பகத் தன்மை கேள்விக் குறியாகி விட்டது.
கருத்துக் கணிப்புகளில் நடக்கும் மோசடி குறித்து ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கடந்த ஆண்டு டெல்லியை சேர்ந்த நியூஸ் எக்ஸ்பிரஸ் என்ற இந்தி தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.
ஆபரேஷன் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் சி-வோட்டர், உள்ளிட்ட 11 நிறுவனங்களில் ஆபரேஷன் நடத்தப்பட்டது.
அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் போல் சென்று, கருத்துக் கணிப்பு நிறுவனங்களை அணுகினர்.
அப்போது கட்சிகளுக்காக இரண்டு தகவல்களை அவர்கள் தயார் செய்வதும் தெரியவந்தது.
1, உண்மையான கருத்துக்கணிப்பு.
2,கட்சிகளுக்கு ஏற்ப திரிக்கப்பட்ட கருத்துக்
.
இந்த இரண்டு தகவல்களுக்கும் தனித்தனியாகசி-வோட்டர் பேரம் பேசுப்படுவதாகவும் தெரியவந்தது. தேவைக்கேற்ப தகவல்களை திரித்து கொடுக்க தனியாக கட்டணம் வசூலிக்கப்படும் என்பதும் அந்த ஆபரேஷனில் தெரியவந்தது.
இந்த மோசடி நிறுவனங்களில் சி-வோட்டர் தான் பெரிய புகழ் பெற்ற நிறுவனம்.இதுதான் அதுவரை பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்காக அதிக கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதனால் இந்த நிறுவனத்தின் கருத்துக்கணிப்புகள் அனைத்துமே பெரும் மோசடியானது தான் என்ற கருத்து இந்திய தொலைக்காட்சி பார்வையாளர்களிடமும்,மக்களிடமும் எழுந்துள்ளது.
இந்த அசிங்கத்தைப்பார்த்த இந்தியா டுடே நிறுவனமும், டைம்ஸ் நவ் நிறுவனமும் சி-வோட்டர் மூலம் கருத்துக் கணிப்புகளை பெறுவதை நிறுத்துவதாக அறிவித்தது.
அக்கணிப்பில் தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு இடம் கூட வெற்றிப்பெறாது என்றும், அதிமுக 130 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இது தமிழக மக்களை திசை திருப்ப மட்டுமல்ல.
ஜெயலலிதா ஆட்சியை கிண்டல் செய்தும்,குறை கூறியும் வரும் பாஜகவை "பாஜக ஒரு இடம் கூட வெற்றிப்பெறாது" என்ற கருத்துத் திணிப்பு மூலம் தனது காலில் விழவைப்பதும்,அதன் மூலம் தனது கூட்டணியில் சொற்ப இடங்கள் கொடுத்து சேர வைப்பதும் காரணங்கள்.
ஆனால் சி- வோட்டர் கருத்துக்கணிப்பு மீது தற்போதுஅனைத்து தரப்பிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு இதே கேவலமான மோசடிகளில் ஈடுபட்ட சி-வோட்டர் குறித்து சர்ச்சை எழுந்த போது அதனிடம் இனி இது போன்ற கருத்துக்கணிப்பை வாங்க தொடர்பு வைக்க மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்த இந்தியா டுடே டிவி ,டைம்ஸ் நவ் இந்த ஆண்டு அதே நிறுவனத்திடமிருந்து அதே போல் மாறுபட்ட கருத்துக்கணிப்பு பெற்று வெளியிட்டது ஏன் ?இது தொலைக்காட்சியின் செய்தியா?அல்லது விளம்பரதாரர் நிகழ்ச்சியா?என்ற கெள்வி எழுந்துள்ளது.
இத் தொலைக்காட்சிகள் கொடுத்த வாக்குறுதியிலேயே நம்பகத் தன்மை இல்லாமல் போன நிலையில் இதன் செய்திகளிலும் ,கருத்துக்கணிப்பிலும் எத்தனை தூரம் உண்மை இருக்கும்.
ஜி தொலைக்காட்சி நேரு பல்கலைக்கழக கன்கையா குமார் ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட கானொளியில் தேச விரோத கோசங்களை திணித்து ஒளிபரப்பி அம்பலம் ஆனது .அதே வரிசையில் பல தொலைக்காட்சிகள் சேர்க்கிறது.
இது போன்ற காசுக்கு செய்தி ஊடகங்களால் எந்த செய்தி உண்மை,எது கட்டப்பட்ட செய்தி என்பதை அறியாமல் தவிப்பது காசு கொடுத்து கேபிள் ,செய்தித்தாட்கள் பார்ப்பவர்கள் தான்.
======================================================================================
இன்று,ஏப்ரல்-03.
- வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த லெனின் ரஷ்யா திரும்பினார்(1917)
- உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயார்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது(1973)
- மராட்டிய பேரரசர் சிவாஜி இறந்த தினம் (1680)
- ஃபுரூரியின் முதல் பார்லிமென்ட் உருவாக்கப்பட்டது(1077)
கூகுள் சிரிப்பான கதை,
கூகுள் தேடுபொறி இணைய உலகில் தனி இடம் பிடித்து வருகிறது. கூகுள் தயாரிப்புகளுக்கும் இணையத்தில் பெரும் வரவேற்பும், பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகம்.
இந்நிலையில், பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் இன்று புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது மைக் டிராப் (Mic Drop) எனப்படும் அசைவு படத்தை “அனுப்பு” பொத்தானுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போது, அவருக்கு அனுப்பும் கடைசி அஞ்சலாக அனுப்புவதாக இருந்தால், அந்த புதிய பொத்தானை பயன்படுத்தலாம் என்று ஜிமெயில் அறிவித்தது.
இதை தெரியாமல் பலர் அனுப்பிய மின்னஞ்சல்களில் மைக்டிராப் சேர்ந்துக்கொண்டது.
இதனால், சிலருக்கு வேலை பறிப்போகிவிட்டதாக புலம்பியுள்ளனர். சிலர் தனது மேலதிகாரியிடம் இருந்து பதில் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
கூகுள் குழுவில் ஒரு நபர் எழுதியுள்ள பதிவில், தான் எழுத்தாளர் என்றும், தனது கட்டுரைகளை மேலதிகாரிக்கு மின்னஞ்சல் வழி அனுப்பியதாகவும், மைக் டிராப்பை பார்த்ததும் கோபமடைந்த அவர், தன்னை வேலையில் இருந்து நீக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதை கேள்விப்பட்ட கூகுள் நிறுவனம், உடனடியாக மைக் டிராப் பொத்தானை நீக்கிவிட்டது. இதற்காக மன்னிப்பையும் கேட்டுள்ளது.
இந்த வசதி சிரிப்பை விட தலைவலியை தான் கொடுத்துள்ளதாகவும், இந்த ஆண்டு முட்டாள் தினத்தில் எங்களை நாங்களே முட்டாளாக்கிக் கொண்டோம் என்று தெரிவித்துள்ளது.
======================================================================================