மர்ம மனிதர் மர்மம்..
சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் மீது ஏற்கெனவே தரப்பட்ட அனைத்து புகார்களும் வாபஸ் பெறப்பட்ட நிலையில் நேற்று ஒரு புதிய புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகாரை தந்தவர் பெயர் அந்தோணி. "எம்பயர் மூவிஸ்" என்ற பட நிறுவனத்தை நடத்தி வரும் இவர் நேற்று பொலிஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில் அதான்டா, இதான்டா என்ற பெயரில் ஒரு படம் தயாரித்தேன். பாண்டியராஜன், விவேக் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ரூ.10 லட்சத்துக்கு சன் டி.விக்கு விற்பனை செய்தேன்.
ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பே சன் டி.வி.யில் இந்த படத்தை வெளியிட்டு விட்டதால் படத்தை வினியோகஸ்தர்கள் யாரும் வாங்க மறுத்து விட்டனர். இதனால் ரூ.1 கோடி வரை எனக்கு இழப்பு ஏற்பட்டது.
இது பற்றி கேட்ட போது,"என்னை மிரட்டினார்கள் என்றும், இது தொடர்பாக சன் டி.வி. நிர்வாக இயக்குனர் கலாநிதிமாறன், சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு ஏற்பட்ட நஷ்ட தொகையை வசூலித்து தர வேண்டும்"என்று குறிப்பிட்டு இருந்தார்.
______________________________________________________________________________________________________
2009ம் ஆண்டுடன் இலங்கையில் போர் நிறைவுக்கு வந்தாலும் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக புலம்பெயர் தமிழ்கள் பெருமளவில் நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.
2010ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் அமைப்பை ஓர் பயங்கரவாத இயக்கமாக அறிவித்து வரும் அமெரிக்காக கடந்த ஆண்டில் இருந்து இலங்கையில் எவ்விதமான பயங்கரவாத அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்ட போரின் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் மீள ஒருகிணையும் முனைபுகளில் ஈடுபட்டுவதாக அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது.
இதன் ஒரு அங்கமாகவே ஆயுதங் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டில் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச வலையமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடஅமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2010ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பாரியளவு புலம்பெயர் தமிழ் மக்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தான்.
தூசிப்புயல் பொனிக்ஸ் நகரை மூடுகிறது.
_____________________________________________________________________________________________
எய்ட்ஸ்: புது ஊசிஎய்ட்ஸ் நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக மருத்துவ அதிகாரிகள் பல்வேறு வித ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போது நம்பிக்கை தரும் வகையில் விஞ்ஞானிகள் ஒரு தகவல் வெளியிட்டுள்ளனர். விரைவில் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கி விடுவோம் என்று அறிவித்துள்ளனர்.
மனிதன் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இதில் அதிக திறன் கொண்ட 17 மூலக்கூறுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதை மேலும் மேம்படுத்துவதன் மூலம் எய்ட்ஸ் நோயையும் மனிதர்களுக்கு ஏற்படாமல் தடுத்து விடலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே இந்த மூலக்கூறுகளை மேலும் வீரியமாக்க தடுப்பூசி மருந்தை உருவாக்கி வருகின்றனர். விரைவில் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனால் எய்ட்ஸ் நோயை முன்கூட்டியே தடுத்து முற்றிலும் விரட்டிவிடலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் மருத்துவ அறிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
___________________________________________________________________________________
கிரீஸ் மனிதர்கள் யார் !
இலங்கையில் தமிழர்கள் பகுதியில் புதிதாக கிரீஸ் மனிதர்கள் என்ற பெயரில் மர்ம மனிதர்கள் இரவில் வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்துவருகிறார்கள்.இவர்களின் தாக்குதல் குறிப்பாக பெண்கள்மீதே இருக்கிறது.
அதுவும் பாலியல் அடிப்படை தாக்ககுதலாகவே இருக்கிறது.
இலங்கை அரசு அதை தடுப்பதற்கு பதில் மக்களையே காவலர்கள் தாக்குகிறார்கள்.
யார் இந்த மர்ம மனிதர்கள்,இவர்களின் தாக்குதலுக்கு தமிழர்கள் அதுவும் குறிப்பாக பெண்களே இலக்காவது ஏன்?காவலர்கள்.படை வீரர்களாலேயெ இவர்களை பிடிக்க முடியாதது ஏன்?
இந்த கிரீஸ் மனிதர்கள் ஓடி ஒளியும் இடம் படைவீரர் அல்லது காவலர் கள் பகுதியாகவே இருக்கிறதே .இதன் பின்னணி என்ன?
வவுனியா வேப்பங்குளம் மற்றும் பட்டானிச்சூர்புளியங்குளம் பகுதியில் இன்று காலை ஸ்ரீலங்கா போலீஸ் மற்றும் ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவினரும் இணைந்து அப்பகுதி மக்களிடம் பதிவுகளை மேட்கொண்டுள்ளனர்.
வேப்பங்குளம்,ஐந்தாம் ஒழுங்கை,ஆறாம் ஒழுங்கை,நான்காம் ஒழுங்கை,மற்றும் பட்டானிச்சூர்புளியங்குளம் சில பகுதிகளில் ஸ்ரீலங்கா போலீஸ் மற்றும் ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவினரும் இனைந்து அப்பகுதி மக்களது விடுகளுக்கு சென்று பதிவுகளை மேட்கொள்ளுகின்றனர்,
இப்பதிவுகளில் ஒவ்வொரு குடும்பமாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டு குடும்ப விபரம், ஒரு குடும்பத்தில் எத்தனைபேர் இருக்கின்றார்கள்,மற்றும் யார் வெளிநாடுகளில் இருக்கின்றனர்,யார் யார் இங்கு வந்து போகின்றனர் என்பதே அவர்களின் பதிவுகளின் கேள்விகளாக அமைகின்றன.
இந்தப்பதிவுகளில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா புலனாய்வு உறுப்பினர்களிடம் மக்கள் எங்களுக்கு பயமாக இருக்கிறது இந்த மர்ம மனிதர்களால் இதற்கு என்ன செய்யவது என்று கேட்ட வேளைஅதற்கு அவர்கள் சொன்னபதில் "உங்கள் வீட்டுக்குள் வந்தால் அவர்களுக்கு அடிக்கவேண்டாம் ஓடிப்போய் உங்கள் ஊர் கோயில் மணியை அடியுங்கள் நாம் அதைக்கேட்டு உங்களிடம் வருவோம் "என்று
பதில் அளித்துள்ளனர்.
மக்கள் ஓடிப்போய் மணியடிக்கும் வரை மர்ம மனிதன் சும்மா இருப்பனா?அல்லது மக்களை அவன் கொல்லமாட்டானா?இவர்களின் கதைகளை எந்த மனிதர்களாவது ஏற்பார்களா?
#ஸ்ரீலங்கா அரசின் நோக்கம்.
*தமிழ் மக்களின் பகுதிகளில் ஒரு பய பீதியை கிளப்பிவிட்டு தமிழ் மக்கள் பயத்தின் காரணமாக ஒவ்வொரு குடும்பங்களிலும் இளம்பராயத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்புவார்கள் இதனால் சிங்களவர்களது ஆதிக்கம் அதிகரிக்கும் என்பது இவர்களது ஒரு நோக்கம்.
*மற்றும் பெண்களை மீண்டும் வீடுகளுக்குள்ளே முடக்குவது இவர்களின் நோக்கங்களில் ஒன்று.
*தமிழ் மக்களிடையே பயத்தை உண்டுபண்ணி அவர்களை நிம்மதியற்ற வாழ்க்கையாக மாற்றுவது.
*மக்களிடையே கலவரத்தை உண்டுபண்ணி அவசரகால சட்டத்தை நீடிப்பது.
இது தொடர்பாக அங்கிருக்கும் கிராமவாசி ஒருவரிடம் மர்ம மனிதர்கள் என்றால் யார்?தமிழீழ விடுதலை புலிகளா?அல்லது ஸ்ரீலங்கா இராணுவமா?என்று கேட்டவேளை அவர் இவ்வாறு தெரிவித்தார்:
இது தொடர்பாக அங்கிருக்கும் கிராமவாசி ஒருவரிடம் மர்ம மனிதர்கள் என்றால் யார்?தமிழீழ விடுதலை புலிகளா?அல்லது ஸ்ரீலங்கா இராணுவமா?என்று கேட்டவேளை அவர் இவ்வாறு தெரிவித்தார்:
இது ஸ்ரீலங்கா அரசின் (LRRP)படையணியின் வேலை...
ஸ்ரீலங்கா அரசானது வெளி உலகத்துக்கு தமிழ் மக்களுக்கு நாம் அனைத்து வசதிகளை செய்து கொடுத்துள்ளோம் என்று பிரச்சாரம் ப்ண்ணுகிறது.
ஆனால் தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசானது தனது ஆழஊடுருவும் படையணியான (LRRP) படைவீரர்களை வைத்து மர்ம மனிதர்களை உருவாக்கி அவர்களை தமிழ் பெண்களின் இரத்தத்தை குடிக்க வைக்கிறது. தமிழ் மக்களை நிம்மதியற்ற வாழ்க்கையை உண்டுபண்ணி அவர்களின் வாழ்கையை சீரழிக்கிறது ,என அந்த கிராமத்து வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேட்பதற்குஒரு சரியான பிரதிநிதி இல்லை என்ற துணிவுதான் இவ்வளவிற்கும் காரணம் என்று தற்போது தமிழர்கள் கூறுகின்றார்கள்.
_______________________________---
ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் முழுவீச்சில் வலுப்பெற தொடங்கியுள்ள நிலையில் நிலையில், ஊழல் புகார்களில் சிக்கிய கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபத் சௌமித்ரா சென் ராஜ்யசபாவினால் பதவி நீக்கம்செய்யப்பட்டுள்ளார். |
சௌமித்ரா சென் மீது நிதி முறைகேடு, ஊழல் புகார் குற்றச்சாட்டு எழுந்ததால், இது பற்றி விசாரணை நடத்துவதற்கு ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி குழுவொன்றை நியமித்தார். விசாரணைகளை மேற்கொண்ட இக்குழு அவர் மீதான குற்றச்சாட்டுக்களை உறுதி செய்தது.
இதையடுத்து, சிபிஎம் தலைவர் சீதாராம் எச்சூரில், நேற்று முன் தினம் சபையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். நீதிபதி சௌமித்ரா சென்னும் நேரில் வரவழைக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டார்.
நேற்றும் இத்தீர்மானம் மீதான விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மாலை நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொண்ட 189 பேரில், 172 பேர் சௌமித்ரா சென்னை பதவி விலக்க வேண்டுமென்ற என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையடித்து, குடியரசு தலைவருக்கு இத்தீர்மானம் பற்றி முறைப்படி அறிவிக்கப்படவிருக்கிறது. குடியரசு தலைவர் சௌமித்ரா சென்னை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடுவார். இதன் மூலம், ராஜ்யசபா மூலம் பதவி நீக்கம் செய்யப்படும் முதல் நீதிபதி என்ற பெயரை சௌமித்ரா சென் பெற்றுள்ளார்.
நிறுவன நிதியை தன் சொந்த காரணத்திற்காக திருப்பி விட்டு ஊழல் செய்ததே இவர் மீதான குற்ற் சாட்டு.ஆனால் பகுஜன் சமாஜ்வாடி மட்டும் இவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.ஊழல் செய்வோரைக்காப்பாற்றுவதில் என்ன மக்கள் தொண்டோ.
முன்னதாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான உத்தரபிரதேச கால் நடை, பால் வளத்துறை அமைச்சர் அவாத் பால் சிங் யாதவும், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது குறிப்பிடத்தக்கது. லோக்பால் நீதிமன்ற நீதிபதி மக்ரோட்ரா, அவாத் பால் சிங் யாதவ் ராஜினாமா செய்ய வேண்டுமென பரிந்துரைத்திருந்தார்.