“ஈரான் அணு ஆயுதங்கள் உட்பட பேரழிவினை உண்டாக்கும் ஆயுதங்களைப் பெறுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளைத் தவிர்த்திட, தனிமைப்படுத்திட, தேவைப் படின் அந்நாட்டிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்திட அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் மேற்கொள்ளும் முயற்சிகளில் இந்தியா முழுமையாகவும் செயல்வடிவத்தி லும் பங்கேற்கிறதா என்று மதிப்பீடு செய் யப்படும்’’ (அமெரிக்க ஜனாதிபதியால் அமெரிக்க காங்கிரசுக்கு சமர்ப்பிக்கப்படவிருக்கும் வரு டாந்திர அமலாக்கம் மற்றும் நிறைவேற்றுதல் அறிக்கை சம்பந்தமாக 2006ஆம் ஆண்டு ஹென்றி ஹைடு சட்டத்தின் 104 ப(2)நு(i) பிரிவுகளில் கண்டுள்ள வாசகங்கள்)
இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி யில் 12 விழுக்காடு ஈரானிலிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒவ்வொரு நாளும் சுமார் 400,000 பேரல்களாகும். இவ்வாறு இறக்குமதி செய்யப்படுவது ஆகஸ்டு மாதத் தில் நிறுத்தப்படலாம். கடந்த சில மாதங் களாக இறக்குமதி செய்யப்படும் கச்சா எண் ணெய்க்கு இந்தியா பணம் செலுத்தாததுதான் இதற்குக் காரணமாகும். இவ்வாறு இந்தியா, ஈரானிய எண்ணெய் கம்பெனிகளுக்கு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற் குப் பணம் செலுத்த வேண்டி இருக்கிறது.
இந்தியா பணம் செலுத்துவதற்கான ஏற் பாடுகளை செய்யத் தவறினால் எண்ணெய் விநியோகிப்பதை நிறுத்த வேண்டிய கட் டாயத்திற்கு தள்ளப்படலாம் என்று ஈரான் குறிப்பாய்த் தெரிவித்திருக்கிறது. இத்தகைய சூழல் ஏற்பட்டது எப்படி? ஈரானுடனான வர்த்தக உறவுகளை இந்தியா வெட்டிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்திப்பதே இதற்குக் காரணமாகும். 2010 ஜூலையில் அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக அதன் எண் ணெய் மற்றும் எரிவாயு தொழில்களை அழிக் கும் நோக்கத்துடன் பல்வேறு வகைகளில் பொருளாதாரத் தடைகளை விதித்தது. அமெ ரிக்கா விதித்துள்ள தடைகள், 2010 ஜூனில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தன்னுடைய 1929 தீர்மானம் மூலமாக மேற்கொண்ட பொருளாதாரத்தடைகளையும் தாண்டிச் சென்றிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன் றியத்துடன் சேர்ந்துநின்று ஈரானிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் வங்கி மற்றும் அந்நியச் செலாவணிப் பரிவர்த்தனைகள் செய்திட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித் திருக்கின்றன.
அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிதல்
இந்தியா, ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தடைகளுக்கு மட்டுமல்ல, அமெரிக்கா மற் றும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள சட்ட விரோதமான மற்றும் ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளுக்கும் கீழ்ப்படிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி 2010 டிசம் பரில் ஆசியன் கிளியரிங் யூனியன் (ஹஊரு-ஹளயைn ஊடநயசiபே ருniடிn) மூலமாக ஈரானுக்கு வர்த் தகம் சம்பந்தமாக அளித்து வந்த அனைத்து வகையான கொடுக்கல்-வாங்கலையும் (யீயலஅநவேள) நிறுத்திவிட்டது. இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டதால், பின் எங்ஙனம் பணத்தைக் கொடுப்பது என்கிற பிரச்சனை எழுந்துள்ளது. பின்னர் ஈரான் மற்றும் இந்திய அரசாங்கங்கள் இது தொடர்பாக ஓர் உடன் பாடு செய்துகொண்டன. அதன்படி, பண்டஸ் பேங்க் (க்ஷரனேநளயெமே) எனப்படும் ஜெர்மன் மத்திய வங்கி மூலமாக எண்ணெய் இறக்கு மதிகளுக்கான பணத்தைச் செலுத்திடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆயினும் அடுத்த சில வாரங்களில் அமெ ரிக்காவிடமிருந்தும் இஸ்ரேலிடமிருந்தும் வந்த நிர்ப்பந்தங்களின் காரணமாக, ஜெர்மன் அரசாங்கம் இந்தப் பரிவர்த்தனைகளையும் நிறுத்திவிட்டது. அதன் பின்னரும் ஈரான், இந்தியாவுக்கு எண்ணெய் அளிப்பதை தொடர்கிறது. ஆனால் இந்தியா எவ்வகை யிலும் பணம் செலுத்திடவில்லை.
ஐ.மு.கூட்டணி அரசாங்கம் ஈரானிட மிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை உத்தரவாதப்படுத்துவதற்குப் பதிலாக வேறெந்த வகையில் எண்ணெய் இறக்குமதி செய்திடலாம் என்று யோசித்துக் கொண்டி ருக்கிறது. ஈரானுக்குப் பதிலாக சவுதி அரே பியாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய் திடுமாறு அமெரிக்கா இந்தியாவை நெருக்கிக் கொண்டிருக்கிறது.
ஹைடு சட்டத்தின் கட்டளை
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந் தம் ஏற்பட்டதிலிருந்தே இந்தியா, ஈரானுடன் கொண்டிருந்த பலநூறு ஆண்டுகால பாரம் பரிய உறவுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுவிட் டது. அணுசக்தி ஒப்பந்தமானது அமெரிக்கா வின் அயல்துறைக் கொள்கைக்கு முழுமை யாக ஒத்துப்போகக்கூடிய விதத்தில் இந்தி யாவும் தன் அயல்துறைக்கொள்கையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தெளிவுபடுத்தி விட்டது. மேலும் இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை அனுமதித்திடும் ஹைடு சட்டமானது, ஈரா னுக்குப் பொருளாதாரத் தடை விதித்திருப்பதி லும் ஈரானைத் தனிமைப்படுத்துவதிலும் அமெரிக்காவுடன் இந்தியா எந்த அளவிற்கு ஒத்துழைப்பு நல்குகிறது என்று ஒவ்வோ ராண்டும் அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க காங்கிரசுக்கு மதிப்பீட்டு அறிக்கை (யளளநளளஅநவே சநயீடிசவ) அளித்திட வேண்டும் என்றும் தெளிவாகத் தெரிவித்திருக்கிறது. இச்சட்ட மானது இந்தியாவின் இறையாண்மைக்கு எதி ரானது என்றும், இந்தியாவின் அயல்துறைக் கொள்கையை அமெரிக்காவின் நலன்க ளுக்கு ஏற்றவிதத்தில் வெட்டிக்குறைக்கிறது என்றும் கூறி இந்தச் சட்டத்தை இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
அதிபர் புஷ் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் 2005 ஜூலையில் இந்திய - அமெரிக்க கூட்டறிக்கையில் கையெழுத் திட்ட அடுத்த சில வாரங்களிலேயே, செப் டம்பரில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி முகமையில் ஈரானுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, அணிசேரா நாடு கள் அனைத்தும் ஈரானுக்கு ஆதரவாக வாக் களித்தன, அல்லது வாக்களிக்காமல் ஒதுங் கிக் கொண்டன. ஆனால் இந்தியா மட்டும் ஈரானுக்கு எதிராக வாக்களித்தது. இந்தியா மறுபடியும் 2006 பிப்ரவரியிலும் ஈரானுக்கு எதிராக வாக்களித்தது.
குழாய்வழி எரிவாயுவுக்கும் முடிவு
அடுத்த இலக்கு, ஈரானிலிருந்து பாகிஸ் தான் வழியாக இந்தியாவுக்கு எரிவாயு கொண்டு வருவதாகும். ஈரானுடனான குழாய் வழி எரிவாயு கொண்டுவரும் திட்டத்தைத் தொடர வேண்டாம் என்று அமெரிக்கா, இந் தியாவைப் பலமுறை எச்சரித்துள்ளது. இத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக கைவிட்டு விட்டதாக இந்தியா இன்னமும் தெரிவிக்க வில்லை. ஈராண்டுகளுக்கும் மேலாகக் காத் திருந்த பின் இத்திட்டத்தைத் தொடர்வது என்று ஈரானும், பாகிஸ்தானும் முடிவு செய் துள்ளன. ஈரான் தற்போது பாகிஸ்தான் எல்லை வரை குழாய்களைப் பதித்திருக் கிறது. அமெரிக்காவின் கட்டளைக்கிணங்க இந்தியா தற்போது துருக்மேனிஸ்தான் - ஆப் கானிஸ்தான் - பாகிஸ்தான் - இந்தியா குழாய் வழித் திட்டத்தை மேற்கொள்ளத் தீர்மானித் திருக்கிறது. சர்வதேச அணுசக்தி முகமை யில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித் ததன் மூலம், ஈரானிடமிருந்து திரவ இயற்கை எரிவாயு வாங்குவதற்கான 25 ஆண்டுகால ஒப்பந்தம் காலாவதியாகிறது. இந்தியா, ஈரா னுடன் மேற்கொண்டிருந்த வணிகரீதியான திட்டங்கள் அனைத்தும் படிப்படியாகக் கை விடப்படுகின்றன. அமெரிக்காவின் மிரட்டல் காரணமாக ரிலையன்ஸ், ஈரானுக்கு 280 மில்லியன் டாலர் மதிப்புள்ள கேசோலைன் ஏற்றுமதிகளை நிறுத்திவிட்டது.
இறுதியாக ஈரானுடனான மிகப்பெரிய வர்த்தகமான எண்ணெய் இறக்குமதியும் முடிவுக்கு வரும் நிலைக்கு வந்துள்ளது.
அமெரிக்காவிடம் கெஞ்சல்
சென்ற வாரம் அமெரிக்க அயல்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் இந்தியாவிற்கு வந்ததை அடுத்து ஒரு விநோதமான செய்தி ஊடகங்களில் காணப்பட்டது. கிளிண்ட னுடன் சென்னைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பாக கடந்த ஏழு மாதங் களாக நிலுவையில் உள்ள பணம் செலுத்தும் பிரச்சனைக்கு ஒரு தீர்வு “கண்ணில் தெரி வதாக” கூறியதாக ஊடகங்களில் காணப்படு கின்றன. இப்பிரச்சனை தொடர்பாக அமெரிக் கக் கருவூல அதிகாரிகள் இந்திய அதிகாரி களுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார். இதிலிருந்து, இப்பிரச்ச னைக்குத் தீர்வுகாண இந்தியா, தன்னுடைய பெரிய அண்ணனிடம் அணுகியிருப்பது வெளிப்பட்டிருக்கிறது.
இவ்வாறு மேற்கு ஆசியாவில் தன் மேலா திக்கத்தை நிறுவுவதற்காகவும் ஈரானைத் தனிமைப்படுத்துவதற்காகவும் அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந் தியா தனக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியைத் தியாகம் செய்திருக்கிறது. இன்றும் கூட அமெ ரிக்காவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள் ஈரானி டமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர நடவடிக்கைகள் மேற்கொண்டிருக் கின்றன. அவ்வாறு இறக்குமதி செய்வதற் கான பணத்தை எங்ஙனம் கொடுப்பது என்று பரிசீலித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியா தன் நாட்டின் நலன்களுக்கு விரோத மாக அமெரிக்காவின் கட்டளைகளுக்கு ஒத் துப்போவது அதிர்ச்சி அளிக்கிறது. ஈரானுடன் எண்ணெய்த் துறையில் புதிய ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருக்கும் நாடுகளில் நேட்டோ வில் அங்கம் வகிக்கும் துருக்கியும் ஒன்று. சீனாவும் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்கு மதி செய்திட முன்வந்திருக்கிறது.
இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந் தத்தில் காணப்படும் நிபந்தனைகளுக்கு உட் பட்டே மன்மோகன் சிங் அரசாங்கம் அனைத் தையும் செய்து கொண்டிருக்கிறது. ஹைடு சட்டத்தின்படி அமெரிக்க ஜனாதிபதி அமெ ரிக்க காங்கிரசில் ஈரானைத் தனிமைப்படுத் திட அமெரிக்கா மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியாவும் முழு மையாக ஒத்துப்போவதாக சான்றளித்திட வேண்டும். அவ்வாறு சான்றளிப்பதற்கு ஏது வாகவே இந்தியா நடந்துகொண்டு வருகிறது.
இவ்வாறு மிகவும் கேவலமான முறை யில் அமெரிக்காவின் அடிமையாக மாறிப்போ னதை அடுத்து நாட்டின் நலன்களுக்கு ஏற் பட்டுள்ள இழப்புகளையும் நாட்டின் சுயமரியா தையையும் எப்படித் திரும்பப் பெறப்போகி றோம் என்பது தான் தெரியவில்லை.
தமிழில் : ச.வீரமணி
’ஒரே இரவில் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து வரும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் ஆசிய சந்தைகளில் கச்சா எண்ணை விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. நியூயார்க்கின் செப்டம்பர் மாத டெலிவரி கணக்கின்படி கச்சா எண்ணை பேரல் ஒன்றின் விலை 92 சதவீதம் சரிந்து 85.71 அமெரிக்க டாலர்களாக உள்ளது. இதே போன்று பிரன்ட் நார்த் ஸீ பகுதி செப்டம்பர் மாத டெலிவரி கணக்கின்படி கச்சா எண்ணை விலை 13 சதவீதம் சரிந்து 107.12 டாலர்களாக உள்ளது. உலக அளவில் எண்ணை விலை உயர்ந் த உடனே விலையை உயர்த்தும் நமது இந்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்குமா?
_____________________________________________________________________________________________
தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர். யின் கிலக் சின் அவட்ரா
|
|