நிர்வாக திறமையற்றவர்.
உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேலான நாடுகள் கொரோனா வைரஸின் தாக்கத்தால் சிக்கிச் சின்னாபின்னமாகி வருகின்றன. அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. தொடக்கத்தில் கொத்துக்கொத்தாக உயிர் பலிகளை கொண்டிருந்த ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளே தற்போது 3 மாத முழு ஊரடங்குக்கு பிறகு மெல்ல மீண்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் நான்கு கட்ட ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்ட போதும், கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக அதிகப்படியான கொரோனா சோதனைகளை மேற்கொள்ள அரசு தவறிவிட்டது என்றே பல தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. ஆகவே இப்படியான இக்கட்டான சூழல் நிலவும் வேளையில் மக்களை வீட்டிலேயே இருத்தி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு தவறிவிட்டது எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. முன்னறிவிப்பில்லாமல், திடீரென மார்ச் 24ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வேலையின்றி, பசிப்பிணியால் வாடிய புலம்பெயர்ந்த தொ