கன்னத்திலே வை!

 R-ஓட்டர்ஸ் என்கிற தமிழ்நாடு தன்னார்வ அமைப்பு தமிழ்நாட்டில் தொகுதிவாரியாக பெருவாரியான மக்களை சந்தித்து நடத்திய 2026 தேர்தலுக்கான நடுநிலையான கருத்துக்கணிப்பில் கிடைத்த இறுதி நிலவரம்... 

திமுக கூட்டணி பெறும் 

மொத்த வாக்குகள்................ 62 % 

அதிமுக கூட்டணி 

பாஜகவுடன் இருந்தால்......... 24 % 

அதிமுக கூட்டணி 

தவெகவுடன் இருந்தால்........ 22 % 

அதிமுக- பாஜக- தவெக 

இணைந்து நின்றால்.............. 27 % 

அதிமுக- பாஜக- தவெக- 

நாம் தமிழர் சேர்ந்தால்........... 31 %

நாம் தமிழர் 

தனித்து நின்றால்...................  4 % 

நாம் தமிழர் 

தவெகவுடன் சேர்ந்தால்.........  11 % 

யாருக்கும் போடாமல் 

நோட்டாவுக்கு போடுபவர்கள்..  4 - 6% 

பாஜக தனித்து நின்றால் நோட்டாவோடு கடும் போட்டியாக இருக்கும். 

அதிமுக தனித்து நின்றால் இரண்டாம் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.

கன்னத்திலே  வை!

மராட்டிய மாநிலத்தின் முக்கியமான அமைப்புகளில் ஒன்று நவநிர்மான் சேனா. அதன் தலைவராக இருப்பவர் ராஜ்தாக்கரே. சிவசேனாவை நிறுவிய பால்தாக்கரேவின் உறவினர். 

சொந்தக் காரணங்கள் மற்றும் உள்கட்சிப் பிரிச்சினைகளால் அவர் தனி அமைப்பை நடத்தி வருகிறார்.

மஹாராஷ்டிராவில் மராட்டிய மொழிக்கும், மராட்டிய மக்களுக்கும் முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதுதான் அந்த அமைப்பின் முதன்மை நோக்கமாகும். சிவசேனாவை பால்தாக்கரே தொடங்கியதும் இந்த அடிப்படையில்தான்.

மகாராஷ்ட்ராவின் மாநில மொழி என்கிற மராட்டியம் என்கிற போது அதுதானே முதன்மையாக இருக்கும்? இதற்கு எதற்கு ஓர் அமைப்பு என்று நினைக்கலாம். மகாராஷ்ட்ராவின் தலைநகரான மும்பை இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமாகத் திகழ்கிறது. 

மகாராஷ்ட்ராவில் மற்றும் சில தொழில் நகரங்களும் உள்ளன. இந்த நகரங்களிலும் உட்புறங்களிலும் இந்தி மொழியே ஊடுருவி இருக்கிறது. மராட்டியத்தின் பயன்பாடு குறைக்கப்பட்டுவிட்டது. எடுத்துக்காட்டாக, கோலிவுட் என்று நாம் சொல்லும் கோடம்பாக்கம் பகுதி தமிழ் சினிமாவுக்கான இடம். 

அதுபோல பம்பாயை (மும்பை) பாலிவுட் என்று சொல்கிறார்கள். பாலிவுட் என்பது இந்திப் படங்களைத் தயாரிக்கும் களமாக இருக்கிறது. இந்தி நடிகர்கள், நடிகைகளைத்தான் இந்தியா முழுவதும் பாலிவுட் நட்சத்திரங்கள் என்கிறார்கள். அப்படியென்றால் மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பையில் மராட்டிய சினிமாக்களின் நிலை என்ன?

இந்தக் கேள்வியைத்தான் மராட்டிய அறிஞர்களும், கலைஞர்களும் நீண்டகாலமாக கேட்டு வருகிறார்கள். அரசியல் செல்வாக்கு இல்லாமல் இத்தகைய கோரிக்கைகள் பெரிய அளவில் கவனம் பெறுவதில்லை.

 சினிமா, கலை, வணிகம் என எல்லா நிலைகளிலும் மஹாராஷ்ட்ராவில் மராட்டிய மொழியை விழுங்கி, இந்தி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு தனியார் வணிக நிறுவனத்தில் பொருள் வாங்கச் சென்ற மராட்டியர் தனது தாய்மொழியில் பேசியபோது, பொருளை விற்பனை செய்த இந்திக்காரர், “இந்தியில் பேசு” என அதட்டியிருக்கிறார்.

 அவருக்கு மராத்தி தெரியாது. மராத்திய மாநிலத்தில் மராத்தியில் பேசினால், இந்தியில் பேசு என்று அதட்டுவாயா என்று வாடிக்கையாளர் கேட்டிருக்கிறார். வார்த்தை தடித்து, அவரை அறைந்துவிட்டார்.

இதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ள நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே, ‘மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மாராத்திய மொழியை பேச மறுத்தால் அவர்களின் கன்னத்தில் அறையுங்கள். இந்தி ஆதிக்கம் இங்கே அதிகமாக இருக்கிறது.

 தமிழ்நாட்டு மக்கள் இந்தியை தைரியமாக எதிர்க்கிறார்கள். கேரள மாநில மக்களும் இந்திக்கு இடம் தரவில்லை” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

 கன்னத்தில் அறைவது என்பது வன்முறை. அதை ஆதரிக்க முடியாது. அதே நேரத்தில், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் இந்தி மொழி ஆதிக்கம் செலுத்தி, மராத்தி மொழியின் கன்னத்தில் காலம் காலமாக அறைந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

அதனால்தான் அண்மையில் அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. கூட்டணியின் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், மராட்டிய மாநிலத்தின் அரசு அலுவலகங்களில் மராட்டிய மொழியைத்தான் முதன்மையாகப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்ததுடன், அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர் கீபோர்டுகள் மராட்டிய மொழியில் இருக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

 மேகாலயா மாநிலத்திலும் பா.ஜ.க. ஆதரவுடனான கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது.

அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்து அதன்பின் தனி மாநிலமானது மேகாலயா. இதன் மாநில அரசு மொழி, ஆங்கிலம். அத்துடன் உள்ளூர் மொழிகளான காசி, கரோ ஆகியவை இணை மொழிகளாக உள்ளன.

 அந்த மாநிலத்தின் கவர்னர் ஒரு நிகழ்வில் பேசும்போது, மேகாலயா மக்கள் இந்தி மொழிக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று பேசியதற்கு அந்த மாநில அரசிடமிருந்து எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது. “அசாம் மொழியின் ஆதிக்கத்தை எதிர்த்துதான் மேகாலயா என்ற மாநிலம் உருவானது.

 எங்கள் உள்ளூர் மொழிகளைக் காத்திட இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறோம். இதில் இந்திக்கு முக்கியத்துவம் தருவதை ஏற்க முடியாது” என கவர்னருக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

மராட்டியம் மேற்கில் உள்ளது. மேகாலயா வடகிழக்கில் உள்ளது. இரண்டு திசைகளிலும் இந்தியை முன்னிறுத்துவதற்குத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்தியாவின் தெற்குத் திசைதான் இந்தி ஆதிக்கத்தின் விளைவால் தாய்மொழிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, தங்கள் மொழிகளைத்தற்காத்துக்கொண்டிருக்கின்றன. 

அதிலும், தமிழ்நாடுதான் முதன்மையான மாநிலம். அதன் வழியை இன்று மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.

மீ்ண்டும்  பாண்டியன்!

கடந்த 10 ஆண்டுகளாக ஒடிசா அரசியலில் கோலோச்சி வந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான வி.கே பாண்டியனை பாஜக திட்டமிட்டு வீழ்த்தியதாக கூறப்பட்ட நிலையில், பாஜகவிற்கு எதிரான அடுத்த ஆட்டத்திற்கு அவர் தனது மனைவியுடன் தயாராகி வருவதாக ஒடிசா அரசியலில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.


ஒடிசா அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வந்த பாண்டியன் தமிழ் நாட்டில் உள்ள மேலூரில் பிறந்து வளர்ந்தவர்.


IAS- அதிகாரியான இவர் தன்னுடைய பணி காரணமாக ஒடிசாவிற்கு சென்றார். தமிழனாக பிறந்து வளர்ந்தலும் ஒடிசாவின் மீதான இவரது அன்பிற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று தன்னுடன் சேர்ந்து படித்த ஒடிசா பெண்ணான சுஜாதா உடனான காதல்...மற்றொன்று IAS அதிகாரியாக ஒடிசா சென்ற பாண்டியன் மீது அம்மக்கள் காட்டிய அன்பு தான்.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஒடிசா பிரிவு IAS அதிகாரியாக பொறுப்பேற்ற வி.கே பாண்டியன் ஒடிசாவின் மருமகனாகவும் ஆனார்.


இவரது செயல்பாடுகள் மக்களிடம் மட்டுமின்று அப்போது ஒடிசாவில் ஆட்சியில் இருந்த  நவீன் பட்நாயக்கையும் பெரிதும் ஈர்த்தது. தன்னுடைய அசாத்திய திறமையால் மிக விரைவில் ஒடிசா முதலமைச்சரின் தனிச்செயலாளராக உயர்ந்தார் பாண்டியன்.

அதோடு நவீன் பட்நாயக் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு பின் நின்ற இவர் மீது நவீன் பட்நாயக்கிற்கு நம்பிக்கை ஏற்பட, மறுபுறம் வி.கே பாண்டியனின் மனைவி சுஜாதாவும் மக்களிடம் நல்ல பெயரை பெற்றதால் அரசின் முக்கிய துறைகளில் இந்த தம்பதியை அமர்த்தினார் நவீன் பட்நாயக்.


மறுபுறம் ஒடிசாவின் சூப்பர் முதல்வர் , சோடோ சிஎம் என்றெல்லம் எதிர்கட்சிகள் பாண்டியன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கின. தொடர்ந்து ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளத்தின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியும் எழுந்தது.


தனக்கு பிறகு கட்சியின் தலைவராக சுஜாதா பாண்டியனை நியமிக்க அவர் விரும்பினார் என்றும் கூறப்பட்டது.  கட்சிக்குள் பாண்டியனையே அடுத்த தலைவரக அறிவிக்கலாம் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.


பாண்டியனை ஒரு தமிழனாக பார்க்காமல் தங்களது மாநிலத்தின் மருமகனாகவே பார்க்க ஆரம்பித்தனர் ஒடிசா மக்கள்.

பாண்டியனின் மனைவி சுஜாதா ஒடிசா பெண்ணாக இருந்தாலும் பாண்டியன் மீது ஒடிசா மக்கள் வைத்திருக்கும் அன்பை பார்த்து பாண்டியனையே களத்தில் இறக்கி விடலாம் என்று முடிவெடுத்தார் பட் நாயக்.


இதனைத் தொடர்ந்து அரசுப் பணியை ராஜினாமா செய்து விட்டு பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் பாண்டியன்..2024 ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முன்னொடுப்புகளை பாண்டியனே எடுக்க மறுபுறம் ஒரு தமிழனை ஒடிசாவின் முதலமைச்சர் ஆக்க போகிறீர்களா என்ற விசம பிரச்சாரத்தை கையில் எடுத்தது பாஜக.

இதனை வைத்த பட்நாயக்கனின் ஆட்சியியும் வீழ்த்தியது.


பிரதமர் மோடி , அமித்ஷா உள்ளிட்டோர் ஒடிசா ஜெகன்னாதர் கோவில் சாவி தமிழ் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது என்று பிரச்சாரம் செய்தார்கள்.. பின்னர் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார் பாண்டியன்.

அந்த சமயத்தில் அவரது மனைவி சுஜாதாவும் 6 மாத விடுமுறையில் சென்றார். இச்சூழலில் தான் சுஜாதா விருப்ப ஓய்வை கேட்டுப்பெற்றுள்ளார். தற்போது ஒடிசா அரசியலில் இது தான் பேசு பொருளாகி உள்ளது.


கொஞ்ச நாட்கள் கழித்து பிஜு ஜனதா தளத்தில் சுஜாதா இணைவர் என்று கூறப்படுகிறது. இச்சூழலில் சுஜாதவை முன்னிலை படுத்தியும் அவரது கணவர் பாண்டியனை பின்னணியில் வைத்து நவீன் பட் நாயக் காய் நகர்த்துவார் என்றும் கூறப்படுகிறது.


தற்போது பாஜகவின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் இதையே காரணமாக வைத்து பாண்டியன் சுஜாதா தம்பதியை பிஜு ஜனதா தளத்தின் அரசியல் வாரிசாக நவீன் பட்நாயக் விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?