செங்கொடி மாநாடு

 தென் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக திகழும் மதுரையில், அக் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு இன்று தொடங்கியது. 

இதில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தலைவர்களும், பிரதிநிதிகளும் மதுரையில் நேற்று முதலே குவிந்தனர். மதுரை மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் செங்கொடிகள் பறக்க விடப்பட்டு செங்கொடிகள் மற்றும் தோரணங்களாக காட்சியளிக்கின்றன.

இந்த மாநாடு இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது. இதற்கு முன்னர் கடந்த 1953-ம் ஆண்டு மற்றும் 1972-ம் ஆண்டுகளில் மதுரையில் அகில இந்திய மாநாடு நடத்தப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாநாடு என்பதால், அகில இந்திய அளவில் கட்சியின் பிரதிநிதிகள், முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

கேரள முதல்வர் பினராயி விஜயன், கட்சியின் மூத்த தலைவர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கீழ்வெண்மணியில் இருந்து கொண்டு வரப்பட்ட மாநாட்டுக் கொடியை ஏ.கே.பத்மநாபனிடம் வழங்கிய உ.வாசுகி

மாநாட்டின் தொடக்கமாக மேளதாள வாத்தியங்கள் முழங்க கட்சி கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து வரலாற்று கண்காட்சி, புத்தக கண்காட்சி, கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கட்சியின் தியாகிகளை கவுரவிக்கும் வகையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி வழங்கினார். அதனை கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஏ.கே.பத்மநாபன் கொடியை பெற்றுக் கொள்ள, மூத்த தலைவர் பிமான் பாசு அதனை ஏற்றி வைத்தார். பின்னர் பிரதிநிதிகள் மாநாடு, பொது மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டு கொடியை ஏற்றி வைத்த பிமன் பாசு

மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத்
மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் (ETV Bharat Tamil Nadu)

தமிழ்நாட்டில் நடைபெற்ற 5 மாநாடுகளில் மூன்றை நடத்திய பெருமை மதுரைக்கு உண்டு. 1953 இல் பிரிக்கப்படாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது மாநாடு மதுரையில் பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்டது. பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஹாரி பொலிட் மாநாட்டில் கலந்து கொண்டார்.

 கட்சியின் 9-வது மாநாடு 1972-ல் மதுரையில் நடைபெற்றது. நாடு எதேச்சாதிகாரத்தை நோக்கி வளர்ந்து வரும் போக்கை சரியாக எச்சரித்தது. எங்கள் கட்சி கணித்தபடி, '1975ல் அவசரநிலையை காங்கிரஸ் பிரகடனம் செய்தது.


மனிதாபிமானமற்ற நிலப்பிரபுத்துவம் மற்றும் கொடூரமான சாதிவெறிக்கு எதிரான போராட்டத்தின் உச்சக்கட்டமாக, 1968-ல் கீழ் வெண்மணி கிராமத்தில் 44 விவசாயத் தொழிலாளர்களின் விலைமதிப்பற்ற உயிர்கள் தீயில் எரிக்கப்பட்டன. மூன்று வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை ஈவிரக்கமின்றி எரிக்கப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 20 பேர் பெண்கள். வெண்மணியில் வர்க்க விரோதிகள் மூட்டிய நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் பணி நேரத்தை உயர்த்தும் மசோதாவை கொண்டு வந்த போது, இந்த முயற்சியை முறியடிக்க சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் போராடி எங்கள் கட்சி பெரும் பங்காற்றியது.

 வாச்சாத்தி கிராமம் முழுவதையும் சூறையாடி 18 பெண்களை பலாத்காரம் செய்யப்பட்டனர். நீதிமன்றத்திலும், வீதியிலும் போராடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனையைப் பெற்றுத் தந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

மாநாட்டில் பேசிய மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத்
மாநாட்டில் பேசிய   பிருந்தா காரத்)

சாதி வன்கொடுமைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தியது. மார்க்சிஸ்ட் கட்சி வலுவான மற்றும் துடிப்பான 'தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை' நிறுவியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த இயக்கம் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் களத்தில் உள்ளது மற்றும் சாதி வன்முறைக்கு எதிராக துணிச்சலான போராட்டத்தை நடத்தி வருகிறது.

சுதந்திரப் போராட்டத்தின் போதும், இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்டுகள் தான். ஆங்கிலேயர் ஆட்சியின் போது மெட்ராஸ் பிரசிடென்சி தற்போதைய கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் பகுதிகளைக் கொண்டிருந்தது. முந்தைய சென்னை சட்டசபையில், மொழிவாரி மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கம்யூனிஸ்டுகள் எழுப்பினர். சட்டசபையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அந்தந்த தாய்மொழியில் பேசுவது வழக்கம். பி.ராமமூர்த்தி ராஜ்யசபாவில் மெட்ராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் மாற்ற தீர்மானம் கொண்டு வந்தார்.

மார்க்சிஸ்ட் அகில இந்திய மாநாட்டில் பேசிய திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார்
மார்க்சிஸ்ட் அகில இந்திய மாநாட்டில் பேசிய திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் 

சிபிஐ (எம்) கட்சியின் கொள்கை பிராந்திய மொழிகளின் வளர்ச்சியே ஆகும். நமது அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் இந்தியாவின் அலுவல் மொழிகளாக ஆக்கப்பட வேண்டும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளில் நிர்வாகம் நடைபெற வேண்டும். மொழி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தமிழகம் முன்னணியில் உள்ளது.

சுதந்திரப் போராட்டத்தின் போது தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் கைது செய்யப்பட்டனர். கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஜானகி அம்மாள் இந்தியாவின் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட முதல் பெண்மணி. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்ஸி ராணி படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய கேப்டன் லட்சுமியும் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

நாட்டில் சிறுபான்மை சமூகங்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் உள்ள மாநில ஆளுநர்கள் மத்திய அரசின் ஏஜெண்டுகள் போல் செயல்பட்டு மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் கழுத்தை நெறிக்கின்றனர். கல்வி உட்பட மாநில அரசுகளின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்படுகின்றன. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் பல மாநிலங்களுக்கு அநீதி இழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பொது மாநாட்டில் உரையாற்றிய கே.பாலகிருஷ்ணன்
 கே.பாலகிருஷ்ணன்

இந்த 24 வது கட்சி மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் பல்வேறு தலைப்புகளில் ஐம்பது கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, 'மாநிலங்களின் உரிமைகள் பாதுகாப்பு' என்ற தலைப்பில், பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்கும் சிறப்பு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்தவும், இடதுசாரி சக்திகளை ஒன்றிணைக்கவும் இந்த மாநாடு வழி காட்டும் என்று நம்புகிறோம்" என்று கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

எம்புரான்

திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அரசியல் களத்தில் சர்ச்சைகளையும் உருவாக்குவது இன்று நேற்று உருவானதல்ல. சினிமா என்பது மக்களிடம் போய்ச் சேரத் தொடங்கிய காலத்திலிருந்தே இது தொடர்கிறது. கல்கியின் தியாகபூமிக்கும், கலைஞரின் பராசக்திக்கும் தடைவிதிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பைத் தொடர்ந்து அந்தப் படங்கள் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்டன.

ரிச்சர்ட் அட்டன்பரோ எடுத்த காந்தி திரைப்படத்தில் டாக்டர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்களின் பங்களிப்புகள் இடம்பெறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. மும்பையில் ஒரு தியேட்டரில் காந்தி படம் ஓடிக்கொண்டிருந்தபோது, பாம்புகளை பிடித்து உள்ளேவிட்டுவிட்டதாகவும், ரசிகர்கள் அலறியடித்து ஓடியதாகவும் பரபரப்பு செய்திகளும் வந்தன. 

இவையெல்லாம் படத்தின் மீதான மதிப்பீடுகள். சில படங்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்களால் பெரும் நெருக்கடிகள் உருவாக்கப்படுவது உண்டு.

எமர்ஜென்சி காலத்தில் கிசா குர்சிக்கா இந்தப் படத்தின் படச்சுருளை ஆளுங்கட்சியினர் எரித்து படம் வெளிவர விடாமல் செய்தனர். 

விஜய் நடித்த தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வரிகள் விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தால், ஆட்சியாளர்களின் கோபத்திற்குள்ளாகி, தன் அப்பாவுடன் நீலகிரி மலையேறி, கோடநாட்டில் காத்திருந்து, அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் தயவைப் பெற்று படத்தை வெளியிட வேண்டியிருந்தது. 

சர்க்கார் படம் உள்பட விஜய் நடித்த சில படங்கள் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றன.

 புகழ் பெற்ற டைரக்டரான மணிரத்னம் தனது பம்பாய் படத்தை சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவிடம் தனிப்பட்ட முறையில் திரையிட்டு அவரது அனுமதி கிடைத்தபிறகே வெளியிட்டார். இருவர் படத்தை கலைஞரிடம் திரையிட்டுக் காட்டிய பிறகே ரிலீஸ் செய்தார். 

குரு படத்தை தொழிலதிபர் அம்பானியிடம் திரையிட்டுக் காட்டினார். அதிகார சிக்கல்கள் ஏற்படும்போதும், அதிகார சிக்கல்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் இருப்பதற்கும் படக்குழுவைச் சார்ந்தவர்கள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.

அண்மைக்காலமாகத் திரைப்படங்கள் மீதான மதவெறிப் பார்வையும் அதன் பின்னணியில் உள்ள அரசியலும் சினிமாவுலகத்தின் மீது மோசமான தாக்கங்களை உருவாக்கி வருகின்றன. மோகன்லால் நடித்த லூசிஃபர் படத்தின் இரண்டாவது பாகமாகக் கருதப்படும் எம்புரான் படம் அரசியல் நிகழ்வுகளை எதிரொலிக்கும் நிலையில், அதற்கு எதிர்ப்புகளும் பலமாகியுள்ளன.

 பிரிதிவிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை அவரது மனைவி தயாரித்திருக்கிறார். குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு கொடூரம், அதனைத் தொடர்ந்து முஸ்லிம் மக்களை குறிவைத்து, அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட கொடூரக் கொலைகள், பில்கிஸ் பானு என்ற பெண்மணி பாலியல் கொடூரத்திற்குள்ளாகி, தன் பச்சிளம் குழந்தையையும் பறிகொடுத்த கொடுமை .

இவை காட்சிப்போக்கில் அமைக்கப்பட்டிருப்பதும், இதன் பின்னணியில் இருந்த அமைப்புகளை அடையாளப்படுத்தும் வகையிலான கதாபாத்திர பெயர்கள் இவற்றுக்கு எதிராக கேரளாவில் உள்ள இந்துத்வா அமைப்புகள் போராட்டங்களை நடத்த, பா.ஜ.க.வும் இந்த எதிர்ப்பில் பங்கெடுத்தது.

கேரள மாநில ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினரயி விஜயன், எதிர்க்கட்சியான காங்கிரசின் தலைவர்கள் எம்புரான் படக்குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களின் கருத்துரிமைக்காக குரல் கொடுத்தபோதும், பா.ஜ.க. தரப்பின் எதிர்ப்பு தொடர்ந்ததால், படக்குழுவினர் தாமாக முன்வந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் வகையில் 20க்கும் மேற்பட்ட வெட்டுகளுடன் படத்தை வெளியிட முன்வந்தனர். 

படத்தின் கதாநாயகனான மோகன்லால், இந்தக் காட்சிகளுக்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.

 இதை பா.ஜ.க. மற்றும் இந்துத்வா அமைப்புகள் தங்களின் வெற்றியாகக் கொண்டாடுகின்றன. எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்தும் தவறான சித்தரிப்புகளுடனான காட்சிகள் இருப்பதை தமிழ்நாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஒரு படத்தின் காட்சிகளில் சித்தரிக்கப்படும் நிகழ்வுகள் ஒரு தரப்புக்கு விருப்பமானதாகவும், மற்றொரு தரப்பின் பார்வைக்கு எதிரானதாகவும் இருக்கும். கருத்துரிமை எந்தளவுக்கு படைப்பாளருக்கு இருக்கிறதோ, அதே ஜனநாயக வழியில் எதிர்ப்புரிமையையும் விமர்சனமாக வைக்க உரிமை உண்டு. 

ஆனால், இங்கே அதிகாரத்தின் மூலமும் வன்முறை மூலமும் கலைப் படைப்புகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

கேரள முஸ்லிம்களை சர்வதேச தீவிரவாதிகளாக சித்தரித்த கேரளா ஸ்டோரியும், காஷ்மீர் நிலவரங்களை ஒருதலைபட்சமாக சித்தரித்த காஷ்மீர் ஃபைல்ஸ் படமும் பிரதமர் தொடங்கி மத்திய ஆட்சியாளர்களின் வெளிப்படையான ஆதரவுடனும், அவர்களே பிராண்ட் அம்பாசிடர்களாக இருந்து புரமோட் செய்யும் அளவிலும், வரிச்சலுகையுடன் திரையிடப்பட்டதை மறக்க முடியாது.

 மகாராஷ்ட்டிரா மாநிலம் நாக்பூரில் அண்மையில் நடந்த கலவரங்களுக்கும் வன்முறைகளுக்கும் பா.ஜ.க.வினரின் பெரும் ஆதரவுடன் வெளியான ‘சாவா’ என்ற படத்தில் ஔரங்கசீப் மன்னர் பற்றிய சித்தரிப்புகளே காரணமாக அமைந்தன.

காஷ்மீர் முதல் கேரளா வரை எந்தப் படம் ஓடவேண்டும், எது ஓடக்கூடாது என்பது ரசிகர்களின் கைகளில் இல்லை. மத்திய ஆட்சியாளர்களிடமும் அவர்களின் கட்சிக்காரர்களிடமும் உள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?