மீன்பிடிக்க தடை: ?

 பிரதமர் வருகை - !பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறை சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சின்னம், மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக உட்கட்சி விவகாரம் - ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்கு உரிய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராக வேண்டிய  சூழல் உள்ளதால், காலக்கெடுவை நிர்ணயிக்க வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,


ஏப்ரல் மாதம் அனைத்து வங்கிகளுக்கும் இன்று முதல் ஏப்ரல்-6 ஞாயிறு, ஏப்ரல்-10 மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல்-12 இரண்டாம் சனி, ஏப்ரல்-13 ஞாயிறு, ஏப்ரல்-14 தமிழ் புத்தாண்டு, ஏப்ரல்-18 புனித வெள்ளி, ஏப்ரல்-20 ஞாயிறு, ஏப்ரல்-26– நான்காம் சனி, ஏப்ரல்-27 ஞாயிறு என மொத்தம் 9 நாட்கள் விடுமுறை ஆகும்.

எனவே பொதுமக்கள் தங்கள் வங்கி சேவைகளை இந்த விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. ஆன்லைன் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும்.

  

வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.4% வரை சரிந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிந்து 76,295 புள்ளிகளானது.

வர்த்தக தொடக்கத்தில் 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்து 75,807 புள்ளிக்கு சென்ற சென்செக்ஸ் உடனே மீண்டது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 17 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்து 23,250 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.


தமிழ்நாட்டில் மேலும் 6 மண்சார் உணவுப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

செட்டிக்குளம் சின்ன வெங்காயம், பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி ஆகிய 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.

ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை தனித் தனியே சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


மாநிலங்களவையில் வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் தி.மு.க எம்.பி. திருச்சி சிவா பேசியதாவது:  “அப்துல் கலாம் போல பல இஸ்லாமியர்கள் இந்திய நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்;

இங்கே இப்போதுகூட, அப்துல்லா என் தம்பி, நான் அவர் அண்ணன்; தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் போது இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்குவார்கள்” என்று கூறினார்.


மாநிலங்களவையில் வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் தி.மு.க எம்.பி. திருச்சி சிவா சிவா பேசியதாவது: “வக்பு விவகாரங்களை தங்கள் அதிகார வரம்புக்குள் கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது.

இந்த மசோதா இஸ்லாமியர் மனதில் அச்சத்தை உண்டாக்கும். இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும். ஜின்னா இஸ்லாமிய நாட்டை உருவாக்கியபோது இந்திய இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் செல்லவில்லை. எதிர்க்கட்சிகள் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் மத நல்லிணக்கம் சிறப்பாக உள்ளது. ஹரியானாவில் ரமலான் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஹோலி பண்டிகை சமயத்தில் ரமலான் கொண்டாட வெளியே வர வேண்டாம் என உத்தரப் பிரதேசத்தில் பேசப்படுகிறது” என்று பேசினார்


டிரம்பின் புதிய பரஸ்பர வரி தொடர்பாக பிரதமரின் முதன்மைச் செயலாளர் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிதி ஆயோக், வர்த்தகத் துறை மற்றும் வெளியுறவு துறையின் மூத்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

27% பரஸ்பர வரியை அமெரிக்கா உயர்த்தி இருப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள், தாக்கங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது


இந்தியாவுக்கு சொந்தமான 4,000 சதுர கி.மீ நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. சீனா சில நேரங்களில் சீன தூதுவருடன் நமது வெளியுறவு அமைச்சர் கேக் வெட்டிக் கொண்டிருக்கிறார்.

சீனா ஆக்கிரமித்துள்ள நிலத்தை நாம் திரும்ப பெற வேண்டும். அமெரிக்காவின் 26% வரி உயர்வு, இந்திய பொருளாதாரத்தை சீரழிக்க போகிறது. அமெரிக்கா 26% வரி உயர்வு குறித்து மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என ராகுல்காந்தி கூறியுள்ளார்

நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறாமல் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட போது அப்போதைய மத்திய அரசு மாநில அரசிடம் ஆலோசிக்கவில்லை.

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் கச்சத்தீவு வழங்கப்பட்டது சட்ட விரோதமானது. இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை விரைவாக மீட்டெடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்தியாவின் எந்த ஒரு இடத்தையும் வழங்க முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்


சிவாஜி இல்லம் ஜப்தி வழக்கில், ராம்குமார் பெற்ற மூன்று கோடி ரூபாய் கடனுக்காக எனக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது என நடிகர் பிரபு தரப்பில் கூறப்பட்டது.

அப்போது ராம்குமார் சகோதரர் தானே? அந்த கடனை நீங்கள் செலுத்தி விட்டு பின்னர் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாமே? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது


நீதித்துறை மீதான நம்பிக்கையை நிலைநாட்ட, தங்கள் சொத்து விவரங்களை பொது வெளியில் பகிர உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு. டெல்லியில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையே நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து நீதிபதிகளும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து உச்சநீதிமன்ற இணையதளத்தில் சொத்து விவரங்கள் வெளியிடப்பட உள்ளன.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் சர்மா வீட்டில் கோடிக் கணக்கான பணம் சிக்கியது நாடு முழுவதும் அதிர்வலைகளை 



தமிழ்நாட்டில் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் புயல் கண்காணிப்பிற்கு 2 புதிய ரேடார்கள். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல். வானிலை முன்னெச்சரிக்கை துல்லியத்தை மேம்படுத்த ஏற்காடு, ராமநாதபுரத்தில் டாப்ளர் ரேடார்கள் நிறுவப்படும். ரூ.56 கோடி மதிப்பில் சி பேண்டு டாப்ளர் ரேடார்கள் நிறுவப்படும் என அறிவிப்பு


பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாடு கோரிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்துவார் என  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.


சென்னை திருவல்லிக்கேணி பிலால் ஹோட்டலில் உணவு சாப்பிட்டதால் இதுவரை 55 பேரில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடை உரிமையாளரின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


“வரலாற்றை மாற்றியமைத்த மாமேதை கார்ல் மார்க்ஸ்க்கு, சென்னையில் உருவச்சிலை அமைக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

பட்டுள்ளனர்.

மக்களவையில் நேற்று வக்ஃப் வாரிய மசோதா நிறைவேறிய நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 288 பேரும், எதிராக 232 எம்.பி.க்களும் வாக்கு செலுத்தியதால் மசோதா நிறைவேறியது.

  

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை 7-ம் தேதி வரை 11 செ.மீ. வரை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


அமெரிக்காவுக்கு 52% வரி விதிக்கும் இந்தியாவுக்கு பரஸ்பர வரியாக இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி விகிதத்தை 26%-ஆக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சீனாவுக்கு 34%, இலங்கைக்கு 44%, கம்போடியாவுக்கு 49%, வியட்நாமுக்கு 46% வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினமே அமெரிக்காவின் விடுதலை நாள் என்றும், அமெரிக்காவை விட பிற நாடுகள்தான் அதிகமான வரிகளை விதிக்கின்றன என்றும் டிரம்ப் பேசியுள்ளார்.

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?