70 முறை கொலை முயற்சி

கச்சத்தீவு மீட்பு.. இன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின்!







70 முறை கொலை முயற்சி

நித்யானந்தா உயிர் தியாகம் செய்து சமாதி அடைந்து விட்டதாக பரபரப்பு கிளம்பிய நிலையில், அவர் உயிரோடுதான் இருக்கிறார் என விளக்கமளித்துள்ளது கைலாசா.

சர்ச்சைகளுக்கு பெயர் போன நித்தியானந்தா,  இந்து தர்மத்தைக் காக்க உயிர்த் தியாகம் செய்ததாக, அவரின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ வெளியிட்டது பரபரப்பைக் கிளப்பியது.

அதோடு, அவருக்கு பிடதி, அகமதாபாத்  என இந்தியா முழுவதும் 41 இடங்களில் நித்தியானந்தாவுக்கு ஆசிரமங்கள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் என்றும், அவற்றின் அடுத்த வாரிசு யார் என்று விவாதங்கள் எழுந்தன.


அதேநேரம், பல்வேறு வழக்குகளில் சிக்கி தலைமறைவாகி உள்ள நித்தியானந்தா, போலி அடையாளம் மூலம் மீண்டும் இந்தியாவிற்குள் நுழையவே அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்புவதாகவும் கூறப்பட்டது.


இந்நிலையில் தான் நித்தியானந்தா உருவாக்கியதாக சொல்லப்படும் கைலாசா நாட்டின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் இருந்து ஒரு விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதில், “ இந்து மதத்தின் உச்சப் போதகர் நித்தியானந்தா (SPH) உயிர் தியாகம் செய்துவிட்டார் என்று பல இந்துத்துவ ஊடகங்கள் வேண்டுமென்றே, தீங்கிழைக்கும் விதமாகவும், குற்றவியல் ரீதியாகவும் கூறி வருகின்றன.

அவர் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிரோடு மற்றும் சுறுசுறுப்பாக இருக்கிறார் என்பதை கைலாசா அறிவிக்கிறது. மார்ச் 30, 2025 அன்று, நித்தியானந்தா உகாதி கொண்டாட்டங்களை அலங்கரித்து, அனைத்து பக்தர்கள், சீடர்கள் மற்றும் 2 பில்லியன் இந்து புலம்பெயர்ந்தோரை ஆசீர்வதித்த உரை இங்கே வழங்கப்பட்டுள்ளது.


அவரை இழிவுபடுத்தவும் அவதூறு செய்யவும் பரப்பப்படும் இந்த தீங்கிழைக்கும் அவதூறு பிரச்சாரத்தை கைலாசா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது.


இந்த பொய்யான தகவலானது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இந்து பக்தர்களின் மத உணர்வுகளை காயப்படுத்தியுள்ளன.


இந்த தவறான தகவலை ஒருங்கிணைந்த முறையில் வெளியிடுவது, அதன் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை அதிகரிக்க ஒரு வேண்டுமென்றே உத்தியைக் குறிக்கிறது. இந்து விரோத சக்திகளால் நித்தியானந்தா மீது 70 க்கும் மேற்பட்ட படுகொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. நேரடி வழிகளில் தோல்வியடைந்த அவர்கள், இப்போது தவறான தகவல் போரை நாடுகிறார்கள், நித்தியானந்தா தனது உடலை விட்டு வெளியேறிவிட்டதாக தீங்கிழைக்கும் வதந்திகளைப் பரப்ப இந்துத்துவ ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்து எதிர்ப்பு கூட்டாளியின் ஊடகப் பிரிவால் இந்தப் பொய்யை விரைவாகப் பெருக்கி கொண்டாடுவது அவர்களின் ஆழமான நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துகிறது” என கைலாசா டிவிட்டர் தளத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


அதோடு, “நான் உயிரோட இருக்கேனா? என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க” என்ற தலைப்பில் நித்தியானந்தா பேசுவது போன்ற வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.


அதில், அவர் இறந்துவிட்டதாக முன்பு ஒருமுறை செய்திகள் வெளியானபோது, நித்தியானந்தா கொடுத்த விளக்கம் இணைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் உகாதியின்போது உரையாற்றியதாகவும் நித்தியானந்தா பேசும் வீடியோ ஒன்று அந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், கைலாசா தரப்பில் யாரையும் தொடர்புகொள்ள முடியாததால், இந்த பதிவுகளின் உண்மைத்தன்மை குறித்து உறுதி செய்யமுடியவில்லை.

ஒரே நாள்.
ஒரே ஆணை!
பத்தாயிரம் பேர்கள் வேலை காலி
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல், நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்துவருகிறார் அதிபர் ட்ரம்ப். 
அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில், செயல்திறன் துறை என்ற புதிய துறையையே உருவாக்கிய அவர், அதற்கு தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார். அப்போது முதல், பல்வேறு துறைகளில் நடைபெற்றுவரும் குளறுபடிகளை சரி செய்வதுடன், செலவை குறைக்கும் நடவடிக்கைகளிலும் அந்த துறை தீவிரம் காட்டி வருகிறது.
ஒவ்வொரு துறையிலும் சரியாக வேலை செய்யாதவர்கள், கூடுதலாக இருப்பவர்கள் என, தேடித் தேடி தட்டித் தூக்கி வருகிறது எலான் மஸ்க்கின் துறை. செலவை குறைக்கிறேன் என்ற பெயரில், ஏற்கனவே பல துறைகளைச் சேர்ந்த ஏராளமானோரை ட்ரம்ப் நிர்வாகம் வேலையை விட்டு தூக்கியுள்ளது. 

இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்துவரும் நிலையில், தற்போது சுகாதாரத்துறையிலேயே கை வைத்துள்ளது ட்ரம்ப் நிர்வாகம்.

அமெரிக்காவில், சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையில், விரிவான மறுசீரமைப்பை மேற்கொள்ளும் வகையில், நேற்று ஒரே நாளில் 10,000 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

 இதில், மருத்துவ ஆராய்ச்சி, புதிய மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்குவது, பொது சுகாதார கண்காணிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுவந்த ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்குவர்.

தேசிய சுகாதார நிறுவனங்களின் இயக்குநராக டாக்டர். ஜெய் பட்டாச்சார்யா பொறுப்பேற்ற அதே நாளில், நிறுவனத்தின் பல மூத்த தலைவர்களுக்கு நிர்வாக விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 இத்துறையில் உள்ள மொத்தம் 27 நிறுவனங்கள் மற்றும் மையங்களில் உள்ள 4 இயக்குநர்கள் மற்றும் தகவல் தொடர்பு குழுக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில், மின்னணு சிகரெட்டுகள், பிற புகையிலைப் பொருட்களுக்கான புதிய விதிமுறைகளை வகுக்கும் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையை நெறிப்படுத்தவும், நாள்பட்ட நோய்களை எதிர்த்து போராட முன்னுரிமை அளிக்கும் விதமாகவும் இந்த பணி நீக்கங்கள் நடந்துள்ளதாக, அத்துறையின் செயலாளர் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் தெரிவித்துள்ளார்.

 மேலும், புரட்சி தொடங்குவதாகவும், ஆரோக்கியமான அமெரிக்காவிற்காக புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாகத்தின் கீழ் பல நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கான திட்டம் குறித்தும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த திடீர் பணி நீக்கத்திற்கு, பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் சட்டத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநில அட்டர்னி ஜெனரல்களின் கூட்டணி, ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. 

இந்த பணி நீக்கம் சட்டவிரோதமானது என கூறியுள்ள அவர்கள், இதனால், வலி நிவாரணிகளுக்கான நெருக்கடி அதிகரிக்கும் என்றும், மனநல மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் என்றும் தங்கள் வாதத்தை முன்வைத்துள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?