பின்னோக்கி வருவதா வளர்ச்சி ....?

இந்தியாவில் உள்ள வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட வாராக் கடன்களின் அளவு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.9.53 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாத இறுதி வரை உள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆசியாவின் 3வது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நாட்டில், வாராக் கடன்களை வசூலிப்பதற்கோ, கட்டுப்படுத்தவோ இதுவரை எந்த பெரிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

பணமதிப்பிழப்பு போது அந்த நிறுவனங்கள் மாற்றிய கணக்கில்  வரா பணத்தை  அபராதம் மட்டும் விதித்து விட்டு மீதப்பணத்தை கடன் கணக்கில் வரவு வைத்திருந்தால் இந்நிலை வந்திராது.


ஆனால் வங்கிகள் நடுத்தர மக்களை கசக்கிப் பிழியும் , பண முதலைகளை கண்டு கொள்வதில்லை.

இந்த நிலையில்,  ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்தத் தகவலில், கடந்த ஜூன் மாதத்தின் இறுதி வரையிலான காலக்கட்டத்துக்கு முந்தைய 6 மாதங்களில் மட்டும், வாராக்கடன்களின் அளவு 5.8 அளவுக்கு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் அளித்து அதன் மூலம் கிடைக்கும் வட்டி தான் வங்கிகளுக்கு மிகப்பெரிய லாபம். 
இதுபோன்ற வாராக்கடன்களால், வங்கிகளின் லாபம் குறைந்து, புதிய கடன்கள் கொடுப்பதும் பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக பெரிய பெரிய நிறுவனங்கள் பெற்ற கோடிக்கணக்கான கடன் தொகையை திரும்ப செலுத்தாததால், சிறு, குறு நிறுவனங்களுக்கு இதுபோன்ற சமயங்களில் கடன் கொடுக்கும் அளவு குறைவது நேரடியாகவே நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது.

3 ஆண்டுகளில், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை அடைந்துள்ளது.

வங்கிகள் மூலமாக கடன் வழங்குதல், வட்டி வசூலித்தல், கடனை வசூலித்தல், புதிய கடன்கள் வழங்குதல் என்ற ஒரு சங்கிலித் தொடரில், வாராக்கடன்கள் மூலமாக இந்த தொடர் செயலே முற்றுபெறும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய மிக முக்கியப் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

ஆனால் மத்திய அரசுக்கு தலைமை ஏற்றுள்ள மோடியோ பொருளாதார மாற்ற நடவடிக்கைகளை தவறாகவே தன்னிச்சய்யாக எடுத்து சொதப்புகிறார்.


ரிசர்வ்  வங்கி ஆலோசனைகளை கேட்பதில்லை.அது கூட பரவாயில்லை.
மோடியின் அதிரடி பொருளாதார நடவடிக்கைகளை பற்றி நிதியமைச்சருக்கோ ,நிதியமைச்சகத்துக்கோ தெரியாது என்பது மகா சோகம்.
இதனால் உலக அளவில் பாதிப்படைந்துள்ளது மோடியின் புதிய இந்தியாதான்.
இந்தியா வல்லரசாக மாறாமல் நலிந்த அரசாக உருப்பெற்றுள்ளது.
மன்மோகன் சிங் காலத்தில் உலகமே சந்தித்த பொருளாதார வீழ்சியின் போது இந்தியா பாதிக்கப்படவில்லை.காரணம் இந்திய அரசு வங்கிகள்,பொதுத்துறை நிறுவனங்கள்தான்.
ஆனால் மோடியோ சீர்திருத்தம் என்று எல்லாவற்றையும் அந்நியர்களுக்கும் ,கார்பரேட்களுக்கும் திறந்து விட்டு விட்டார்.
அந்நியர்கள் லாபத்தை இங்கா விட்டு வைப்பார்கள்.கார்பரேட்களோ வராக்கடன்களின் காரணமானவர்கள்.
இவர்கள் இந்தியாவின் பொருளாதார  வளர்சிக்கு எப்படி,எந்த அளவுக்கு உதவுவார்கள்.
இவர்களின் நோக்கம் லாபம் மட்டுமாகத்தானே இருக்கும்.


விவசாயிகளை,தொழிலாளர்களை நம்பி அவர்களை வளமாக வைத்திருக்கும் நாடுதான் உண்மையிலேயே வளர்சி பெற்ற நாடாகும்.முன்னோக்கி வளரும்.
அம்பானி,அதானி,அந்நியர்கள் நலனை மட்டும் நாடும் நாடு நலிந்த  இந்தியாக  பின்னோக்கித்தான் வளரும்.
மத வெறி மட்டுமே கொள்கையாகக் கொண்டு கொஞ்சமும் பொருளாதார அறிவே இல்லாதவர்களிடம் நாடு அகப்பட்டால் இப்படித்தான் ஆகும்.
போட்டோஷாப்பினால் இந்தியாவை ஒளிர வைக்கலாம்,கட்சி நடத்தலாம்.ஆட்சியை கைப்பற்றலாம்.
ஆனால் இந்தியாவை உண்மையிலே மிளிர வைக்க இயலாது.
======================================================================================

ன்று,

அக்டொபர் -12.
  • ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் தமிழகத்தின் முதல் செய்திப்பத்திரிக்கையான மெட்ராஸ் கூரியர் என்ற வார இதழை வெளியிட்டார்(1785)

  • கொலம்பஸ் தினம் முதன் முறையாக நியூயார்க்கில் கொண்டாடப்பட்டது(1792)

  • சார்லஸ் மேகின்டொஸ், முதல் ரெயின்கோட்டை விற்பனை செய்தார்(1823)
========================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?