சனி, 21 அக்டோபர், 2017

காவி திராவிடம்?

"திராவிட இ்யக்க வரலாற்றை கருணாநிதி இல்லாமல் கூட எழுதி விடலாம். எம்ஜிஆர் இல்லாமல் எழுத முடியாது "என்கிறார் - காவி எழுத்தாளர் ஜெயமோகன்.

தமிழ் இந்து வெளியிடும் திராவிட இயக்கம் தொடர்பான நூலில் கலைஞர் முக்கியத்துவம் பெற்றதனால் வந்த எரிச்சல்.
அதனால் இதே இதழ் வெளியிட்ட எம்ஜிஆர் ,ஜெயலலிதா கட்டுரைகள் போல் இதையும் வெளியிட்டிருக்கும் என்றதுடன் முடிக்காமல் கலைஞரையும் எழுதியதன் மூலம் தமிழ் இந்து நாலாந்தர மளிகைக்கடை பத்திரிகையாகி விட்டதாகவும் வருந்தியுள்ளார்.
முதல் இரண்டு கட்டுரைகளும் வரும் போது இந்த திராவிட ஆய்வாளர் சும்மாதான் இருந்தார்.

இப்போது தெரிகிறது காவிகள் ஏன் ஆதிச்சநல்லூர் ,கீழடி களை ஆய்வு செய்ய மறுக்கிறது என்று இதைப்போல்ஆரிய இடைச்செருகல்களை சேர்க்க முடியாதென்ற பயம்தான்.
எம்ஜிஆர் ,ஜெயலலிதாவை பற்றி எழுதும் போது மட்டும் தரமான இதழாம்.
ஜெயமோகன் எந்த அளவுக்கு விவரமானவர் என்பதை இந்த வசனமே நிர்வாணப்படுத்தி விட்டது.
ஜெயலலிதாவை ஏன் திராவிட இயக்கத்தின் தூண் விட்டு,விட்டார் என்று தெரியவில்லை.
இந்திய விடு தலைக்குப் பின்னான வரலாற்றிலேயே .காமராஜர்,வி.பி.சிங்,கலைஞர்,ஆகியோரை விடுத்து எழுத முடியா நிலையில் அவர்கள் தாக்கம் உள்ளது.
பெரியார்,அண்ணா,அடுத்து கலைஞர்தான் திராவிட இயக்கம் அடையாளங்கள்.
எம்ஜிஆர் திராவிட இயக்கம் என்றால் அதை வி.என்.ஜானகி அம்மையாரே ஒப்புக்கொள்ள மாட்டார்.
திமுகவுக்கு வாக்கு வங்கியாகத்தான் எம்ஜிஆர் இருந்தார்.
அவரே அண்ணா வழிகாட்டி,காமராஜர்தான் என் தலைவர் என்றே பேசியுள்ளார்.
திமுகவுக்கு வாக்கும்,நிதியும் வாங்கித்தந்ததை விடுத்து திராவிட இயக்கத்துக்கு எம்ஜிஆர் பங்களிப்பு ஒன்றும் இல்லை.அவரது ஆட்சிக்காலத்தில் பெரியார் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதும் இல்லை.
ஆர்.எஸ்.எஸ் , இயக்க வரலாற்றை மட்டும் அறிந்த அதன்படி எழுதும்,வாழும் ஜெயமோகனுக்கு திராவிட இயக்கத்தைப்பற்றி என்ன தெரியும்,அது பற்றி பேச அருகதையும் இல்லாதவர்.
இந்திய விடுதலை போராட்டத்தில் நாதுராம் கோட்ஸே பங்களிப்பு பெரியது என்பவர் ஜெயமோகன். 
அவரிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.
ஆரிய அடிவருடிகளுக்கு திராவிட இயக்கம் பற்றிய ஆழ்ந்த அறிவு எப்படியிருக்கும்?
திராவிட இயக்கத்தில் இருந்தாலும் அண்ணா,கலைஞ்சருக்கு உள்ள முக்கியத்துவம் நாவலர் நெடுஞ்செழியனுக்கு கூட கிடையாது.  காரணம் அவர் உதிர்ந்த மயிராக மாறியதால்தான்.
இதில் எம்ஜிஆர் விடுபட்டதில் ,விடுபடுவதில் வியப்பில்லை.
திமுகவில் இருந்தாலும் திராவிட இயக்கத்தில் எம்ஜிஆரை பங்களிப்பு குறைவே.
எம்ஜியார் இல்லாதிருந்திருந்தாலும் கூட   திமுக மிகப்பெரிய அரசியல் இயக்கமாகத்தான் இருந்து கொண்டிருக்கும்...
ஆனால், திமுகவில் எம்ஜியாரை கருனாநிதி சேர்க்காமல்  இருந்திருந்தால்...
எம்ஜியார் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கமாட்டார் என்பததுதான் உண்மை.
திமுக போராட்டங்களில் கலந்து கொண்டதும் இல்லை.இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ஜெயலலிதாவுடன் கோவாவில் "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்"பாடலுக்கு இருவரும் வாயசைத்துக்கொண்டிருந்தனர்.
அவ்வளவுதான்.
திராவிட இயக்கத்தில் பங்களிப்பு மட்டுமல்ல,கொள்கை பின்பற்றலும் எம்.ஜி.ஆரிடம் இல்லை.
ஆனால் திமுகவின் வெற்றிக்கு பங்களிப்பை யாராலும் புறந்தள்ள,இல்லை என சொல்லவே இயலாது.
பாமரர்களிடம் திமுகவைப்பற்றி கூறியதால் திமுகவையும் வளர்த்து ,அதன் மூலம் தன்னையும் வளர்த்து நிலை நிறுத்திக்கொண்டார்.
அண்ணா மறைவுக்குப் பின் நாவலரை பின் தள்ளி கருணாநிதியை கொண்டுவந்ததில் எம்.ஜி.ஆர் பங்கு அதிகம்.
ஆனால் அதன் பின்னால் 'தன் கைக்குள் இருப்பார் ,தனது கண்ணசைவுக்கு ஆடுவார் கருணாநிதி"என்ற நம்பிக்கையே இருந்தது.
ஆனால் சாணக்கியர் கலைஞர் முழுநேர அரசியலார்.எம்ஜிஆர் போல் துணைப்பணி அல்லவே அரசியல்.
தனது செயல்பாடுகள் மூலம் திமுக தொண்டர்களை தனது உடன் பிறப்புக்களாக மாற்றிக் கொண்டார்.
தனது அரசு மூலம் ஓதுக்கீடு போன்ற பெரியாரின் கனவுகளை ,திராவிடஇயக்க கொள்கைகளை செயல்படுத்தி பல திட்டங்களுக்கு இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கினார்.
அதன் பின் வந்த எம்ஜிஆர்,ஜெயலலிதா செய்த மக்கள் நலத்திட்டங்கள் ஒன்றுமே இல்லை.சத்துணவும் காமராஜரின் திட்டம்.அதை யுனெசுகோ உதவியுடன் விரிவாக்கம்தான் செய்தனர்.
எப்படி பார்த்தாலும் திராவிடர் இயக்க வரலாற்றில் இடம் பெரும் உரிமையோ,தகுதியோ இருவருக்கும் கிடையாது.
காரணம் எம்ஜிஆர் துவக்கி ஜெயலலிதாவால் அழிக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க.வுக்கு பெயரில் மட்டுமே திராவிடம் உண்டு .
மற்றபடி திராவிட இயக்கத்துடன் அதற்கு எந்த உறவும் கிடையாது. அதன் பின்னணி ஆரியமே.
ஜெயமோகன் அறிய வேண்டிய தகவல் இது பகுத்தறிவு திராவிட இயக்க வரலாறு.
காவியான திராவிட வரலாறு அல்ல.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆளுநரின் டுவிட் .
‘இந்த வீடியோவில் இருப்பது நம் பிரதமரின் 97 வயது தாயார். முதிர் வயதிலும் உற்சாகமாக நடனம் ஆடி தீபாவளியை கொண்டாடினார்’’ என்று கிரண்பேடி டுவிட்டரில் புகழ்ந்திருந்தார்.

ஆனால் தற்போது வீடியோவில் உள்ள மூதாட்டி மோடியின் தாயார் இல்லை என்பதும் வெளிப்பட்டு விட்டது.

ஆளுநர் போன்ற பெரிய பதவியில் உள்ள கிரண் பேடிக்கு இந்த சின்னத்தனம் எதற்கு?

ஏன் பாஜகவினர் என்றாலே போலி படங்களும்,போட்டோஷாப்பும் என்றாகி விட்டதே.

எத்தனை முறை மாட்டி அவமானப் பட்டாலும் ,அசிங்கமாக கலாய்க்கப் பட்டாலும் திருந்தவே மாட்டேங்கிறார்கள்.?
==================================================================================================
ன்று,

அக்டொபர் -21.
முத்துசுவாமி தீட்சிதர்

  • ஜோசப் ஆஸ்டின்  சிமெண்டிற்கான காப்புரிமம் பெற்றார்(1824)
  • நோபல் பரிசை ஏற்படுத்திய ஆல்பிரட் நோபல் பிறந்த தினம்(1833)
  • கர்நாடக இசை கலைஞர்  முத்துசுவாமி தீட்சிதர் இறந்த தினம்(1835)
  • தமிழக முன்னாள்ஆளுநர்  சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்த தினம்(1925)
  • பிரான்சில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1945)
===================================================================================================
இந்த கோவில் அடையாளம் தெரிகிறதா?
1950களில் திருப்பதி கோவில் நிலை இதுதான்.