சட்ட மீறலுக்கு சிறை.?

 ஸ்டாலின் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி என்றதுமே தனது பயந்தத்தேதியை மாற்றினார் பிரதமர் மோடி .
தமிழ்நாடு வர மோடி பயம் என்ற பேச்சு எழுந்தது.
 மோடி தமிழகத்திற்கு வர அஞ்சுகிறார் என சமூகவலைத்தளங்களில் மோடி கலாய்க்கப்பட்டவுடன் பொங்கிய  தமிழிசை சவுந்தரராஜனோ "நரேந்திர மோடி தீவிரவாத நாடான பாகிஸ்தானுக்கே எந்த முன்னறிவிப்புமின்றியும் தைரியமாக சென்று வந்தார்" என்றார். 
ஆனால் இன்றைய மோடியின் பயண நிரல்கள் அனைத்தும் சாலை வழியில் இருந்து மாற்றப்பட்டு வான் வெளியில்  வந்து செல்ல முடிவு செய்யப்பட்டு ஹெலிபேட்கள் அவசர அவசரமாக அமைக்கப்படுகிறது. 
இதற்கு பயமின்றி வேறு என்ன காரணம்?

சென்னை அருகே நாளை நடைபெற இருக்கும் ராணுவ தளவாடங்கள் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். 
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்டப்படும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவிக்க தமிழக  எதிர்க்கட்சிகள் அனைத்தும் அதற்கு ஒத்துழைக்க கறுப்புக்கொடி பூதாகரமாகிற்று.. 
மேலும் இயக்குனர் பாரதிராஜா உட்பட்ட திரைப்பட இயக்குனர்கள்,கலைஞர்கள் சார்பிலும் கறுப்பு கொடி காட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
முன்னதாக கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டமும் ஆள்வோர் மனதை பயப்படுத்தியுள்ளது.
மோடியை வரவேற்று வைக்கப்பட்ட பதாதைகளை சிலர் கருப்பு மை பூசியும் ,சேதப்படுத்தியும் வைக்க புதுப்பதாகைகள் வைக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆகாய வழியே வந்து செல்லும் மோடிக்கு 8000 காவல்துறையினர்,துணை ராணுவம் பாதுகாப்பு தரைகளில் போடப்பட்டுள்ளது.
திடீர் தலைவர் தியாகி தினகரன் "மோடி இந்தியாவின் பிரதமர் அவருக்கு கறுப்புக்கொடி காட்டக்கூடாது "என்று திடீர் அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதற்கு முன்னர் நான்சென்ஸ் எனற நேருக்கும் ,மதுரையில் இந்திரா காந்திக்கும் கறுப்புக்கொடி காட்டப்பட்டது மிகவும் பிரபலமானப் போராட்டம் என்பது திராவிட அரசியலே நாங்கள்தான் கொண்டுவந்தோம் என முழங்கும் தியாகி தினகரனுக்கு தெரியாதது வேடிக்கை.


இந்நிலையில், பிரதமர் மோடியின் பயணத்திட்டப்படி நாளை காலை சென்னை விமான நிலையம் வரும் அவர் அங்கிருந்து மகாபலிபுரம் ஹெலிபேட் செல்வதாகவும் அதன் பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நந்தம்பாக்கம் செல்வதாக இருந்தது.

 ஆனால் எதிர்க்கட்சியினரின் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தால் நந்தம்பாக்கம் வரை ஹெலிகாப்டரில் செல்ல திட்டம் மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்தாக 12.40 மணிக்கு கிளம்பி சாலை மார்க்கமாக அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட் நிகழ்வில் பங்கேற்க இருந்தார். 
ஆனால் கறுப்புக் கொடி காரணமாக சாலை வழியாக வருவது தவிர்க்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஹெலிபேட் அமைப்பது என்று முதலில் முடிவெடுக்கப்பட்டது.


ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் வந்து இறங்கி, அங்கிருந்து எதிரில் இருக்கும் கேன்சர் மருத்துவமனைக்கு சாலை மார்க்கமாக சென்றால்  அந்த இடத்திலேயே கறுப்புக் கொடி காட்டுவார்கள் என நினைத்து  கேன்சர் மருத்துவமனைக்கு அடுத்த காம்பவுண்டில் இருக்கும் ஐஐடியில் ஹெலிபேட் அமைப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டது. 
அதன்படி சென்னை ஐஐடி காம்பவுண்டு சுவர் உடைக்கப்பட்டு அந்த வளாகத்திலேயே மோடிக்கான ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் அங்கிருந்து கேன்சர் மருத்துவமனைக்கு செல்வதற்காக புதிய சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சென்னை ஐஐடி ஒரு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி. 
ஏராளமான அரிய வகை மான்கள் அதில் உள்ளன. இந்த ஹெலிபேட் அமைக்கப்படுவதால் அங்கு உள்ள மரங்களை வெட்டுவதால் மான்களுக்கு பாதிப்பு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், ஒரு நாட்டின் பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வருகை தருவதற்கு இவ்வளவு அஞ்சுவது என்பது இந்திய பிரதமர்களிலேயே மோடிதான். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் வேண்டுமென்றே மோடி சாதித்து வந்த மவுனமே அவரை இந்த நிலைக்கு கொண்டு சென்று இருக்கிறது. 
அதுமட்டுமின்றி இன்னும் சாலை வசதிகள் இல்லாத எண்ணற்ற கிராமங்கள் இந்தியாவிலும், தமிழகத்திலும் அதிகளவு இருக்கிறது அதற்காகவெல்லாம் கவலைப்பட்டு சாலை அமைக்கப்படாமல் ஒரு பிரதமர் தவறு செய்துவிட்டு வருகிறார் .
அவருக்கு தனி சாலை அமைக்கப்படுவது சிகப்பு கம்பளம் விரிப்பது போல் உள்ளது. 


அரசு சொத்துக்களை ஒரு சாமானியரோ இல்லை அதிகாரத்தில் இல்லாதவரோ தெரியாமல் சேதப்படுத்திவிட்டாலே அவரை ஒரு தேச துரோகி போல் சித்தரித்து சிறையில் அடைக்கிறார்கள். 

ஆனால் பிரதமருக்காக மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு கல்வி நிறுவனத்தின் காம்பவுண்டு சுவர் உடைக்கப்பட்டு இருக்கிறது. 
பயத்தில் இப்படி செய்யும் மோடியை சட்டப்படி எப்படி தண்டிக்கலாம். 
மோடியை இந்த சட்ட மீறலுக்கு  சிறையில் அடைக்கலாமா? 

======================================================================================
ன்று,
ஏப்ரல்-12.
  • உலக  விண்வெளி பயண தினம்
  • ஐக்கிய நாடுகள் கொடி, பிரிட்டனின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது(1606)
  • இந்தியா அக்னி 3 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது(2007)
  • ஜிம்பாப்வே டாலர், ஜிம்பாப்வேவின் நாணயமாக முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது(2009)
========================================================================================



                 "வன்முறை கலாசாரம் தடுக்கப்பட வேண்டும்"
                         படங்களில் வன்முறை மசாலாக் காட்சிகள் மட்டுமே எடுத்து சூப்பரான ரசினிகாந்த்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?