ராஜ ரகசியம்.
நாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுத்த கடன்களில், ரூ. 2 லட்சத்து 41 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தது உண்மைதான் என்று மோடி அரசு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்நடைபெற்று வரும் நிலையில், இதுதொடர் பாக, உறுப்பினர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்பட்டுள்ள்து.
அதில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடந்த மூன்றாண்டுகளில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 911 கோடி ரூபாய், ‘செயல்படா சொத்துக்கள்’ என்ற பெயரில் தள்ளுபடி செய்யப்பட்டி ருப்பது உண்மைதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடன் தள்ளுபடி செய்யப்பட்ட கார்ப்பரேட்டுகள் யார்?
என்ற கேள்விக்கு, அதை மட்டும் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ள மோடி அரசு,
இந்திய ரிசர்வ் வங்கியோ அல்லது அரசாங்கமோ இதுபோன்ற விஷயங்களை வெளியே சொல்வதில்லை என்றும், ‘அவை ரகசியம்’ என்று விசுவாசத்தைக் காட்டியுள்ளது.
ஆயிரக்கணக்கில் கடன் வாங்கியவர்கள் ,நகையை அடமானம் வைத்து வாங்கியவர்கள் சில மதம் தாமதமானாலே பெயர் முகவரியுடன் (முன்பு படத்துடன்)நாளிதழ்களில் விளம்பரம் செய்கின்றன வங்கிகள் .
ஆனால் பல கோடிகளில் கடன்வாங்கி திட்டமிட்டே மக்கள் பணத்தை வாங்கி திரும்ப செலுத்தாத கொள்ளையர்களின் பெயர்களை மட்டும் வங்கிகள் வெளிப்படுத்த "ரிசர்வ் வங்கி தடைபோடுவது எதற்கு ?
பணமுதலைகள் கவுரவத்துக்கு இழுக்கு வந்து விடக் கூடாது என்பதால்தானே?
வீடு,நகைகளை விற்று வங்கிக்கடனை செலுத்தும் மக்களின் பணத்தால்தான் இன்று வங்கிகள் நடந்து கொண்டிருக்கின்றன.அதுதான் உண்மை.
மற்றபடி மல்லையாக்கள்,மோடிக்கள் ,அம்பானிகள் ,அதானிகள் மக்கள் பணத்தை மோடி அரசின் மூலம் வங்கிகளில் போடவைத்து அவற்றை ஆயிரம் கோடிகள்,லட்சம் கோடிகள் என்று வராக்கடனாகவே வாங்கி சொகுசாக வாழ்வதுடன் இந்த ஆட்சியையே ஆட்டிப்படைக்கிறார்கள்.
மோடி ஆட்சியில் பெருமுதலாளி களுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டுள்ள ரூ. 2 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயானது,முந்தையை ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
* * *
அரசே நடத்தும் திட்டமிட்ட பகல் கொள்ளை...
* * *
=======================================================================================
இன்று,
ஏப்ரல்-05.
தூத்துக்குடியிலுள்ள அத்திமரப்பட்டியில் மட்டும் ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுப்புகை மற்றும் கழிவுகளால் கடந்த 16 ஆண்டுகளில் 28 நபர்கள் புற்று நோயால் மரணமடைந்துள்ளதாக தற்பொழுது கள ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் போக்குவரத்திற்கு மட்டுமின்றிபல்வேறு வகையில் அடிப்படை தேவைகளில் ஒன்றாக பெட்ரோல் மற்றும் டீசல் மாறியிருக்கிறது.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் மீது மத்திய அரசு வரி மேல் வரி விதித்து, அதன்விலையை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்த்தி வருகிறது.
வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ. 68.38காசுகளாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
பெட்ரோலின்விலை ஒரு லிட்டர் ரூ.77 ஐ தொட்டிருக்கிறது.
ஆனால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததா என்று பார்த்தால் அது இல்லவே இல்லை. முழுக்க முழுக்க அரசு மக்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் ஒட்டசுரண்டும் ஏற்பாடே இந்த விலை உயர்வு என்பதுபுரியும்.
காரணம் அன்றாடம் சர்வதேச சந்தையில்கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த மாற்றத்தின் அடிப்படையில் விலைநிர்ணயம் செய்தால் மட்டுமே எண்ணெய் நிறுவனங்களில் நஷ்டத்தை சமாளிக்க முடியும் எனகூறினர்.
அப்படி விலை நிர்ணயம் செய்த பின்னர்நடப்பது என்ன?
எண்ணெய் நிறுவனங்கள் பன்மடங்கு லாபம் ஈட்டியிருக்கிறது. 2014-ல் இருந்து சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய்யின் விலையில் செங்குத்தான வீழ்ச்சிஏற்பட்டது. அப்போது மக்கள் அதன் பயனைஅனுபவிக்க மத்திய அரசு அனுமதிக்க வில்லை.
மாறாக குறையும் விலைக்கு மேல் கூடுதலாக வரிக்கு மேல் வரி விதித்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மோடி அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீது 9 முறைவரிகளை உயர்த்தி அறிவித்திருக்கிறது.
அதன்படி மத்திய அரசிற்கு ரூ. 3 லட்சத்து 34 ஆயிரத்து534 கோடி ரூபாய் வருமானமாக 2016-17 ஆம் ஆண்டில்மட்டும் கிடைத்திருக்கிறது.
மாநில அரசு இதே நிதியாண்டில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 770 கோடி ரூபாய் வருமானமாக பெற்றிருக்கிறது. இப்படி வகைதொகையின்றி மக்களை கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்டு மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
உண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின் படி லாபத்துடன் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோலின் விலைரூ.34.98 மட்டுமே ஆகும்.
அதே போல் ஒரு லிட்டர்டீசலின் விலை ரூ.37.21 மட்டுமே.
ஆனால் இங்கும் பெட்ரோலின் உண்மையான விலையில் 120 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது.
டீசலின்உண்மையான விலையில் இருந்து 80 சதவிகிதம்வரி விதிக்கப்பட்டிருக்கிறது.
அதன் காரணமாகவே இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலைவிண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. போதாக்குறைக்கு தற்போது சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளின் கட்டணத்தையும் மோடி அரசு உயர்த்தியிருக்கிறது.
ஏற்கெனவே பெட்ரோல், டீசல் மீது சாலை வரி விதிக்கப்படும் நிலையில் ஏன் தனியாக டோல்கேட்டில் வரி உயர்வு?
இவை அனைத்தும் மத்திய, மாநில அரசுகளின் திட்டமிட்ட அம்பானி எண்ணெய் நிறுவங்களுக்கு ஆதரவான , நடுத்தர ,ஏழை மக்களுக்கு எதிரான பகல் கொள்ளையே ஆகும்.
இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
அடுத்தக்கொள்ளைக்கு அம்பாணி தயார்?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் ’பேமெண்ட் பேங்க்’ வங்கிச் சேவையை இந்தியாவில் தொடங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
‘பேமெண்ட் பேங்க்’ என்பது சிறிய வங்கி ஆகும். இங்கு, ஒரு நபர் அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரையில் சேமித்து வைக்க இயலும். அவர்களுக்கு டெபிட் கார்டுகள் வழங்கப்படுவதோடு, இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் சேவைகளும் வழங்கப்படும்.
ஆனால் இந்த வங்கியில் பிற வங்கிகளைப்போலக் கடன் வழங்கப்பட மாட்டாது.
மேலும் கிரெடிட் கார்டுகளும் கொடுக்கப்படுவதில்லை.ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜன் இருந்தபோது, இந்திய வங்கித்துறையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்கிறோம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக்கட்டும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதாவது, சிறிய வங்கிகள் மற்றும் பேமெண்ட்ஸ் வங்கிகளை அறிமுகம் செய்ய முடிவு செய்தார். அதனடிப்படையில், ரிசர்வ் வங்கியானது 2015 ஆகஸ்ட் மாதத்தில், பேமெண்ட்ஸ் வங்கி துவங்குவதற்கான உரிமங்களை பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கியது.
அப்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆதித்யா பிர்லா நுவோ, ஏர்டெல் எம்.காமர்ஸ் சர்வைஸ், சோழ மண்டலம் டிஸ்ட்ரிபியூஷன் சர்வைசஸ், டிபார்ட்மெண்ட் ஆப் போஸ்ட்ஸ், பினோ பேடெக், நேஷனல் செக்யூட்டிரீஸ் டெபாசிடரி, சன் பார்மா, பேடிஎம், டெக் ம`ஹிந்திரா, வோடபோன் எம்.பேசா மொத்தம் 11 நிறுவனங்கள் பேமெண்ட்ஸ் வங்கி அமைக்க உரிமம் பெற்றன.
ஆனால், இந்தியாவில் முதல் முறையாகப் பேமெண்ட்ஸ் வங்கியைத் துவங்கியது ஏர்டெல் நிறுவனம்தான்.
இந்நிறுவனம் 2016 நவம்பர் மாதத்திலேயே தனது சேவையைத் துவங்கியது.
இதைத் தொடர்ந்து பேடிஎம் நிறுவனத்தின் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிச் சேவை 2017 மே மாதத்தில் துவங்கியது.
2017 ஜூன் மாதத்தில் பினோ பேமெண்ட்ஸ் வங்கி தனது சேவையைத் துவங்கியது.
ஆனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடனடியாக இறங்கவில்லை.
ஆதித்யா பிர்லாவும் தனது வங்கிச் சேவையைத் தொடங்கிவிட்டன. இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் சேவை தொடங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பேமெண்ட் வங்கிச் சேவையை ஏப்ரல் 3-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் இந்த ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பிற பேமெண்ட்ஸ் வங்கிகளைக் காட்டிலும் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கியின் மீது கூடுதல் நம்பிக்கையை உருவாக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
அம்பானி அரசுடமை வங்கிகளில் 80000 கோடிகள் கடன் வைத்துள்ளார்.பணமதிப்பிழம்பின் போது அம்பானியின் மெகாமார்ட் மூலம் புதிய பணத்தாட்களை பழையத்தாள்களுக்கு மாற்றாக மோடி வழங்கியது என்பதும் உங்கள் கவனத்துக்கான தகவல்கள்.
ஜியோ பேமெண்ட்ஸ் வங்கியின் 70 சதவிகித பங்குகளை முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், 30 சதவிகிதப் பங்குகளை எஸ்பிஐ வங்கியும் வைத்துள்ளன.
ஏப்ரல்-05.
- இந்திய தேசிய கடல்சார் தினம்
- ஆங்கில-டச்சு போரை முடிவுக்கு கொண்டு வர வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது(1654)
- முதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை அமெரிக்கா பயன்படுத்தியது(1782)
- பசிபிக் போர் ஆரம்பமானது(1879)
தூத்துக்குடியிலுள்ள அத்திமரப்பட்டியில் மட்டும் ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுப்புகை மற்றும் கழிவுகளால் கடந்த 16 ஆண்டுகளில் 28 நபர்கள் புற்று நோயால் மரணமடைந்துள்ளதாக தற்பொழுது கள ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.
இதில், கடந்த ஓராண்டில் மட்டும் 8 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில், 4 பேர் இறந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இது அத்திமரப்பட்டி கிராமக் கணக்கு மட்டும்.
#ஸ்டெர்லைட்டை மூடு #