எத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் ?
எல்லோரையும் எப்போதும் வாக்குகளுக்காக ஏமாற்றும் போட்டோஷாப் பிரதமர் மோடி .
15 லட்சம் ஒவ்வொரு இந்தியன் கணக்கில் போடுவதாக வாக்குறுதி அளித்ததில் ஆரம்பித்து,குஜராத் சாலைகளை என வெளிநாட்டு சாலைகள் படம் போட்டு விளமப்ரம்,ஆந்திராவுக்கு சிறப்பு சலுகை,பட்டேல்களுக்கு இட ஒதுக்கீடு,திரிபுரா மக்கள் முன்னணிக்கு சலுகைகள் என்று அனைவரையும் ஏமாற்றிய மோடி அரசு ஆரம்பம் முதலே தமிழ்நாட்டுக்கு விரோதமாகவே செயல்பட்டு வந்தது.
தற்போதைய பச்சைத்துரோகம் காவிரி மேலாண்மை வாரியம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை ஏமாற்றிவரும் பிரதமர் மோடிக்கு தமிழகமே திரண்டு காட்டிய கருப்புக் கொடிஇந்திய வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்வாகமாறிவிட்டது.
சுதந்திர இந்தியாவில் எந்த ஒரு பிரதமருக்கும் இந்த அளவு எதிர்ப்பு இருந்திருக்காது.
காரணம் மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்காமல், நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றியும் கவலையில்லாமல் கர்நாடகத் தேர்தலில்தமது கட்சியின் வெற்றிதான் முக்கியம்என்று செயல்படும் பிரதமருக்கு இப்படிப்பட்ட வரவேற்பு தான் கிடைக்கும்.
மக்களின் கோபஅலையில் சிக்கியுள்ள பிரதமர், சென்னைப் பயணத்தின் போது அதைச் சமாளிக்கமுடியாமல் சாலை வழிப் பயணத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
இதுவே தமிழகமக்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு கிடைத்தமுதல் வெற்றியாகும். மாநில உரிமையை நிலைநாட்ட தமிழகமேதிரண்டு நடத்திய போராட்டத்திற்கு தார்மீக ரீதியாக ஆதரவு அளிக்கவேண்டிய அதிமுக அரசு,காவல்துறையை வைத்து ஒடுக்க முயன்று தோற்றுப்போயிருக்கிறது.
களத்தில் மட்டுமல்ல; சமூகவலைத்தளங்களிலும் பிரதமருக்கு கடும்எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதன் எதிரொலி தான் ‘‘கோ பேக் மோடி’’ என்ற வாசகம், இந்தியாவில்மட்டுமல்ல உலகளவிலும் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்தது.
இந்தளவுக்கு மக்களிடம் கடும்கோபம் இருப்பதை மத்திய அரசு இனியாவது உணர்ந்தால் நல்லது. இல்லையென்றால் வருங்காலங்களில் மேலும் வீரியமிக்க போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இது ஒருபுறம் இருக்க, சென்னை அருகே திருவிடந்தையில் பாதுகாப்பு தளவாட கண்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இத்துறையில் உள்நாட்டு தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்த ஆயுத கொள்முதல் கொள்கையில் உள்ள விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தமான முக்கியத்துவம் வாய்ந்த துறையில் தனியாரை ஊக்கப்படுத்துவது ஆபத்தான போக்காகும். கடந்த 27 ஆண்டுகளாக இந்தியாவில் அமலில் இருக்கும் தாராளமய பொருளாதாரக் கொள்கை சகல துறைகளிலும்தனியார்மயத்தை ஊக்குவித்தது.
போதிய வேலை வாய்ப்புகளை அது உருவாக்கவில்லை.

தனியார் நிறுவனங்களைக் குளிர்விக்க தொழிலாளர்சட்டங்கள் சீர்குலைக்கப்பட்டுபோராடிப் பெற்ற உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன.
ஆவடி டேங்க் பேக்டரி, ராணுவ உடைகள் தைக்கும் ஆவடி குளோத்திங் பேக்டரிபோன்றவற்றில் இடஒதுக்கீட்டு கொள்கையால்ஏராளமான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. தனியார்துறைக்குச் சென்றால் ஒப்பந்த அடிப்படையில் சொற்ப சம்பளத்திற்கே ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.
இதன் மூலம் சமூக நீதிக்கும் குழிவெட்டத்தயாராகி விட்டது மத்திய அரசு. ஏற்கனவே நடைபெற்ற ராணுவச் கண்காட்சிகளிலும், மும்பையில் நடைபெற்ற கடல்சார் உச்சிமாநாட்டின் போதும் ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
ஆனால் எதுவும்செயல்பாட்டுக்கு வரவில்லை.
இவற்றுக்கெல்லாம்பதில் சொல்ல முடியாமல் எத்தனை நாட்கள் தான்ஓடி ஒளியப் போகிறீர்கள் பிரதமர் அவர்களே?
எப்படியும் வரவிருக்கும் தேர்தலில் தரையிறங்கித்தான் ஆகவேண்டும்.
====================================================================================
இன்று,
ஏப்ரல்-13.- ஹங்கேரி நாடு குடியரசானது(1849)
- ஐயன் ஃபிளமிங், தனது முதலாவது ஜேம்ஸ் பாண்ட் நாவலை வெளியிட்டார்(1953)
- முதல் வணிக செயற்கைகோளான வெஸ்டார் 1 ஏவப்பட்டது(1974)
- கூகுள் நாட்காட்டி வெளியானது (2006)