உயிர்தெழும் சேலம்8 வழிச்சாலை.?

ஐஏஎஸ் பணி விதிகளில் திருத்தம்

எதிர்க்கும் மாநிலங்கள்!

ஐஏஎஸ் பணி விதிகளில் திருத்தம்: எதிர்க்கும் மாநிலங்கள்!

ஐஏஎஸ் அதிகாரிகளை ஒன்றிய பணிக்கு இடமாற்றம் செய்யும் வகையில் ஐஏஎஸ் விதிகள் 1954இல் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954 விதி 6இன் படி மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிகளுக்கு மாற்ற வேண்டுமானால் அதற்கு மாநில அரசின் சம்மதம் வேண்டும்.

ஆனால் தற்போது மாநில அரசு ஒப்புதல் இல்லாமலேயே ஒன்றிய அரசு இந்த அதிகாரிகளை ஒன்றிய அரசுப்பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் 1954 விதி 6இல் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கு பல்வேறு மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த விதிகளில் மாற்றம் செய்யக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.

நேற்று (ஜனவரி 23) தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

அதில், சமீபத்தில் ஒன்றிய அரசு அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954இல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது.

மாநில, மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஒரு இணக்கமான சூழ்நிலைக்கு இந்த ஒன்றிய ஒன்றியங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் அவர், “ஆட்சிப் பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிர்வகிப்பது குறித்த அரசின் தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்கனவே மாநில அரசுகளில் குறிப்பிட்ட சில முதுநிலைகளில் போதுமான எண்ணிக்கையில் அலுவலர்கள் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.

குருப்-1 நிலை அலுவலர்கள் மூலமாகவும், வெளிச் சந்தையிலிருந்து வல்லுநர்களைத் தேர்வு செய்யும் (பக்க நுழைவு) முறை மூலமாகவும் ஒன்றிய அரசு தனது தேவையை நிறைவு செய்யும் சூழ்நிலையில் மாநில அரசு முழுக்க முழுக்க தனது நிர்வாகத் தேவைகளுக்கு குறைவான எண்ணிக்கையில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைச் சார்ந்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசுப் பணிபுரியும் அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிக்கு அனுப்பி வைப்பது, ஏற்கனவே போதுமான எண்ணிக்கையில் குறைபாடுள்ள நிலையில் நிர்வாகம் ஒரு தொய்வு நிலையை ஏற்படுத்திவிடும் என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், “ஒன்றிய அரசு வெளிச் சந்தையில் வல்லுநர்களைத் தேர்வு செய்திடும் முறை, ஒன்றிய அரசுப் பணிக்குச் செல்ல வேண்டிய அலுவலர்களின் ஆர்வமும் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவின்படி சம்பந்தப்பட்ட அலுவலரின் விருப்பம் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒன்றிய அரசின் பணியை மாற்ற முடியும் என்ற நிலை இந்தியாவின் எஃகு கட்டமைப்பு என்று அழைக்கப்படும் அரசுப் பணி நிர்வாகத்திற்கு ஒரு நிலையற்ற தன்மையையும் அலுவலர், பணி ஆர்வத்தையும் குறைக்கிறது

இனிச் சென்றால் அகில இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் ஒரு நிரந்தர அச்ச உணர்வுடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது தற்போது வளர்ச்சிப் பாதையில் செல்ல விரும்பும் நமது நாட்டிற்கு உகந்ததல்ல.குடிமைப்பணி அலுவலர்கள் அரசியல் சார்புத்தன்மை இன்றியும், எந்த அச்ச உணர்வின்றியும் பணியாற்ற வேண்டும். ஆனால் உத்தேசிக்கப்பட்ட சட்டத் திருத்தங்கள் நிர்வாகக் கட்டமைப்பின் தன்மையையும் அதன் செயல்பாடும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மாநிலங்களில் குடிமைப்பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிர்வகிப்பது சிக்கலாக்கிவிடும்.

இவற்றால் மாநில நிர்வாகமும் அதன் மூலம் தேச நலனும் கூட பாதிக்கப்படலாம். புதிய சட்டத் திருத்தத்தின் விளைவுகள் அச்சமூட்டுவதாக உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல் அவசரமாகச் சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டு வர முயற்சிப்பது இந்தியக் கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகவும் எதிரானதாகும்.

இந்தத் திருத்தத்திற்குத் தொடர்புடைய இரண்டு அமைப்புகளான மாநில அரசுகளும், நிர்வாகக் கட்டமைப்பும் இதனை வரவேற்கவில்லை என்றும், ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஒரு ஏற்பாட்டினை மாநில அரசுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு எடுத்துக்கொள்வதும் கூட்டாட்சி அரசியல் அமைப்பிற்கு உகந்ததல்ல. இது கடந்த 75 ஆண்டுகளாகக் கவனமாக உருவாக்கப்பட்ட இந்த தேசத்தின் சித்தாந்தங்களை வலுவிழக்கச் செய்யும். எதனையும் அழிப்பது எளிது ஆனால் மறுகட்டமைப்பு செய்வது கடினமானது.

தாங்கள் இது குறித்து மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், நம்மால் கணிக்க இயலாத விளைவுகளை இது நிச்சயம் ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்தச்சூழலில் கேரள முதல்வரும் எதிர்ப்புத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், "இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும். விதிகளில் திருத்தம் கொண்டு வருவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


------------------------------------------------ -------------------------

உயிர்தெழும்  

 சேலம்8 வழிச்சாலை.?

மத்திய ரசின் ”பாரத் மாலா” சென்னை சேலம் இடையே 276 கி.மீ தொலைவில் 8 வழிச்சாலை, ரூ. 10 ஆயிரம் கோடியில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக காஞ்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த திட்டம் தொடர்பான தமிழக அரசின் அறிப்பாணையை ரத்து செய்து 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி அன்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களில் திருப்பி அளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வர பல்வேறு வழிகள் இருப்பினும் தேனி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் பகுதியில் வசிக்கும் மக்களின் தேர்வாக எப்போதும் இருந்து வருகிறது சேலம். சேலத்தில் இருந்து சென்னை வருவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரமானது மிகவும் அதிகமாக இருப்பதால் பயண நேரத்தை குறைக்கும் வகையில் 8 வழிச்சாலை (அ) பசுமை வழிச்சாலை என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் அதிமுக அரசு 8 வழிச்சாலை அமைப்பதில் உறுதியாக செயல் பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர்.
சுற்றுச்சூழல் அனுமதி பெற்று திட்டத்தை மேற்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

டிசம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் நடத்தப்பட்ட உழவர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் 8 வழிச்சாலை தொடர்பான தங்களின் ஐயத்தை வெளிப்படுத்திய உழவர்கள் 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று கோரி மனு அளித்தனர்.
அவர்களுக்கு பதில் அளித்து தருமபுரி மாவட்ட நிலம் எடுப்பு வருவாய் அலுவலர் வ.முகுந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில், எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் நெடுஞ்சாலை துறைக்கு மாற்றம் செய்யப்படவில்லை.
அதனால் பட்டாதாரர்கள் தங்கள் நிலங்களை பாகப் பிரிவினை செய்யவோ, பத்திரம் செய்யவோ, கடன் உதவி பெறவோ எந்தத் தடையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால்  மேலும் இது ஒன்றிய அரசின் திட்டம் எட்டு வழிச் சாலைக்காக நிலம் எடுக்கும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகு அரசு வழிகாட்டுதல்படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது விவசாயிகளை கலக்கம் அடைய செய்துள்ளது.

சாலைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் விரைவில் துவங்க உள்ளது என்று தருமபுரி வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் கூறியுள்ளனர்.  பிரதமரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் தருமபுரி வருவாய்த்துறை அதிகாரிகளோ எட்டுவழிச்சாலைக்கான சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்துள்ளது. எனவே சாலை போடும் பணிகள் உடனே துவங்க உள்ளது என்று விவசாயிகளிடம் கூறியுள்ளனர்.
  இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனில் 7000 விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு நான் தன்னுடைய சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை ஏற்றுக் கொண்டு 8 வழிச்சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட அனைத்து நிலங்களையும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.
ஆனால் தற்போது மாநில அதிகாரிகளின் அறிவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .



----------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?