அணையா விளக்கை அணைக்கும் மோடி.

 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா, பாகிஸ்தானை வெற்றி கண்டது. இதனைத்தொடர்ந்து போரில் தங்கள் இன்னுயிரைத் தந்த இந்திய வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், டெல்லியில் உள்ள இந்தியா கேட் முன்பு அமர் ஜவான் ஜோதி என்ற அணையா விளக்கை 1972ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஏற்றி வைத்தார்.

 

இந்தநிலையில், இன்று நடைபெறும் நிகழ்வில் 50 ஆண்டுகளாக சுடர்விட்டுக்கொண்டிருந்த அமர் ஜவான் ஜோதி தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கில் இணைக்கப்பட இருப்பதாகவும், இந்தியா கேட் முன்புள்ள அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவுள்ளதாகவும் இந்திய இராணுவ அதிகாரி  தெரிவித்துள்ளார்.

 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,  இந்தியா கேட் முன்புள்ள அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவுள்ளதற்கு மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார். 

 இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது வீரர்களுக்காக எரிந்த அணையா சுடர் இன்று அணைக்கப்படுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது" எனக் கூறியுள்ளார்.

விஜயலட்சுமி விவகாரம்.

தமிழ் சினிமாவில் சிறைக்கு செல்லும் நடிகர் கார்த்தி, ‘என்னை புடிச்சுகிட்டு வந்துட்டிங்க. எனக்கு உறுதுணையா இருந்த ஆளை காணோம்...வேர் ஈஸ் அப்பாதுரை?’ என கேட்பார். 

அப்புறம் அடுத்த செகண்ட், நடிகர் சந்தானத்தை போலீஸ் கைது செய்து அவருக்கு துணையாக சிறைக்குள் அனுப்பி வைக்கும்.

ஏறக்குறைய இந்த காமெடி சீன் சாட்சாத் சீமான் விவகாரத்தில் இம்மி பிசகாமல் அரங்கேறி இருப்பதால் ஹரி நாடாருக்கு துணையாக, சீமானை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

 இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தமிழகத்தில் திமுக எதிர் கட்சியாக இருந்தபோது மு.க.ஸ்டாலினை படுகேவலமாக விமர்சனம் செய்தவர்களில் முக்கியமானவர் சீமான். 

ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்கிற மரியாதை துளியும் இல்லாமல் வாய்க்கு வந்தபடி... தான் பேசியது மட்டும் அல்லாமல் தன்னை சுற்றி வரும் விடலை பையன்களையும் நேகா தூண்டிவிட்டு மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்ய வைத்தார்.


ஸ்டாலின் போன்று பேசி காட்டுவது, ஸ்டாலினுக்கு பாட்டு எழுதி மேடையில் பாடி காட்டி புஹா.. புஹா.. என்று சிரித்து நக்கல் அடிப்பது, திடுட்டு கும்பல், ஏமாற்று கும்பல் என்று, திமுகவை எந்த அளவுக்கு கீழ்த்தரமாக விமர்சனம் செய்ய முடியுமோ? 

அதையெல்லாம் தாண்டி சீமான் கிழித்து தொங்கப்போட்டார்.

இதையெல்லாம் கண்டு ஆத்திரப்படாமல் திமுக அஞ்ச வேண்டும் என்பதற்காக மோடி என்னை அழைத்தார்.. 

தூதுவிட்டு பேசினார். 

ஆர்எஸ்எஸ்ஐ கண்டித்து கடிதம் எழுதினார்... நிதி சுமையை தீர்ப்பதாக வாக்குறுதி தந்தார்கள் 

என ஏகத்துக்கு செய்தியாளர்களிடாம் சீமான் அள்ளிவிட்டார்.


தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் இயக்கங்களை நேருக்கு நேராக கையாண்ட பக்குவமும், அரசியல் ராஜதந்திரமும் கொண்ட திமுகவோ, சீமானை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவே இல்லை. 

ஆனாலும் சீமான் மீது கருப்புப் புள்ளியை வைத்து விட்டு, கழுகு போன்று காத்திருந்தது திமுக.

மேடையில் பல்லை கடித்துக்கொண்டு கர்ஜிப்பது..

 கீழே இறங்கியதும் குறிப்பிட்ட நபருக்கே போன் போட்டு தாஜா செய்வது போன்ற பம்மாத்து பலே வேலைகளை சீமான் செய்து வந்ததால் அவ்வளவு எளிதில் சிக்காமல் போக்கு காட்டி வந்தார்.

இப்படி பக்குவம் இல்லாமல் நடந்து கொண்ட சீமான், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து விட்டது என்ற நினைப்பு துளியும் இல்லாமல் செருப்பை கையில் எடுத்து காட்டியதும், அந்த செருப்பு கட்சி கொடியான கருப்பு-சிவப்பு நிறத்தில் இருந்ததும் தான் சீமான் தனக்கு தானே வைத்துக் கொண்ட ஆப்பு என்றும் சொல்ல வேண்டும்.

இதன் விளைவு நடிகை விஜயலட்சுமியுடன் குடும்பம் நடத்தி கறக்க வேண்டியதை கறந்து விட்டு கழட்டிவிட்ட சம்பவத்தில் நடிகை விஜயலட்சுமி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு கடந்த 2020ம் ஆண்டு தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றார்.

இந்த வழக்கை திருவான்மியூர் போலீசார் விசாரித்தனர். அப்போது, போலீசில் விஜயலட்சுமி ஒரு பரபரப்பு வாக்குமூலத்தை அளித்து இருந்தார். 

அந்த வாக்குமூலத்தில் நடிகை விஜய லட்சுமி கூறி இருந்ததாவது:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் மற்றும் சதா ஆகியோர் என்னை மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்றேன். 

இவ்வாறு விஜய லட்சுமி கூறி இருந்தார்.


இது தொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருந்தனர். 

ஆனாலும், அதிமுக ஆட்சி என்பதால் சீமான் மீதோ, ஹரிநாடார் மீதோ போலீசார் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் செருப்பை காட்டிய சீமானுக்கு நாம் எதை காட்டுவது? 

என யோசித்த திமுகவுக்கு அல்வா துண்டு மாதிரி நடிகை விஜயலட்சுமி துப்பு கொடுக்க திருவான்மியூர் போலீசுக்கு பரபரப்பு உத்தரவு பறந்திருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக நடமாடும் நகைக்கடை ஹரிநாடார் அடைக்கப்பட்டு இருக்கும் பெங்களூருக்கே சென்ற போலீஸ், ‘உங்களை கைது செய்யப்போறோம்’ன்னு சொல்லி இருக்கின்றனர்.

அதற்கு ஹரி நாடார், ‘என்னை கைது செய்யுறது இருக்கட்டும்.. முக்கிய குற்றவாளி எங்கே? வேர் இஸ் சீமான்?’ என்று கேட்டு தேரை இழுத்து, தெருவில் விட்டுள்ளார் ‘ஹரிநாடார்’.

அப்புறம் என்ன.. கழுகு போல், காத்திருந்த போலீசுக்கு இரையை ஹரிநாடார் ஈசியா எடுத்து கொடுக்க தனக்கே உரிய ஸ்டலில் அதிரடி வேட்டையை துவக்கி இருக்கிறது தமிழக போலீஸ். 

மேலும் கையோடு, ஹரி நாடாருக்கு முதல் பத்திரிகை போல் கைது செய்த ஆர்டர் கொடுத்து கெத்துடன் திரும்பியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக சீமானை எங்கே வைத்து கைது செய்வது?
எங்கே அடைப்பது?
என்றும்  எதிர்ப்பு குரல் எழுப்பும் தம்பிகளை மாவட்டம் தோறும் எப்படி சுளுக்கு எடுத்து விடுவது? 

என்ற நீண்ட ஆலோசனையில் போலீசார் ஈடுபட்டு உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தினர் கூறி  சிரிக்கின்றனர்.




----------------------------------------------------------------------------

மேற்கு வங்கத்தில் பா.ஜ.கவின் வாட்ஸ்அப் குழுவிலிருந்து முக்கியத் தலைவர்கள் வெளியேறியுள்ளதாகவும், அடுத்தகட்ட ஆலோசனைக்காக ரகசியக் கூட்டம் நடத்தவுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பலை நிலவுகிறது.

அந்தவகையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின் பா.ஜ.கவின் வாட்ஸ் அப் குழுவிலிருந்து பா.ஜ.க தலைவர்கள் பலரும் வெளியேறி வருகின்றனர். பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 30 பேர் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக ரகசியமாகக் கூடி ஆலோசிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ.கவிற்கு 77 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர்.

இவர்களில் 10 எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அம்மாநில பா.ஜ.க நிர்வாகிகள் அக்கட்சியின் வாட்ஸ்-அப் குழுவிலிருந்து வெளியேறியுள்ளனர்.

தேர்தலுக்கு பின் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மீது பா.ஜ.கவில் அதிருப்தி நிலவி வந்தது.
இதனால், சமீபத்தில், ஒன்றிய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் அக்கட்சியின் வாட்ஸ்-அப் குழுவிலிருந்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து மேற்கு வங்க மாநில பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் வாட்ஸ்-அப் குழுவிலிருந்து வெளியேறினர்.
பா.ஜ.க வாட்ஸ்-அப் குழுவிலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் கொல்கத்தாவில் ரகசியமாகக் கூடி ஆலோசனை செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பா.ஜ.க அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து வரும் நிலையில், மேற்கு வங்க பா.ஜ.கவிலும் பலர் அதிருப்தியில் இருந்து வருவது அக்கட்சித் தலைமைக்கு கடும் தலைவலியை  ஏற்படுத்தியுள்ளது.

------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?