ஜல்லிக்கட்டு

 கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 11 அம்ச கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

  • ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் காளைகளின் உரிமையாளர், காளையுடன் நன்கு பழகும் அதன் உதவியாளர், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் நாளில் இருந்து இரண்டு நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்டி-பிசிஆர பரிசோதனை அறிக்கையை வைத்திருந்தால் மட்டுமே ஆடுகளத்தில் அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கான அடையாள அட்டையை மாவட்ட காவல்துறை வழங்கும். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.
  • காளைகளை பதிவு செய்யும்போது அவற்றின் உரிமையாளர், உதவியாளர் ஆகியோரின் பதிவு கட்டாயமாக்கப்படும். காளைகளின் பதிவு நிகழ்ச்சிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படும்.
  • எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படும்.
  • ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, நிகழ்ச்சி நடைபெறும் தேதியில் இருந்து 3 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் மூலம் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
  • ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியில் இருந்து இரண்டு நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்டி-பிசிஆர் சான்று பெறப்பட்டவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகள்

பட மூலாதாரம்,

  • தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா சமூக இடைவெளி பாதுகாப்பு இடைவெளி வழிகாட்டுதல்கள் அடிப்படையில் திறந்தவெளி அரங்கின் அளவிற்கேற்ப அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். இவர்களும் இரண்டு நாட்களுக்கு முன்புவரை தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வையிடும் அனைத்து துறை அலுவலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் இரண்டு நாட்களுக்குள் கொரோனா இல்லை என்பதற்கான ஆர்டிவழங்க வேண்டும்.
  • அனைத்து துறை அலுவலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், பார்வையாளர்கள், ஊடகக்துறையினர் அரசு அறிவுறுத்திய வழிகாட்டுதல் நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்,
  • வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி, இணைய வழியாக காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசின் முன் அனுமதி பெற்றி பிராணிகள் வதை தடுப்பு (ஜல்லிக்கட்டு நெறிமுறைகள்) விதிகள்-2017, அரசு வெளியிட்டுள்ள ஜல்லிக்கட்டு வழிகாட்டுதல் நெறிகள் ஆகியவற்றுடன் அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.


  • -----------------------------------------------------------------------------
  • போகாத ஊருக்கு வழி தேடுதல்

நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டுமென தமிழக சட்டமன்றம் சட்டம் இயற்றி அதை ஆளுநரிடம் அனுப்பி மூன்று மாதங்களுக்கு மேலாயிற்று. நீட் தேர்வு என்பது கல்வி தொடர்பானது என்பதால் ஒன்றிய அரசாங்கம், மாநில அரசு இரண்டுக்கும் சட்டம் இயற்றும் உரிமை உள்ளது. ஏனெனில் கல்வி ஒன்றிய அரசாங்கம், மாநில அரசு ஆகிய இரண்டும் சேர்ந்து நிர்வகிக்கும் துறை. எனவே மாநில அரசு இயற்றியுள்ள சட்டத்துக்கு ஒன்றிய அரசின் சார்பாக குடியரசுத் தலைவர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒன்றிய அரசில் சட்ட அமைச்சகம் இருக்கிறது, அதில் போதுமான சட்ட வல்லுநர்கள் உள்ளார்கள், குடியரசுத் தலைவருக்கும் நாட்டின் சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசிக்கும் வசதி வாய்ப்புகளும், உரிமையும் உள்ளது. அப்படியிருக்கையில் ஆளுநருக்கு இந்தச் சட்டத்தை ஆராய வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. மாநிலச் சட்டமன்றம் இயற்றிய சட்டத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்புவதுதான் அவர் செய்ய வேண்டிய ஒரே பணி.

ஆனால் அந்தப் பணியைச் செய்யாமல் அவர் காலம் கடத்துகிறார். இப்படிச் செய்யும்போது மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி என்பது காணாமல் போய், ஆளுநரின் எதேச்சதிகார ஆட்சி தொடங்குகிறது. ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது. அவர் ஒன்றிய அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இயற்றிய சட்டத்தை தன் விருப்பப்படி எப்படி வேண்டுமானால் கையாளுவது என்பது மக்களை நேரடியாக அவமதிப்பதாகத்தான் பொருள்படும். ஆனால் அவராக இப்படிச் செயல்படுவார் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். ஒன்றிய அரசாங்கத்தின் விருப்பத்தின் பேரில்தான் அவர் இவ்விதம் நடந்துகொள்கிறார் என்பதே சாத்தியம். இதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறது பாரதீய ஜனதா கட்சி அரசு? அதுதான் நம்முன் உள்ள கேள்வி.

பாரதீய ஜனதா கட்சி: போகாத ஊருக்கு வழி தேடுதல்

இந்த நீட் பிரச்சினையில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்திருக்கும். அது தமிழக மக்கள் நீட் தேர்வை விரும்பவில்லை என்பதுதான். ஏனெனில் அவர்கள் மாநிலத்தின் தனித்துவத்தை நம்புகிறார்கள். அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கூட்டணி கட்சியான அஇஅதிமுககூட நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்றுதான் கூறுகிறது. அவர்கள் ஆட்சியிலிருக்கும்போதும் பாஜக விலக்கு அளிக்கவில்லை. 

இப்போது அவர்கள் பாஜக அடிமைகள் என்று அழைக்கப்பட்டு ஆட்சியிழந்த பிறகும், பாஜக-வை எதிர்க்கும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகும் விலக்கு அளிக்க மறுக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி விலக்கு அளித்தது போல, இதற்கும் ஒரு தனிச்சட்டம் இயற்றி, தமிழகத்தின் சட்டத்தை அங்கீகரித்து, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். 

இவ்விதம் செய்தால் தமிழக மக்களுக்கு பாரதீய ஜனதாவின் மீது இருக்கும் வெறுப்பு சிறிதாவது குறையும். ஆனால் பாஜக அதை விரும்புவதாகத் தெரியவில்லை.

 மக்கள் தங்களை வெறுக்க வேண்டும் என்று நினைக்கிறது. இதுதான் இந்திய அரசியலில் இன்று மிகப்பெரிய புதிர்.

பாரதீய ஜனதா கட்சி அடிப்படையில் ஒரு பாசிச கனவு கொண்ட கட்சி. 

அது பெரும்பாலான இந்திய மக்களை “இந்து” என்ற ஒற்றை மத அடையாளத்தில் திரட்டி, இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்ற ஆசையைக் கொண்டது. அதைத்தான் இந்துத்துவா என்று கூறுவார்கள். இந்த கனவு நிறைவேற வேண்டுமானால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? 

இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் திரட்ட வேண்டும். அதுதான் அவர்கள் போக விரும்பும் ஊருக்கு வழி.

-ராஜன் குறை.

--------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?