இவர் அவரில்லை!

 வடலூர் வள்ளலார் பெருவெளி நிலத்தில் மருத்துவமனை : அறநிலையத்துறைக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அரசின் முத்திரை திட்டங்கள் (Iconic Projects) தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 




இவர் அவரில்லை!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 

 குற்றம் சாட்டப்பட்ட வருவாய் அலுவலர் மு.கண்ணணுக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என்றும் பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியாகியுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த 06.09.2024 அன்று வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 

இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலராக குற்றம் சாட்டப்பட்டுள்ள மு.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.

மாறாக திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்த து.கண்ணன் என்பவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு அளிக்கப்பட்ட து.கண்ணன் என்பவருக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பெயர்க்குழப்பம் காரணமாக செய்தி ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நீட்; குஜராத் மாடல்.

குஜராத்திலிருந்து கர்நாடக மாநிலத்தின் பெல்காம் தேர்வு மையம் சென்று நீட் தேர்வி எழுதிய மாணவி ஒருவர், 12ஆம் வகுப்பில் 2 முறை தோல்வியடைந்தவராக இருந்த நிலையிலும், நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்றுள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவர், கடந்த ஆண்டு நீட் தேர்வில் 209 மதிப்பெண்களே பெற்றிருந்த நிலையில், அண்மையில் நடந்துமுடிந்த நீட் தேர்வில் 710 மதிப்பெண்களைப் பெற்று, தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளார்.


இந்நிலையில், குஜராத் மாணவர்கள் 1,000 கிலோ மீட்டர் தாண்டி கர்நாடகாவில் ஏன் தேர்வு எழுதினார்கள்? என்பதை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.


ஏற்கனவே மருத்துவ சேர்க்கை பெற்றுத் தருவதாக கூறி 10 மாணவர்களிடம் மோசடி செய்த நபரை கடந்த ஜூலை மாதம் பெல்காம் காவல்துறை கைது செய்தது. அவரிடமிருந்து 1.30 கோடி ரூபாய் அப்போது கைப்பற்றப்பட்டது.


ஆகையால், குஜராத் மாநிலம் கோத்ரா மையத்தில் நடைபெற்ற மோசடி குறித்து சி.பி.ஐ விசாரித்து வரும் நிலையில், பெல்காம் மையத்தின் மீதும் தற்போது ஏகப்பட்ட ஐயங்கள் எழுந்துள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?