கிரீம் பன்

குரூப் 2 முடிவுகள் டிசம்பரில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

கோயில்களில் திருடி விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 150 ஆண்டு பழமையான 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு
நாடாளுமன்றம் முன்னதாகவே கலைக்கப்பட்டதால் ஓய்வூதியத்தை இழக்கும் 85 இலங்கை எம்.பி.க்கள்.
கோவை, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.

நீண்ட ஆயுளுக்காக வழிபடும் ஜீவித் புத்ரிகா யில் சோகம்: பிஹாரில் 37 சிறார்கள் உட்பட 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.(விரைவில் நீண்ட ஆயுள்?)
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவு.இந்தியாவில் (அதன்பலன்அம்பானி,அதானிகளுக்கே.)மக்களுக்கில்லை.
"எமர்ஜென்சியில்கூட இவ்வளவு நாள் சிறை கிடையாது" செந்தில் பாலாஜியை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் செய்தி  .

கிரீம் பன்

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கோவையில் அமைக்கப்பட்டு வரும் தொழில்நுட்ப பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர்,கோவையில் இருக்கும் மிகப்பெரிய துறைகளில் இதுவும் ஒன்று.

பல காரணங்களால் இங்கு கட்டடம் தாமதம் ஆகிறது. ஆனாலும் உரிய விதிமுறைகளை பின்பற்றி சான்றிதழ் பெற்று திறக்க இருக்கின்றோம்.

 இந்த பூங்காவின் மூலம் சாதாரணமாக 3250 பேருக்கு அதிகமாக வேலை கிடைக்கும்.

ஒரு சில நிறுவனங்கள் இந்த இடத்தை முழுமையாக இடத்தை கேட்கின்றனர். ஆனால் அது நியாயமாக இருக்காது. இதற்காக விதிமுறைகளை உருவாக்க கோரி இருக்கிறேன். 15 ஆயிரம் சதுர அடியாவது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என சொல்லியிருக்கிறேன்

கிரீம் பன் விவகாரம் : "GST திட்டமிடுதலில் உள்ள பல விளைவுகளில் இது ஒரு சின்ன உதாரணம்தான்" - அமைச்சர் PTR !

இங்கு ஹைடெக் சிட்டி உருவாக்கும் பணியும் நடந்து கொண்டு இருக்கின்றது. 

பிப்ரவரி மாதம் ஒரு கருத்தரங்கில் நிதி துறையில் சீர்திருத்தம் செய்தது போல, தகவல் தொழில்நுட்பத் துறையிலும் சீர் திருத்தம் செய்யவே என்னை அனுப்பி இருப்பதாக முதல்வர் தெரிவித்திருந்தார்

தகவல் தொழில்நுட்ப துறையில் சில இடங்களில் திருத்தம் தேவைபடுகின்றது. அரசில் உள்ள துறைகள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்காமல் சில மாற்றங்கள் செய்யபட வேண்டும்.

 வட சென்னை, ஓசூர் கோவை போன்ற இடங்களில் ஹைடெக் சிட்டி அமைக்கப்படுகின்றதுஇரு ஆண்டுகளுக்கு முன்பே நிதி நிலை அறிக்கையில் இதை கூறி இருக்கின்றோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ஜி.எஸ்.டி மற்றும் கிரீம் பன் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ வேறுதுறையில் இருப்பதால் ஜி.எஸ்.டி பற்றி பேச விரும்ப வில்லை. ஜி.எஸ்.டி குறித்த திட்டமிடுதலில் உள்ள பல விளைவுகளில் இது ஒரு சின்ன உதாரணம்தான். திட்டமிடுதலில் பல குளறுபட்டிகள் இருக்கின்றன. 

ஒன்றிய அரசின் மனம்பான்மை சரியாக இருக்க வேண்டும்.மிகவும் வேகமாக இதில் உள்ள தவறுகளை சரி செய்ய வேண்டும் ” என்று தெரிவித்தார்.

பிணையில் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் உள்ள ஆளும் கட்சி தலைவர்களை சிறைப்படுத்தி, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வென்றுவிடலாம் என்ற பா.ஜ.க.வின் எண்ணம், தி.மு.க தலைமையிலான கூட்டணி சாதித்த 40க்கு 40 வெற்றியால் சிதைந்து போனது.

அவ்வாறு, ஒன்றிய பா.ஜ.க முன்னெடுத்த குறுக்கு வழியில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 25 லட்சம் ரூபாய் இரு நபர் பிணை உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலையாக உத்தரவு பிறப்பித்தார்.

471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு, பிணையில் வெளிவந்தார் செந்தில் பாலாஜி! : தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு!

25 பக்க பிணை உத்தரவின் நகல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் பாஸ்போர்ட்-டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், 471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு புழல் சிறையில் இருந்து வெளிவந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. சட்டப்போராட்டம் நடத்தி வெளிவந்த முன்னாள் அமைச்சருக்கு, தி.மு.க.வினர் ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பளித்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக