இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மீன்பிடிக்க தடை: ?

படம்
  பிரதமர் வருகை - ! பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறை சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக சின்னம், மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக உட்கட்சி விவகாரம் - ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்கு உரிய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராக வேண்டிய  சூழல் உள்ளதால், காலக்கெடுவை நிர்ணயிக்க வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, ஏப்ரல் மாதம் அனைத்து வங்கிகளுக்கும் இன்று முதல் ஏப்ரல்-6 ஞாயிறு, ஏப்ரல்-10 மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல்-12 இரண்டாம் சனி, ஏப்ரல்-13 ஞாயிறு, ஏப்ரல்-14 தமிழ் புத்தாண்டு, ஏப்ரல்-18 புனித வெள்ளி, ஏப்ரல்-20 ஞாயிறு, ஏப்ரல்-26– நான்காம் சனி, ஏப்ரல்-27 ஞாயிறு என மொத்தம் 9 நாட்கள் விடுமுறை ஆகும். எனவே பொதுமக்கள் தங்கள் வங்கி சேவைகளை இந்த விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு முன்கூட்ட...

கடன் பெற்றோர்

படம்
  உயிரை விட்டோர்! தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (47); தனியார் தொழில் நுட்ப நிறுவன மேலாளர். வங்கிகளில் வீட்டுக்கடன் பெற்று சொந்த வீடு வாங்கினார். பின்னர், அவசர தேவைகளுக்காக சில மொபைல் ஆப்ஸ்கள் மூலம் ₹10 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார்.  தவணைத் தொகை மாத சம்பளத்தையும் தாண்டி விட்டது. கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் நெருக்கடியில் குடும்பம் தவித்த நிலையில், இவரது மனைவி புனிதா (39) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக்கை சேர்ந்த தினேஷ் மானே (50) என்ற ஆசிரியர், மொபைல் ஆப் மூலம் ₹12,000 கடன் வாங்கியுள்ளார். திருப்பிச் செலுத்தாததால், அவரது படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அவரது நண்பர்களுக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய தொடங்கினர்.  இதனால் அவமானம் அடைந்த அவர், அடல் சேது பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்தார்.  ஆந்திராவை சேர்ந்தவர் நரேந்திரன். திருமணத்துக்கு சில நாட்கள் முன்பு ஆன்லைன் கடன் செயலி மூலம் ₹2,000 கடன் வாங்கினார்.அதனை திருப்பி செலுத்தி விட்டார்.  ஆனால், பெரிய தொகையை வட்டியாக செலுத்துமாறு டார்ச்சர் செய்துள்...

செங்கொடி மாநாடு

படம்
  தென் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக திகழும் மதுரையில், அக் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு இன்று தொடங்கியது.  இதில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தலைவர்களும், பிரதிநிதிகளும் மதுரையில் நேற்று முதலே குவிந்தனர். மதுரை மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் செங்கொடிகள் பறக்க விடப்பட்டு செங்கொடிகள் மற்றும் தோரணங்களாக காட்சியளிக்கின்றன. இந்த மாநாடு இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது. இதற்கு முன்னர் கடந்த 1953-ம் ஆண்டு மற்றும் 1972-ம் ஆண்டுகளில் மதுரையில் அகில இந்திய மாநாடு நடத்தப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாநாடு என்பதால், அகில இந்திய அளவில் கட்சியின் பிரதிநிதிகள், முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  கேரள முதல்வர் பினராயி விஜயன், கட்சியின் மூத்த தலைவர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டின் தொடக்கமாக மேளதாள வாத்தியங்கள் முழங்க கட்சி கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து வரலாற்று கண்காட்சி, புத்தக கண்காட்சி, கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கட்சியின் தியாகிகளை கவுரவிக்...