முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொன்றே தீர்வார்கள்

கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி, பெங்களூருவில் தனது வீட்டுக்கு வெளியே வைத்து இடதுசாரி பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரு அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதற்கு முன்பு, 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேவில் இடதுசாரி எழுத்தாளர் தபோல்கர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.


அதேபோல, 2015ஆம் ஆண்டு இடதுசாரி  சிந்தனையார்கள் கோவிந்த் பன்சாரே மற்றும்  எம்.எம்.கல்பூர்கி சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவர்கள் அனைவருமே, இடதுசாரி சிந்தனையாளர்கள் என்பதால், கொலைகள் நடுவே ஏதோ இணைப்பு இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகத்தால் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் முக்கிய குற்றவாளியான இந்து தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த சரத் கலாஸ்கர் கைது செய்யப்பட்டான்.

இந்நிலையில், பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது எப்படி?
 என்பது குறித்து சரத் கலாஸ்கர்  பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளாரன்.

இதுகுறித்து கர்நாடக காவல்துறையிடம் சரத் கலாஸ்கர் அளித்துள்ள வாக்குமூலத்தில், தபோல்கரை தான்தான் சுட்டுக் கொன்றதாகவும், கவுரி லங்கேஷ் கொலையில் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளான்.


மேலும், 2016 ஆகஸ்ட்டில், பெல் காமில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து பயங்கரவாத அமைப்புகள் ஆலோசனை கூட்டத்தில், இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன.
அதில் கவுரி லங்கேஷ் பெயரும் இடம்பெற்றிருந்தது.

எனவே, கவுரி லங்கேஷ் கொல்லப்பட வேண்டும் என்று அக்கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவனான பாரத் குர்னே என்பவர் வீட்டில் நடந்த அடுத்த கூட்டத்தில், கொலை பற்றி விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டது.

சில நாட்களுக்குப் பிறகு பாரத் குர்னே வீட்டின் அருகில் உள்ள மலைக்குச் சென்று துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டோம்.

இந்த பயிற்சியில் ஒவ்வொருவரும் 15 முதல் 20 தோட்டாக்களை சுட்டு பயிற்சி எடுத்தோம்.
இந்த கொலை சம்பவம் அல்லது நிகழ்வு என்று குறியீட்டு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர், அமோல் காலே அனைவரையும் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பச் சொன்னான், கொலை செய்யும் நாளில் மட்டுமே திரும்பி வர வேண்டும் என்று கூறினான்.

கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றது 26 வயதேயான, பரசுராம் வாங்மேர் தான்.
கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய் யப்பட்ட பிறகு, ஆதாரத்தை அழிக்கும் நோக்கத்தில், அந்த துப்பாக்கியை தனித்தனியாக பிரித்து, மும்பை - நாசிக் நெடுஞ்சாலைக்கு அருகே ஒரு சின்ன ஓடையில் 3 பகுதிகளில் வீசி எறிந்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளான்.மேலும் பட்டியலில் உள்ளவர்களை தன்னைப்போல் உள்ளவர்கள் கொன்றேத்  தீர்வார்கள் என்றும் கூறினான்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
 மாநிலங்களவை உறுப்பினர் ?
தற்போதைய சூழல் மற்றும் சட்டப்பேரவை எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் திமுகவால் 3 ராஜ்யசபா எம்.பி.க்களை வெல்ல முடியும்.
ஆனால் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைக்கும் போது மதிமுவிற்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி என்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து மதிமுகவிற்கு ஒரு எம்பி பதவியை கொடுத்தது போக எஞ்சிய 2 எம்.பி. பதவிகளை திமுக தனது நிர்வாகிகளுக்கு கொடுக்க முடியும்.

அந்த வகையில் தொமுச பொதுச் செயலாளராக இருக்கும் சண்முகம் ராஜ்யசபா எம்.பி. ஆவது கடந்த மாதமே உறுதியாகிவிட்டது.

 இதனை அவரை நேரில் அழைத்து ஸ்டாலினே கூறிவிட்டார்.

எஞ்சிய ஒரு இடத்திற்கு தான் கடும் போட்டி நிலவியது.
 அதிலும் முஸ்லீமுக்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை திமுக கொடுக்க வேண்டும் என்று கலக குரல்கள் எழ ஆரம்பித்தன.

திமுகவின் பேச்சாளர் மனுஷ்யபுத்திரனை திமுக ராஜ்யசபா எம்.பி.யாக்க வேண்டும் என்றும்  ஏகேஎஸ் விஜயன் ராஜ்யசபா எம்.பி. ஆவார் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால் இவர்கள் அனைவரையும் பின் தள்ளி திமுக வழக்கறிஞர் வில்சன் பெயர் தற்போது முதல் பெயராகியுள்ளது.
அதற்கு காரணம் வில்சனுக்கு ஏதாவது பெரிய பரிசு ஒன்றை கொடுக்க வேண்டும் என்று கடந்த ஓராண்டாகவே ஸ்டாலின் நினைத்து வருவது தான்.

ஏனென்றால் கலைஞர் சமாதியை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுத் தந்தது வில்சன் தான். கடந்த ஓராண்டில் பல்வேறு வெற்றிகளை ஸ்டாலின் பெற்றாலும் தந்தையை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மூலம் பெற்ற வெற்றி தான் அவருக்கு பிரதானமாக தெரிகிறது.

எனவே அந்த வெற்றிக்கு காரணமான வில்சனை கவுரவிக்கும் பொருட்டு ராஜ்யசபா எம்.பி.யாக்க முடிவு செய்துள்ளார்.

இந்த தகவலை வில்சனிடம் திமுக நிர்வாகிகள் கூறிய நிலையில் தான் ராஜ்யசபா செல்ல உள்ளதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார் வில்சன்.

 பல்வேறு வழக்குகளில் திமுகவிற்கு சாதகமான தீர்ப்புகளை பெற்றுத் தந்த வில்சன் மிக முக்கிய வழக்குகளில் கோட்டை விட்டதும் உண்டு.

 இருந்தாலும் கலைஞர் சமாதி வழக்கில் ஜெயித்து கொடுத்ததால் அவர் எம்பி ஆவது உறுதியாகியுள்ளது.
 --------------------------------------------------------------------------------------------------------------------------------------- ன்று,
01.07.2019.
மருத்துவர்கள் தினம்சோமாலியா விடுதலை தினம்(1960)
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது(2002)
இந்தியாவுக்கு விடுதலை வழங்க பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முடிவு (1947)
ஐரோப்பிய சமூகம் உருவாக்கப்பட்டது(1967)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
 உங்கள் பிரவுசரை 
வைரஸ் தாக்குதலிலிருந்து காப்பாற்ற
உங்கள் கம்ப்யூட்டரில் செயல்படும் பிரவுசர் செயலியை வைரஸ் புரோகிராம்கள் கைப்பற்றலாம்; செயல்படவிடாமல் முடக்கிப் போடலாம். பிரவுசர் புரோகிராம்களில் உள்ள பிழையான குறியீடுகள் வழியாக, ஹேக்கர்கள் வைரஸ் அனுப்ப முயற்சிக்கலாம். அல்லது பிரவுசர்களில் பயன்படுத்தும் ப்ளக் இன் புரோகிராம்கள் வழியாகவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, உங்கள் கம்ப்யூட்டரைச் செயல் இழக்கச் செய்திடலாம். இந்த முயற்சிகளை முறியடிக்கும் வகையில் நாம் சில முன்னேற்பாடான செயல்பாடுகளை எப்போதும் மேற்கொள்ள வேண்டும். அவற்றை இங்கு காணலாம்.

பிரவுசரை எப்போதும் மேம்படுத்தவும்:
 உங்கள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் பிரவுசர் செயலிக்கு மேம்படுத்தப்படும் பைல்களை, பிரவுசர் வழங்கிய நிறுவனம் அனுப்பினால், அவற்றை உடனடியாகத் தரவிறக்கம் செய்து, பிரவுசரை மேம்படுத்தவும். கூடுமானவரை, மேம்படுத்துதலை பிரவுசர் தானாக மேற்கொள்ளும் வகையில் ”automatic updates“ என்பதனைச் செயல்படுத்தியே வைக்கவும். எடுத்துக் காட்டாக, பலர் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கிய பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினையே பயன்படுத்தி வருவார்கள். அல்லது விண்டோஸ் செயல்பாட்டில் இயங்கும் பழைய ஆப்பிள் சபாரியைப் பயன்படுத்துவார்கள். இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். கூகுள் குரோம் அல்லது மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசரைத் தானாக அப்டேட் செய்திடும் வகையில் செட்டிங்ஸ் மேற்கொண்டு அமைக்கவும். புதிய விண்டோஸ் சிஸ்டத்திற்கு மாறினால், அதற்கேற்ற புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பினைப் பயன்படுத்தவும். விண்டோஸ் 10 சிஸ்டத்திற்குக் கம்ப்யூட்டரை அப்கிரேட் செய்திருந்தால், எட்ஜ் பிரவுசரையே பயன்படுத்தவும். விண்டோஸ் 7, 8 மற்றும் 8.1 இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தினால், அதற்கேற்ற பிரவுசரை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தவும்.

கிளிக் டு ப்ளே ப்ளக் இன் புரோகிராம்கள்:
 உங்கள் இணைய பிரவுசரில் பல ப்ளக் இன் புரோகிராம்கள் கிளிக் செய்து இயக்கும் வகையில் தரப்பட்டிருக்கும். இவற்றை நீங்கள் இயக்கி வைக்க வேண்டும். இதனால், இணைய தளங்கள் வேகமாக உங்கள் கம்ப்யூட்டருக்கு இறக்கம் செய்யப்படும். இதனால், சி.பி.யு.விற்கு அதிக வேலைப்பளு இருக்காது. லேப்டாப் கம்ப்யூட்டர் எனில், அதன் பேட்டரி பவர் மிச்சப்படும். அது மட்டுமின்றி, இவை பாதுகாப்பு தரும் வழிகளாகவும் இயங்கும். உங்கள் பிரவுசரின் பின்னணியில், ப்ளக் இன் புரோகிராம்கள் செயல்பட்டால், ஹேக்கர்கள், பிரவுசரின் பிழைக் குறியீடுகளைக் கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்த முடியாது.

தேவையற்ற ப்ளக் இன் புரோகிராம்கள்:
உங்கள் இணைய பிரவுசரைப் பாதுகாப்பாக வைத்திருக்க, உங்களுக்குத் தேவையற்ற ப்ளக் இன் புரோகிராம்களை, கம்ப்யூட்டரிலிருந்து நீக்கிவிடவும். இதற்கு, பிரவுசரில் பதிந்து வைக்கப்பட்டுள்ள ப்ளக் இன் புரோகிராம் பட்டியலைப் பெற்று, தேவையற்றவற்றை அழித்துவிடலாம். இவற்றில் ஜாவா புரோகிராம்கள் மிகவும் ஆபத்தானவை. எனவே, அவை தேவை இல்லை எனில், முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கிய 'சில்வர்லைட்' போன்ற புரோகிராம்கள் தேவையற்றவையாய் மாறிவிட்டன. எனவே இவற்றை நீக்கிவிடலாம். அதே போல, ப்ளாஷ் புரோகிராம் தேவை இல்லை எனில், நீக்கிவிடலாம். இதனால், பிரவுசர் செயல்பாடு பாதிக்குமோ என்ற கவலை வேண்டாம். எப்போது வேண்டுமானாலும், கட்டாயமாகத் தேவைப்படும் நிலையில், மீண்டும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

 ப்ளக் இன் புரோகிராமினை மேம்படுத்தவும்:
 குறிப்பிட்ட ப்ளக் இன் புரோகிராம்களை மட்டும் வைத்துக் கொள்வது குறித்து மேலே பார்த்தோம். நமக்குத் தேவையான ப்ளக் இன் புரோகிராம்களை மட்டும் வைத்துக் கொள்ளும் சூழ்நிலையில், அவற்றை அவ்வப்போது மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அடோப் நிறுவனத்தின், ப்ளாஷ் ப்ளேயரை நீங்கள் பதிந்து வைத்துப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அது தானாகவே அப்டேட் செய்திடும் வகையில் அமைத்துக் கொள்ளவும். கூகுள் குரோம் பிரவுசர், தனக்கென ப்ளாஷ் செயலியை அமைத்துக் கொண்டு வழங்கி வருகிறது. தானாகவே, அதனைப் புதுப்பித்தும் வருகிறது. விண்டோஸ் 10ல் இயங்கும் எட்ஜ் பிரவுசரும் தனக்கென ப்ளாஷ் பிளேயரைக் கொண்டுள்ளது. ஆனால், அதனை நாம் தான் தானாக அப்டேட் செய்து கொள்ளும் வகையில் அமைக்க வேண்டும். அதே போல், நாம் பயன்படுத்தும் அனைத்து ப்ளக் இன் புரோகிராம்களும், தாமாக அப்டேட் செய்திடும் வகையில் அமைக்க வேண்டும்.

64 பிட் பிரவுசரைப் பயன்படுத்தவும்:
 பிரவுசர்களில், 64 பிட் அளவில் இயங்கும் பிரவுசர்கள், வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு தரும் வகையில் இயங்கும் தன்மை கொண்டவையாய் உள்ளன. நீங்கள் 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால், 64 பிட் பிரவுசர் தான் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும். கூகுள் குரோம் பிரவுசர் 32 மற்றும் 64 பிட் அளவில் இயங்கும் வகையில் கிடைக்கிறது. ஆனால், பலர் 32 பிட் பிரவுசரையே பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். இவர்கள், 64 பிட் பிரவுசருக்கு மாறிக் கொள்வது நல்லது. பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்த வரை, நிலையாக எந்தச் சிக்கலும் இன்றி செயல்படும் வகையில், 64 பிட் பிரவுசர் பதிப்பு இல்லை. ஆனால், சோதனை முறைப் பதிப்பு கிடைக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசர் 64 பிட் அமைப்பிலேயே செயல்படும் வகையில் உள்ளது. அதே போல, 64 பிட் பதிப்புகளாகக் கிடைக்கும் மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும் இணைய பிரவுசர்கள் அனைத்தும் 64 பிட் பிரவுசர்களாகவே உள்ளன.

ஆண்ட்டி எக்ஸ்ப்ளாய்ட் புரோகிராம்:
இந்த வகை புரோகிராம்கள், பிரவுசருக்கான பாதுகாப்பினை வழங்குகின்றன. இவை ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் அல்ல. பிரபலமான சாப்ட்வேர் புரோகிராம்கள், பல லட்சக் கணக்கில் குறியீடு வரிகளைக் கொண்டிருக்கும். இவற்றில் சில பிழையான குறியீடுகளைக் கண்டறிந்து ஹேக்கர்கள் தங்களுடைய வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்களை அனுப்புகின்றனர். இவற்றைப் பெற்ற சில புரோகிராம்கள், வைரஸ் தாக்குதலினால், வழக்கமான செயல்பாட்டிற்கு மாறாகச் செயல்படுகையில், ஆண்டி எக்ஸ்ப்ளாய்ட் புரோகிராம், அதனைப் புரிந்து கொண்டு பிரவுசருக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு தருகின்றன. வைரஸ்களை அழிப்பதில் இது ஈடுபடாது. இத்தகைய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்து இயக்கி வைப்பது பிரவுசர் பாதுகாப்பிற்கு நல்லது. இந்த வகையில் Malwarebytes Anti-Exploit என்ற ஆண்டி எக்ஸ்ப்ளாய்ட் புரோகிராம் சிறப்பாகச் செயல்படுகிறது. இதனைப் பெற https://www.malwarebytes.org/antiexploit/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இந்த புரோகிராம் முற்றிலும் இலவசமே. ஏன் இதற்கு எதிராக ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தக் கூடாது? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். நாம்
எப்போதும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் செயல்பாட்டில் நம்பிக்கை வைத்து செயல்பட முடியாது. சாப்ட்வேர் புரோகிராம்களில் உள்ள பிழைக்குறியீடுகளைப் பயன்படுத்த முடியாத வகையில் இந்த ஆண்ட்டி எக்ஸ்ப்ளாய்ட் புரோகிராம்கள் பாதுகாப்பு தருவது நல்லது தானே.


பிரவுசர் எக்ஸ்டன்ஷன்கள்:
பிரவுசர்களில், கூடுதல் வசதி தரும் வகையில் நீட்சியாக சில செயலிகள் தரப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், இணையத்தில் செயல்பாடு மிகவும் எளிதாகவும் விரைவாகவும் மேற்கொள்ளப்படும். ஆனால், இவற்றைப் பயன்படுத்துவதில் நாம் அதிகக் கவனம் கொள்ள வேண்டும். சில கெடுதல் விளைவிக்கும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், விளம்பரங்களை நாம் பயன்படுத்தும் இணைய தளங்களில் இடைச் செருகி, நாம் அழுத்தும் கீகளை அப்படியே பெற்று, இந்த மோசமான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைத் தயாரித்து அனுப்பியவருக்கு அனுப்பி வைக்கும்.
இதன் மூலம் நம் தனிப்பட்ட வகை தகவல்கள் திருடப்பட்டு நமக்கு, நிதி இழப்பு ஏற்படலாம். எனவே, நமக்குத் தேவையான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை மட்டும் பயன்படுத்தவும். எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை மதிப்பிட்டு அவை நல்லவை தானா என்று அறிந்து பயன்படுத்துவது நன்மை தரும்.

மோசமான தளங்கள்:
பிரவுசரின் பாதுகாப்பிற்கு மேலே கூறப்பட்ட வழிகளை நாம் பின்பற்றினாலும், நம்மை சிக்கலில் சிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மோசமான தளங்களை, இணையத்தில் சென்று பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். பல இணைய தளங்கள் மோசமான சாப்ட்வேர் சங்கதிகள், படங்கள் மற்றும் தகவல்களைத் தரவிறக்கம் செய்திட நம்மைத் தூண்டும். அவை மிக அபாயமான விளைவுகளை நம் கம்ப்யூட்டரில் ஏற்படுத்தும் புரோகிராம்களாக இருக்கும். எனவே, இது போன்ற தளங்களை அணுகிப் பார்க்கும் ஆசையை அறவே ஒழித்திட வேண்டும்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------

NEFT மற்றும் RTGS ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கும் கட்டணங்களை ரத்து செய்து ரிசர்வ் வங்கி பிறப்பித்து உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு கடந்தமாதம் கூடி பல்வேறு முடிவுகளை எடுத்தது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரெப்போ 6.00 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


மேலும், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக NEFT மற்றும் RTGS பண பரிவர்த்தனைகள் செய்வதற்கு தற்போது வங்கிகள் வசூலித்து வரும் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.
இதன் பயன் வாடிக்கையாளர்களை சென்றடையும் வண்ணம் வர்த்தக வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவித்தது.

ரிசர்வ் வங்கி அறிவித்தபடி NEFT மற்றும் RTGS பண பரிவர்த்தனை கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இன்று முதல் நடைபெறும் வங்கி பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை.

நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, வங்கி பண பரிவர்த்தனைகளுக்கள் நிப்ட் கட்டணமாக ரூ. 1 முதல் ரூ. 5 வரை வசூலித்து வந்தது. அதுபோலவே ஆர்டிஜிஎஸ் கட்டணமாக ரூ. 5 முதல் ரூ. 50 வரை வசூலித்து வந்தது .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?