அரசு உருவாக்கிய குடிநீர்ப் பஞ்சம்.
இன்று சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை உண்டாக்கியதே அதிமுக அரசுதான்.
தங்களின் இந்த எட்டு ஆண்டுகால ஆட்சியில் ஒரு குட்டையைக்கூட தூர் வரவில்லை இந்த அதிமுக அரசு.
ஆனால் ஆண்டுதோறும் தூர் வாரியதாக பட்டியல் போட்டு பல் நூறு கோடிகள் சுருட்டப்பட்டுள்ளன.
செம்பரம்பாக்கம் நிகழ்வை மறந்திருக்க மாட்டிர்கள்.அது கூட தூர் வாராததால் உண்டான வெள்ளம்தான்.
அதை அனுபவித்தும் கூட இந்த அரசு நீர்நிலைகளைத்தூர் வாரவில்லை.
இயற்கை போதுமான நீரை மழை மூலம் புவிக்கு வழங்கத்தான் செய்கிறது.ஆனால் அதை சேமித்து வைக்காதது யார் குற்றம்?
இவ்வளவு அனுபவித்தும் கூட மழை பெய்ததும் இந்த அதிமுக அரசு ,பழனிசசாமியும்,வேலுமணியும் குளங்களைத்தூர் வருவார்களா என்றால் மாட்டார்கள்.
அவர்களுக்கு அதைவிட முக்கிய வேலை டெல்லிக்கு காவடி தூக்கி செல்வதன் மூலம் தங்கள் நாற்காலிகளை காப்பாற்றிக்கொள்வதுதான்.
குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க என்ன செய்யலாம் என்று கேட்டவுடன், ஒட்டு மொத்தமாக அனைவரும் சொல்லக்கூடியது மழை நீரைச் சேமிக்க வேண்டும்; ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும் என்பது தான். உண்மைதான்; இந்த இருவழிகள்தாம் நிரந்தரமாகக் குடிநீர் பிரச்சனையைத் தீர்த்துவைக்கும்.
மனிதர்கள் உருவாக்கிய நீர்நிலைகள்
நீர்நிலைகளைச் சார்ந்துதான் மனித இனமே வளர்ந்துவந்துள்ளது.
குடியிருப்புகள் உருவாகும் இடங்கள் ஆற்றங்கரையோரமாக இருந்துள்ளன. பிற இடங்களில் குடியிருப்புகளை உருவாக்கினால் அங்கே ஒரு குளம்விவசாயத்துக்காகவும், ஒரு கிணறுகுடிநீருக்காகவும், ஒரு குட்டை கால்நடை களுக்காகவும் உருவாக்கப்பட்டிருக்கும்.
மனிதர்கள் உருவாக்கிய நீர்நிலைகளைக் கிணறு, குளம், கண்மாய், ஏரி, இலஞ்சியம், கயம், கேணி, கோட்டகம், மலங்கன், மடு,ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம்,நளினி, பொய்கை, குட்டம், குட்டை, கிடங்குஎன்று பல பெயர்களில் அழைத்து வந்துள்ளார்கள். இவைதாம் நிலத்தடி நீர் ஆதாரங்களாகவும், மழைநீர் சேகரிக்கும் அமைப்புகளாகவும் விளங்கியுள்ளன.
வேளாண்மை செய்த மக்கள் தங்களின் நீராதாரங்களைப் பராமரித்திடக் குடிமராமத்து என்ற முறையைப் பின்பற்றி வந்துள்ளனர். குளங்களைத் தூர்வாருவதற்கு உடல் உழைப்பைக் கொடுத்துள்ளனர். இயலாதவர்கள் நிதி உதவி செய்துள்ளனர்.
குளத்தின் மீதான உரிமை என்பது விவசாயம் செய்பவர்களுக்கு மட்டுமின்றி, மீன் பிடிப்பவர்கள், கால்நடை வளர்ப்பவர்கள், சலவைத் தொழில் செய்பவர்கள் என்று நீரைப் பயன்படுத்தும் அனைவருக்கும் பொதுவானதாகவே இருந்துள்ளது.
அதனால், பராமரிக்கும் பணியிலும் ஒன்றுசேர்ந்து ஈடுபட்டுவந்துள்ளனர். குளத்தில் பாசன முறைகளைச் செய்வதற்கும் கண்காணிப்பதற்கும், கம்புக்கட்டியார், நீர்க்கட்டியார், நீர்பாய்ச்சி யார், குடும்பர், மடைக்குடும்பர், கரையார், நீராணிக்கர் என்று தனியாகச் சிலர் இருந்துள் ளனர். குளங்களைப் பாதுகாக்கும் காவற் காரர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மழை பெய்யும்போது அடித்துவரப்பட்ட மண், மணல், புழுதி போன்றவை குளத்தின் அடியில் தேங்கி விடுவதுண்டு. அதில் பயிர்களுக்குத் தேவையான, பல நுண்ணுயிர் சத்துகளும் அடங்கியிருக்கும்.
வண்டல் மண் அல்லது கரம்பை மண் எடுக்கும் விவசாயிகள் அதைத் தங்களது வேளாண் நிலங்களின் உயிரோட்டத்தை அதிகரிக்கவும் வளப்படுத்தவும் பயன்படுத்துவார்கள்.
இதை சேடை மண், சேற்று மண் என்றும் சில பகுதிகளில் அழைக்கின்றனர்.வண்டல் எடுத்த பின்பு குளங்களைத் தூர்வாரி, கரையைப் பலப்படுத்துவார்கள். குளங்களில் நடுவே குருவித்திட்டு என்று அழைக்கக்கூடிய மணல் திட்டுகளை உருவாக்குவார்கள்.
இந்தத் திட்டுகளில் பனை,பூவரசு, வேம்பு, இலுப்பை, ஆலமரம் உள்ளிட்டமரங்களையும் நட்டு வளர்ப்பார்கள். இந்தத் திட்டுகள் பறவைகளுக்கு அடைக்கலமாக இருக்கும். கால்நடைகள் இளைப்பாறும்.
விவசாயிகள் ஓய்வெடுப்பார்கள்.
குளங்கள் தூர்வாரப்படும்போது குளத்தின் கரையோரத்தில் மண் அள்ளக் கூடாது; மடை, கலுங்குப் பகுதியில் மண் அள்ளக் கூடாது என்பதை விவசாயிகள் வழக்கமாகவே கொண்டிருந்தனர்.மன்னர் காலங்களில் ஏரிவாரியம் அமைத்து நீர்நிலைகளைப் பராமரித்தனர்.
அரசின் பொறுப்பில் ஏரிகள்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ரயத்துவாரி முறையில் நிலங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. நிலவரி வசூலிக்கப்பட்டது. அதனால், 1800ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏரி, குளங்களைப் பராமரிக்க ராணுவப்பொறியாளர் நியமிக்கப்பட்டார்.
1850க்குப் பின்னர் கடுமையான வறட்சி ஏற்பட்டதால், 1878களுக்குப் பின், ஏரிகளைப் பராமரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது. 200 ஏக்கருக்கு மேல் பாசனம் பெறும் ஏரிகள் அரசின் கட்டுப்பாட்டில் சென்றன. மற்றவை ஊரின் பொதுச்சொத்தாகப் பராமரிக்கப் பட்டன.
ஏரி மராமத்து ஆய்வாளர் நியமிக்கப்பட்டார்.1858இல் கொண்டுவரப்பட்ட சென்னை வேலையாட்கள் சட்டம், நில உடைமை யாளர்களைக் கட்டாயமாகக் குடிமராமத்து முறைகளில் ஈடுபட வைத்தது.
பாசன முறை களில் அரசின் பங்கு பற்றி அச்சட்டத்தில் எந்தவிதியும் இல்லாததால், 1901ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாசன ஆணையம் இச்சட்டத்தை ரத்து செய்தது.ஆங்கிலேயர்கள் நீரின் மீதான உரிமையைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே விரும்பினார்கள்.
விடுதலை இந்தியாவில் உணவு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், நீர்நிலைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றன.இந்தியா விடுதலை அடைந்த பிறகு ஏரி, குளங்களைப் பராமரிக்கப் பொதுப்பணித் துறை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
நூறு ஏக்கருக்கு மேல் பாசனம் பெறும் குளங்கள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் சென்றன. நூறு ஏக்கருக்குக் குறைவாக உள்ள குளங்கள் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் சென்றன.
ஏரி, குளங்களில் நீர் வற்றிய பின்பு அதில் விவசாயம் செய்வதும் மேய்ச்சல் நிலமாகப் பயன்படுத்துவதும் நடைமுறையிலிருந்து வந்துள்ளன.
வற்றிப்போன அக்கறை
மன்னர் காலங்களில் நடைபெற்ற போரின்போதும், முகாலயர்கள் படையெடுப்பின் போதும், சைவர்கள் சமணக் கோயில் களை இடித்தபோதும், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் போரிட்டபோதும், அரண் மனைகள், கோட்டைகள், மதவழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
ஆனால், ஏரி, குளம், நீர்த்தேக்கம், தடுப்பணைகள் ஆகியவை எந்தவித சேதமும் அடைந்துவிடக் கூடாது என்று அனைவரும் பொறுப்புடனே இருந்துள்ளனர்.
தூர்வாருதலில் நடக்கும் தவறுகள்
இன்றைய காலகட்டம் அப்படியில்லை. தூர்வாருகிறோம் என்ற பெயரில் ஏரி, குளங்களிலிருந்து லாரி, லாரியாக மணற்கொள்ளை நடைபெறுகிறது.
வண்டல் மண் எடுத்துவந்த குளங்களில் சவுடுமண், பாறைமண், செம்மண், சரளைக் கற்கள் எடுக்கவும் அனுமதி இருப்பதால், விவசாயிகள் மட்டுமின்றி பொருளீட்டும் நோக்கத்தோடு தனி நபர்களும் மண் அள்ளுகின்றனர். செங்கல் சூளை, சாலைகள் அமைப்பது, கட்டடப்பணிகளின் தரைத்தளத்தை நிரப்புவது, தாழ்வான பகுதிகளை மேடாக்குவது என்று பல்வேறு பணிகளுக்கு ஏரி, குளங்களிலிருந்து மண் அள்ளப்படுகிறது.
வியாபார நோக்கத்தோடு அள்ளப்படுவதால், குளத்தைப் பராமரிப்பதுஅல்லது பாதுகாப்பது கேள்விக்குறி யாகிவிட்டது.
கரையின் உயரத்திலிருந்து இரு மடங்கு நீளத்திற்கு மண் அள்ளக் கூடாது,
ஒரு மீட்டர் ஆழத்திற்கும் மேல் பள்ளம் தோண்டக் கூடாது, மதகு, கலுங்கு, தரைப்பாலம், குளக்கரை சேதம் ஆகக் கூடாது என்ற சிறு கனிம சலுகைச் சட்டம் 1959இல் கூறப்பட்ட விதிமுறை கள்கூட அப்பட்டமாக மீறப்படுகின்றன.
குளம் என்றால் நீர்வரத்துப் பாதையி லிருந்து பாசனத்துக்கு நீர் திறந்து விடப்படும் மடை இருக்கும் பகுதி வரை சாய்வு தளம்போல அமைந்திருக்கும்.
குளம் நிறைந்து வெளியேறும் கலிங்கு சற்று மேடான பகுதியில் இருக்கும். ஆனால், இப்போது தூர்வாரப்படும் குளங்களில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு நீர்நிலைகளின் கட்டமைப்பே சிதைக்கப்படுகிறது.
மழை நீர் வந்தால், மடை இருக்கும் பகுதியில் மட்டுமின்றி, குளத்தின் உள்ளேயே ஆங்காங்கே குட்டைகள் போல நீர் தேங்கி நிற்கும்.இதனால், நீரின் பெரும்பகுதி ஆவியாகிவிடும்.
குளத்தில் நீர் தேங்க ஏதுவான பகுதிகள், நீர்வரத்துப் பகுதிகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள், நீர்த்தேக்கப் பகுதிகள் என ஒவ்வொரு பகுதிகளையும் அளவீடு செய்து, எவ்வளவு மண் அள்ள வேண்டும் என்று கணக்கிடுவார்கள். அத்தகு பண்டைய நீர் மேலாண்மை முறைகள் இன்றைய தூர்வாரும் பணிகளில்
செ யல்படுத்தப்படவில்லை.
வண்டல் மண் தவிர, தளர்வான மண் இருந்தால் எடுக்கக் கூடாது.
களி நிரம்பிய மண்ணிலும், கடினமான மேற்பரப்பு கொண்ட மண்ணிலும் மழைநீர் உட்புகாது. அந்த மண்ணும் நீரை உள்வாங்கித் தேக்கி வைக்காது.
பாறை அடுக்கில் நீரைத் தேக்கி வைப்பதால் நிலத்தடி நீர் மேம்படாது, மண் வளமும் அதிகரிக்காது.
கரைவேட்டிகளும் நீர்நிலைகளும்
ஏரி, குளங்களின் மீதான ஆக்கிர மிப்பைக் கட்டுப்படுத்தவும் அகற்றவும் தமிழ்நாடுஅரசு ஏரிகளைப் பாதுகாத்தல், ஆக்கிர மிப்புகளை அகற்றுதல் சட்டத்தை 01.10.2007இல் கொண்டுவந்தது.
நடை முறையில் அந்தச் சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
நீரைப் பயன்படுத்து வோர் சங்கம், பாசனதாரர் சங்கம், ஆயக் கட்டுதாரர் சங்கம், விவசாயச் சங்கம் எல்லாவற்றிலும் கரைவேட்டி கட்டியவர்கள் பொறுப்புக்கு வந்ததால், நீர்நிலைகளின் மீதான உரிமையே கேள்விக்குரியதாக மாறி விட்டது.
இருக்கிற ஏரி, குளங்களைத் தூர்வாரு கிறோம். அந்த ஏரிக்கும் குளத்துக்கும் நீர்வரத்து ஓடைகள், கால்வாய்கள் எங்கே இருக்கிறதுஎன்றால் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும்.
நீர்வரத்துப் பகுதிகள் மட்டுமில்லை; நீர்ப் பிடிப்புப் பகுதிகளும் கிடையாது. ஏரியைச் சுற்றி பெய்யும் மழைநீர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து பெருக்கெடுத்து ஓடிவந்துதான் ஏரியை நிரப்பும்.
சென்னை போன்ற பெருநகரங்களில் ஏரி இருக்கிறது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகள் அனைத்தும் குடியிருப்புகளாகவே இருக்கின்றன. கிராமப்புறங்களில் மேய்ச்சல் நிலங்களாக இருந்த, நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன.
நீர்வரத்து இருந்தால்தானே தூர்வாரிய ஏரி நிரம்பும்?
முறையாகத் தூர்வாரினால்தானே நீரைச் சேமிக்க முடியும்?
அதனால், அரசு தூர்வாரினாலும், தன்னார்வலர்கள் தூர்வாரினாலும், தனியார் தூர்வாரினாலும் நீர்த்தேக்கப் பகுதி, நீர்வரத்துப் பகுதி, நீர்ப்பிடிப்புப் பகுதி, பாசனப் பகுதி அனைத்தையும் பராமரிக்கும், பாதுகாக்கும் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைச் செயல்பாடுகள்தான் நீரைச் சேமிக்கும் நிலையான தீர்வாக அமையும்.
இவையெல்லாம் தமிழக அதிமுக அரசுக்குத் தெரியுமா?
இவைபற்றிய ஞானம் அதிமுக ஆட்சியாளர்களுக்கு உண்டா? என்ற கேள்விகள் எழுகின்றன.
ஏனென்றால் விவசாயிகள் சங்கங்களும், விவசாயத் தொழிலாளர் சங்கமும் இப்பிரச்சனையை இடைவிடாமல் எழுப்பி வருகின்றன.
இன்னும் குறிப்பாக நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துடன் இணைத்து, தமிழகம் முழுவதும் மக்கள் பங்கேற்புடன் பிரம்மாண்டமான முறையில் செய்ய முடியும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
இது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து சமீபத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கம் தமிழகம் முழுவதும் எழுச்சிமிகு போராட்டத்தையும் நடத்தியிருக்கிறது.
ஆனாலும் தமிழக ஆட்சியாளர்கள் இதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறார்கள்.சட்டமன்றம் கூடியுள்ள நிலையில், நீர்நிலைகளை தூர்வாருவது குறித்த பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்துமா என்ற கேள்வி பிரதானமாக எழுந்துள்ளது.
(மின்னம்பலம் இணைய ஏட்டில் கப்பிகுளம் ஜெ.பிரபாகர் எழுதிய விபரங்களுடன்)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய மக்களாட்சிக்கு படுகுழி.
ஒரே நாடு, ஒரே வரி என்று ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வந்த மோடி அரசு, பெரும்பகுதி மக்க ளை வரி என்னும் வலைப்பின்னலில் சிக்க வைத்தது.
அடுத்து ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று விவாதத்தை துவக்கியுள்ளனர். நாட்டினுடைய ஜனநா யகத்தை வேரறுக்கும் இந்த வேலையில் மோடி அரசு முனைப்பாக உள்ளது.
மாநில உரிமைகளை கீழறுப்பு செய்யும் வேலை யில் அடுத்தக்கட்டமாக ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு என்று அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் பொது விநியோகத்தில் மாநிலங்களின் பங்கை ஒட்டுமொத்தமாக காலி செய்ய துணிந்துவிட்ட னர்.
ஒவ்வொரு பட்ஜெட்டிலும் உணவு மானியத் திற்கான தொகை என்பது தொடர்ந்து வெட்டப் பட்டுக்கொண்டே வருகிறது.
பல மாநிலங்கள் தங்களது சொந்த நிதியில் ஒரு பகுதியை பொது விநியோக முறைக்கு வழங்குவதன் மூலம்தான் ஓரளவு மலிவு விலையில் பொருட்கள் கிடைக்க வகை செய்யப்படுகிறது.
மேலும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கூட்டுறவுத் துறையின் மூலமும் பொது விநியோக முறை நடைபெறு கிறது.
இதையெல்லாம் சீரழித்து பொது விநியோ கத்தையும் ஒட்டு மொத்தமாக மத்திய அரசு தன்னு டைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற் கான சதியே ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு என்ற திட்டமாகும்.
இது துவக்கத்திலேயே எதிர்க்கப் பட வேண்டிய ஒரு திட்டமாகும்.
மோடி அரசின் தயவில் தன்னுடைய ஆட்சிக் காலத்தை நீட்டித்து வரும் மாநில அதிமுக அரசு இந்தத் திட்டத்திற்கு தன்னுடைய எதிர்ப்பை வலு வாக பதிவு செய்யவில்லை.
தங்களுடைய சுயலாபத் திற்காக தமிழகத்தின் உரிமைகளை காவு கொடுப்பது மன்னிக்க முடியாத கொடும் குற்றமாகும்.
நம்முடைய அரசியல் சாசனம் இந்தியாவை பல மாநிலங்கள் கொண்ட, கூட்டாட்சி அடிப்படை யிலான ஒன்றியம் என்றே வரையறுத்துள்ளது.
அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள மதச்சார் பின்மை கோட்பாட்டின் மீது மண் அள்ளிப் போடும் வேலையை செய்து வரும் மோடி அரசு தற்போது கூட்டாட்சி கட்டமைப்பின் ஆணிவேரை யும் அசைத்துப்பார்க்க துணிந்துவிட்டது.
புதியக் கல்விக்கொள்கை என்ற பெயரில் உயர்கல்வியை மட்டுமின்றி துவக்கக் கல்வி யையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலும் மோடி அரசு தற்போது மாநிலங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளும், மாவட்ட நீதிபதிகளும் அகில இந்திய தேர்வின் மூலமாகவே தேர்வு செய்யப்படு வார்கள் என்று அறிவித்துள்ளது.
இதற்காக அகில இந்திய நீதித்துறைத் தேர்வு ஆணையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள். நீட் தேர்வு என்ற பெயரில் மருத்துவக் கல்வியிலி ருந்து ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட மாணவர்களை விரட்டும் சதிபோன்றது தான் இதுவும்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலின்படி மிருக பலத்துடன் கூடிய மத்திய அரசு, பலவீனமான மாநில அரசுகள் என்பதை நோக்கி நாட்டை நடத்திச் செல்கிறது மத்திய பாஜக அரசு. இதை முறியடிக்காவிட்டால் கூட்டாட்சி என்பது வெறும் அலங்கார வார்த்தையாகிவிடும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
தங்களின் இந்த எட்டு ஆண்டுகால ஆட்சியில் ஒரு குட்டையைக்கூட தூர் வரவில்லை இந்த அதிமுக அரசு.
ஆனால் ஆண்டுதோறும் தூர் வாரியதாக பட்டியல் போட்டு பல் நூறு கோடிகள் சுருட்டப்பட்டுள்ளன.
செம்பரம்பாக்கம் நிகழ்வை மறந்திருக்க மாட்டிர்கள்.அது கூட தூர் வாராததால் உண்டான வெள்ளம்தான்.
அதை அனுபவித்தும் கூட இந்த அரசு நீர்நிலைகளைத்தூர் வாரவில்லை.
எங்களுக்கு மூளை இருக்கிறது.அறிவு மட்டும்தான் இல்லை. |