பழைய சோறு.
பழந்தமிழர்களின் முக்கியமான உணவு பட்டியலில் பழைய சோறுக்கு நிச்சயம் இடமுண்டு.
நம் முன்னோர்களின் ஆரோக்கியத்துக்கு பக்கபலமாய் இருந்ததற்கு முக்கிய காரணம் பழைய சோறு.
பழைய சோற்றுத் தண்ணீர் அல்லது நீராகாரத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கொட்டி கிடக்கின்றன.
இன்று ஏழைகளின் உணவுப் பட்டியலில் மட்டுமே இருக்கிறது பழையசோறு.
அதுவும் வேறு வழியில்லாமல்தான்
- பழைய சோறு உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு சக்தியை அளிக்கும். அத்துடன் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் என பலவித சத்துகளையும் அள்ளி தருகிறது.
- உடலுக்கு நன்மை தரும் பக்டீரியாக்கள் நிறைந்திருப்பதுடன் ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.
- கஞ்சியை வடிக்காமல் குக்கரில் வேகவைத்து சாப்பிடுவது தான் நீரிழிவுக்கு காரணம். இதுமட்டுமின்றி குக்கரில் சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றது.
- சோற்றை கொதிக்க கொதிக்க சாப்பிடக்கூடாது மிதமான சூட்டில் தான் சாப்பிட வேண்டும். அதுபோல சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டாலும் கீல்வாதம் மூட்டு வாதத்தை ஏற்படுத்தும். குறிப்பாக பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது.
- சோறு வடித்த கஞ்சியை ஆறிப்போய் குடித்தால் வாயுவை உண்டாக்கும். சோறு வடித்த கஞ்சி சூடாக இருக்கும் போது சிறிது உப்பை போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரிப்படுத்தும். சோறு உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க.
கொரோனா தொற்று பரவல் தொடங்கி கிட்டத் தட்ட இரண்டு ஆண்டுகாலம் ஆகி விட்ட நிலையில், இன்று உலகம் அதன் பிடியில் இருந்து மீளவில்லை.
சாமான்ய மக்கள் முதல், நாட்டில் முக்கிய தலைவர்கள் வரை அனைவரும், இதனால் நேரிடையாகவே, மறைமுகமாவோ பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை எதிர் கொண்டு மீள எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது மிக அவசியம்.
தொற்றுநோயிலிருந்து உங்களை காக்க ஆயுர்வேதத்தின் சில நடை முறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தலாம். இது வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் அதை எதிர்த்துப் போராட உதவும்.
மஞ்சள்,மிளகு பால்
மஞ்சள் பால் என்பதை தங்க பால் என்றும் சொல்லலாம். ஏனென்றால், அதனை சாப்பிடுவதல உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். மஞ்சளில் காயங்களை விரைவில் ஆற்றும் குணங்கள் உள்ளன.
மஞ்சள் பால் நல்ல தூக்கத்தை கொடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
மஞ்சள் பாலை தொடர்ந்து குடிப்பதால் சோர்வு குறைவதுடன் தொண்டை வலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
மஞ்சளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால், அவை வீக்கத்தைக் குறைக்கின்றன. அதோடு மூளை செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.மிளகு தூளைச் சேர்ப்பதால் சளித் தொல்லைகளுக்கு மிக நல்லது.
மூச்சுப் பயிற்சி
சளி, காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று போன்ற நோய்கள் சுவாச மண்டலத்தை மோசமாக பாதிக்கிறது.
எனவே நுரையீரலின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தி, அவற்றின் திறனை அதிகரிக்க யோகா பயிற்சி செய்வது அவசியம்.
எளிமையான பயிற்சிகள் மூலம் வலிமையான உடலை பேண முன்னோர்கள் உருவாக்கிய அற்புத பயிற்சியே மூச்சு பயிற்சி .
நெல்லிக்காய் லேகியம்
நெல்லிக்காய் லேகியம்(Chyawanprash) வெந்நீருடன் கலந்து சாப்பிடுவதும் உங்களுக்கு பலன் தரும்.
நெல்லிக்காய் லேகியத்தில் உள்ள பல வகையான மூலிகைகள் தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் கவசமாக செயல்படுகிறது. இரவு தூங்கும் முன் மஞ்சள் பாலுடன் கூடவே, இதனையும் சாப்பிடலாம்.
மூக்கு சிகிச்சை
மூக்கில் சில துளிகள் நெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவுவதும் தொற்றில் இருந்து உங்களை காக்கும். மூக்கில் நுழையும் வைரஸ்கள் மற்றும் ஆபத்தான பாக்டீரியாக்கள் நாசி சிகிச்சை மூலம் பெரிதும் தடுக்கப்படும். வீட்டை விட்டு வெளியேறும் முன் நாசுதுவாரங்களின் எண்ணெய் தடவிக் கொண்டு செல்வது பெரிதும் உதவும். குளிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் கூட நாசியில் எண்ணெய் தடவும் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
மூலிகை நீர்
மூலிகை தேநீர் அதாவது மூலிகை டீ உட்கொள்வது பெரும் நன்மை பயக்கும். மூலிகை தேநீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால், சளி-காய்ச்சலில் இருந்து பெரும் நிவாரணம் அளிக்கிறது.
மூலிகை தேநீரில் துளசி, கிராம்பு, இஞ்சி, இலவங்கப்பட்டை போன்றவற்றை சேர்க்கவும். இது நோய் எதிர்ப்பு சக்தியை பெரிதும் அதிகரிக்க உதவும்.
----------------------------------------------------------
சயனைடு
-------------------------------------------------------------------------------