மதம் கொண்ட பா.ஜ.க.
மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்டதற்கு கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கான அழுத்தமே காரணம் என்று பாஜகவினரும், இந்து அமைப்பினரும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், மாணவி தந்தை சார்பில் சி.பி.சி.ஐ.டி விசாரணகேட்டடு தொடரப் பட்டபா.ஜ.க வுக்காகஇந்த வழக்கை அவசர அவசரமாக எடுத்து சிபிசிஐ டி விசாரணைக்கு கோரிய மனுவை சி.பிி.ஐ.விசாரணை என மாற்றி உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
தற்போது அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், தற்கொலை காரணம் குறித்து பரபரப்பப்பட்டு வரும் மத காரணங்களுக்கு மத்தியில், லாவண்யா தனது இரண்டாவது தாயான சித்தி சரண்யாவால் அனுபவித்த சித்ரவதைகளை குறித்து பாட்டி அங்கயற்கரசி தழுதழுத்த குரலால் விவரித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் வடுக்கர்பட்டியைச் சேர்ந்தவர் அங்கயற்கரசி. இவரது மகள் கனிமொழி. கனிமொழிக்கு தனது 16 வயதிலேயே முருகானந்தம் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் லாவண்யாவும் இரு மகன்களும்.
இந்நிலையில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு லாவண்யாவின் தாய் கனிமொழி தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னர் முருகானந்தம் சரண்யாவை உடனடியாக இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த லாவண்யாவின் பாட்டி அங்கயற்கரசி, பேத்தி, பேரன்கள் மூன்று பேரின் வாழ்க்கையை நினைத்து பார்க்காமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மருமகனிடம் முறையிட்டுள்ளார். மேலும், நாங்கள் வரதட்சணையாக கொடுத்த நிலத்தை பேர பிள்ளைகள் மீது எழுதி வையுங்கள் என்றும் கேட்டுள்ளார்.
ஆனால், முருகானந்தம் அதற்கு சம்மதிக்கவில்லை. லாவண்யாவின் தாத்தாவும் அதற்காக போராடி பார்த்துள்ளார். இந்நிலையில், தாத்தா, பாட்டியிடம் இருந்து மூன்று பிள்ளைகளையும் முருகானந்தனும் சித்தி சரண்யாவும் பிரிக்க முடிவு செய்துள்ளனர்.
முருகானந்தன் சரண்யாவுடன் அதே கிராமத்தில் வசித்து வந்தாலும், பேரக்குழந்தைகளிடம் பேசாமல், பார்க்காமல் தாத்தா பாட்டி இருவரும் இருந்துள்ளனர்.
ஏன்? என்று அங்கயற்கரசியிடம் கேட்டதற்கு, ''
சரண்யா வந்த பிறகு சில நாட்கள் பேரக்குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
ஆனால், என்னுடன் பேசியதற்காகவும், என் வீட்டிற்குச் சென்றதற்காகவும் பேரக்குழந்தைகளை சரண்யா தொடர்ந்து அடித்து தாக்கினார். அதனால் நான் அவர்களுடன் பேசுவதையும் அவர்களின் தெருவில் செல்வதையும் நிறுத்தினேன். என்னால் என் பேரக்குழந்தைகள் அடிபடுவதை நான் விரும்பவில்லை, ”என்று அவர் கூறினார்.
மேலும், லாவண்யா இறந்த பிறகு, போலீஸ் இரண்டு முறை என் வீட்டிற்கு வந்து, சித்திரவதை பற்றி எனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டார்கள்.
நான் அதே ஊரில் வசிக்க வேண்டியிருப்பதாலும், முருகானந்தம் உறவினர் என்பதாலும் எனக்கு எதுவும் தெரியாது என்றேன்.
ஆனால், போலீசார் ஏற்கனவே இந்த விவரங்களை சேகரித்துள்ளனர், என்னால் மறைக்க முடியவில்லை, எனக்குத் தெரிந்த அனைத்தையும் அவர்களிடம் கூறினேன். நான் எதற்கும் பொய் சொல்லவில்லை, பயப்பட வேண்டியதில்லை'' என தெரிவித்தார்.
அத்துடன் லாவண்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, நானும், என் கணவரும், என் இளைய மகனும் பேத்தியை பார்க்கச் சென்றோம்.
அவள் அதிகம் பேசவில்லை, ஆனால் அவள் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று என்னிடம் கேட்டாள். நான் அவளுக்கு பால் வாங்கி கொடுத்தேன். ஏம்மா இப்படி பண்ணிட்டே? என்று எனது மகன் கேட்டதற்கு, அவள் எந்த பதிலும் கூறவில்லை.
இரு தம்பிகளை கவனித்துக் கொள்ளுமாறு மட்டும் என் மகனைக் கேட்டுக்கொண்டாள், ” என்று அங்கையற்கரசி நினைவு கூர்ந்தார்.
மேலும், கொரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வரும் வரை தனது மூன்று பேரக்குழந்தைகள் கிராமத்தில் இல்லை என்று கூறிய அங்கயற்கரசி “லாவண்யா ஒரு உறைவிடப் பள்ளியில் கொண்டு விடப்பட்டார் என்றும் இரண்டு பேரன்கள் பக்கத்து கிராமத்தில் உள்ள அவர்களின் அத்தை வீட்டில் விடப்பட்டதாகவும் கூறினார்.
ஊரடங்கின்போது ஒருநாள் லாவண்யா இங்கே இருந்தபோது, தண்ணீர் எடுப்பதற்காக வந்திருந்தாள். நான் அவளை அடையாளம் காணவில்லை.
ஆனால், அவள் என்னை அடையாளம் கண்டு பேசினார் என்று கூறிய அங்கயற்கரசி, அதற்காகவும், லாவண்யாவை சரண்யா தாக்கியதாக தெரிவித்தார்.
முன்னதாக, லாவண்யாவின் கையில் தீக்காயமும், கன்னத்தில் தாக்கப்பட்ட காயங்களும் இருந்தன.
அதுகுறித்து கேட்டபோது, லாவண்யா எதையோ திருடிவிட்டதாக கூறி, சித்தி சரண்யா பேத்தியின் உள்ளங்கையில் கற்பூரம் ஏற்றி தண்டனை கொடுத்ததாகவும், கடுமையாக அடித்து தாக்கியதாகவும் தெரிவித்தார் என பாட்டி அங்கயற்கரசி விளக்கினார்.
நாட்டில் உயிர்கொடுத்த மாணவர்களுக்கு விசாரணைக் குழு அமைக்காத பா.ஜ.க.இதற்கு நடிகை தலைமையில் குழு அமைத்தது.
ஆனால் அவர்கள் பாட்டி அங்கயற்கரசியை விசாரிக்கவே இல்லை.
--------------------------------------------------------------------------+
வரவு- செலவு அறிக்கை( பட்ஜெட்) இல்லை.
விற்பனை அறிக்கை.
நிதிநிலை அறிக்கை என்ற பெயரால் நிதியை நிர்மூலம் செய்யும் அறிக்கையை ஆண்டுதோறும் வாசித்துக் கொண்டு இருக்கிறார் ஒன்றிய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன்!
பா.ஜ.க. அரசின் ஒற்றைக் கொள்கையாக, அரசின் சொத்துகளை விற்பது மட்டுமே இருக்கிறது. அதனைத் தான் வேறு வார்த்தைகளில் சொல்லி வருகிறார்கள். விற்றோம் - விற்றுக் கொண்டிருக்கிறோம் - விற்போம் என்பதைத்தான் ஆண்டுதோறும் கூறுகட்டி கூவிக்கூவி ஏலம் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
அதுவும் பொதுத்துறை பங்குகளை விற்பதைக் கொள்கையாகவே வைத்துள்ளார்கள்.
இந்த ஆண்டு இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம், பாரத்பெட்ரோலியம், கப்பல் கழகம், கண்டெய்னர் கழகம் ஆகியவற்றின் பங்குகளை விற்கப் போகிறார்கள்.
ஏற்கனவே, ஏர் இந்தியாவை விற்றுவிட்டதை பெருமையாகச் சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன். அடுத்த நிதி ஆண்டில் அரசின் பங்குகளை விற்று 65 ஆயிரம் கோடியை இலக்கு வைத்துள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்.
மத்தியதர வர்க்கம் அதிகம் எதிர்பார்ப்பது வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா என்பதுதான்.
அதில் மாற்றம் இல்லை என்று சொன்னதன் மூலமாக மத்தியதர வர்க்கத்தினர் மொத்தப்பேரையும் கைவிட்டு விட்டார்கள். வருமான வரி விலக்கு உச்சவரம்பானது இரண்டரை இலட்சத்தில் இருந்து மூன்று லட்சம் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த சலுகை தரப்படவில்லை. 2 லட்சம் இருந்ததை 2.50 லட்சமாக 2014 ஆம் ஆண்டு அன்றைய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி மாற்றினார். அதன்பிறகு மாற்றப்படவே இல்லை.
இந்த நிதிநிலை அறிக்கையின் மிக முக்கியமான பலனே, ஏழைகள் நலன்தான் என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். எதைவைத்துச் சொல்லி இருக்கிறார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
குடைக்கு வரி போட்டு, வைரத்துக்கு வரியை விலக்கியதை வைத்துச் சொல்கிறாரா எனத் தெரியவில்லை.
ஒரு சிலிண்டர் விலை 915 ரூபாய். அதில் எந்த விலைக் குறைப்பும் இல்லை.
ஒன்றரை ஆண்டு காலமாகப் போராடித்தான் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வைத்தார்கள் விவசாயிகள். அவர்கள் கேட்டது, குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக நிறைவேற்றித் தர வேண்டும் என்பதாகும்.
அது குறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் எதுவும் இல்லை. விவசாயத்தில் ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
கங்கை நதிக்கரையில் இயற்கை விவசாயம் செய்யப் போகிறார்களாம். இன்னும் இவர்கள் கங்கையை விட்டு இறங்கி வரத் தயாராக இல்லை.
தமிழ்நாட்டுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவுமில்லை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிக்கை முழுமையாகத் தெளிவுபடுத்தி விட்டது. தமிழக அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் வைக்கப்பட்ட எந்த கோரிக்கைக்கும் நிதி ஒதுக்கீடு இல்லை. தமிழ்நாட்டுக்கான புதிய திட்டங்கள் இல்லை. புதிய ரயில்வே திட்டங்கள் இல்லை. மழை, வெள்ளம் காரணமாக நாம் கேட்ட இழப்பீடுகள் வழங்கப்படுவதாக அறிவிப்புகள் இல்லை. கோதாவரி - பெண்ணாறு - காவிரி நதிநீர் திட்டத்துக்கான முதல்கட்ட நிதி ஒதுக்கீடு இல்லை.
தமிழகத்தில் அமைய உள்ள இராணுவ பெருவழித்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. இப்படி தமிழ்நாட்டுக்கு எதுவுமே இல்லை என்பதுதான் இந்த நிதி நிலை அறிக்கை!
மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்கள். ஆனால் அது மாநிலத்தின் கையில் ஒப்படைக்கப்படாது. பிரதமரின் கதிசக்தி திட்டத்துக்குத்தான் ஒதுக்கப்படும். இதை விட மாநிலங்களை அவமானப்படுத்த முடியுமா? மாநிலங்களுக்கான மொத்த நிதிப்பற்றாக்குறை வரம்பு 4 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.
சரக்கு சேவை வரி இழப்பீட்டுத் தொகை வழங்குவதை தொடர வேண்டும் என்ற மாநிலங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு - ஒரே பத்திரப்பதிவு என்பதும் மாநில உரிமைப் பறிப்பாகும். மாநிலங்களுக்கு வரும் வருமானமே பத்திரப் பதிவுதான். அதுவும் பறிபோகப் போகிறது.
திரும்பத் திரும்ப ஒரே பொய்:
இந்த நிதி நிலை அறிக்கையில் மிகப்பெரியமாய்மாலம் என்பது கோதாவரி காவிரி இணைப்பு என்ற கதையாகும். கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணையாறு - -காவிரி ஆகியவை இணைக்கப்படும் என்று சொன்னதை பலரும் கொண்டாடுகிறார்கள்.
2.9.2017ஆம் ஆண்டும் இதையே சொல்லி இருக்கிறார் மோடி. ஐந்தரை லட்சம் கோடி செலவில் 60 நதிகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைக்கப்போவதாக அன்றைய தினம் செய்தி வெளியாகி உள்ளது. இவர்கள் பேச்சை மாற்றிக் கொள்வதே இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
கொரோனா காலத்து இழப்பீடாக மக்களுக்கு ஏதாவது இருக்கிறதா என்று கேட்பீர்களேயானால் இதோ இருக்கிறது. தொலைபேசி வழியாக 24 மணிநேரமும் மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். இதுதான் கொரோனா காலத்துக்காகச் செய்வது!
பெருங்காயத்துக்கு வரி குறைத்துள்ளார்கள். மக்களின் பெரும், காயத்துக்கு மருந்திடுவதாக ஒன்றிய அறிக்கை இல்லை. காகிதமில்லா பட்ஜெட் என்கிறார் நிர்மலா சீதாராமன். இது, மக்களுக்கு சாதகமில்லாத பட்ஜெட்!
---------------------------------------------------------------------------------