டிஜிட்டல் கரன்சி (சி.பி.டி.சி – CBDC)

 சி.பி.டி.சி என்பது டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ டெண்டர் ஆகும். 2022-23 முதல் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி (CBDC) டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி வரும் நிதியாண்டு முதல் சி.பி.டி.சி-ஐ அறிமுகப்படுத்தும். இது பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் சி.பி.டி.சி-ஐ அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களைப் பின்பற்றுகிறது.

மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி (சி.பி.டி.சி – CBDC

சி.பி.டி.சி என்பது டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ டெண்டர் ஆகும். இது காகிதத்தில் வெளியிடப்பட்ட ரூபாய் நாணயத்தைப் போன்றது. இது வேறு எந்த நாணயத்துடனும் மாற்றக்கூடியது.

இன்வெஸ்டோபீடியா கருத்துப்படி, பயனர்களுக்கு டிஜிட்டல் வசதி, பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய வங்கி முறையின் ஒழுங்குபடுத்தப்பட்ட, இருப்பு ஆதரவு புழக்கத்தை வழங்குவதே இலக்காகும்.

கிரிப்டோகரன்சிகள், பிற மெய்நிகர் கரன்சிகள் மீதான அரசாங்கத்தின் நோக்கத்தை பட்ஜெட்டில் உள்ள அறிவிப்பு அடிப்படையில் வெளிப்படுத்துகிறது. பிட்காயின், ஈதர் போன்ற தனியார் கிரிப்டோகரன்ஸிகள் மூலம் பணமோசடி, பயங்கரவாத நிதியளிப்பு, வரி ஏய்ப்பு போன்றவற்றை ரிசர்வ் வங்கி பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி அதன் சொந்த சி.பி.டி.சி-ஐ அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

டிஜிட்டல் ரூபாயை எவ்வாறு பரிவர்த்தனை செய்யலாம் என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பரப்புரையாளர்களால் முன்மொழியப்பட்ட பல மாதிரிகள் உள்ளன. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் முறையான அறிவிப்பு மக்களால் டிஜிட்டல் ரூபாய் எவ்வாறு பரிவர்த்தனை செய்யப்படும் என்பதைக் விளக்கும். இதில், ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், தற்போதைய டிஜிட்டல் கட்டண அனுபவத்திற்கு மாறாக டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை உடனடியாக மேற்கொள்ளப்படும்.


--------------------------------------------------------------------------------

கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு.

கோதாவரி - கிருஷ்ணா, கிருஷ்ணா - பெண்ணையாறு, பெண்ணையாறு - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தேசிய நீர் மேம்பாட்டு முகமையால் தயாரிக்கப்பட்டு உள்ளது.

கோதாவரி ஆற்றின் உபரி நீரை, காவிரி ஆற்றுக்கு திருப்பும் வகையில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக தெலுங்கானா மாநிலம் ஈச்சம்பள்ளியில் கோதாவரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட உள்ளது. அங்கிருந்து கால்வாய் அமைத்து கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள நாகர்ஜுனா சாகர் அணைக்கு நீர் எடுத்து வரப்பட உள்ளது.

இதற்கு மாற்றாக, ஜனம்பேட்டில் இருந்து குழாய் வழியாக, நாகர்ஜுனா சாகர் அணைக்கு நீரை எடுத்து வரும் திட்டமும் உள்ளது. நாகர்ஜுனா சாகர் அணையில் இருந்து, ஆந்திராவின் நெல்லுார் மாவட்டத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சோமசீலா அணைக்கு நீர் எடுத்து வருவதற்கு, கால்வாய் அமைக்கப்பட உள்ளது.

சோமசீலா அணையில் இருந்து, தமிழகத்திற்கு பாலாற்றின் வழியாக கால்வாய் அமைத்து, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில், காவிரி ஆற்றுடன் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மூன்று வகையில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த திட்டத்தை செயல்படுத்த, 1,200 கி.மீ.,க்கு கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இது மட்டுமின்றி, 20 கி.மீ.,க்கு சுரங்க நீர்பாதை அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த, 60 ஆயிரத்து 361 கோடி ரூபாய் தேவை.

இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் 361 கி.மீ.,க்கு கால்வாய் அமைய உள்ளது.இதனால், டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார், பெரம்பலுார் மாவட்டங்கள் பயன் பெறும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?