விண்ணை எட்டிய "முரசொலி"

 தமிழ்நாட்டில் ஆளும் திமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநிலத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், தலித் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

சென்னை உட்பட மாநிலத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக வென்றுள்ளது. சென்னை மாநகராட்சியில், 200 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில் எதிர்க்கட்சியான அதிமுக வெறும் 15 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆளும் திமுக 153 இடங்களை வென்றுள்ளது. திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

அதே நேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும் தலித் கட்சியான விசிக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே போல, திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் சிறப்பான முன்னிலையை உறுதி செய்துள்ளன.

தமிழகத்தின் தென் கோடியில் உள்ள கன்னியாகுமார் மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் மாநகராட்சி திமுகவுக்கு கடுமையான போட்டியாக இருந்தது. ஏனென்றாஅல், இங்கே பாஜகவைத் தவிர வேறு எந்த கட்சிக்கும் உறுதியான வாக்குகள் இல்லை. 


ஆனால், 52 இடங்களில் திமுக 24 இடங்கலில் வெற்றி பெற்றது. பாஜக 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 

அதிமுக வெறும் 7 இடங்களில் வெற்றி பெற்றதால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

மேற்குத் தமிழகத்தில், அதிலும் முக்கியமாக, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் – அதிமுகவின் பாரம்பரிய கோட்டைகள். அதே நேரத்தில், பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் உள்ளது. ஆனால், பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியது. 

சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியான எடப்பாடியும் திமுகவுக்கு வாக்களித்தது. அதிமுகவின் மதிப்புமிக்க இடமாக சேலம் இருந்தது .

அங்கே முந்தைய ஆட்சியில் அதிகபட்ச உள்கட்டமைப்பு திட்டங்களில் அதிமுக கவனம்  சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த கோவை மாநகராட்சியையும் திமுக கைப்பற்றியது. பணபலத்திற்கும், பலத்துக்கும் பெயர் பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோட்டையான கோயம்புத்தூரில் உள்ள தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் திமுக தலைவர்களின் தலைமையில் ஒரு மாத கால பிரசாரம் வெற்றியை உறுதி செய்தது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூரில் திமுகவுக்கு அமோக வெற்றியை அளித்த பிறகு, இந்த முறை கோவையைக் கைப்பற்றுவதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வியூகங்கள் சிறப்பாக வேலை செய்தது.

 கோவை மாநகராட்சியில் உள்ள 100 இடங்களில், திமுக 74 இடங்களை வென்றது. அதிமுக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது, காங்கிரஸ் 9 இடங்களை வென்றது. சிபிஐ மற்றும் சிபிஎம் தலா 4 இடங்களில் வெற்றி பெற்றன. 

கோவை மாவட்டத்தில் உள்ள மொத்தம் உள்ள 198 நகராட்சி வார்டுகளில் திமுக 159 நகராட்சி வார்டுகளிலும் அதிமுக 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

பெரியகுளம் மற்றும் எடப்பாடி நகராட்சிகளில் திமுக பெற்ற மாபெரும் வெற்றி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் தோல்வியை பெரிய அளவில் வெளிப்படுத்தியுள்ளது. 

இரண்டு நகராட்சிகளும் அதிமுகவின் மதிப்புமிக்க கோட்டைகள்; பெரியகுளம், முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் சொந்த தொகுதிகள் ஆகும்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. 

மாநிலத்தில் உள்ள மொத்தம் உள்ள 1374 மாநராட்சி இடங்களில் அதிமுக 164 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், திமுக 952 இடங்களி வென்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 

அதே போல, மாநிலத்தில் உள்ள மொத்தம் 3,843 நகராட்சி இடங்களில் அதிமுக 638 இடங்களில் வென்றுள்ள நிலையில், திமுக மட்டும் 2,360 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், திமுகவின் கூட்டணி கட்சிகள் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மாநிலத்தில் மொத்தம் உள்ள 7,620 பேரூராட்சி இடங்களில் அதிமுக 1,206 இடங்களில் வென்ற நிலையில், திமுக மட்டும் 4,388 இடங்களையும் அதன் கூட்டணி கட்சிகள் 500க்கும் மேற்பட்ட இடங்களையும் வெற்றி பெற்றுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடும்போது, பாஜக அதிசயங்களைச் செய்யும் என்று போட்டியாளர்கள் எதிர்பார்க்காத நிலையில், பாஜகவின் கருத்துகள் அதிகப்படியாக இருந்தன. 

ஆனால், பாஜக, ஒரு மாவட்டத்தில் மட்டுமே பலம் உள்ள கட்சியாகக் குறைக்கப்பட்டது; பாஜக வெற்றி பெற்ற மொத்தம் 308 இடங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 200 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கோவை மற்றும் பிற மேற்கு மண்டலங்களில் பாஜக போட்ட கணக்கு தவறாகிப் போயுள்ளது. அங்கே மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையிலான மாநிலக் கட்சித் தலைமை அண்மைய ஆண்டுகளில் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு நிறைய நேரத்தையும் வளத்தையும் முதலீடு செய்தது.

திமுகவின் வெற்றி பெருமை மதசார்பற்ற கூட்டணியைச் சேரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 பிறகு மாநிலத்தில் மக்கள் மீண்டும் திமுகவைத் தேர்ந்தெடுத்தனர். அதில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), விசிக மற்றும் வைகோவின் மதிமுக ஆகிய அனைத்துக் கட்சிகளும் வெற்றியின் பயனாளிகளாக உள்ளன.

தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி மொத்தம் 592 இடங்களை வென்றுள்ளது. இதில் மாநகராட்சிகளில் 73 இடங்களும், நகராட்சிகளில் 151 இடங்களும், பேரூராட்சிகளில் 368 இடங்களும் அடங்கும்.

திமுக கூட்டணிக் கட்சிகளான சிபிஐ 58 இடங்களிலும், சிபிஎம் 166 இடங்களிலும், வைகோவின் தேமுதிக 35 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

------------------------------------------------------------------------

ராஜபோக கௌதம் அதானி.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளி இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரும் ,மோடியின் நண்பருமான கௌதம் அதானி-யின் சொத்து மதிப்பு கடந்த 3 வருடத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

முகேஷ் அம்பானிக்கு இணையாகக் கௌதம் அதானி-யும் தனது சொத்து மதிப்புக்கு ஏற்ப மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி இந்தியாவில் பல இடங்களில் ஆடம்பர வீடுகளை வைத்துள்ள நிலையில் குர்கான் சர்கேஜில் உள்ள பலாடியல் பங்களா-வில் தான் நிரந்தரமாக வசித்து வருகிறார்.


சமீபத்தில் கௌதம் அதானி டெல்லி லுடியன்ஸ் பகுதியில் 400 கோடி ரூபாய்க்கு ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளார், 

அதைத் தொடர்ந்து ஆதித்யா எஸ்டேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து 3.4 ஏக்கர் வீட்டையும் சமீபத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியை போல் கௌதம் அதானியும் மிகப்பெரிய கார் பிரியராக இருந்தாலும் அவரிடம் எந்தக் கார்கள் இருக்கிறது என்பது பற்றி முழுமையாகத் தெரியாது. 

இதுவரை வெளியான தகவல்கள் படி BMW 7 சீரியஸ், ரோல்ஸ் ராய்ஸ், பெராரி ஆகிய கார்களை வைத்துள்ளார்.


பிற இந்திய கோடீஸ்வரர்களை விடக் கௌதம் அதானி அதிக எண்ணிக்கையிலான பிரைவேட் ஜெட் வைத்துள்ளார். 

ஒரு பாம்பார்டியர், ஒரு பீச்கிராஃப்ட் மற்றும் ஒரு ஹாக்கர் உட்பட 3 பிரைவேட் ஜெட் விமானங்கள் வைத்துள்ளார். இவை 8, 37 மற்றும் 50 இருக்கைகள் கொண்ட விமானங்களாகும்.

அதானி எண்டர்பிரைசஸ் என்னும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் தலைவராக இருப்பதால், கௌதம் அதானி தொடர்ந்து இந்தியா முழுக்கப் பயணம் செய்து கொண்டே இருப்பதால் பிரைவேட் ஜெட்க்கு இணையாக 3 ஹெலிகாப்டர்களையும் வைத்துள்ளார்.


இதில் 2011 ஆம் ஆண்டில் கௌதம் அதானி மிகவும் விரும்பி அகஸ்டாவெஸ்ட்லேண்ட் AW139, இரட்டை எஞ்சின் கூடிய 15 இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டரை ரூ.12 கோடி விலையில் வாங்கினார்

செப்டம்பர் 2020 இல் இந்தியாவின் இரண்டாவது பரபரப்பான மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 74% பங்குகளை வாங்கி நாட்டின் முக்கியமான விமான நிலையத்தைத் தனதாக்கி கொண்டார் கௌதம் அதானி.

விமான நிலையத்தைப் போல் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகமான குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தின் பெரும் பகுதி பங்குகளைக் கைப்பற்றித் தனதாக்கிக் கொண்டார் கௌதம் அதானி.

கௌதம் அதானி அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் லிமிடெட், அதானி வில்மர், அதானி பவர் லிமிடெட், அதானி டோட்டல் கேஸ் லிமிடெட், அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.

------------------------------------------------------------------------

ஒலிக்கா முரசு....

தமிழ் திரையுலகில் அதிரடி நாயகனாக ஜொலித்த விஜயகாந்த் கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கினார்.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஜாம்பவான்கள் அரசியல் களத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில் மிகவும் துணிச்சலாக விஜயகாந்த் புதிய கட்சியை தொடங்கினார்.

கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர்களை தமிழகம் முழுவதும் விஜயகாந்த் களம் இறக்கினார். விருத்தாசலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வென்றார். என்றாலும் அந்த தேர்தலில் தே.மு.தி.க. 10 சதவீத வாக்குகளை பெற்றது. இந்த 10 சதவீத வாக்குகள்தான் தி.மு.க.வை ஆட்சிக்கு வர முடியாமல் செய்து விட்டது. இதனால் அனைவரது பார்வையும் தே.மு.தி.க. மீது திரும்பியது.

அடுத்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை தே.மு.தி.க. தனித்து சந்தித்தது. அந்த தேர்தலிலும் தே.மு.தி.க. தனது வாக்கு சதவீதத்தை தக்க வைத்தது.

விஜயகாந்த்


தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர்கள் அதிக அளவில் வாக்குகளைப் பெற்றனர். இப்படி முதல் 2 தேர்தல்களை தனித்து சந்தித்த தே.மு.தி.க. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க.வுடன் சேர்ந்து கூட்டணி அரசியலுக்கு அச்சாரம் போட்டது. இதன் மூலம் மற்ற கட்சிகளை போன்று தே.மு.தி.க.வும் பத்தோடு பதினொன்று ஆகி விட்டது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க.வுடன் கைகோர்த்த தே.மு.தி.க. 41 இடங்களில் போட்டியிட்டது. இதில் 29 இடங்களில் வெற்றி பெற்றது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தார். அ.தி.மு.க. ஆளும் கட்சியானது. ஆனால் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதல் போக்கு மற்றும் கருத்து வேறுபாடுகளால் அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தால் நீடிக்க முடியவில்லை.

இதையடுத்து தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே கூட்டணி முறிந்தது. இதன் பிறகு அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய விஜயகாந்த் 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தார்.அப்போது நாடு முழுவதும் மோடி அலை வீசியது. இதனை பயன்படுத்தி நாமும் பாராளுமன்றத்துக்கு சென்று விடலாம் என்று விஜயகாந்த் கணக்கு போட்டார். ஆனால் அந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாகை சூடியது.

தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறவில்லை. அந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க.வும் தோல்வியை தழுவியது. 14 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர்கள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இந்த தேர்தலில் தே.மு.தி.க. வாக்கு வங்கி 5.1 சதவீதமாக குறைந்தது. இதன் பிறகு அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்து தே.மு.தி.க. சரிவை சந்தித்துள்ளது. அந்த வகையில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தார் விஜயகாந்த்.

வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நல கூட்டணியை ஏற்படுத்தினார்கள். ஆனால் அந்த தேர்தலில் தே.மு.தி.க. தோல்வியைத் தழுவியது.

அந்த கட்சியின் வாக்கு சதவீதம் மேலும் குறைந்து 2.41 ஆக மாறியது. இப்படி தொடர் தோல்வியை சந்தித்த தே.மு.தி.க. 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தது. இருப்பினும் அந்த கட்சிக்கு வெற்றி கிட்டவில்லை. இதன்பிறகு 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தே.மு.தி.க., டி.டி.வி. தினகரன் கட்சியோடு இணைந்து தேர்தலை சந்தித்தது.

ஆனால் இந்த கூட்டணியையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போதும் தோல்வியே கிடைத்தது. முதல் மூன்று தேர்தல்களில் முத்திரை பதித்த அந்த கட்சி அதன் பிறகு நடந்த தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் தே.மு.தி.க.வின் வெற்றி பயணம் தடைபட்டுள்ளது. அதன்பிறகு நடைபெற்ற இரண்டு பாராளுமன்ற தேர்தல்கள் ஒரு சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் அந்த கட்சி படுதோல்வியை சந்தித்தது.

இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டது தே.மு.தி.க.வின் தொடர் தோல்வியால் அந்த கட்சியினரும் துவண்டு போய் இருந்தார்கள். இதன் காரணமாக கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் அந்த கட்சியில் இருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் சேர்ந்தனர். விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு தே.மு.தி.க. தொடர்பான அரசியல் முடிவுகளை பிரேமலதா எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தே.மு.தி.க. சந்தித்துவரும் தொடர் தோல்விகளால் கடந்த 8 ஆண்டுகளாக அந்த கட்சியின் முரசு சின்னத்தை மக்கள் கண்டு கொள்ளவில்லை.

இதனால் கடைசியாக நடைபெற்ற 4 தேர்தல்களிலும் முரசு சத்தம் கேட்காமலேயே உள்ளது. தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் முதல் இரண்டு தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு அந்தக் கட்சி மக்களின் மனதை வென்று இருந்தது. ஆனால் 2011-ம் ஆண்டு அந்த கட்சி கூட்டணி சேர்ந்தபோது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் தே.மு.தி.க. வெற்றி பெற்றது. விஜயகாந்தின் அரசியல் வியூகத்தை அனைவரும் பாராட்டினர். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து விட்டு அடுத்தடுத்து நடை பெற்ற தேர்தலிலும் விஜய காந்த் கூட்டணி அரசியலை கையில் எடுத்தார்.

அதுவே அவருக்கு வீழ்ச்சியாகவும் முடிந்தது. அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக தே.மு.தி.க.வை கருதி வாக்களித்த மக்கள் அந்த கட்சி கூட்டணி சேர்ந்த பிறகு வெறுத்து ஒதுக்க தொடங்கினார்கள். 

இப்படித்தான் தே.மு.தி.க.வின் வீழ்ச்சி பயணம் தொடங்கியது. 

இந்த தோல்வி பயணம் முடியுமா? இல்லை அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடருமா? என்பதே தே.மு.தி.க. முன்பு மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

அவர் மனைவி பிரேமலதா,அவர் மகன் ஆகியோரின் தொண்டர்கள்,பிற தலைவர்கள்,ஊடகத்தினர்களை மரியாதைக் குறைவாகவும்,திமிர்த்தனமாகவும் பேசும். பேச்சுக்களே அழிவை நோக்கி தே.மு.திக.வை கொண்டு செல்கிறது.

தொடர் தோல்விகளால் தே.மு.தி.க.வில் இருந்து பலர் வெளியேறிய நிலையில் அந்த கட்சியின் கட்டமைப்பும் ஆட்டம் கண்டுள்ளது. இது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலித்துள்ளது.

-----------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?