முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதமாற்றம் – கலவரம்



ஆர்.எஸ்.எஸ் : ஒரு இழி வரலாறு || 

சிந்தன் இ.பா

தமாற்றம் என்கிற வார்த்தையைக் கொண்டுவந்து ஊடகங்களில் திணித்து ஒரு கலவரத்தை நிகழ்த்த இன்றைக்கு சில தமிழக இந்துத்துவாதிகள் முயன்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களை சாதாரணமாக எடைபோட்டுவிடக்கூடாது என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் இருக்கின்றன. அணுவளவிற்கான வாய்ப்பு கிடைத்தாலும் அதனை அணுகுண்டாக்கி வெடித்து அதனால் வீழ்ந்த பிணங்களின் மீதேறி மகிழ்ச்சியாகக் கொண்டாடுபவர்கள் தான் இந்துத்துவவாதிகள்.
மறதி என்பது மனிதனின் இயல்பு என்பதால், ஒவ்வொரு ஜனவரி 22-ம் தேதியும், அதே தேதியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு குறித்து ஏதாவது ஒரு பதிவையாவது எழுதி, அதனை மக்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறேன்.
1965-ம் ஆண்டு, தன்னுடைய 24-வது வயதில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரிசாவின் மனோகர்பூர் என்கிற பழங்குடி கிராமத்திற்கு வந்தார் கிரகாம் ஸ்டெயின்ஸ். அங்கிருக்கும் தொழுநோய் மருத்துவமனையை கவனித்துக்கொண்டு, அங்கேயே தங்கிவிட்டார். காதலித்து மணமுடித்து மனைவியுடனும் இரண்டு மகன்களுடனும் ஒரு மகளுடனும் அந்த பழங்குடி கிராமத்திலேயே மக்களுக்காக வாழ்ந்து வந்தார் கிரகாம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அந்த கிராமத்திற்கு பயணித்து, அங்கேயே தங்கி தொழுநோய்க்கான சிகிச்சை பெற்று ஆண்டுதோறும் ஏராளமானோர் பயனடைந்துவந்தனர்.
1999-ல் ஃபாதர் கிரகாமும் அவரது இரு மகன்களும் ஒரு காருக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் போது, அங்கே 50 பேருக்கும் மேற்பட்டோரைக் கொண்டு ஒரு கும்பல் வந்தது. அந்த தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளின் வெளிப்புற கதவுகளையும் மூடி பூட்டுப் போட்டது அக்கும்பல். பின்னர், கிரகாம் இருக்கும் காரைச் சுற்றி அக்கும்பல் நின்றது. அவர்கள் ஒவ்வொரின் கையிலும் வாளும் கோடாரியும் இருந்தன. அந்த ஆயுதங்களை வைத்து அந்த காரை அடித்து உள்ளே இருக்கும் கிரகாமையும் அவரது மகன்களையும் மிரட்டினர். உள்ளே என்ன செய்வதென்றே பயந்து கதறிக்கொண்டிருந்த மகன்களைக் காப்பாற்று வழிதெரியாமல், காருக்கு வெளியே இருக்கும் கும்பல் என்னதான் செய்யப்போகிறதோ என்ற பதட்டத்தில் கிரகாமும் இருந்தார்.
அந்த காரின் மீது ஊற்றுவதற்காகவே கொண்டுவந்திருந்த எரிபொருளை அக்கும்பல் ஊற்றியது. அதன்பின்னர், அந்த காரின் மீது நெருப்பைப் பற்றவைத்தது அக்கும்பல். அந்த கார் முழுமையாக பற்றி எரிவதைப் பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தது அக்கும்பல். காரிலிருந்து கிரகாம் தப்பித்துவிடக்கூடாது என்பதற்காகவே அந்த கார் எரிந்து முற்றிலும் சாம்பலாகும் வரையிலும் அதனைச் சுற்றியே அக்கும்பல் நின்று கொண்டு கொண்டாடிக் கொண்டிருந்தது.
மிக வசதியான ஒரு நாட்டில் பிறந்து, ஆடம்பரமான வாழ்க்கை கிடைத்தும், அனைத்தையும் விட்டுவிட்டு இந்தியாவின் ஏதோவொரு மூலையில் இருக்கிற ஒரு கிராமத்தில் ஏழை மக்களுக்காக சேவை செய்ய வந்த ஒரு குடும்பத்தையே உயிரோடு எரித்துவிட்டு, தன்னுடைய கோரப்பசியைத் தீர்த்துக்கொண்டதும் அங்கிருந்து அக்கும்பல் கிளம்பியது.
ஏழைகளை ஏமாற்றி கிருத்துவ மதத்திற்கு மாற்றுவதாக குற்றஞ்சாட்டித்தான் அவர்களைக் கொன்றதாக கைதுசெய்யப்பட்டவர்கள் தைரியமாகவே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தனர். அத்தனை பெரிய கும்பல் திட்டமிட்டு செய்த இவ்வளவு பெரிய குற்றத்திற்கு டாரா சிங் ஒரே ஒருவனுக்கு மட்டும் தான் தண்டனையே கிடைத்தது. அவன் அக்கொடூரக் கொலையை நிகழ்த்துவதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் கூட பாஜகவுக்காக தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்து ஓட்டுக்கேட்டவன். பஜ்ரங் தளத்தில் இருந்தவன்.
“டாரா சிங்குக்கும் பாஜகவிற்கு உள்ள தொடர்பு ஊரறிந்த ஒன்றுதான். அந்த சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் அனைத்து பாஜக, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம் கூட்டங்களிலும் வகுப்புகளிலும் கலந்துகொள்ளும் அளவுக்கு அவன் அதன் அங்கமாகவே இருந்தான்” என்றார் அந்த மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த லலித் தாஸ்.
ஆனால், அவனுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை என்றும் அவன் தனியாக ஒருவனே திட்டமிட்டு, ஒருவனே அந்த காரை மடக்கி, ஒருவனே அந்த காருக்கு தீவைத்து, கொலை செய்ததாக தீர்ப்பு எழுதப்பட்டு, அவனுக்கு மேலுள்ள மிகப்பெரிய கொலைகாரர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடும் சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது.
இதையெல்லாம் விட மிகக்கொடுமை என்னவென்றால், அவனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையும் கூட ஆயுள் தண்டனையாக பின்னர் குறைக்கப்பட்டுவிட்டது. அதுகூட பரவாயில்லை. ஆனால், அதற்கு நீதிமன்றம் சொன்ன காரணங்கள் இருக்கிறதே, அதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.
“கிரகாம் ஸ்டெயின்சும் அவரது இரு குழந்தைகளும் கொல்லப்பட்டதற்கு, அவர்கள் ஏழைகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததும் அதற்காகவே அவர்களுக்கு பாடம் புகட்டவே குற்றவாளி இவ்வாறு செய்ததாகவும் தெரியவருகிறது. அதனை கருத்தில்கொண்டு, அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டையாக குறைக்கிறோம்… ஒருவரின் மத நம்பிக்கையில் தலையிட்டு, அவரை மதமாற்றம் செய்வது மன்னிக்க முடியாத குற்றம்..” என்றெல்லாம் விரிவாக மதமாற்றத்தையே அதிகமாகக் கண்டித்து ஒரு தீர்ப்பு எழுதப்பட்டது.
ஒருவேளை சோத்துக்காக மதம் மாறினால் என்ன? தொட்டால் தீட்டு, அருகே வராதே, படிக்காதே, வேலைக்குப் போகாதே என்று தள்ளிவைக்கப்படும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு ஒருவேளை சோறும் வேலையும் வாழ்க்கையும் கிடைக்கிறதென்றால் மதம் மாறினால் கூட தவறில்லை தானே.
‘தேசம்… தேசம்’ என்று பேசிக்கொண்டே காசுக்கும் பெரிய வேலைக்குமாக ஆசைப்பட்டு அமெரிக்காவிற்கு போய், தேசம் மாறும் தேசபக்த(?) இந்துத்துவாதிகள் இல்லையா? காசுக்காக தேசம் மாறலாம், ஆனால் ஒருவேளை சோத்துக்காக மதம் மாறக்கூடாதா என்ன?
இதில் வேடிக்கை என்னவென்றால், கட்டாய மதமாற்றம் நடந்ததாக சொன்னது அந்த குற்றவாளி மட்டும்தான். அது வேறெந்த வடிவத்தில் நிரூபிக்கப்படாத ஒரு வாதம் தான்.
இந்த தீர்ப்பை எழுதியவர் வேறு யாருமல்ல… அச்சு அசல் தமிழரான முன்னாள் நீதிபதியும், ஓய்வுக்குப்பின்னர் கேரளாவின் கவர்னராக பதவிகிடைத்தவருமான சதாசிவம் தான்.
சரி, ஏழைகளை மதமாற்றம் செய்ததால் தான் கொலை செய்தோம் என்று சொன்னார்களே அந்த கொலைகாரர்கள், ஃபாதர் கிரகாம் ஸ்டெயின்சைக் கொன்ற பின்னர், அந்த கிராமத்தின் ஏழ்மையை அவர்கள் போக்கிவிட்டார்களா?
இல்லை. இல்லவே இல்லை.
அந்த கிராமம் முன்பைவிடவும் மிகக்கொடூரமான ஏழ்மை நிலையில் தான் இருக்கிறது. அங்கே இருக்கும் ஒரு ஆரம்ப சுகாதார மையத்தின் கட்டிடம் வெறுமனே ஒரு பெயர்ப்பலகையுடன் கூடிய பாழடைந்த கட்டிடமாகத் தான் இருக்கிறது. அந்த கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.
தன்னுடைய வாழ்க்கையையே அந்த கிராமத்தில் வாழமுடிவுசெய்திருந்த கிரகாமின் மனைவியும் மகளும் அந்த கிராமத்தைவிட்டே வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கே சென்றுவிட்டனர்.
-----------------------------------------------------------------------

அணுப் பிளவு.

புதிய சாதனை்

மத்திய இங்கிலாந்தில் உள்ள கூட்டு ஐரோப்பிய டோரஸ் ஆய்வகம் இரண்டு வகையான ஹைட்ரஜனில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஆற்றலின் அள விற்கான அதன் பழைய உலக சாதனை யை முறியடித்தது. 

59 மெகாஜூல்கள் நீடித்த அணு இணைவு ஆற்றலை ஏற் படுத்தி இங்கிலாந்து விஞ்ஞானிகள் புதிய உலக சாதனையை படைத்துள்ளனர்.

 விஞ்ஞானிகள்  ஒரு இயந்திரத்திற்குள் ஒரு மினி நட்சத்திரத்தை உருவாக்கினர். இதனால் 59 மெகாஜூல்கள் நீடித்த அணு இணைவு ஆற்றல் ஏற்பட்டது, இது சுமார் 11 மெகாவாட் மின்சாரம் மற்றும் 1997 இல் இதே போன்ற சோதனைகளின் முடிவுகளை விட இது இரண்டு மடங்கு அதிகம்.

 எனவே இது ஒரு புதிய உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. அணுக்கரு இணைவு என்பது  வெப்பத்தை உருவாக்க சூரியன் பயன் படுத்தும் அதே செயல்முறையாகும், மேலும் இது ஒரு நாள்  ஏராளமான, பாது காப்பான மற்றும் பசுமையான ஆற்றலை வழங்குவதன் மூலம் காலநிலை மாற்ற த்தை நிவர்த்தி செய்ய உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 

அணுக்கரு இணைவை பயன்படுத்தி எதிர்காலத்தில் நமது அனைத்து ஆலை களையும் இயக்கத் தொடங்கினால், பசுமை இல்ல வாயுக்கள் உற்பத்தி செய்யப்படாது மற்றும் குறுகிய கால கதிரியக்கக் கழிவுகளை மட்டுமே நாம் சமாளிக்க வேண்டியிருக்கும். 

டிசம்பர் 21 ஆய்வுகளின் முடிவின் படி, “இது உலகளவில் பாதுகாப்பான மற்றும் நிலையான குறைந்த கார்பன் ஆற்ற லை வழங்குவதற்கான இணைவு ஆற்ற லுக்கான சாத்தியக்கூறுகளின் தெளிவான நிரூபணம் ஆகும்” என்று நிறுவனம்  அறிக்கையில் தெரிவித்துள்ளது.  இங்கிலாந்து அறிவியல்துறை அமைச்சர் ஜார்ஜ் ப்ரீமேன், இதை சோத னைகளின் ஒரு “மைல்கல்” என பாராட்டி னார்.



----------------------------------------------------------------------------------

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், சில மனிதர்கள், எபோலாவில் இருந்து தப்பியவர்கள் ஏன் தங்கள் ஆரம்ப நோய்த்தொற்றுகளிலிருந்து மீண்டு மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து மீண்டும் இறந்துவிடுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது என்று தி சயின்டிஸ்ட் தெரிவித்துள்ளது . குரங்குகள் மற்றும் மனிதர்களின் கடந்தகால ஆய்வுகள், எபோலா வைரஸ் உடலின் பல்வேறு இடங்களில் - சோதனைகள் , கண்கள் மற்றும் மூளை உட்பட - பதுங்கியிருக்கலாம் என்று பரிந்துரைத்தது மற்றும் புதிய அறிக்கை மூளையில் வைரஸ் எங்குள்ளது என்பதை வெளிப்படுத்தலாம் .

சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின் இதழில் புதன்கிழமை (பிப். 9) வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சியில், எபோலாவால் பாதிக்கப்பட்ட விஞ்ஞானிகள் 36 ரீசஸ் மக்காக்குகள் அடங்கும். குழுவானது குரங்குகளுக்கு மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் மூலம் சிகிச்சை அளித்தது, அவை வைரஸைப் பிடித்து செல்களைப் பாதிக்கும் திறனில் தலையிடுகின்றன; ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து சிகிச்சைகளும் மனிதர்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. 

சிகிச்சைக்குப் பிறகு, குழு குரங்குகளின் இரத்தத்தை எபோலா வைரஸ் மரபணுப் பொருள் அல்லது ஆர்என்ஏவைத் திரையிட்டது , மேலும் மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள தெளிவான திரவமான விலங்குகளின் செரிப்ரோஸ்பைனல் திரவத்தில் (CSF) எபோலாவைரஸ் ஆர்என்ஏவைைைை  கண்டுபிடித்துள்ளனர்.

-----------------------------------------------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?