என்னமோநடக்குது?

 வருமானம் இல்லாத கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு: -அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்வு.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு.
அதிமுகவை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?- ஓபன்னீர்செல்வம்.

கனமழை காரணமாக வால்பாறையில் இன்று  பள்ளிகளுக்கு விடுமுறை;-மாவட்ட ஆட்சியர்.

3,886 பேருந்துகளுக்கு தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் - தமிழ்நாடு அரசு.

விழிப்புணர்வு அவசியம்


உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் போதைப் பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இது தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் சுமார் 200 மில்லியன் நபர்கள் போதைப் பொருளை உபயோகிக்கிறார்கள் என்கிறது ஐநா சபையின் அறிக்கைத் தகவல்.

மது, சிகரெட், பீடி மற்றும் புகையிலைப் பொருட்களை உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், தற்போது கஞ்சா, ஹெராயின், அபின், கோகைன், பிரவுன்சுகர் ஆகியவை இளைஞர் சமூகத்தை அழித்து வருகின்றன.

போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி 'சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.


உலகளாவிய ரீதியில் போதைப் பொருள் பயன்படுத்துதல், போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை செய்தல் என்பன முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.


போதைப் பொருளை கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைப் பொருளின் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது பெரும் கவலைக்குரியது.


ஒவ்வொரு நாளும் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. தினமும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் உலகில் ஆங்காங்கே நடக்கின்றன.


ஜூன் 26, 1987 அன்று வியன்னாவில் நடைபெற்ற போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தல் தொடர்பான சர்வதேச மாநாட்டில், போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை நினைவுகூரும் ஒரு நாளை அனுசரிக்க பரிந்துரைக்கப்பட்டது.


அதன்படி, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, ஜூன் 26ஆம் தேதியை உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்தது.

இதையடுத்து 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


உலகளாவிய ரீதியில் போதைப் பொருள் பயன்படுத்துதல், போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை செய்தல் என்பன முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.


போதைப் பொருள் துஷ்பிரயோகம் தொடர்பான சுகாதார சவால்களை முன்னிலைப்படுத்தவும், போதைப் பொருள் தடுப்பு, கல்வி, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்த நாள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


இன்றைய சூழலில் இளைஞர்கள் மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாவது வருத்தமான விஷயம். இம்மாதிரியான மாணவர்களுக்கு சரியான விழிப்புணர்வு வழங்கி அப்பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.


போதைப்பொருள் தடுப்பு திட்டங்களில் சமூக ஈடுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டுத் தீங்குகளைத் பற்றிய புரிதலை ஏற்படுத்த விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். இதன் மூலம் போதைப் பொருள் பழக்கத்தை பரவ விடாமல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

என்னமோநடக்குது?


தமிழக சட்டப் பேரவையில் நேற்று காலை நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்துக்கு இடையே நயினார் நாகேந்திரன் பேசி முடித்த போது, அமைச்சர் தங்கம் தென்னரசு எழுந்து பேசினார்.


 ‘‘இங்கே என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. சட்டசபை இன்றைக்கு விசித்திரமான சம்பவங்களை சந்திக்கிறது. நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பில் பாஜ உறுப்பினர் வானதி சீனிவாசன் மிகவும் கரிசனத்துடன் பேசினார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் நாகை மாலி, வீர தளபதி விவேகானந்தர் குறித்து பேசினார். 


பாஜ உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, காங்கிரஸ் உறுப்பினர் தாரகை கத்பட் பலமாக கைதட்டுகிறார். என்னமோ நடக்குது. மர்மமா இருக்குது..’’ என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.


 தொடர்ந்து பேசிய உறுப்பினர் நாகை மாலி, ‘‘விவேகானந்தரின் கருத்துகளை முழுமையாக நாங்கள் ஏற்கவில்லை. நல்ல கருத்துகளை மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏற்கிறது’’ என்றார்.


* பேரவையில் இன்று…
சட்டப்பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. 

கேள்வி நேரம் முடிந்ததும், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத் துறை, மாநிலச் சட்டமன்றம், கவர்னர் மற்றும் அமைச்சரவை, எரிசக்தித் துறை, நிதித் துறை, மனித வள மேலாண்மை துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.


உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பேசுகிறார்கள். 


இறுதியாக தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுகின்றனர்.

 மாலை 5 மணிக்கு மீண்டும் கூடும் சட்டசபை கூட்டத்தில், சுற்றுலா – கலை மற்றும் பண்பாடு, வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு, இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது.


விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பதில் அளித்து பேசுவதுடன் நிறைவாக தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவார்கள்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

ரூ360 கோடிகள் வீணா?

கட்டுமானம் ஆரம்பம்?