இன்னும் எத்தனை நாட்கள்?
பழைய பஸ் பாஸிலேயே மாணவர்கள் பயணிக்கலாம்: போக்குவரத்து துறை.
திருச்சுழியில் பாஜவினர் ஜீப் மோதி 3 பேர் பலி.
----------->
தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் திட்டம் குறுஞ்செய்தி மூலம் பட்டா மாறுதல் தகவலை தெரிவிக்க நடவடிக்கை: பதிவுத்துறை.
“நீட் தேர்வை முதன் முதலில் எதிர்த்தது திமுகதான்” - AK ராஜன் அறிக்கையை 9 மொழிகளில் வெளியிட்ட முதல்வர்.
இன்னும் எத்தனை நாட்கள்?
மூன்றாவது முறையாக, இந்திய குடியரசின் பிரதமராக பதவியேற்றுள்ளார் நரேந்திரமோடி. அவருடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய அமைச்சரவை யும் பதவியேற்றுள்ளது.
கடந்த முறையை போல் இந்த முறை பதவியேற்பு விழாவில் பாஜகவின ரின் அளவில்லாத, அதீதமான ஆர வாரத்தை காண முடியவில்லை. மாறாக, வழக்க மானதொரு விழாவாக நடந்து முடிந்துள்ளது.
அமைச்சரவையில் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்த விபரங்களை பெரிய அள விற்கு ஊடகங்களில் வெளியிட்டு தம்பட்டம் அடிக்க இயலாமல், பதவியேற்பு விழா என்பதை தங்களது மிகப் பெரிய திருவிழா போல நடத்த முடியாமல், இந்த முறை அதிசயிக்கத்தக்க அளவிற்கு அடக்கி வாசித்திருக்கிறது பாஜக பரிவாரம்.
பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகளின் தலைவர்களை அழைத்ததையும் மோடி அரசு ரகசியமாகவே வைத்திருந்தது.
கடந்த முறை அண்டை நாட்டுத் தலைவர்களை அழைத்த தையே மோடியின் ராஜதந்திரம் என்று பாஜக வின் கூலிப் படையாக வேலை செய்யும் பல ஊடகங்கள் ஊதித் தள்ளின என்பது நினைவு கூரத்தக்கது.
கடந்த முறை பாஜகவுக்கு மட்டும் 303 இடங் களை அள்ளிக் கொடுத்து அதீத தனிப்பெரும் பான்மையை வழங்கிய மக்கள், மோடி தலைமை யிலான பாஜகவின் எதேச்சதிகார ஆட்சிக்கு இந்த முறை பலத்த அடி கொடுத்தனர்.
வெறும் 240 இடங்களை மட்டும் அளித்து தனிப் பெரும் பான்மையை பறித்து, கூட்டணிக் கட்சிகளின் தயவோடுதான் ஆட்சியில் அமர முடியும் என்ற நிலையை ஏற்படுத்தினர்.தம்மை கடவுள் என்று பிரகடனம் செய்து கொண்டவரையே பாதுகாக்கும் பொறுப்பினை தற்போது தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதாதளத்தின் நிதிஷ்குமா ரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதன் காரண மாக, இந்திய அரசியலில் பலமுறை குட்டிக்கர ணம் அடித்த இவர்கள், இந்த தேர்தலில் தங்க ளுக்கு கிடைத்த திடீர் ஆதாயத்தால், ஆகா யத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அதே வேளையில், மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பிலும் இருக்கும் இவர்களால் நீண்ட காலத்திற்கு பாஜகவின் கொள்கைகளோடும், மோடி - அமித்ஷா கூட்டணியின் அராஜ கத்தோடும் இயைந்து செல்ல முடியாது என் பதே உண்மை.
இந்த ஆட்சி 6 மாத காலத்திற்குக் கூட தாங்காது என்று இந்தியாவின் மூத்த அர சியல் ஆய்வாளர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர்.
அமைச்சரவையில், தோல்வியடைந்த பாஜக அமைச்சர்கள் தவிர, கிட்டத்தட்ட அனை வரையும் மீண்டும் அமைச்சர்களாக ஆக்கியுள் ளனர். எச்.டி.குமாரசாமி, சிராக் பாஸ்வான், ஜிதன்ராம் மஞ்சி போன்ற முகங்கள் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நபர்கள்.
அநேகமாக இவர் கள் மட்டும் கடைசி வரை பாஜகவை பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கக் கூடும்.