தகுதியில்லாததே தகுதி?

 மயிலாப்பூரில் எலி விழுந்த எண்ணெய் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது.

நாகர்கோவில் லாயம் விலக்கு பகுதியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. வாகனம் மோதியதில் சிலை உடைந்ததா அல்லது மர்ம நபர்கள் சிலையை உடைத்தார்களா என போலீஸ் விசாரணை.
'12ம் வகுப்பு இயற்பியல் தேர்வில் 1 மார்க் பெற்ற மாணவிக்கு நீட்டில் 720க்கு 720'.-தயாநிதி மாறன் டிவிட்.
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்; அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வந்த 100 லாரிகள் தடுத்து நிறுத்தம்.

தகுதியில்லாததே தகுதி?

சர்ச்சைக்குரியவர்களை மட்டுமே, அமைச்சர்களாக நியமிப்போம் என்பதில் தெளிவாக இருக்கிறது பா.ஜ.க.

காரணம், கடந்த ஆட்சியில், ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கே நிதியமைச்சராக இருக்கும் நிலையிலும், ஒரு சார்பு மக்களுக்காக மட்டுமே திட்டங்களை செயல்படுத்தி வந்தவர் நிர்மலா சீதாராமன்.

தகுதியற்ற அமைச்சர்களுக்கு பதவி நீட்டிப்பு செய்திருக்கும் பா.ஜ.க! : 18ஆவது மக்களவையில் உருவான சர்ச்சை!

இவரது தலைமையில், தனிப்பட்ட நபரின் வரி விகிதம், தனியார் குழுமத்தின் வரி விகிதத்தை விட அதிகரித்தது.

ஏழைகள், பணவீக்கத்தால், அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கே அவதிபட்டு வரும் நிலையில்,

1% இந்தியர்களின் சொத்துமதிப்பு மட்டும் நேர்கோட்டில் வளர்ந்து வந்தது. இந்தியாவில் வறுமை அதிகரிக்கிறது எனும் காலத்தில் தான், ஆசியாவின் பணக்காரர்களும் இந்தியாவில் உருவாகத் தொடங்கினர்.

இதனால் உழைக்கும் மக்கள், “வெங்காயம் வாங்க கூட அவதியுறும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என தெரிவித்ததற்கு, எங்களுக்கு (உயர்வகுப்பினராக அடையாளப்படுபவர்கள்) வெங்காயம் உண்ணும் பழக்கமில்லை என கேலி செய்தவர் நிர்மலா சீதாராமன்.

ஆனால், அவரே இம்முறையும் NDA கூட்டணி அமைச்சரவையில் நிதியமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.

தகுதியற்ற அமைச்சர்களுக்கு பதவி நீட்டிப்பு செய்திருக்கும் பா.ஜ.க! : 18ஆவது மக்களவையில் உருவான சர்ச்சை!

நிதியமைச்சருக்கு அடுத்தப்படியாக விமர்சிக்கப்படுபவர், கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்.

ஒரு ஆட்சியின் கீழ், கல்வி முறை எவ்வாறு சீர்கெடும் என்பதற்கு, இவரது தலைமையும் ஒரு எடுத்துக்காட்டு.

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும், NCERT பாடநூல் கழகத்தில், ஆர்.எஸ்.எஸ் காரர்களை அதிகளவில், ஈடுபடுத்தி, காவி அரசியலை பள்ளி குழந்தைகள் மனதில் ஆழப்பதித்தது தான் இவரது வெற்று சாதனை.

அதனையடுத்து, நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் நீட் தேர்வு முறைகேடுகளில், இந்தியத் தேர்வு முகமை மீது தவறில்லை என வக்காலத்து வாங்கியதும் இவருக்கு தனிப்பெருமை சேர்த்திருக்கிறது.

இவ்வாறான இவரின் பெருமைக்குரிய செயல்களால், தற்போது இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

தகுதியற்ற அமைச்சர்களுக்கு பதவி நீட்டிப்பு செய்திருக்கும் பா.ஜ.க! : 18ஆவது மக்களவையில் உருவான சர்ச்சை!

இவர்களை தொடர்ந்து, மக்கள் எதிர்ப்பை அதிகளவில் சந்தித்து வரும் மற்றொரு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.

இரயில்வே துறை அமைச்சராக இருக்கும் அஷ்வினி வைஷ்ணவ் தலைமையில்,

கடந்த 2023 ஆம் சுமார் 18 தொடர்வண்டி விபத்துகள் அரங்கேறியுள்ளன. ஒரே ஆண்டில், இத்தனை விபத்துகள் நடந்தது, இது தான் முதன் முறை. அதாவது கடந்த 100 ஆண்டுகளில் இது தான் முதன் முறை.

இத்தகைய வரலாறு கொண்ட ஒரு அமைச்சருக்கு தான், மீண்டும் அதே பொறுப்பு தரப்பட்டுள்ளது.

தகுதியற்ற அமைச்சர்களுக்கு பதவி நீட்டிப்பு செய்திருக்கும் பா.ஜ.க! : 18ஆவது மக்களவையில் உருவான சர்ச்சை!

இதுவரை குறிப்பிட்டவர்களுக்கெல்லாம், மேலானவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

இவரது தலைமையில், இந்தியா முழுக்க காவல்துறையின் கொடுங்காவல் தலைவிரித்து ஆடி வருகிறது.

அதற்கு எடுத்துக்காட்டு தான், உத்தராகண்ட் மாநிலத்தின் அல்துவானி கலவரம், மணிப்பூர் கலவரம், டெல்லி எல்லை ரப்பர் துப்பாக்கிச்சூடு, அசாம் வன்முறை உள்ளிட்ட நிகழ்வுகள். எனினும், அமித்ஷா வசமே, உள்துறை சென்றுள்ளது.

இதனால், சிறுபான்மையினர்களின் குரல்வலையே நசுக்கப்பட்டுள்ள நிலையும் உருவாகியுள்ளது.

தகுதியற்ற அமைச்சர்களுக்கு பதவி நீட்டிப்பு செய்திருக்கும் பா.ஜ.க! : 18ஆவது மக்களவையில் உருவான சர்ச்சை!

இவரையடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி பெற்றிருக்கும் பா.ஜ.க மூத்த தலைவர் தான் ராஜ்நாத் சிங்.

இவர் தலைமையில் கொண்டு வரப்பட்டது தான், அக்னிபாத் திட்டம். இராணுவ வீரர்களுக்கு வழங்கி வந்த நிரந்த பணி மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை பறித்துக்கொண்டதில், இவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

அதனால், கூட அவருக்கு மீண்டும் அதே துறை வழங்கப்பட்டிருக்கலாம்.

தகுதியற்ற அமைச்சர்களுக்கு பதவி நீட்டிப்பு செய்திருக்கும் பா.ஜ.க! : 18ஆவது மக்களவையில் உருவான சர்ச்சை!

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும் நிதின் கட்கரியும் இதற்கு விதிவிலக்கல்ல.

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், நிதின் கட்கரி வாக்கு சேகரிக்க சென்ற போது, அவரது சொந்த கட்சி மக்களே, சாலைகளின் மோசமான நிலையை எடுத்துக்காட்டி, தருக்கமிட்டனர்.

இவ்வாறு, தன் தொகுதிக்கே, சாலை வசதி செய்து தராத ஒருவருக்கு தான், நாட்டில் உள்ள ஒட்டு மொத்த சாலைகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

இது போன்ற நிலையில், “இவர்கள் தலைமையில் தான், இந்தியா அடுத்த செயல்படப்போகிறது என்பது தான் அச்சமாக இருக்கிறது” என இணையவாசிகள் பரவலாக தங்களது எண்ணங்களை பகிரத் தொடங்கியுள்ளனர்.

“அரசியலில்அபூர்வம்! 

அரசியலில் அற்புதம்!”

இந்­தி­யாவே திரும்­பிப் பார்க்­கும் வெற்­றியை ‘இந்­தியா’ கூட்­டணி தமிழ்­நாட்­டில் பெற்­றது. புதுச்­சேரி உள்­ளிட்ட நாற்­பது தொகு­தி­க­ளி­லும் முழு­மை­யான வெற்­றி­யைக் கைப்­பற்­றி­ய­தன் மூல­மாக ‘இந்­தியா’ கூட்­ட­ணி­யின் கோட்­டை­யாக தமிழ்­நாடு பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. மற்ற மாநி­லங்­க­ளில் கூட ஒரு தொகுதி, இரண்டு தொகு­தியை பா.ஜ.க. கைப்­பற்­றி­யது. ஆனால் தமிழ்­நாட்­டில் பா.ஜ.க.வின் பம்­மாத்து பலிக்­க­வில்லை. பின்­னங்­கால் பிட­றி­யில் அடி­பட விரட்­டப்­பட்­டது பா.ஜ.க.

“நாங்­கள் தமிழ்­நாட்­டில் ஒரு இடத்­தில் கூட வெற்றி பெற முடி­ய­வில்லை” என்று பா.ஜ.க. கூட்­ட­ணிக் கட்சி எம்.பி.க்கள் கூட்­டத்­தில் கண்­ணீ­ரோடு தழு­த­ழுக்­கச் சொன்­னார் நரேந்­தி­ர­மோடி. ஏன் வெற்றி பெற முடி­ய­வில்லை என்ற கார­ணத்­தைச் சொல்­ல­வில்லை. அதை அவ­ரும் உணர்ந்­த­தா­க­வும் தெரி­ய­வில்லை. உணர்ந்­தா­லும் சொல்­ல­வும் மாட்­டார். சொல்­ல­வும் முடி­யாது.

பா.ஜ.க.வை அர­சி­யல் ரீதி­யாக மட்­டு­மல்ல, தேர்­தல் அர­சி­ய­லுக்­காக மட்­டு­மல்ல, கொள்கை ரீதி­யாக விமர்­சித்து அதன் முகத்­தி­ரை­யைக் கிழித்து வரும் கூட்­ட­ணி­யாக திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தலை­மை­யிலான இந்­தி­யாக் கூட்­டணி செயல்­பட்டு வரு­கி­றது. அது­வும் இந்­தத் தேர்­த­லுக்கு முன்­ன­தாக உரு­வான கூட்­டணி அல்ல இது.ஐந்­தாண்டு கால­மாக பாசிச பா.ஜ.க.வுக்கு எதி­ராக ஜன­நா­ய­கப் போர் நடத்தி வரும் கூட்­டணி இது. பாசிச பா.ஜ.க.வை வளர்ப்­பது, இந்­தி­யா­வுக்கே ஆபத்­தானது என்­பதை அடித்­த­ளம் வரை பரப்­புரை செய்து வைத்­தி­ருந்­த­தால் தான் இந்த வெற்­றியை தமிழ்­நாட்­டில் பெற முடிந்­தது.

“பா.ஜ.க.வுக்கு வாக்­க­ளிப்­பது அவ­மா­னம் என்ற எண்­ணத்தை உரு­வாக்க வேண்­டும்” என்று தி.மு.க. தலை­வ­ரும் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரு­மான மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள் பரப்­புரை செய்­தார்­கள். இத­னைத் தமிழ்­நாட்டு மக்­கள் உளப்­பூர்­வ­மாக ஏற்­றுக் கொண்­ட­தன் அடை­யா­ளம் தான் நாற்­ப­துக்கு நாற்­பது எனப் பெற்ற வெற்­றி­யா­கும். இந்த வெற்­றி­க­ர­மான முடி­வுக்­கான வெற்றி விழா தான் நேற்­றைய தினம் கோவை­யில் நடந்த வெற்­றி­க­ர­மான விழா ஆகும்.

தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர் நூற்­றாண்டு நிறைவு விழா -– - நாற்­பதுக்கு நாற்­பது வெற்­றி­யைத் தந்த தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கும் விழா –- இந்த வெற்­றிக்கு இந்­தி­யாக் கூட்­ட­ணித் தலை­வர்­களை அழைத்­துச் சென்ற மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்­குப் பாராட்டு விழா ஆகி­யவை ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு முப்­பெ­ரும் விழா­வாக கோவை­யில் கொண்­டா­டப்­பட்­டது. இந்த மேடை­யி­லும் ‘இந்­தியா’ கூட்­ட­ணி­யின் ஒற்­று­மையே புலப்­பட்­டது.

‘செய்­கூலி, சேதா­ரம் இல்­லா­மல் முழு­மை­யா­கக் கிடைத்த வெற்றி’ என்று இதனை உரு­வ­கப்­ப­டுத்­தி­னார் திரா­வி­டர் கழ­கத் தலை­வர் ஆசி­ரி­யர்

கி.வீர­மணி அவர்­கள். கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­கள் அனை­வ­ரும், ‘இந்த வெற்­றியை சாதித்­துக் காட்­டி­யது தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் தான்’ என்று புகழ் மாலை சூட்­டி­னார்­கள். ‘உங்­க­ளால் மட்­டும் எப்­படி முழு­மை­யான வெற்றி சாத்­தி­ய­மா­னது என்று அகில இந்­தி­யத் தலை­வர்­கள் அனை­வ­ரும் ஆச்­சர்­ய­மா­கப் பார்க்­கி­றார்­கள்’ என்­றார் காங்­கி­ரஸ் தலை­வர் செல்­வப்­பெருந்­தகை. ‘தி.மு.க.வுக்கு செல்­வாக்­கான தொகு­தி­யைக் கூட கூட்­ட­ணிக் கட்­சிக்கு ஒதுக்கி, எங்­க­ளுக்கு பல­வீ­னம் என்று தெரிந்த தொகு­தியை

தாங்­கள் எடுத்­துக் கொண்டு மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள் செயல்­பட்ட பாங்கு தான் இந்த வெற்­றிக்­குக் கார­ணம்’ என்­றார் மார்க்­சிஸ்ட்

கம்­யூ­னிஸ்ட் செய­லா­ளர் பால­கி­ருஷ்­ணன். ‘இங்கே தமிழ்­நாட்­டில்

முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலி­னைப் போலவே மற்ற மாநி­லங்­க­ளி­லும் தலை­வர்­கள் செயல்­பட்டு இருந்­தால் இந்­தியா கூட்­டணி ஆட்­சி­யையே பிடித்­தி­ருக்­கும்’ என்­றார் இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் செய­லா­ளர் முத்­த­ர­சன்.

விடு­த­லைச் சிறுத்­தை­கள் தலை­வர் தொல்­தி­ரு­மா­வ­ள­வ­னின் உரை உணர்ச்­சி­யின் துடிப்­பாக மட்­டு­மல்ல, உண்­மை­யின் வெடிப்­பாக அமைந்­தி­ருந்­தது. “சிதம்­ப­ரம் தொகு­தி­யில் நான் வெற்றி பெற வேண்­டும் என்­ப­தற்­காக எம்.ஆர்.கே. பன்­னீர்­செல்­வம், எஸ்.எஸ்.சிவ­சங்­கர் ஆகிய இரண்டு அமைச்­சர்­க­ளைப் போட்­டார் முத­ல­மைச்­சர் அவர்­கள். ஒரு மணி நேரத்­துக்கு ஒரு தடவை எம்.ஆர்.கே.விடம் பேசிக் கொண்டே இருந்­தார் முத­ல­மைச்­சர். தங்­கள் கட்சி வெற்றி பெற்­றால் போதும் என்று நினைக்­கா­மல் அனை­வ­ரும் வெற்றி பெற வேண்­டும் என்று நினைத்­தார். தி.மு.க. வலிமை பெற்ற தொகுதி­களை கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்கு வழங்கி, ரிஸ்க்­கான தொகு­தி­க­ளில் நாங்­கள் போட்­டி­யி­டு­கி­றோம் என கூட்­ட­ணிக் கட்­சி­க­ளை­யும் தனது கட்­சி­யாக எண்ணி வெற்றி பெற வைத்த பெருமை அண்­ணன் மு.க.ஸ்டாலின் அவர்­களுக்கு உண்டு. இது­தான் அர­சி­ய­லில் அபூர்­வம்! அர­சி­ய­லில் அற்­பு­தம்” என்­றார் தொல்.திருமா.

இவை அனைத்­துக்­கும் பிறகு இறு­தி­யாக உரை­யாற்ற வந்த மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் இந்த வெற்­றியை தி.மு.க. உடன்­பி­றப்­பு­களுக்­கும், இந்­தியா கூட்­டணி தொண்­டர்­க­ளுக்­கும், அனைத்­துத் தலை­வர்­க­ளுக்­கும் உரித்­தாக்கி உயர்ந்து நின்­றார். “இரத்­தத்தை வியர்­வை­யா­கச் சிந்தி --– காலத்தை தனது கட­மை­க­ளுக்­காக மட்­டுமே ஒப்­ப­டைத்து –- 40

மட்­டும் தான் நமது இலக்கு -– என்ற அடிப்­ப­டை­யில் உழைத்த திரா­விட

முன்­னேற்­றக் கழ­கத்­தின் தொண்­டன் –- தோழன் - உடன்­பி­றப்பு அத்­தனை பேரும் இருக்­கும் திசையை நோக்கி நான் வணங்­கு­கி­றேன்” என்று தனக்கு போட்ட புகழ்­மா­லை­கள் அனைத்­தை­யும் தொண்­ட­னுக்கு அணி­வித்­தார் தலை­வர்.

“இவை தனிப்­பட்ட ஸ்டாலி­னுக்கு கிடைத்த பாராட்டு அல்ல, மேடை­யில் இருக்­கும் அனைத்­துத் தலை­வர்­க­ளுக்­கும் உரிய பாராட்டு” என்று சொல்லி நிறை­கு­ட­மாக நின்­றார் தலை­வர்.

ஆம்! இன்­றைய அர­சி­ய­லில், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள் அபூர்­வ­மான தலை­வரே ஆவார். அவர் நிகழ்த்­திய அற்­பு­தமே இந்த வெற்றி.

                                                              -முரசொலி



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

ரூ360 கோடிகள் வீணா?

கட்டுமானம் ஆரம்பம்?