ராமரை கைவிட்டனர்

 அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: -சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி .

(எப்படி இலவசமாகும்?

மாதாமாதம் ஊதியத்தில் பணம் பிடித்தம் செய்யப்படுகிறதே!)

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதி கூடுகிறது.

தரம் தாழ்ந்த விமர்சனங்களை விட்டுவிட்டு நாட்டின் மீது அக்கறை காட்டுங்கள்- மோடியை மறைமுகமாக விமர்சித்த RSS.

ராமரை கைவிட்டனர்

முதல்வராக இருந்த மாநிலம் குஜராத்தாக இருந்தாலும், மோடியை தேசிய அளவில் அடையாளப்படுத்தியது குஜராத் என்ற போதிலும்,

மோடி அதிகப்படியாக முக்கியத்துவம் தரும் மாநிலம் என்னவோ உத்தரப் பிரதேசம் தான். சொல்லப்போனால், தனது சொந்த மாநிலத்தில் போட்டியிடுவதையே நிறுத்திக்கொண்டு,

உத்தரப் பிரதேசத்தில் தான் போட்டியிடுவேன் என்ற நிலைக்கு வந்திருக்கிறார் மோடி.

அதற்கு, மக்களவையில் உத்தரப் பிரதேசம் பெற்றுள்ள வலுவே காரணமாகவும் அமைந்துள்ளது. உத்தரப் பிரதேசம் என்றாலே, பா.ஜ.க.வின் கண்களுக்கு 80 என்ற எண்ணிக்கை தான் முதலில் தென்படுகிறது.

அந்த 80ஐ கைப்பற்றுவதற்கான நாடகம் தான், கடந்த ஓராண்டு காலத்தில் மோடி உத்தரப் பிரதேசத்திற்கு 17 முறை வருகை தந்தது,

உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோவில் நிறுவப்பட்ட போது, அதை தேசிய மற்றும் அரசு நிகழ்வாக நடத்தியது, போன்ற நிகழ்வுகள் என்பது அண்மை நடவடிக்கைகளில் அம்பலப்பட்டுள்ளது.

காரணம், ராமர் கோவில் திறக்கப்பட்ட போது, இந்து அல்லாதவர்களின் மத ஆலையங்கள் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளால் உதாசினப்படுத்தப்பட்டன.

இதற்கு எதிராக மக்கள் எதிர்குரல் தெரிவிக்க முன்வந்த போது யோகி ஆதித்யநாத் தலைமையில், உத்தரப் பிரதேச காவல்துறை அரங்கேற்றிய என்கவுண்டர்கள்; மாற்றுச்சிந்தனை பேச்சுகள் எழுந்தாலே, கைது தான் போன்ற அட்டூழிய சூழல்களால் அடக்கி வைக்கப்பட்டன.

அதனால், அப்போதைய அளவில் அமைதி காத்த மக்கள், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், தங்களது பா.ஜ.க எதிர்ப்பினை வாக்குகளின் வழி வெளிப்படுத்தினர்.

இதனால், கடந்த தேர்தல்களில் பா.ஜ.க.வின் கோட்டை என அறியப்பட்ட உத்தரப் பிரதெசத்தில், பெருவாரியான இடங்கள் இந்தியா கூட்டணி வசம் சென்றன.

மோடியின் வெற்றியும் சொல்லுகிற அளவு எண்ணிக்கை கொண்டதாய் இல்லை. குறிப்பாக ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தி நகரின் மக்களே, பா.ஜ.க.வினரை புறக்கணித்தனர்.

அதிகாரத்துவத்திற்கு எதிரான இந்நடவடிக்கையால், துவண்டு போன பா.ஜ.க, அது வரை முழங்கி வந்த ‘ராமர் கோவில், ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கங்களை கைவிட்டு,

தேர்தல் முடிவுக்கு பின், ராமர் என்ற சொல்லையே எடுத்துரைக்க தயங்கி வருகிறது.

இதனால், ‘தேர்தல் ஆயுதம் தான் ராமரா?’ என்ற கேள்வி ஒரு புறம் வலுக்க, மற்றொரு புறம் ‘இது தான் ராமர் மீது பா.ஜ.க வைத்துள்ள உண்மை பாசமா?’ என்ற கேள்வி மறு புறம் வலுக்கத்தொடங்கியுள்ளது.

கூட்டணிக்கு மரியாதை?

இரு மக்களவை தேர்தல் முடிவுகள், பா.ஜ.க ஆட்சி அமைக்க வித்திட்ட நிலையில், தற்போதைய 2024 மக்களவை தேர்தல் முடிவு, NDA கூட்டணி ஆட்சிக்கு வித்திட்டுள்ளது.

இதனால், கேபினட் அமைச்சரவையில் ஆதிக்கம் செலுத்தி வந்த பா.ஜ.க.வின் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கூட்டணியின்றி ஆட்சியே கவிழும் என்பதால், மொத்தமுள்ள 30 அமைச்சகங்களில் ஓரளவு விழுக்காட்டை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது கட்டாயமானது.

ஆகவே, மோடி - பிரதமராக பதவியேற்றும், அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் அறிவிக்க 24 மணிநேரத்திற்கும் மேலான நேரம் எடுத்துக்கொண்டது பா.ஜ.க.

எனினும், 24 மணிநேரங்களுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட அமைச்சரவையிலும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள், இரண்டாம் நிலை துறைகளாகவே அமையப்பெற்றுள்ளன.

NDA கூட்டணிக்குள் அதிருப்தி : மறைமுகமாக கூட்டணி கட்சிகளை புறக்கணிக்கிறதா பா.ஜ.க?

அதிலும், மொத்தமுள்ள 30 கேபினட் அமைச்சரவையில், 5 துறைகளே, கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால், NDA கூட்டணிக்குள் கடும் அதிருப்தி மற்றும் சலசலப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இதற்கிடையே, மகாராஷ்டிரத்தில் நீண்டகால கூட்டணி கட்சியாக இருக்கும் சிவசேனா (ஷிண்டே), “தாங்கள் 7 எம்.பி.க்களை கொண்டுள்ளபோதும், எங்களுக்கு கேபினட்டில் பொறுப்பு ஒதுக்காமல், இரண்டு, ஒரு எம்.பி கொண்ட கட்சிகளுக்கு கேபினட்டில் இடம் ஒதுக்குவது எவ்விதத்தில் சரியாக இருக்கும்” என கேள்வி எழுப்பியுள்ளது.

இவர்களுக்கு முன்னதாக, மகாராஷ்டிர NDA கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், தங்களுக்கு கேபினட்டில் இடம் ஒதுக்காததற்கு, தங்களது அதிருப்தியை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில், தங்களுக்கு சபாநாயகர் பொறுப்பு ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளது தெலுங்கு தேசம் கட்சி.

இது குறித்து, மோடியிடமிருந்தும், மோடி சார்ந்துள்ள பா.ஜ.க.விடமிருந்தும் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படாத நிலையில், சபாநாயகர் குறித்த தகவல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

ரூ360 கோடிகள் வீணா?

கட்டுமானம் ஆரம்பம்?