அதெப்படிங்க ஒரே மாதிரி?

 அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தை வாங்கும் தமிழ்நாடு மின் வாரியம்: அதிகாரிகள் தகவல்.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நாளை முதல் மீண்டும் கட்டணம் உயர்வு.

குஜராத்தில் கொரியர் பார்சல்களில் ரூ.1.12 கோடி கஞ்சா பறிமுதல்.
பங்குச்சந்தை வர்த்தகம் எனக்கூறி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.9 கோடி மோசடி.
ஒரு மாத கோடை விடுமுறை முடிந்தது சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை முதல் பணிகள் தொடக்கம்.
சிக்கிம், அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.73 லட்சம் கோடி .
முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டுகால ஆட்சியில்; வணிகவரித்துறையில் ரூ.40,000 கோடிக்கு மேல் அதிக வருவாய்: தமிழ்நாடு அரசு தகவல் .

மக்கள் வரிப்பணத்தில் ஊடக,சுய விளம்பரத்துக்காகவே மோடி தியானம் செய்கிறார்: திரிணாமுல் காங்கிரஸ் கடும் தாக்கு.
அதெப்படிங்க ஒரே மாதிரி?

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் இன்றுடன் (ஜூன் 1) நிறைவடைந்து விட்டது. 

தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மக்களை கவர்ந்தனர். 

மேலும் பாசிச பாஜக அரசின் அவலங்களை எடுத்துரைத்து எதிர்க்கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை மீண்டும் வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்ட நிலையில், இந்தியா கூட்டணிக்கு அவர்கள் ஆதரவு பெருகியுள்ளது. 

தொடர்ந்து மக்களின் ஆதரவு இந்தியா கூட்டணிக்கு இருப்பதால் பாஜக பல்வேறு தில்லுமுல்லு வேலைகளை செய்து வருகிறது. வாக்குப்பதிவின்போது வட மாநிலங்களில் பாஜக நிர்வாகிகள் கள்ள ஓட்டு போடுவது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

அதே டெய்லர், அதே வாடகை... பாஜகவுக்கு சாதகமாக ஒரே மாதிரியான கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட நிறுவனங்கள் !

இதனிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருப்பது தெரியவந்தது. 

தென் இந்தியாவோடு, வட இந்தியாவும் பாஜகவுக்கு எதிராக களமிறங்கியது கருத்துக்கணிப்பில் தெரியவந்தது. 

இந்த சூழலில் இன்றுடன் தேர்தல் நிறைவடையும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணி 350 முதல் 371 இடங்களுக்கும் மேல் வெற்றி பெரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் பாஜகவே பெரும்பான்மை பெரும் என்றும், பாஜக ஆளாத முக்கிய மாநிலங்களில் கூட பாஜக வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக கொடுத்தவை போலவே தெரிகிறது.

அதே டெய்லர், அதே வாடகை... பாஜகவுக்கு சாதகமாக ஒரே மாதிரியான கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட நிறுவனங்கள் !

ஏனெனில் கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட NewsX, NDTV, ரிபப்ளிக், India News உள்ளிட்ட நிறுவனங்கள் பாஜகவுக்கு சாதகமாக வெளியிட்டுள்ளது.

குறிப்பாக NewsX, NDTV, India News நிறுவனம் சொல்லி வைத்ததுபோல் பாஜக கூட்டணி 371, இந்தியா கூட்டணி 125, பிற 47 என்று ஒரே மாதிரியாக குறிப்பிட்டுள்ளது.

 இதனால் தற்போது இது பாஜக கொடுத்த கருத்துக்கணிப்பு என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதே டெய்லர், அதே வாடகை... பாஜகவுக்கு சாதகமாக ஒரே மாதிரியான கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட நிறுவனங்கள் !

அதே டெய்லர், அதே வாடகை என்று கூறுவது போல் ஒரே மாதிரியான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது தற்போது மிகப்பெரிய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. 

தோல்வி பயத்தில் இருக்கு பாஜக ஏற்கனவே பல விஷயங்களை செய்து வரும் நிலையில், தற்போது கருத்துக்கணிப்புகளையும் தயாரித்து கொடுத்துள்ளது.

மேலும் 543 தொகுதிகளில் பெரும்பான்மை பெறுவதற்கு 272 இடங்களில் வேற்றி பெறுவது அவசியம். 

ஆனால் இந்த முறை அனைத்து கருத்துக்கணிப்புகளுமே பாஜகவுக்கு 350-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று கூறுவது அனைவர் மத்தியிலும் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.


விவேகானந்தர் என்ன பேசினார்?

சிகாகோ சர்வ சமய மாநாட்­டின் இறுதி நாளில் சுவாமி விவே­கா­னந்­தர் ஆற்­றிய உரை­யின் வரி­கள் பற்றி பிர­த­மர் மோடிக்கு தெரி­யுமா என மார்க்­சிஸ்ட் பொது செய­லா­ளர் சீதா­ராம் யெச்­சூரி கேட்­டுள்­ளார்.

பிர­த­மர் மோடி கன்­னி­யா­கு­ம­ரி­யில் உள்ள விவே­கா­னந்­தர் மண்­ட­பத்­தில் 45 மணி நேர தியா­னம் மேற்­கொண்டு வரு­கி­றார். 

இந்­நி­லை­யில், சிகா­கோ­வில் நடந்த சர்வ சமய மாநாட்­டின் இறுதி நாளில் சுவாமி விவே­கா­னந்­தர் ஆற்­றிய உரை­யின் வரி­கள் மோடிக்கு தெரி­யுமா என்று கேட்­டுள்ள மார்க்­சிஸ்ட் பொதுச் செய­லா­ளர் சீதா­ராம் யெச்­சூரி, விவே­கா­னந்­தர் ஆற்­றிய உரை­யின் வரி­களை தனது டிவிட்­டர் பக்­கத்­தில் பகிர்ந்­துள்­ளார்.

விவே­கா­னந்­தர் பேசு­கை­யில், மாநாட்­டில் சமய ஒரு­மைப்பாட்­டிற்­கு­ரிய பொது நிலைக்­க­ளம் பற்றி அதி­கம் பேசப்­பட்­டது. 

இந்த ஒரு­மைப்­பாடு ஏதா­வது ஒரு­ம­தத்­தின் வெற்­றி­யா­லும், மற்ற மதங்­க­ளின் அழி­வா­லும் கிட்­டும் என்று இங்­குள்ள யாரே­னும் நம்­பி­னால், அவ­ரி­டம் நான், ‘சகோ­தரா! உனது நம்­பிக்கை வீண்’ என்று சொல்­லிக் கொள்­கிறேன்.

சர்­வ­ச­ம­யப்­பே­ரவை உல­கத்­திற்கு எதை­யா­வது எடுத்­துக்­காட்­டி­யுள்­ளது என்­றால் அது இது­தான்: புனி­தம், தூய்மை, கருணை இவை உல­கின் எந்த ஒரு பிரி­வு­டை­ய­தின் தனிச் சொத்து அல்ல என்­ப­தை­யும், மிகச்­சி­றந்த ஒவ்­வொரு சம­யப்­பி­ரி­வும் பண்­புள்ள ஆண்­க­ளை­யும் பெண்­க­ளை­யும் தோற்­று­வித்து இருக்­கி­றது என்­ப­தை­யும் நிரூ­பித்­துள்­ளது.

இந்த சாட்­சி­யங்­க­ளுக்கு முன்பு, தம் மதம் மட்­டும் தான் தனித்து வாழும், மற்ற மதங்­கள் அ­ழிந்­து­விடும் என்று யாரா­வது கனவு காண்­பார்­க­ளா­னால் அவர்­க­ளைக் குறித்து நான் என் இதய ஆழத்­தி­லி­ருந்து பச்­சா­தா­பப்­ப­டு­வ­து­டன், இனி ஒவ்­வொரு மதத்­தின் கொடி­யி­லும், ‘உதவி செய், சண்டை போடாதே’, ‘ஒன்­று­ப­டுத்து, அழிக்­காதே’, ‘சம­ர­ச­மும் சாந்­த­மும் வேண்­டும், வேறு­பாடு வேண்­டாம்’ என்று எழு­தப்­ப­டும் என்று அவ­ருக்­குச் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன் என்று கூறியுள்­ளார்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

ரூ360 கோடிகள் வீணா?

கட்டுமானம் ஆரம்பம்?