71 இல் 20

 கூடலூரில் பழக்கடையில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது.

திண்டிவனத்தில் 15 ஆடுகளை திருடிய 3 பேர் கைது.



கடத்துவதற்காக தூத்துக்குடியில் படகில் பதுக்கப்பட்ட 2,460 கிலோ இஞ்சி பறிமுதல்.

திருப்பூரில் பொதுமக்களை கடித்த 8 வெறிநாய்கள்.

எம்பியாக வெற்றி பெற்றதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அகிலேஷ்.
மக்கள்தான் என் தெய்வம் நான் கடவுள் அவதாரம் அல்ல, சாதாரணமான மனிதன்: - ராகுல் காந்தி.
உ.பி.யில் மணல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி.
குவைத் தீ விபத்து. தமிழர்களை மீட்க நடவடிக்கை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .


71 இல் 20 வாரிசுகள்

       நடந்து முடிந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் மோடி­யும் அமித்­ஷா­வும் எதிர்க்­கட்­சி­கள் மீது வைத்த விமர்­ச­னமே, ‘வாரிசு அர­சி­யல் செய்­கி­றார்­கள்’ என்­ப­து­தான். ஆனால், ‘மைனா­ரிட்டி’ பா.ஜ.க. ஆட்சி அமைச்­ச­ர­வை­யில் ‘மெஜா­ரிட்டி’ என்று சொல்­லும் அள­வுக்கு வாரி­சு­கள் நிரம்பி வழி­கி­றார்­கள். இவர்­க­ளுக்கு எல்­லாம் எதற்­காக அமைச்­ச­ர­வை­யில் இடம் கொடுத்­தார்­கள்?

1. பியூஸ் கோயல் -–- இவ­ரது தந்தை வேத­பி­ர­காஷ் கோயல்,

பிர­த­மர் வாஜ்­பாய் அமைச்­ச­ர­வை­யில் அமைச்­ச­ராக இருந்­தார். பியூஸ் கோய­லின் அம்மா சந்­தி­ர­காந்த் கோயல், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­தார். இவர்­க­ளது வாரி­சு­தான் அமைச்­சர்

ஆகி இருக்­கி­றார்.

2. தர்­மேந்­திர பிர­தான் –- இவ­ரது தந்தை தேவேந்­திர பிர­தான், பிர­த­மர் வாஜ்­பாய் அமைச்­ச­ர­வை­யில் அமைச்­ச­ராக இருந்­தார்.

3. ராம் மோகன் -– இவ­ரது தந்தை எர்­ரான் நாயுடு, மத்­திய அமைச்­ச­ராக இருந்­த­வர். பிர­த­மர் தேவ­க­வுடா அமைச்­ச­ர­வை­யிலும், பிர­த­மர் குஜ்­ரால் அமைச்­ச­ர­வை­யி­லும் கிரா­மப்­புற அமைச்­ச­ராக இருந்­தார். 13 ஆண்­டு­கள் எம்.பி.யாக இருந்­தார் எர்­ரான் நாயுடு.

4. ஜோதி ராதித்ய சிந்­தியா –- இவ­ரது தந்தை மாத­வ­ராவ்

சிந்­தியா, ஒன்­றிய அமைச்­ச­ராக இருந்­த­வர்.

5. ஜிதின் பிர­சாத் –- இவ­ரது தந்தை ஜிதேந்­திர பிர­சாத், உத்­த­ரப்­பி­ர­தேச எம்.பி.யாக இருந்­தார்.

6. அனுப்­பி­ரியா பட்­டேல் –- இவ­ரது தந்தை சோன் லால் படேல், அப்னா தள் கட்­சி­யின் தலை­வர் ஆவார். இவ­ரது அம்மா கிருஷ்ணா படே­லும் தேர்­த­லில் போட்­டி­யிட்­ட­வர் தான்.

7. கிர்த்தி வர­தன் சிங் -– இவ­ரது தந்தை ராஜா ஆனந்த் சிங்

உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்­தில் அமைச்­ச­ராக இருந்­தார்.

8. வீரேந்­தி­ர­கு­மார் –- இவர் மத்­தி­யப்­பி­ர­தேச முன்­னாள் அமைச்­சர் கெள­ரி­சங்­க­ருக்கு உற­வி­னர்.

9. சாந்­தனு தாகூர் -– மேற்கு வங்க முன்­னாள் அமைச்­சர்

கிருஷ்­ண­தா­கூ­ரின் மகன்.

10. சிரக் பாஸ்­வான் -– இவ­ரது தந்தை ராம் விலாஸ் பாஸ்­வான் பல தடவை ஒன்­றிய அமைச்­ச­ராக இருந்­தார். தந்தை மறை­வுக்­குப் பிறகு அவ­ரது வாரி­சாக சிரக் பாஸ்­வான் அர­சி­ய­லுக்­குள் நுழைந்­தார். வெற்றி பெற்­றார். அமைச்­சர் ஆக்­கப்­பட்­டுள்­ளார்.

11. ராம்­நாத் தாகூர் –- இவ­ரது தந்தை கர்­பூரி தாகூர், பீகார் மாநில முத­ல­மைச்­ச­ராக இருந்­தார்.

12. ஜெயந்த் செளத்ரி –- இவ­ரது தந்­தை­தான் முன்­னாள் பிர­த­மர் செளத்ரி சரண் சிங்.

13. ரக்ஷா கட்ஸே –- மகா­ராஷ்­டிரா முன்­னாள் அமைச்­சர் ஏக்­நாத் கட்­ஸே­வின் உற­வி­னர்.

14. கிரன் ரிஜிஜூ – - இவ­ரது தந்தை ரிஜி­தன் கரு, அரு­ணா­ச­லப்­பிர­தேச மாநில சபா­நா­ய­க­ராக இருந்­த­வர்.

15. ராவ் இந்­தி­ர­ஜித் சிங் –- இவ­ரது தந்தை மகா­ராஜா ராவ் பைரேந்­திர சிங் அரி­யானா மாநி­லத்­தில் முத­ல­மைச்­ச­ராக

இருந்­தார்.

16. ரவ்­நீத் சிங் பிட்டு –- இவ­ரது தாத்தா பஞ்­சாப் மாநி­லத்­தில் முத­ல­மைச்­ச­ராக இருந்­தார்.

17. அன்­ன­பூ­ரணா தேவி –- இவ­ரது கண­வர் ராம் பிர­சாத் பீகார் மாநில முன்­னாள் எம்.எல்.ஏ.

18. ஹெச். டி.குமா­ர­சாமி –- இவ­ரது தந்தை ஹெச். டி.தேவ­கவுடா. இவ­ருக்கு அறி­மு­கம் தேவை­யில்லை. இந்­திய நாட்­டின் பிர­த­ம­ராக இருந்­த­வர் தேவ­க­வுடா. அவ­ரது மக­னான குமா­ர­சாமி,

கர்­நா­டக முத­ல­மைச்­ச­ராக இருந்­த­வர். அவர்­க­ளது குடும்­பம் மொத்­த­மும் அர­சி­ய­லில்­தான் இருக்­கி­றது. பாலி­யல் வழக்­கு­க­ளில் சிக்கி சிறை­யில் இருக்­கி­றார்­கள் தேவ­க­வு­டா­வின் மக­னும், பேர­னும். இவர்­க­ளுக்கு இரு­க­ரம் கூப்பி வாக்­குக் கேட்­ட­வர்­தான் மோடி. பாலியல் குற்­றங்­க­ளில் சிக்­கி­ய­தும் அவர்­களை வெளிப்­ப­டை­யா­கக் கண்­டிக்­கக் கூட மன­மில்­லா­மல் இருந்­த­வர்­கள்­தான் பா.ஜ.க. தலை­வர்­கள்.

19. கம­லேஸ் பாஸ்­வான் -– ஓம் பிர­காஷ் பாஸ்­வா­னின் மகன். உத்­த­ரப்­பி­ர­தேச பா.ஜ.க. பிர­மு­கர்­க­ளில் ஒரு­வர் இவர்.

20. இவை அனைத்­துக்­கும் மேலாக பா.ஜ.க. தலை­வ­ரா­க­வும் இருந்து ஒன்­றிய அமைச்­சர் ஆகி இருக்­கி­றாரே ஜே.பி.நட்டா, இவர் மத்­திய பிர­தேச மாநில முன்­னாள் அமைச்­சர் ஜெயஶ்ரீ பானர்­ஜி­யின் உற­வி­னர்.

ஆக மொத்­தம் 20 வாரிசு அமைச்­சர்­க­ளுக்கு தனது அமைச்­ச­ர­வை­யில் இடம் கொடுத்­துள்­ளார் பிர­த­மர் மோடி. இவர்­தான் தேர்­த­லில் வாய்­கி­ழிய வாரிசு அர­சி­ய­லுக்கு எதி­ரா­கக் கர்­ஜித்­த­வர்.

இதில் 10 பேர் கேபி­னெட் அமைச்­சர்­கள். 2 பேர் தனிப்­பொ­றுப்பு அமைச்­சர்­கள். 8 பேர் இணை­ய­மைச்­சர்­கள். வாரி­சு­க­ளுக்­கும் கோட்டா அடிப்­ப­டை­யில் மூன்­றி­லும் இடம் கொடுத்­துள்­ளார் மோடி.

அர­சி­யல் அனை­வ­ருக்­கும் பொது­வா­னது. இந்த அர­சி­யல் களத்­தில் அனை­வரும் பங்­கேற்று தனக்­கான அர­சி­யலை உரு­வாக்­கிக் கொள்ள வேண்­டும் என்ப­தும், அனை­வ­ரும் அனைத்து மக்­க­ளுக்­கா­க­வும் தொண்­டாற்ற வேண்­டும் என்­ப­து­தான் அர­சி­யல் நெறி­யா­கும். இன்­னார் வர­லாம், இன்­னார் வரக்­கூ­டாது என்ற ‘வர்­ணம்’ அர­சி­ய­லுக்கு இல்லை.

ராகுல் காந்­தி­யைப் பற்றி என்ன குறை சொல்­வது என்று தெரி­யா­மல் மோடி சொன்ன குற்­றச்­சாட்டு அது. தமிழ்­நாட்­டில் தி.மு.க. அர­சைப் பற்­றிக் குறை சொல்­வ­தற்கு ஏதும் கிடைக்­கா­த­தால் இங்கு வந்­தும் அதே வாரிசு

குற்­றச்­சாட்டை மோடி வைத்­துப் போனார்.

கழ­கத் தலை­வர் –- தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள், ‘இது கேட்­டுக்

கேட்­டுப் புளித்­துப் போன குற்­றச்­சாட்டு. வேறு ஏதா­வது புதி­தாக இருந்­தால் சொல்­லுங்­கள்’ என்று கிண்­டல் அடித்­தி­ருந்­தார். அதே புளித்­துப் போன மாவில் ஏன் வடை சுட வேண்­டும்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?