நிரூபிக்க வேண்டும்!

 5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ரூ.96,238 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்த ஒன்றிய அரசுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

 நேற்று முடிவடந்த அலைகற்றை ஏலம் விற்பனை மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ.11,340 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. அலைகற்றை ஏலம் மூலம் ஒன்றிய அரசு திரட்ட திட்டமிட்டிருந்த தொகையில் ரூ.11,340 கோடி என்பது 12% மட்டுமே.
நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.
சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி.
முன்னாள் ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி.
கனமழை  கூடலூர், பந்தலூர் வட்டம் பள்ளிகளுக்கு இன்று(27-06-2024) விடுமுறை .
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.6000 கோடி கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு.


தேர்தல் ஆணையம்

நிரூபிக்க வேண்டும்!

உலகப் புகழ்பெற்ற தொழில் அதிபரான எலான் மஸ்க், வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து வெளியிட்ட பதிவானது, இந்திய அரசியல் களத்தில் வெப்ப அலைகளை மட்டுமல்ல, சந்தேக அலைகளையும் அதிகரித்துள்ளது.

மஸ்க் தம்முடைய ‘எக்ஸ்’ ஊடகப் பக்கத்தில் இப்படிப் பதிவு செய்திருந்தார்....

"இந்தியாவில் மின்னணு வாக்கு இயந்திரத்தை ஆராய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கவலைகள் எழுப்பப்படுகின்றன.

 அமைப்புகள் பொறுப்பேற்க இல்லாத போது ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தவிர்க்க வேண்டும். மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு மூலம் ஊடுருவுவதற்கான ஆபத்துகள் அதிகம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சிறிய அளவில் முறைகேடு செய்தாலும் அது பெரியதுதான்,”

என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் இதனைச் சொல்லி இருக்கிறார். 

இங்கும் வட மாநிலங்களில் சந்தேகத்துக்குரிய சில நிகழ்வுகள் நடந்திருப்பது அரசல் புரசலாக வெளிவந்த நிலையில், எலான் மஸ்க் பதிவானது உன்னிப்பாக கவனிக்கத்தக்கதாக மாறியது.

கரீபியன் தீவு நாடான புவேர்ட்டோ ரிக்கோவில் நடந்த தேர்தல்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறி, அமெரிக்க அரசியல்வாதியான ராபர்ட் எஃப் கென்னடி, தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். 

இதனைப் பகிர்ந்து, கருத்துரைத்த மஸ்க், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கறுப்புப் பெட்டி” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு மூலம் மேற்கொள்ளப்படும் சிறிய முறைகேடும் (ஹேக்கிங்) மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்” எனக் கூறியிருந்தார்.

இதனை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மறுத்தார். “வாக்குப் பதிவு இயந்திரத்தில் எந்த இணைப்பும் இல்லை, புளூடூத் இல்லை, வைஃபை இல்லை, இன்டர்நெட் இல்லை. மறுபுரோகிராம் செய்ய முடியாத புரோகிராமில், உள்ளே நுழைய வழியே இல்லை” என்றும் சொல்லி இருந்தார் அவர்.


பிரச்சினை இயந்திரத்தில் மட்டுமல்ல, இயந்திரத்தைப் பயன்படுத்துபவர்களைப் பொறுத்தும் அதன் தன்மையை மாற்றலாம் என்ற அடிப்படையில், பா.ஜ.க.வின் சில தொகுதிகளின் வெற்றிக்குப் பின்னால் வாக்குப் பதிவு இயந்திரங்களும் மர்மமாக வேலை பார்த்திருக்கலாமோ என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுவது இயல்பானது தான். அத்தகைய சந்தேகமே இப்போது பரவி வருகிறது. 

ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே ஆகியோர் இதனை பொதுவெளியில் அதிகம் பேசி வருகிறார்கள்.

“வாக்குப் பதிவு இயந்திரத்தில் முழு வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய வேண்டும்; இல்லையெனில், அவற்றை ஒழித்துக் கட்ட வேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

“நாட்டின் தேர்தல் நடைமுறையில் தீவிரமான கவலைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வுக்கு உட்படுத்த யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. 

ஜனநாயக அமைப்புகள் கைப்பற்றப்பட்டுவிட்ட நிலையில், நாட்டின் தேர்தல் நடைமுறை மட்டுமே மக்களுக்கான ஒரே பாதுகாப்பாகும். அதில் முழு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் கறுப்புப் பெட்டியாக மாறிவிட்டன” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும். ஜனநாயகத்தில் மேம்பட்ட நாடுகளில் வாக்குச்சீட்டு முறையே உள்ளன; வாக்கு இயந்திரங்கள் இல்லை. நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலைநிறுத்த நாமும் அதை நோக்கி நகர வேண்டும். 

வாக்கு இயந்திரங்களை அகற்ற வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் மகாராஷ்டிர மாநிலம் – மும்பை வட மேற்குத் தொகுதி தேர்தல் முடிவுதான் பலத்த சந்தேகத்துக்குரியதாக உள்ளது. இங்கு பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான ஷிண்டே சிவசேனா வெற்றி பெற்றுள்ளது. 

அதன் வேட்பாளரான ரவீந்திர வெய்க்கர், வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளார். 

வாக்குப் பதிவு இயந்திரம் மூலமாக எண்ணிக்கை நடைபெற்ற போது ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளர்தான் ஒரு வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். தபால் வாக்குகளை எண்ணியதாகவும், அதனால் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் 48 வாக்குகள் கூடுதலாகப் பெற்றதாகவும் சொல்லி அவரை வெற்றி பெற்றவராக அறிவித்து விட்டார்கள். 

இதனை வைத்து மும்பை பத்திரிக்கைகள் பலத்த சந்தேகங்களைக் கிளப்பியது.

மூத்த பத்திரிக்கையாளர் பூனம் அகர்வால், இதில் முறைகேடு நடந்துள்ளது என்கிறார். மும்பையில் இருந்து வெளியாகும் ‘மிட் டே’ நாளிதழும் முறைகேடு நடந்துள்ளது என்கிறது. ‘வெற்றி பெற்ற

வேட்பாளரின் உறவினருக்கும், தேர்தல் ஆணையப் பணியாளருக்கும் இதில் தொடர்பு உள்ளது’ என்றும், அவர்கள் யார் என்றும் பெயருடன் குறிப்பிட்டு குற்றம் சாட்டியுள்ளது ‘மிட் டே’. இதனை வைத்து ‘இந்தியா’ கூட்டணி, புகார் அளித்துள்ளது.

இதற்குச் சரியான விளக்கத்தை தேர்தல் ஆணையம் கொடுத்திருக்க வேண்டும். சவாலாக ஏற்று, முறைகேடு நடைபெறவில்லை என மெய்ப்பித்திருக்க வேண்டும். 

மாறாக ‘மிட் டே’ நாளிதழ் மீது அவதூறு வழக்குப் போட்டு அவர்கள் வாயை மூட முயற்சித்துள்ளது தேர்தல் ஆணையம்.

 நாட்டில் இருக்கும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது இது.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?