கண்டுணர்ந்த இந்தியா
பிரதமர் அலுவலகத்தில் மோடிக்கு வேலையில்லை.நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை மக்கள் புறிக்கணித்துள்ளனர்.சுப்பிரமணியசாமி
*அனைத்து தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது*
இந்திய கூட்டணி வெற்றி:234
காங்கிரஸ்: 99
சமாஜ்வாதி:37
திரிணாமுல் காங்:29
திமுக:22
ராஷ்ட்ரிய ஜனதா தளம்:3
---------------------------------------------------------
பாஜக கூட்டணி : 292
பாஜக:240
தெலுங்கு தேசம்:16
ஐக்கிய ஜனதா தளம்:12
சிவசேனா (ஷிண்டே):7
லோக் ஜன சக்தி:5
கண்டுணர்ந்த
இந்தியா
இந்தியா எத்தனையோ முறை வீழ்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் எழுந்துள்ளது. எழுச்சி பெற்றுள்ளது! காரணம், மக்களால்!
“மாற்றங்களும் கொடுங்கோலாட்சியும் நடைபெற்று வந்த காலக்கட்டத்தில் இந்திய நாட்டின் பெரும்பாலான மக்கள் இந்த அளவுக்கு நற்பண்புகளுடனும் சிறந்த தரத்துடனும் இருந்ததைப் போன்ற உதாரணத்தை வேறு எந்த
நாட்டிலும் நான் கண்டதில்லை” என்று 200 ஆண்டுகளுக்கு முன்னால் ஜான் மால்கம் என்ற ஆங்கில அதிகாரி எழுதினார். ஒருவிதமான பொதுமைப் பண்புதான் இத்தனையாண்டுகள் இந்தியாவைக் கட்டியமைத்து வந்துள்ளது.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது தேசியவாதத்தின் இலக்கணமாக இருந்து வழிநடத்தியது.
எத்தனை அன்னியப் படையெடுப்புகள் நடந்துள்ளன? அத்தனை
படையெடுப்புகளையும் தாங்கிக் கொண்டு எதிர்நின்று தாக்கித் தகர்த்துள்ளது இந்தியா. சிப்பாய்க் கலகம் என்று கொச்சைப்படுத்தப்பட்ட முதலாவது இந்திய சுதந்திரப் போருக்கு முன்பே தொடங்கிய தேசிய விடுதலை எழுச்சியானது 500 ஆண்டுகாலத் தியாக வாழ்க்கைக்குப் பிறகுதான் இந்திய நாட்டின்அரசியல் விடியலாக மூவர்ணக் கொடியை வானுயரப் பறக்க வைத்தது.
இந்தியாவை வெளிப்புற சக்திகள் மட்டுமா அழிக்க நினைத்தது? ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புகள் வரிசையாக நடந்துள்ளன? அந்த பண்பாட்டு படையெடுப்புகளையும் கலாச்சார கால்வாரல்களையும் கண்டுணர்ந்து இந்தியா போராடியது. இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறது. ஜாதியின் பேரால், மதத்தின் பேரால், மூடநம்பிக்கையின் பேரால் நடத்தப்பட்ட இந்த கற்பனாவாத பயமுறுத்தல்களுக்கு எதிராக இந்தியா தனது சளைக்காத போராட்டத்தை நடத்திக் கொண்டே தான் இருக்கிறது.
இந்திய சீர்திருத்த இயக்கமானது ஜோதிராவ் பூலே, கோபால் ஹரி தேஷ்முக், நீதிபதி ரானடே, பி.எம்.மலபாரி, டி.கே.கார்வே, வீரேசலிங்கம்,
நாராயணகுரு, வள்ளலார், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் என அனைத்து மாநிலத்தவரையும் உள்ளடக்கியதாக இருந்தது. பெரியார் அதனை போராட்ட இயக்கமாக மாற்றினார். இவர்கள்தான் இன்றும் அணையாமல் நெருப்பை மூட்டிக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள்.
பட்டியலின -–- பழங்குடியின –- மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக
நீதிப் போராட்டங்களும், விவசாயத் தொழிலாளர்களின் வீறுமிக்க நில
உரிமைப் போராட்டங்களும் இன்றைய இந்தியாவில் அதிகம் நடைபெறு
கிறது. இவையும் சுதந்திரப் போராட்டங்களின் தொடர்ச்சியே.
அச்சத்தால் அரசியல் அதிகாரம் பறிக்கப்பட்டது. மதத்தால், சமூக அடிமைத்தனம் திணிக்கப்பட்டது. இரண்டும் இன்மையால் பொருளாதாரம் கையில் இருந்து பறிக்கப்பட்டது. பொருளாதாரமின்மைக்கு ‘தலையெழுத்து’ காரணம் ஆக்கப்பட்டது. இது உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத கற்பனாவாத
முதலாளித்துவம் ஆகும்.
பிறநாட்டில் கால் விலங்கு, கைவிலங்கு மட்டும் தான். இந்தியாவில்தான் மூளையிலும் விலங்கு போடப்பட்டது. மற்ற நாடுகளுக்கெல்லாம் அரசியல் சுதந்திர தினத்தோடு, அனைத்து சுதந்திரமும் கிடைத்து விடும். இந்தியாவுக்கு அரசியல் சுதந்திரத்தோடு -– சமூகச் சுதந்திரமும் –- பொருளாதாரச் சுதந்திரமும் –- பண்பாட்டுச் சுதந்திரமும் முக்கியமான தேவையாகும். இங்கே அடிமைத் தனத்துக்குக் கூட தத்துவார்த்த முலாம் பூசப்பட்டு இருந்தது. போர் என்பது
இந்தியாவைப் பொறுத்தவரை கலாச்சாரப் போராகவே வரலாறு முழுவதும் நடந்து வந்துள்ளது.
இந்தியர்கள் ஒன்றுபட்டுப் போராட மாட்டார்கள் என்று பிரிட்டிஷார் நினைத்தார்கள். ஒற்றைப் பசையை அண்ணல் காந்தியடிகள் உருவாக்கினார். ஒற்றுமை யாக ஆகிவிட மாட்டார்கள் என்பதுதான் எப்போதும் ஆதிக்க எதேச்சதிகார
வர்க்கத்தின் நப்பாசையாக அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. இந்து -– முஸ்லீம் என மதத்தவரையும் வடக்கு தெற்கு என இனத்தவரையும் இணைத்ததில்தான் காந்தியத்தின் வெற்றி அமைந்தது. அத்தகைய அரசியல் ஒற்றுமையைத்தான் அகில இந்தியா முழுமைக்கும் ‘இந்தியா’ கூட்டணியும் உருவாக்கியது. அன்றைய எதிரிகளும் அதை எதிர்பார்க்கவில்லை. இன்றைய எதிரிகளும் எதிர்பார்க்கவில்லை.
ஒற்றைச் சமூக -– மத -– இன மக்கள் வாழும் நாடாக இந்தியா இல்லை. அதனால் ஒற்றைச் சமூக –- மத –- இன – அரசியல் தலைமைகள் ஆளும் நாடாகவும் இந்தியா இருக்க முடியாது. இருந்ததும் இல்லை. அனைவரும் வாழும் நாட்டை, அனைவரும் சேர்ந்து ஆளும் நாடாக மாற்றியதில்தான் இந்திய மக்களாட்சியின் மகத்துவமும் அடங்கி இருக்கிறது. இந்திய நாடு மரணித்துவிடாமல் நின்று நிலைபெறுவதற்கும் இந்த மக்களாட்சி –- கூட்டாட்சித் தன்மையே காரணம்.
“அரசினுடைய இறைமை என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது பொதுமக்களிடம் நிலைத்துள்ளது என அரசிய
லமைப்பின் முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறைமையானது, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும் (மத்திய அரசு), அதன் அங்கங்களுக்கும் இடையே
(மாநிலங்கள்) பிரித்துத் தரப்பட்டுள்ளது” என்று பேசினார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அத்தகைய இறைமையில்தான் இந்தியா இருக்கிறது. கூட்டாட்சி இந்தியாவை நாம் வேண்டி நிற்கிறோம்.
அனைவரும் இணைந்து எத்தனையோ தடைகளை வீழ்த்தி, இந்தியாவைக் கண்டுணர்ந்ததைப் போல –- இடைக்காலச் சறுக்கல்களையும் சரி செய்து புதிய இந்தியாவைக் கண்டுணர்வோம்.
தாகூர் எழுதினார்...
எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு சுதந்திரமாய் இருக்கிறதோ
எங்கே உலகம் குறுகிய தேசிய எல்லைகளால்
துண்டாடப்படாமல் இருக்கிறதோ
எங்கே வார்த்தைகள் உண்மையின்
ஆழத்திலிருந்து வெளிப்படுகிறதோ
எங்கே சோர்வுற்ற கரங்கள்
முழுமையை நோக்கி விரிகிறதோ
எங்கே அறிவு என்னும் நீரோடை மூடப் பழக்க வழக்கங்கள்
எனும் பாலைப் பெருமணலில்
பாதை இழந்து போகாமல் இருக்கிறதோ
எங்கே மனம் எப்போதும் விரிந்து பரந்திடும்
சிந்தனைச் செயல்களில் உன்னால்
எடுத்துச் செல்லப்படுகிறதோ
அங்கே அந்தச் சுதந்திரச் சொர்க்க பூமியில்
எந்தையே என் நாடு விழித்தெழட்டும்.....