கீழடி
தமிழக அரசு தமிழகத்தில் பல்வேறு பகுதிக ளில் தொல்லியல் அகழ்வாய்வுப் பணிகளை தொய்வின்றி தொடர்ந்து மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது.
சிந்துவெளிப் பண்பாடு கண்டறியப்பட்டதன் நூறாவது ஆண்டு நடைபெற்று வரும் நிலை யில் தமிழகத்தில் இத்தகைய ஆய்வுகள் மேற் கொள்ளப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது. சிந்துவெளி பண்பாட்டை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்த சர் ஜான் மார்ஷல் பெருமையோடு நினைவு கூரப்படுகிறார்.
இந்தியப் பண்பாடும், வரலாறும் பன்முகத் தன்மை கொண்டவை. ஆனால் இதை அழித்து ஒற்றை வரலாற்றையும், பண்பாட்டையும் திணிக்க இந்துத்துவா பரிவாரம் முயல்கிறது. ஆனால் அவர்களது முயற்சிகளை தகர்த்தெறிவதாக ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற இடங்களில் வெளிப்படும் தொல்லியல் சான்றுகள் அமைந்துள்ளன.
கீழடி அகழ்வாய்விலிருந்து ஒன்றிய அகழ் வாய்வுத் துறை விலகிக் கொண்டது அவமான கரமான ஒன்று. அந்த ஆய்வில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை பழிவாங்குவது, இடமாற்றம் செய்வது உள்ளிட்ட இழி நடவடிக்கைகள் மேற் கொண்ட ஒன்றிய அரசு கடைசியில் கீழடியில் ஒன்றுமே இல்லை என மண்ணள்ளிப் போட்டு விட்டுச் சென்றது.
ஆனால் கீழடி மற்றும் கொந்தகையில் இது வரை மேற்கொள்ளப்பட்ட ஒன்பது கட்ட ஆய்வு கள் பல்வேறு சான்றுகளை வெளிக் கொணர்ந்துள் ளன. சங்க இலக்கியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட உலகளாவிய மானுட அறம், இயற்கையோடு இயைந்த வாழ்வு உள்ளிட்ட உயர் விழுமியங்களுக்கு பொருண்மைச் சான்றுகளை வழங்குவதாக தமிழகத்தில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் கிடைக்கும் தொல் பொருட்கள் விளங்குகின்றன.
நியாயமாக ஒன்றிய அரசு தமிழகத்தில் நடை பெறும் தொல்லியல் ஆய்வுகள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடைபெறும் ஆய்வு முடிவு களை தன் தோள் மீது தூக்கி ‘பாருங்கள் எங்கள் பன்முக வரலாற்றை’ என பாருக்குச் சொல்லியி ருக்க வேண்டும்.
ஆனால் இந்த பழமைவாதக் கூட்டம் வரலாற் றின் வேர்களை புராணக் கதைகளில் தேடுகிறது. கற்பனைகளை வரலாறு, பண்பாடு என கயிறு திரிக்கிறது. வடக்கு, தெற்கு என பேதம் பார்த்து உண்மைகளை மூடி மறைக்கப் பார்க்கிறது. மண்ணைப் பிளந்து வரலாறு வெளி வரட்டும். நம் நாட்டின் பன்முகப் பண்பாடும் மரபும் ஒளி வீசட்டும்.